கோவை: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் இன்று கோவை வந்தார். பேரூரில் நாளை நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். கார் மூலமாக கோவைப்புதூர் அருகேயுள்ள சுண்டக்காமுத்தூர் நாச்சிகோனார் தோட்டத்திற்கு சென்றார். இரவு அங்கு தங்கும் அவர் நாளை காலை பேரூர் ஆதீன மடத்திற்கு சென்று அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். சிறப்பு பூஜையில் பங்கேற்ற பின், நொய்யல் ஆறு மற்றும் சமீபத்தில் திறக்கப்பட்ட தர்ப்பண மண்டபத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து மும்பைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். ஆர்எஸ்எஸ் தலைவர் வருகையை முன்னிட்டு கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் தலைமையில் மொத்தம் 263 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Author: admin
Last Updated : 22 Jun, 2025 02:32 PM Published : 22 Jun 2025 02:32 PM Last Updated : 22 Jun 2025 02:32 PM புதுச்சேரி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஓடும் இரயிலில், யோகா மற்றும் ரோப் யோகா செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு யோகா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஓடும் ரயிலில் யோகா மற்றும் ரோப் யோகா செயல் விளக்கம் என்னும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புதுவை ரயில் நிலையத்திலிருந்து விழுப்புரம் ரயில் நிலையம் வரை சென்ற ரயிலில் இந்த யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு யோகா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியை சட்டபேரவை தலைவர் செல்வம் புதுச்சேரி இரயில் நிலையத்திலிருந்து துவக்கி வைத்து யோகாவின்…
புதுடெல்லி: ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, போரின் தீவிரத்தைக் குறைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியுள்ளார். ஈரான்-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், இன்று திடீரென அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, சமீபத்திய பதற்றங்கள் குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நரேந்திர மோடி, நீண்டகால பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு போரின் தீவிரத்தை குறைப்பது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தினார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷஷ்கியனுடன் பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். சமீபத்திய மோதல்கள் குறித்து ஆழ்ந்த…
சென்னை: “திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். நான்காண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் முதல்வர் ஸ்டாலினின் சாதனை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “விளம்பர வெற்றிகளில் மட்டுமே மிதக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதெல்லாம் வெறும் கற்பனையில் மட்டுமே என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். பொம்மை முதல்வர் ஸ்டாலின், உலக நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறேன் என்று கூறி சுற்றுலா சென்று, தமிழ் நாடு “நம்பர் ஒன்” மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் உயர்த்திப் பிடிக்கும் உங்கள் குடும்ப ஆட்சி, அந்நிய முதலீடுகளில் (FDI) மாநிலத்தை பின்னடைவின் பிடியில் தள்ளியுள்ளது என்பதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) 2024-25 நிதியாண்டு…
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், ஆனால் உங்களை சோர்வடையச் செய்யும் செலவில் அல்ல ‘இகிகாய்’ இல், நல்ல ஆரோக்கியம் ஜிம்மில் மணிநேரம், தடைசெய்யப்பட்ட தட்டுகள் மற்றும் சோர்வான நடவடிக்கைகள் மட்டுமல்ல. மாறாக இது நீங்கள் விரும்பும் விதத்தில் நகர்த்துவது மற்றும் வேலை செய்வது பற்றியது, அது நடைபயிற்சி, தோட்டக்கலை, நடனம் அல்லது ஒத்ததாக இருந்தாலும் சரி.
