கபில் சர்மா நிகழ்ச்சியில் சல்மான் கான் ஏ.வி.எம் மற்றும் மூளை அனீரிஸம் உடனான போராட்டத்தை வெளிப்படுத்துகிறார்: ஏ.வி.எம் என்றால் என்ன, அதன் காரணங்கள், அது ஏன் மிகவும் தீவிரமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள் நெட்ஃபிக்ஸ் தி கிரேட் இந்தியன் கபில் ஷோவில் சல்மான் கான் தோன்றியபோது, பார்வையாளர்கள் லேசான மனதுடன், தொழில் நிகழ்வுகள் மற்றும் ஏக்கத்தைத் தொடுவதை எதிர்பார்க்கிறார்கள். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமைதியாக போராடும் தீவிரமான மற்றும் சிக்கலான சுகாதார நிலைமைகளின் பட்டியலை வெளிப்படுத்தினார், அதே நேரத்தில் திரைப்படங்களுக்கு தலைப்புச் செய்துள்ளார் மற்றும் உயர் ஆற்றல் அதிரடி காட்சிகளை நிகழ்த்துகிறார். 59 வயதில், கான் ட்ரைஜீமினல் நியூரால்ஜியா, ஒரு மூளை அனீரிஸம் மற்றும் தமனி சார்ந்த குறைபாடு (ஏ.வி.எம்) ஆகியவற்றால் அவதிப்படுவதாக பகிர்ந்து கொண்டார், உடைந்த விலா எலும்புகள் உள்ளிட்ட காயங்கள் மற்றும் வியாதிகள்.இந்த நேர்மையான வெளிப்பாடு அவரது உடல்நலம் குறித்த பல மாதங்கள் ஊகங்களுக்குப் பிறகு வந்தது, குறிப்பாக…
Author: admin
‘ஜனநாயகன்’ கடைசி படமா என்ற கேள்விக்கு விஜய் அளித்த பதில் குறித்து பேசியிருக்கிறார் மமிதா பைஜு. இன்று (ஜூன் 22) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் விஜய். இதனை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், இது விஜய்யின் கடைசிப் படம், இதற்கு பின் முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இது விஜய் ரசிகர்களை சோகத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. தற்போது விஜய் குறித்து மமிதா பைஜு பேசியிருப்பது, விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, விஜய்யின் கடைசிப் படத்தில் நடித்திருப்பது குறித்த கேள்விக்கு, “‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு தளத்தில் விஜய் சாரிடம், “இதுதான் உங்களுடைய கடைசிப் படமா?” என்று கேட்டேன். அதற்கு “தெரியவில்லை. தேர்தல் முடிந்ததும் பார்ப்போம்” என்று பதிலளித்தார். அவருடைய கடைசி நாள் படப்பிடிப்பில் அனைவருமே ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டோம். விஜய் சாருமே ரொம்ப…
ஈரோடு: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுகவின் 31 -வது மாநில பொதுக்குழுக் கூட்டம், கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் தலைமையில் ஈரோட்டில் இன்று (ஜூன் 22) காலை நடந்தது. கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: > திராவிட இயக்கத்துக்கு எதிரான பகை சக்திகள் தமிழ்நாட்டைக் கைப்பற்ற முனைந்து வரும் சூழலில், தேர்தல் கூட்டணி தொடர்பாக, 2017 -ம் ஆண்டிலிருந்து எடுத்த முடிவை, எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மதிமுக தொடர்ந்து கடைபிடிக்கும். > இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாட்டின்…
பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் ஜூலை 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. பல ஆண்டுகளாக இப்படம் தயாரிப்பில் இருக்கிறது. மேலும், பல முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இம்மாதம் வெளியாவதாக இருந்த படமும் ஒத்திவைக்கப்பட்டு, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் ஓடிடி உரிமையினை கைப்பற்றிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் ஜூலை 24-ம் தேதி ‘ஹரி ஹர வீர மல்லு’ வெளியாகும் என முடிவு எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ள ‘ஹரி ஹர வீர…
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அரசுக்கு எதிராக மாறி வாக்களிக்க தயங்க மாட்டோம் என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் அ.மாயவன் தெரிவித்தார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முப்பெரும் விழா நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிறுவனத் தலைவர் மாயவன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. எதிர்க்கட்சியாக இருக்கும் போது திமுக கொடுத்த வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைய வேண்டும் என்று எந்த சங்கமும் முன்னெடுக்காத ஒரு பணியை நாங்கள் செய்தோம். எங்களை ஏமாற்றும் திமுக அரசை இனி நாங்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. விரைவில் பொதுக்குழுவை கூட்டி போராட்டங்கள் அறிவிக்கப் படும். கடந்த நான்கரை ஆண்டுகளாக செய்யாத திட்டங்களை இனி அவர்களால் செய்ய முடியாது. சிறை நிரப்பும் போராட்டம் உட்பட பல போராட்டங்கள் நடத்தப்படும். திமுக அரசை விரைவில்…
