Author: admin

சென்னை: ராகுல்காந்தியின் 55-வது பிறந்தநாள் விழா, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மும்மத பிரார்த்தனை செய்தும் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் ஏற்பாட்டில், மண்ணடி காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு ராகுல்காந்தி நலமுடன் வாழ பிரார்த்தனை செய்தார். மேலும், தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடும், சென்னை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மையினர் அணி சார்பில் அண்ணா சாலையில் உள்ள தர்காவில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த இலவச செவிபுலன் விழிப்புணர்வு பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம், காங்கிரஸ் மாநில விளையாட்டுப் பிரிவு சார்பில் ரத்ததான…

Read More

சென்னை: ஆட்டிசம் எனப்படும் மனவளர்ச்சி குறைபாடு மிகப்பெரிய சவால். அதற்கான தீர்வுகளை கண்டறிய அதிகளவில் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார். தேசிய அபிலிம்பிக்ஸ் என்பது மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் சார்ந்த போட்டி ஆகும். மாற்றுத்திறனாளிகளிடம் மறைந்து கிடக்கும் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டுவரவும் அவர்களின் தொழில்முறை மேம்பாட்டுக்கு உதவவும் இந்த போட்டியை இந்திய தேசிய அபிலிம்பிக்ஸ் சங்கம் நடத்துகிறது. 11-வது சர்வதேச அபிலிம்பிக்ஸ் போட்டி பின்லாந்து நாட்டில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தென்மண்டல அளவிலான அபிலிம்பிக்ஸ் திறன் போட்டி மற்றும் அதுதொடர்பான கருத்தரங்கம் சென்னை ஐஐடி-யில் நேற்று நடைபெற்றது. இந்திய தேசிய அபிலிம்பிக்ஸ் சங்கமும், சர்தாக் கல்வி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உலக நாடுகளில் இந்தியா முற்றிலும் தனித்துவம்மிக்க நாடு. இந்தியா ஒரு நாடு என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கடந்துசென்றுவிட…

Read More

சென்னை: தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் குடியிருப்புகள், சாலைகள், தெருக்களில் சாதி பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஆதிதிராவிடர் வசிக்கும் குடியிருப்புகள், தெருக்கள் ‘காலனி’ என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ‘காலனி’ மற்றும் சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாநகராட்சியைப் பொறுத்தவரை 677, நகராட்சியில் 455 என மொத்தம் 1,132 இடங்களில் காலனி மற்றும் சாதி பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், அப்பெயரை நீக்கி, பூக்கள், மரங்கள், இயற்கை, நில அமைப்பு அடிப்படையிலும், நகரின் முக்கியமான அடையாளங்கள் மற்றும் வரலாற்று அடிப்படையிலும், பொது தலைவர்களின் பெயரிலும் பெயர்களை வைக்க வேண்டும். பெயர்களை மாற்ற, மாநகராட்சி, நகராட்சிகளில் அந்தந்தப் பகுதியில்,…

Read More

சென்னை: பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு திமுகதான் காரணம் என அன்புமணி கூறியது அப்பட்டமான, கடைந்தெடுத்த பொய் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக-வில் கடந்த சில மாதங்களாகவே, கட்சி அதிகாரத்தில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இதையடுத்து, மாவட்ட வாரியாக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி நடத்தி வருகிறார். காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, பாமகவில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு திமுகதான் காரணம் என குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, எம்எல்ஏ அருள் ஆகியோரை நலம் விசாரிக்க கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று சென்னை வந்தார். அப்போது அவரிடம், பாமக பிரச்சினையில் திமுக தலையிடுகிறது என அன்புமணி விமர்சித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராமதாஸ், ‘‘இது அப்பட்டமான பொய். கடைந்தெடுத்த பொய்’’ என்றார். தொடர்ந்து அவர் கூறியதாவது: அன்புமணி…

Read More

சென்னை: தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நெட்வொர்க் இயங்கி வந்துள்ளது என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் நான்கு பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் நடந்தது வெறும் சிலிண்டர் வெடிப்பு விபத்து என திமுக அரசு கூறிய நிலையில், அச்சம்பவத்துக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பு இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. தமிழகத்தில் பயங்கரவாதத்துக்கான ஆலைகளாக செயல்பட்டு வந்த அரபி வகுப்பறைகளில் பயங்கரவாதத்துக்கான மூலைச் சலவை செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல்களை திமுக குறைத்து மதிப்பீடுவதுடன், குண்டுவெடிப்பு சம்பவங்களை வெறும் விபத்து போல காட்ட முனைகிறது. திமுக அரசால் பாதிக்கப்பட போவது, தமிழ்நாடும், தமிழக மக்களும் தான். இவ்வாறு அதில் கூறியுள்ளார். பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி…