புதுச்சேரி: எடப்பாடி பழனிச்சாமி கார்டூன் விவகாரத்தில் திமுகவைக் கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து கார்டூன் வெளியிட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைக் கண்டித்தும், திமுகவின் சமூக வலைதள பக்கங்களை உடனே முடக்கம் செய்ய வலியுறுத்தியும், திமுக அரசை குறைந்தபட்சம் 6 மாதத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் முடக்கம் செய்யக்கோரியும் புதுச்சேரியில் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பட்டம் நடத்தினர். பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுகவினர் பலர் கலந்து கொண்டு திமுகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் அன்பழகன் பேசும்போது, ”பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு அனைத்து துறைகளிலும்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பலா பழம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு உள்ளிட்ட பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் பலா மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் பலா பழங்கள் அருகில் உள்ள மண்டிகள் மூலம் உள்ளூர், வெளி மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. வடகாடு பகுதி பலா பழம் ருசியாகவும், தித்திப்பாகவும் இருப்பதால், மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கான தனித்தன்மையை உலகெங்கும் பரவலாக்கும் விதமாகவும், விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும் வடகாடு பகுதி பலா பழத்துக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சியில் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மண்டிகளில் தற்போது பலாப் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், விலையோ கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், வடகாடு பகுதி பலா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து சேந்தன்குடி விவசாயி தங்க.கண்ணன் கூறியது: ஒரு கிலோ பலா…
நடைபயிற்சி போன்ற ஒரு உடற்பயிற்சி உங்கள் மூளையின் அளவை அதிகரிக்கிறது. அதிர்ச்சியூட்டும்! இல்லையா? நடைபயிற்சி, குறிப்பாக, நினைவகத்திற்கு பொறுப்பான மூளையின் முக்கிய பகுதியான ஹிப்போகாம்பஸின் அளவை கணிசமாக அதிகரிக்க முடியும், மேலும் வயதானவர்களில் அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது என்று தேசிய அறிவியல் அகாடமியின் (பி.என்.ஏக்கள்) செயல்முறைகளில் வெளியிடப்பட்ட ஒரு முன்னோடி ஆய்வு கூறுகிறது. வயது தொடர்பான அறிவாற்றல் வீழ்ச்சியை நிறுத்த ஒரு எளிய, மலிவான முறைக்கான கதவை ஆராய்ச்சி திறக்கிறது.ஒரு வருட காலப்பகுதியில், இந்த ஆராய்ச்சி 55 முதல் 80 வயது வரையிலான மூத்தவர்களின் கூட்டணியைப் பின்பற்றியது. பங்கேற்பாளர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்: கட்டுப்பாட்டுக் குழு நீட்சி மற்றும் டோனிங் பயிற்சிகளை மேற்கொண்டது, மற்ற குழு வழக்கமான இருதய செயல்பாட்டைச் செய்தது (இந்த நிகழ்வில், வாரத்திற்கு மூன்று முறை 40 நிமிடங்கள் நடைபயிற்சி). விசாரணையின் முடிவில் எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் நடைபயிற்சி குழுவில் உள்ள ஹிப்போகாம்பஸின் அளவு, பொதுவாக வயதைக் கொண்டு சுருங்கிவிடும்…
ராமநாதபுரம்: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் 54 படகு உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ 3.96 கோடி நிவாரண உதவித் தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீனவர்களுக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டு மீட்க இயலாத நிலையில் அங்கு நெடுங்காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளின் உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 48 விசைப்படகுகளுக்கு தலாரூ.8 லட்சமும், மற்றும் 6 நாட்டுப்படகுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதமும் என மொத்தம் 54 பயனாளிகளுக்கு ரூ.3.96 கோடி நிவாரண உதவித்தொகைக்கான காசோலையை ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர்…
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழக ஜவுளித்தொழில் மத்திய அரசு பல ஆண்டுகளாக கோரிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தால் நலிவடைந்து வருவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழக ஜவுளித்தொழில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டதாகும். அதிக மக்களுக்கு குறிப்பாக கிராப்புற பெண்கள் அதிகம் ஜவுளித்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்துறை பஞ்சுக்கு இறக்குமதி வரி 11 சதவீதம் நீக்குதல், செயற்கை இழை இறக்குமதிக்கு தரக்கட்டுப்பாடு விதிமுறைகளை அகற்றுதல், இந்திய பருத்தி கழகத்தின் கிளையை தமிழ்நாட்டில் தொடங்குதல் போன்ற மிக முக்கிய கோரிக்கைகளை பல ஆண்டுகளாக மத்திய அரசு நிறைவேற்றாததால் தொழில் மிகவும் நலிவடைந்து வருவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின்(சிஸ்பா) கெளரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் 300 லட்சம் பேல்(ஒரு பேல் 356 கிலோ) பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 150 லட்சம் பேல் பஞ்சு இந்திய பருத்தி கழகத்தால் (சிசிஐ) கொள்முதல் செய்யப்பட்டு நூற்பாலை…
