Author: admin

சாக்லேட், குறிப்பாக டார்க் சாக்லேட், இரும்பு, மெக்னீசியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. இரத்தம் மற்றும் ஆற்றல் உற்பத்தியில் ஆக்ஸிஜன் போக்குவரத்திற்கு இரும்பு முக்கியமானது. மெக்னீசியம் தசை மற்றும் நரம்பு செயல்பாடு, எலும்பு ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதை ஆதரிக்கிறது. ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கொலாஜன் உற்பத்தியில் தாமிரம் மற்றும் மாங்கனீசு முக்கிய பங்கு வகிக்கிறது, அவை தோல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உயிர்ச்சக்திக்கு முக்கியமானவை.

Read More

பாட்னா: முதி​யோர் பென்​ஷன் தொகையை ரூ.400-லிருந்​து, ரூ.1,100- ஆக உயர்த்தி முதல்​வர் நிதிஷ்கு​மார் அறி​வித்தது பற்றி ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் தேர்​தலில் பாஜக-ஐக்​கிய ஜனதா தளக் கூட்​ட​ணிக்​கும், ஆர்ஜேடி, காங்​கிரஸ் கட்​சிகள் அடங்​கிய கூட்​ட​ணிக்​கும் இடையே கடும் போட்டி உள்ளது. இந்​நிலை​யில் தேஜஸ்வி யாதவ் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார், தற்​போது சுயநினை​வின்றி உள்​ளார். செயல்​ப​டாத முதல்​வ​ராக இருக்​கிறார். அவரால் அவரது கட்சி வேட்​பாளர்​களைக் கூட தேர்வு செய்ய முடி​யாத நிலை​யில் உள்​ளார். அவருக்கு பதிலாக ஐக்​கிய ஜனதா தள கட்சி வேட்​பாளர்​களைக் கூட மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தான் தேர்வு செய்​யப் போகிறார். பிஹாரில் மெகா கூட்​டணி கூட்​டணி ஆட்​சி​யில் இருந்​த​போது பென்​ஷன் தொகை உயர்வு உள்​ளிட்ட திட்​டங்​களைக் கொண்டு வந்​தது. அந்​தத் திட்​டங்​களை அப்​படியே காப்​பியடித்து தற்​போது தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) அரசு செயல்​பட்டு…

Read More

சென்னை: வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்த ஜூலை 8-ம் தேதி அமித் ஷா சென்னை வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்குடன் தமிழக பாஜகவும் தீவிர களப்பணியாற்றி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமித் ஷா, அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார். அதைத்தொடர்ந்து, கடந்த 8-ம் தேதி மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமித் ஷா பங்கேற்றார். கூட்டத்தில், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும். கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதை ஆய்வு செய்வதற்காக அடிக்கடி தமிழகம் வருவேன் என அமித் ஷா கூறியிருந்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில், நயினார் நாகேந்திரன் நேற்று…

Read More

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் விவகாரத்தில் இந்திய அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக `தி இந்து’ நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: காசாவில் ஏற்பட்ட பேரழிவு குறித்தும், தற்போது ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் குறித்தும் இந்திய அரசு அமைதி காப்பது நமது தார்மீக மற்றும் ராஜதந்திர வழக்கங்களை விட்டு விலகுவதற்கு சமமாகும். இது நமது குரல் மட்டுமின்றி, நமது மதிப்புகளையும் இழப்பதைப் போன்றதாகும். இத்தகைய மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டுள்ள சூழலில், இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரத்தில் ‘இரு-நாடு’ தீர்வுக்கான இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் கைவிட்டுவிட்டது. இந்த விவகாரத்தில் இனிமேலும் தாமதிக்காமல் இந்தியா தெளிவாக தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியா தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மேற்கு ஆசியாவில் பதற்றத்தை…

Read More

மூலவர்: போக சயன ரங்கநாதர் அம்பாள்: ரங்கநாயகி தல வரலாறு : சாளுக்கிய மன்னர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து வந்த போது ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளின் அழகில் மயங்கிஅதைபோல் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று நினைத்தார். ஒரு விவசாயி அறுவடை முடிந்து கதிரடிக்கப்பட்டு நெல் மணிகளை மரக்கால் கொண்டு அளந்து கொண்டிருந்தார். அரசர் பார்க்கும்போது, திடீரென அவர் மறைந்தார். மன்னர் அவரை தேடியபோது, விவசாயி (பெருமாள்) மரக்காலை தலைக்கு வைத்து ஓரிடத்தில் படுத்து,சயன கோலத்தில் மன்னருக்கு காட்சியளித்து மறைந்தார். அதை பார்த்த மகிழ்ச்சியில் மன்னர் ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் போலவே இங்கும் ஒரு பெருமாள் கோயில் கட்டினான். இது வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படுகிறது. சிறப்பு அம்சம்: பதினெட்டரை அடி நீளமும் ஐந்தடி உயரமும் கொண்டு வசீகரத் தோற்றத்துடன் ஐந்து தலை ஆதிசேஷன் மீது இறைவன் வலது கையை தலைக்கு கீழே வைத்துஇடது கையை முன்னோக்கி நீட்டியவாறு, கிழக்கு பார்க்க…

