Author: admin

தெஹ்ரான்: தான் கொல்லப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால், தனது பொறுப்பை வகிக்கப் போகும் தலைவரை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கியதை அடுத்து, ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேல் குறிவைத்து வருகிறது. “இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இலக்குகளை வகுத்துக் கொடுத்துவிட்டோம். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிருடன் இருக்கவே கூடாது” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். பதுங்குக் குழியில் தஞ்சமடைந்துள்ள ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனக்குப் பிறகு நாட்டை வழிநடத்தக்கூடிய 3 மதகுருமார்களின் பெயர்களை பட்டியலிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்தப் பட்டியலில் அவரது மகன் மொஜ்தபா பெயர் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தச்…

Read More

சென்னை: அதிமுக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். டி.கே.அமுல் கந்தசாமி: கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டாபாளையத்தைச் சேர்ந்தவர் டி.கே.அமுல் கந்தசாமி. இவர் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட்டு 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் அதிமுகவில் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

Read More

தோல் பராமரிப்பு சீரம், ஒளிக்கதிர்கள் மற்றும் ரசாயன தோல்களால் வெறித்தனமான உலகில், நீங்கள் கவனிக்காமல் இருக்கும் ஒரு எளிய, இயற்கையான மற்றும் வியக்கத்தக்க பயனுள்ள வயதான எதிர்ப்பு ரகசியம் உள்ளது – முக யோகா. இந்த சர்வதேச யோகா தினத்தில், எல்லோரும் சூரிய வணக்கங்கள் மற்றும் மூச்சுத்திணறல் பற்றி பேசும்போது, ​​உங்கள் முகத்தில் கவனத்தை ஈர்ப்போம், ஏனென்றால் உங்கள் 43 தசைகள் ஒரு வொர்க்அவுட்டுக்கு தகுதியானவை.முக யோகா என்பது ஒரு ஆரோக்கிய போக்கை விட அதிகம்; இது ஒரு முழுமையான நடைமுறையாகும், இது சுழற்சியை ஊக்குவிக்கிறது, முக தசைகளை பலப்படுத்துகிறது, பதற்றத்தைக் குறைக்கிறது, மேலும் ஊசிகள் அல்லது வேலையில்லா நேரம் இல்லாமல் தூக்கிய, செதுக்கப்பட்ட தோற்றத்தை உங்களுக்கு வழங்குகிறது. உண்மையில், வழக்கமான பயிற்சி தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தலாம், நேர்த்தியான கோடுகளைக் குறைக்கலாம், மேலும் உங்கள் இயற்கையான பிரகாசத்தை மேம்படுத்தலாம்.உங்கள் முகத்தின் புதிய உடற்பயிற்சி வழக்கத்திற்கு வணக்கம் சொல்ல தயாரா? இங்கே 5…

Read More

திண்டுக்கலில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்ட்) அமைப்புகளும், உறுப்பினர்களும் கடந்த 11-ம் தேதி முதல் பத்து நாட்களாக , பாஜக மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பரப்புரை இயக்கத்தை மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில், ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் தலைமையில் நடந்த பரப்புரை இயக்கத்தின் நிறைவாக, நேற்று (வெள்ளிக் கிழமை) மாலையில் தாடி கொம்பு பகுதியில் சரத்குமார் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இந்து முன்னணியை சேர்ந்த கும்பல், பேசுவதை நிறுத்தும் படி கூறி, சரத்குமார், பாக்கியம், சண்முகவேல் ஆகியோர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. மதவெறி கும்பலின் வன்முறை தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள், பெண்களும் படுகாயமடைந்துள்ளனர். வன்முறை கும்பலின்…

Read More

ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இந்திய அணி அருமையாகத் தொடங்கியது. முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் இங்கிலாந்து செய்வதறியாது விழி பிதுங்கியது. ஆனால், ஷுப்மன் கில் (147), கருண் நாயர் (0) ஆட்டமிழந்த பிறகு செட்டில் ஆன ரிஷப் பந்த்துக்கு உள்ளிருந்து ‘மெசேஜ்’ வந்தது. இதனையடுத்து அவர் தடுப்பாட்டத்துக்குச் சென்றதால் ஆட்டமிழந்தார். 359/3 என்று தொடங்கிய இந்திய அணி, கடைசியாக ஷர்துல் தாக்கூர் 1 ரன்னில் ஆட்டமிழக்க, 454/7 என்று ஆனது. இதனால் 550 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்து இங்கிலாந்தை விட்டு ஆட்டிப்படைக்கும் வாய்ப்பு கொஞ்சம் பின்னடைவு கண்டுள்ளது. இன்று காலை ஆட்டம் தொடங்கியதும் ஷுப்மன் கில், ரிஷப் பந்த் எந்த ஓர் இடையூறும் இன்றி ஆடி வந்தனர். ரிஷப் பந்த் பந்துகளை அருமையாக லீவ் செய்ததை எதிர்முனையில் இருந்த ஷுப்மன் கில்லே பாராட்டியது ஸ்டம்ப் மைக்கில் கேட்டது. ஷோயப் பஷீர் பந்தை ரிஷப் பந்த்…

