Author: admin

சென்னை: குவாரி உரிமையாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஆர் குகேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், “குவாரிகளை நடத்துவதற்கு சுரங்க துறை, சுற்றுச்சூழல், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதிகளை பெற்று பல்வேறு இன்னல்களை சந்தித்து குவாரிகளை குவாரி உரிமையாளர்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் புவியியல் சுரங்கத்துறை அதிகாரிகளும், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற தனிநபரும் குவாரி உரிமையாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக கட்டாய வசூல் செய்து வருகின்றனர். குறிப்பாக பட்டா நிலங்களில் மண் மற்றும் கல் வெட்டி எடுப்பதற்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு 40 சதவீதம் கமிஷன் தொகையும், அரசு புறம்போக்கு நிலத்தில் கல், மண் எடுக்க ராமச்சந்திரன் என்ற தனி நபருக்கு…

Read More

திருவள்ளூர்: “2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும், அதற்கு முருகன் நிச்சயம் துணைபுரிவார்,” என பாஜக முன்னாள் மாநில தலைவரும், தெலங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில், இன்று (ஜூன் 20) தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. நேற்று முன்தினம் சூரியனார் கோயிலில் முதல்வர் திறந்து வைத்த கட்டிடம், பிறகு இடிந்து விழுந்தது. பக்தர்கள் யாத்திரை செல்வார்கள். ஆனால் மருத்துவர்கள் யாத்திரை செல்கின்றனர். அதற்கு காரணம் திமுக அரசு வாக்குறுதியை நிறைவேற்றாததுதான். வேலூர் மருத்துவமனையில் 35 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 8 மருத்துவர்கள் தான் இருக்கிறார்கள். இதனால் மகப்பேறு மருத்துவம் சாமானிய மக்களுக்கு கிடைக்காமல் உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக…

Read More

‘ஆவேஷம்’ இயக்குநர் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. ‘கருப்பு’ படத்தை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனை நாக வம்சி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தினை முடிவு செய்துவிட்டார் சூர்யா. மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க வுள்ளார். இது தொடர்பான சந்திப்புகள் முடிவுற்று, கூட்டணி உறுதியாகி இருக்கிறது. சூர்யா நடிப்பில் 47-வது படமாக இது உருவாகிறது. இப்படத்தினை முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளது. சூர்யா – ஜீத்து மாதவன் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Read More

மதுரை: ‘தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் எம்எல்ஏ பரிந்துரை செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க்கடன் வழங்குகின்றனர். முறையாக கடன் செலுத்திய உண்மையான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதில்லை’ என மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், வேளாண் இணை இயக்குநர் ப.சுப்புராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், நேர்முக உதவியாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். விவசாயி மூக்கன்: கே.போத்தம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தியவர்களுக்கு பயிர்க்கடன் வழங்காமல் அலைக்கழிக்கின்றனர். எம்எல்ஏ பரிந்துரை செய்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கின்றனர். ஆட்சியர்: எம்எல்ஏ பரிந்துரை செய்பவர்களுக்கு கடன் தராமல், கடனை திருப்பிச் செலுத்தியவர்களுக்கு பயிர்க்கடன் தர வேண்டும்.…

Read More

சியா விதைகள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களுடன் ஏற்றப்படுகின்றன.அவை தாவர அடிப்படையிலான ஒமேகா -3 என்ற ஆலா (ஆல்பா-லினோலெனிக் அமிலம்) நிறைந்தவை. இருப்பினும், ALA EPA அல்லது DHA (மீன் எண்ணெயில் காணப்படுகிறது) போன்ற உயிர் கிடைக்காது. ஒரு சிறிய சதவீதம் மட்டுமே செயலில் உள்ள வடிவங்களாக மாறுகிறது.இன்னும், ஆலாவுக்கு அதன் சலுகைகள் உள்ளன. 2 வாரங்களுக்குப் பிறகு, முறையான அழற்சி நுட்பமாகக் குறைக்கப்படலாம், குறிப்பாக சைவ அல்லது தாவர அடிப்படையிலான உணவுகளில் இருப்பவர்களுக்கு. தோல் குறைவாக உலர்ந்ததாக உணரக்கூடும், மேலும் மனநிலை மாற்றங்கள் மென்மையாக்கப்படலாம், ஆனால் நிலையான உட்கொள்ளலுடன் மட்டுமே.