தெஹ்ரான் / டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மீதான கடும் கோபத்தில் உள்ள ஈரான் பல்வேறு புதிய வியூகங்களை வகுத்துள்ளது. இதனிடையே, ஆவேசத்தின் உச்சமாக, இஸ்ரேல் நகரங்கள் மீது சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது ஈரான். அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையாக பதிலடி தந்து வந்ததால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்தது. இந்த நிலையில், ஈரான் நாட்டின் 3 முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா குண்டு வீசி அழித்தது, இந்தப் போரை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது. ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் ஈரான் அணுசக்தி திட்டத்தை நாசமாக்கிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. “ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் மையமான நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் ஃபர்தோ ஆகிய…
மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் படகு மூழ்கியதில் மாயமான மீனவரின் உடல், 3 நாட்களுக்குப் பிறகு கச்சத்தீவு கடல் பகுதியில் மீட்கப்பட்டது. கடந்த 18-ம் தேதி காலை மண்டபத்தைச் சேர்ந்த சர்புதீன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, கடல் சீற்றம் காரணமாக படகின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு மூழ்கியது. இதில் படகின் ஓட்டுநர் இப்ராஹிம் ஷா (40) உள்ளிட்ட 4 மீனவர்கள் கடலில் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள், கடலில் தத்தளித்தவர்களில் 3 பேரை காப்பாற்றினர். ஆனால், இப்ராஹிம் ஷா மட்டும் மாயமானார். தீவிரமாக தேடப்பட்ட நிலையில், நேற்று மதியம் கச்சத்தீவு அருகே இறந்த நிலையில் இப்ராஹிம் ஷா உடல் மிதப்பதாக, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், மீனவர்களின் உறவினர்கள் படகில் சென்று உடலை மீட்டு, மெரைன் போலீஸார் உதவியுடன் மண்டபம் வடக்கு…
வானியலாளர்கள் ஐரோப்பிய தெற்கு ஆய்வகம் (ESO) மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் வெளியிட்டுள்ளது அல்ட்ரா-விரிவான வரைபடம் எப்போதும் உருவாக்கப்பட்டது சிற்பி விண்மீன்என்றும் அழைக்கப்படுகிறது என்ஜிசி 253. சுமார் 11 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த விண்மீன் அளவு மற்றும் கட்டமைப்பின் அடிப்படையில் நமது சொந்த பால்வீதியுடன் பல ஒற்றுமையை பகிர்ந்து கொள்கிறது. சக்திவாய்ந்தவற்றைப் பயன்படுத்துதல் மல்டி யூனிட் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் எக்ஸ்ப்ளோரர் (மியூஸ்) ESO இன் கருவி மிகப் பெரிய தொலைநோக்கிஆராய்ச்சியாளர்கள் 100 க்கும் மேற்பட்ட வெளிப்பாடுகளைக் கைப்பற்ற 50 மணி நேரத்திற்கும் மேலாக செலவிட்டனர். இதன் விளைவாக வரும் படம் 65,000 ஒளி ஆண்டுகள் அகலத்தை உள்ளடக்கியது மற்றும் ஆயிரக்கணக்கான வண்ணங்களை வெளிப்படுத்துகிறது, விண்மீன் மண்டலத்திற்குள் நட்சத்திரங்கள், வாயு மற்றும் தூசி பற்றிய முன்னோடியில்லாத நுண்ணறிவை வழங்குகிறது.ஒப்பிடமுடியாத விவரங்களில் சிற்பி விண்மீன்சிற்பி விண்மீன் வானியலாளர்களுக்கு அதன் உள் கட்டமைப்பை நம்பமுடியாத துல்லியத்துடன் தீர்க்க போதுமானதாக உள்ளது. இந்த அதி-விரிவான வரைபடம்…
மதுரை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள், மதுரையில் நடந்துவரும் முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தமிழக இந்து முன்னணி சார்பில், மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்: > கார்த்திகை தீப திருநாளன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் > ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான இந்திய ராணுவத்துக்கும், பிரதமர் மோடிக்கு நன்றி. > தமிழகத்தில் உள்ள குன்றங்கள் அனைத்தும் குமரனுக்கே என்கிற வகையில் அனைத்து மலைகளையும் காக்க வேண்டும். > தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும். > வரும் தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தல் வந்தாலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும். > ஒவ்வொரு மாத சஷ்டி தினத்தன்று…
மதுரை: “கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் தமிழ்நாட்டில் உள்ளது. இந்து மதத்தை கேலி செய்யும் அவர்களால் மற்ற மதங்களை கேலி செய்ய முடியுமா” என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பி உள்ளார். இந்து முன்னணி சார்பில், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண், “என்னை மதுரைக்கு வர வழைத்தது முருகன். என்னை வளர்த்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன். மதுரைக்கும் முருகனுக்கும் நெருக்கம் அதிகம். முருகனின் முதல் அறுபடை வீடும் கடைசி அறுபடை வீடும் மதுரையில்தான் உள்ளது. மதுரை என்பது மீனாட்சி அம்மனின் பட்டிணம். மீனாட்சி அம்மன், தாய் பார்வதியின் அம்சம். எனவே, முருகனின் தாயாரும் மதுரையில்தான் உள்ளார். முருகனின் தந்தை சிவபெருமான், முதல் தமிழ்ச்சங்கத்தை தலைமையேற்று நடத்தியவர். எனவே, மதுரையில், தாயும், தந்தையும் மகனும் இருக்கிறார்கள். அப்படி எனில், மதுரை மக்கள்…