Read More

சென்னை: கோவை மாவட்டம் வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல் கந்தசாமி (60) உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டாபாளையத்தைச் சேர்ந்தவர் டி.கே.அமுல் கந்தசாமி. இவர் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட்டு 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் அதிமுகவில் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏ-க்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் இன்று காலை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து…

Read More

பராரிசைன் (உத்தராகண்ட்): உத்தராகண்ட்டின் கர்வால் மற்றும் குமாவோன் பிராந்தியங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு ஆன்மிக பொருளாதார மண்டலம் நிறுவப்படும் என்றும், இந்த மண்டலங்கள் ஆயுர்வேதம், யோகா மற்றும் ஆன்மிகச் சுற்றுலாவின் சர்வதேச மையங்களாக உருவாக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். 11-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தராகண்ட்டின் கோடைக்கால தலைநகரான பராரிசைனில் நடைபெற்ற யோகா தின விழாவில் கலந்து கொண்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மாநிலத்தின் முதல் யோகா கொள்கையை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு வீட்டிலும் யோகா, ஒவ்வொரு நபருக்கும் ஆரோக்கியம் என்பதே சர்வதேச யோகா தினத்தின் நோக்கமாகும். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசின் ஆதரவுடன், கர்வால் மற்றும் குமாவோன் பிராந்தியங்கள் ஒவ்வொன்றிலும் ஓர் ஆன்மிக பொருளாதார மண்டலம் நிறுவப்படும். இந்த மண்டலங்கள் ஆயுர்வேதம், யோகா மற்றும் ஆன்மிகச் சுற்றுலாவின் சர்வதேச மையங்களாக உருவாக்கப்படும்.…

Read More

தனிப்பட்ட முறையில், தொழில் ரீதியாக, மற்றும் நிதி ரீதியாக உங்கள் வாழ்க்கைக்கு மதிப்பைச் சேர்ப்பது 10 காலமற்ற திறன்கள் இங்கே. இவற்றை மாஸ்டரிங் செய்வது புலத்தைப் பொருட்படுத்தாமல் வெற்றிக்கான கதவுகளைத் திறக்கும்.

Read More

இஸ்தான்புல்: ஈரானை தாக்குவதன் மூலம் இஸ்ரேல் மத்திய கிழக்கை முழுமையான பேரழிவுக்கு இட்டுச் செல்வதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. இஸ்தான்புல்லில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உச்சிமாநாட்டில் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான், “இஸ்ரேல் இப்போது நமது அண்டை நாடான ஈரானை தாக்குவதன் மூலம் மத்திய கிழக்கு பகுதியை முழுமையான பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் செல்கிறது. பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஏமன் மற்றும் ஈரான் தரப்பில் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் இஸ்ரேலின் பக்கம்தான் பிரச்சினை தெளிவாக உள்ளது. எனவே, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் வரம்பற்ற ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பை மேலும் ஆபத்தில் ஆழ்த்தும் வன்முறைச் சுழலாக தற்போதைய நிலைமை மோசமடைவதை நாம் தடுக்க வேண்டும்.” என்று அவர் மேலும் கூறினார். ஃபிடானுக்குப் பிறகு பேசிய துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், “மேற்கத்திய தலைவர்கள் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை…

Read More

மதுரை: “முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும், நல்லவர்கள் மக்கள் பணியாற்றும் நிலையை ஏற்படுத்தும்.” என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் வண்டியூர் டோல்கேட் அருகே நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று தரிசனம் செய்தார். அப்போது முன்னாள் எம்.பி உடையப்பன், முன்னாள் எம்எல்ஏ கேஎஸ்கே.ராஜேந்திரன், மாவட்டத் தலைவர்கள் ராஜாங்கம், பாலசுப்பிரமணியன், மாநில தொண்டரணி அமைப்பாளர் அயோத்தி ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலே இரண்டு படை வீடுகள் மதுரையில் இருக்கிறது. அத்தகைய புகழ்பெற்ற புண்ணிய பூமியான மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில், அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைத்தும், அதிலே சுவாமி தரிசனம் செய்வதும் சிறப்புக்குரியது. இதனை பக்தர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதில் அரசியல் கிடையாது. இருப்பினும், ஆன்மிகம்…

Read More