Read More

ஹெட்டிங்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்கள் குவித்துள்ளது. துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அபார சதம் விளாசினார். ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதேபோன்று 8 வருடங்களுக்கு பிறகு கருண் நாயரும் அணிக்கு திரும்பினார். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்குரும், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றனர். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ராவுடன் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா களமிறங்கினார்கள். யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது. முதல் செஷன் முடியும்…

Read More

நித்திலன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. ‘மகாராஜா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இன்னும் நித்திலன் படம் எதுவும் இயக்காமல் இருக்கிறார். நயன்தாரா படம் இயக்கவுள்ளார், அஜித் படம் இயக்கவுள்ளார் என்றெல்லாம் செய்திகள் வெளியானாலும் எதுவுமே உறுதியாகவில்லை. இதனிடையே மீண்டும் ‘மகாராஜா’ கூட்டணி இணைவது உறுதியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி – நித்திலன் இணையும் படத்தினை ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. பூரி ஜெகந்நாத் படத்தினை முடித்துவிட்டு, நித்திலன் படத்துக்கு விஜய் சேதுபதி தேதிகள் ஒதுக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்துக்கான திரைக்கதையை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் நித்திலன். விஜய் சேதுபதி – நித்திலன் கூட்டணியில் வெளியான படம் ‘மகாராஜா’. இப்படம் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 50-வது படமாகும். அவருடைய திரையுலக வாழ்வில் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்திய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சென்னை: மனைவி பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ தேவையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர், தனக்கு பாஸ்போர்ட் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். திருமணமான ரேவதியின் விண்ணப்பத்தில் அவரது கணவரின் கையெழுத்து இல்லை என்பதால், கணவரின் கையெழுத்தை பெற்று வந்தால் மட்டுமே அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்தார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரேவதி வழக்கு தொடர்ந்தார். அதில், “கருத்து வேறுபாடு காரணமாக கணவரும், தானும் பிரிந்துவிட்ட நிலையில், விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, கணவரின் கையெழுத்தை கோராமல் தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், திருமணமான பெண், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, அவரது கையெழுத்தோ பெற வேண்டிய அவசியம் இல்லை. கணவரின் கையெழுத்து பெற்று…

Read More

பாட்னா: “பிரதமர் நரேந்திர மோடியின் பிஹார் வருகை என்பது மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே பிரதமர் கவனம் செலுத்துகிறார்” என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறினார் இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “பிரதமர் மோடி முதல் முறையாக வரவில்லை. அதேபோல பிரதமர் மோடி பிஹாரின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் வரவில்லை. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகளைப் பெறுவதற்காக வருகிறார். மாநிலத்தில் புதிய வளர்ச்சித் திட்டங்கள் என பிரதமர் சொல்கிறார். ஆனால், ஏற்கெனவே இதில் பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. உதாரணத்துக்கு லோகோமோட்டிவ் தொழிற்சாலை ஏற்கெனவே மர்ஹோராவில் உள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. பிஹார் மக்களின் முக்கியமான பிரச்சினைகளை பிரதமர் புறக்கணிக்கிறார். பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் பிஹார் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கடந்த 10-12 ஆண்டுகளாக, அறிவிப்புகள் வெளியிடப்படுவதை மட்டுமே…

Read More

சென்னை: பிஎஸ் ட்ரோன் டெக்னாலஜி ஆன்லைன் பட்டப்படிப்பை சென்னை ஐஐடி விரைவில் அறிமுகப்படுத்துகிறது. சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் அமைப்பு நடத்தும் பால்ஸ் (PALS)நிறுவனத்தின் 2025-26-ம் ஆண்டுக்கான ஆண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, திருப்பதி ஐஐடி இயக்குனர் சத்யநாராயணா ஆகியோர் நேரடியாகவும், புவனேஸ்வர் , தார்வார்ட், ஐதராபாத், பாலக்காடு ஐஐடி- களின் இயக்குநர்கள் காணொலி வாயிலாகவும் கலந்துகொண்டனர். பால்ஸ் (PALS) அமைப்பில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறியது: “ஐஐடி முன்னாள் மாணவர்கள் சமூகத்துக்கு பல்வேறு வழிகளில் தொண்டாற்றி வருகின்றனர். பால்ஸ் நிறுவனத்தின் மூலம் படித்த மாணவர்கள் சென்னை ஐஐடியில் முதுநிலை படிப்பில் சேர்ந்துள்ளனர். பிரதமரின் ‘உன்னத பாரதம்’ திட்டத்துக்கு அடிப்படை பொறியியல் பிரிவுகளில் படித்த பொறியாளர்களை அதிகளவில் உருவாக்க வேண்டும். சிவில் சர்வீஸ் பணிக்கும் பொறியாளர்கள் செல்ல…

Read More