Read More

சென்னை: கிண்டி கத்திப்பாராவில், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தட மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் நடைபெறுகிறது. இவற்றில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில் நடைபெறும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதவிர மாதவரம் – சிறுசேரி வரையிலான 3-வது வழித்தட கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின் போது, முதல்வர் ஸ்டாலின் மின்தூக்கி மூலம் உயரே சென்று, உயரத்திலிருந்து கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். கத்திப்பாரா பகுதியில் ஏற்கெனவே முதல், இரண்டாவது வழித்தடம் அமைந்துள்ளது. கத்திப்பாரா மேம்பாலம் உள்ளடக்கிய சந்திப்பில் சமச்சீர் காண்டிலீவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்து சென்னை மெட்ரோ…

Read More

சென்னை: போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் மோசடி நடந்துள்ளது. தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் ஊதிய விகிதத்தை ஒப்பந்தப்படி நியாயமாகவும் நேர்மையாகவும் போக்குவரத்துக் கழகங்கள் நிர்ணயிக்க வேண்டும்; உழைப்பு மற்றும் ஊதியச் சுரண்டலைக் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 15 ஆம் ஊதிய விகிதத்தின்படி நடப்பு மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவிருக்கும் நிலையில், ஊதியத்தை நிர்ணயம் செய்வதில் திட்டமிட்டு பல மோசடிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதனால், போக்குவரத்துத் துறை பணியாளர்களுக்கு மாதம் ரூ.1000 முதல் ரூ.3000 வரை ஊதிய இழப்பு ஏற்படும். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியத்தில் கூட சுரண்டும் போக்கு கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 15 ஆம் ஊதிய ஒப்பந்தம் கடந்த மே 29 கையெழுத்திடப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு…

Read More

ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தியபோது 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதுதொடர்பாக டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் விசாரணை நடத்தியது. அப்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஊழலில் தொடர்புடைய 322 வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு உள்ளன. வகுப்பறை ஊழல் குறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை டெல்லி முழுவதும் 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டன. ரூ.5 லட்சத்தில் ஒரு வகுப்பறையை கட்ட முடியும். ஆனால் ஆம் ஆத்மி அரசு ஒரு வகுப்பறைக்கு ரூ.24.86 லட்சத்தை…

Read More

பாகிஸ்தானுக்கு ரேடாரில் சிக்காத 40 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானும் இணைய உள்ளது. இந்திய விமானப் படையில் ரேடாரில் சிக்காத 5-ம் தலைமுறை போர் விமானம் எதுவும் இல்லை. இத்தகைய விமானங்களை இந்தியா உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்க உள்ளது. அட்வான்ஸ்டு மீடியம் காம்பாட் ஏர்கிராப்ட் (ஏஎம்சிஏ-ஆம்கா) எனப்படும் இந்த விமானங்களை 2035-ல் இந்திய விமானப் படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய விமானப் படை முன்னாள் விமானியும் பாதுகாப்பு விமர்சகருமான குரூப் கேப்டன் அஜய் அலாவத் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு ரேடாரில் சிக்காத 40 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனா வழங்க உள்ளது. இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் இதற்காக பாகிஸ்தானால் நியமிக்கப்பட்ட போர் விமானிகள் குழு 6 மாதங்களுக்கும் மேலாக பயிற்சிக்காக சீனாவில் உள்ளது. பாகிஸ்தானுக்கு சீனா…

Read More

சென்னை: 811 கோடி ரூபாய்க்கு நெல்லை கொள்முதல் செய்துவிட்டு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளை தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது என தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில், ‘நலத் திட்டங்களை அள்ளித் தரும் விடியல் அரசு எனத் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாக்களில் திமுக அரசுக்கு வெற்று விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் உண்மையில் நடப்பது என்ன? ‘கருவறை முதல் கல்லறை வரை… ‘ அலட்சியமும் ஊழலும் மலிந்து போன, நிர்வாகத் திறனற்ற ‘விளம்பர மாடல்’ ஆட்சியாகத்தான் திமுக அரசு திகழ்கிறது. அதன் காரணமாகவே ஆண்டு முழுதும். ‘நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த… அரும்பாடுபட்டு உழைக்கும் விவசாயிகள், ஒவ்வொரு வட்டத்திலும் மாவட்டத்திலும் தொடங்கி, தலைநகர் சென்னை வரையிலும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தித் தமிழக அரசை எதிர்த்துத் தினமும் போராடிக் கொண்டிருக்கின்றனர். அதன் ஒரு பகுதிதான்,…

Read More