Read More

சென்னை: உயர்கல்வி துறை சார்பில் கே.வி.குப்பம், துறையூர், உளுந்தூர்பேட்டை, செங்கம் ஆகிய 4 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இக்கல்லூரிகள் இந்த கல்வி ஆண்டு முதலே செயல்படும். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான உயர்கல்வி துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாவட்டம் ஆலந்தூர், செங்கல்பட்டு – செய்யூர், விழுப்புரம் – விக்கிரவாண்டி, கடலூர் – பண்ருட்டி, பெரம்பலூர் – கொளக்காநத்தம், தஞ்சாவூர் – திருவிடைமருதூர், திருவாரூர் – முத்துப்பேட்டை, நீலகிரி – குன்னூர், திண்டுக்கல் – நத்தம், சிவகங்கை – மானாமதுரை, தூத்துக்குடி – ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 26-ம்…

Read More

புதுடெல்லி: சத்​தீஸ்​கரின் கங்​கேர் மாவட்​டம் அமதோலா கல்​பார் எனும் மலைப்​பாங்​கான வனப்​பகு​தி​யில் நக்​சலைட்​டு​கள் நடமாட்​டம் இருப்​ப​தாக நேற்​று​முன்​தினம் தகவல் கிடைத்​துள்​ளது. உடனடி​யாக அங்கு சிஆர்​பிஎப் வீரர்​கள் விரைந்து சென்​றனர். அப்​போது, பாது​காப்​புப் படை​யினரை நோக்கி நக்​சலைட்​டு​கள் துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். அப்​போது வீரர்​கள் பதில் தாக்​குதல் நடத்​தி​ய​தில், பிஎல்​ஜிஏ​வின் பெண் நக்​சலைட் சாந்தி என்ற தேவ் உயி​ரிழந்​தார். இவரை பற்றி தகவல் அளிப்​பவர்​களுக்கு ரூ.8 லட்​சம் சன்​மானம் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதுகுறித்து எஸ்​.பி. இந்​திரா கல்​யாண் எலிசேலா கூறுகை​யில், ‘‘மாவட்ட ரிசர்வ் படை மற்​றும் எல்​லைப் பாது​காப்பு படை​யினரின் நம்​பக​மான தகவலைப் பெற்ற பிறகு, கூட்டு பாது​காப்​புப் படையினர் முற்​றுகை​யிட்​டனர். அப்​போது நடந்த என்​க​வுன்ட்​டரில் பிஜப்​பூர் மாவட்​டம் குண்​டேமில் வசித்த சாந்தி என்ற தேவ் என்​பவரும் உயி​ரிழந்​தார். இவர் கரி​யாபந்த் மாவட்​டத்​தின் நக்​சலைட்​டு​களின் கோப்ரா குழு​வில் மிக முக்​கிய​மானவ​ராக இருந்​தவர்’’ என்​றார். சாந்​தி​யிடம் இருந்து தோட்​டாக்​கள், துப்​பாக்​கி, வாக்​கி-​டாக்கி உட்பட பல பொருட்​கள்…

Read More

வாஷிங்டன்: ஈரானில் உள்ள மூன்று முதன்மை அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: “ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம். இப்போது அனைத்து விமானங்களும் ஈரானின் வான்வெளிக்கு வெளியே உள்ளன. முதன்மை தளமான ஃபோர்டோவில் குண்டுகள் முழுமையாக வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக வீடு திரும்புகின்றன. எங்கள் சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த ராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது. இப்போது அமைதிக்கான நேரம். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களை நடத்த 2பி2 பாம்பர் ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா இந்த குண்டுகளை பயன்படுத்துவது இதுவே முதல்…

Read More

சென்னை: டாஸ்​மாக் முறை​கேடு தொடர்​பான விவ​காரத்​தில் தொடர்பு இருப்​ப​தாக கூறி திரைப்பட தயாரிப்​பாள​ரான ஆகாஷ் பாஸ்​கரன், தொழில​திபர் விக்​ரம் ரவீந்​திரன் ஆகியோரது வீடு​கள், அலு​வல​கங்​களில் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்டு வீடு, அலு​வல​கங்​களுக்கு சீல் வைத்​தனர். அமலாக்​கத்​துறை​யின் இந்த நடவடிக்​கைக்கு எதி​ராக இரு​வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தனர். இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை ஏற்​கெனவே நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது. அப்​போது வீடு மற்​றும் அலு​வல​கங்​களுக்கு சீல் வைக்​கும் அதி​காரம் அமலாக்​கத்​துறைக்கு உள்​ளதா என நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பிய நிலை​யில், அவ்​வாறு சீல் வைக்​கும் அதி​காரம் அமலாக்​கத்​துறைக்கு இல்லை என தெரிவிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் நீதிப​தி​கள் நேற்று பிறப்​பித்​துள்ள இடைக்​கால உத்​தர​வில், ‘‘டாஸ்​மாக் முறை​கேடு தொடர்​பாக மனு​தா​ரர்​களுக்கு எதி​ராக எந்த ஆதா​ரங்​களும் அமலாக்​கத்​துறை​யின​ரால் தாக்​கல் செய்​யப்​பட​வில்​லை, அப்​படி​யிருக்​கும்​போது ஆதா​ரமின்றி அவர்​களின் வீடு​கள் மற்​றும் அலு​வல​கங்​களில் சோதனை நடத்​த​வும், மின்​னணு சாதனங்​களை பறி​முதல் செய்​ய​வும்…

Read More

தமிழகத்தில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூன் 22) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், வரும் 23 முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன்…

Read More