Author: admin

புதுடெல்லி: அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்ட நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இஸ்ரேல் – ஈரான் போர் கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று நேரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினேன். தற்போதைய சூழல் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தோம். சமீபகால பதற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன். பதற்றத்தை தணிப்பது, அமைதி பேச்சுவார்த்தை, ராஜதந்திர முயற்சிகள் மூலம் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். ஈரானில் தங்கியிருந்த…

Read More

லீட்ஸ்: இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதலா​வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் இங்​கிலாந்து அணி 465 ரன்​களுக்கு ஆட்டமிழந்தது. ஜஸ்​பிரீத் பும்​ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபார​மாக பந்​து​வீசி விக்​கெட்​களைச் சாய்த்​தனர். இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதலா​வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்டி ஹெடிங்லி மைதானத்​தில் கடந்த 20-ம் தேதி தொடங்​கியது. முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 471 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இந்​திய அணி சார்​பில் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 101, கேப்​டன் ஷுப்​மன் கில் 147, ரிஷப் பந்த் 134 ரன்​கள் குவித்​தனர். இங்​கிலாந்து அணி தரப்​பில் டங், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 4 விக்​கெட்​களை​யும், பிரைடன் கார்​ஸ், ஷோயிப் பஷீர் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் வீழ்த்​தினர். இதையடுத்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடத் தொடங்​கிய இங்​கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 3 விக்​கெட் இழப்​புக்கு 209 ரன்​கள் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில், நேற்​றைய 3-வது நாள் ஆட்​டத்தை…

Read More

ஈரானிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதைத் தொடர்ந்து ஈரானுக்கு தேவையான அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவருமான திமித்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். இதுகுறி்தது அவர் மேலும் கூறியதாவது: ஈரானை தாக்கியதன் மூலம் மத்திய கிழக்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதிய போரை தொடங்கி வைத்துள்ளார். அமைதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது வருந்தத்தக்கது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எந்தவொரு ராணுவ நோக்கங்களையும் அடைய தவறிவிட்டது. ஈரான் சிறிய சேதத்தை மட்டுமே சந்தித்துள்ளது. அது எதிர்காலத்தில் அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட இந்த தாக்குதல் வழிவகுக்கும். பல நாடுகள் ஈரானுக்கு தங்களது அணு ஆயுதங்களை வழங்கத் தயாராக உள்ளன. (ஆனால் எந்த நாடுகள் என அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை). அமெரிக்காவின் இந்த தாக்குதல் ஈரானை அரசியில் ரீதியில் பலப்படுத்தியுள்ளது. ஈரானில் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக…

Read More

மதுரை: இந்துக்களை ஒருங்கிணைத்துள்ளது மதுரை முருக பக்தர்கள் மாநாடு என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: நமது வாழ்வியல் முறைக்குத் தொடர்ந்து இடையூறு வருகிறது. அதை எதிர்ப்போம். இதற்காகவே மதுரையில் இந்த மாநாடு நடக்கிறது. நமது வாக்கைப் பெற்று அதிகாரத்தில் இருப்போர், கோயில்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்றனர். முதல் படை வீடான திருப்பரங்குன்றத்துக்கே இடையூறு செய்தனர். அடுத்தடுத்த வீடுகளுக்கும் இடையூறு செய்வர்கள். நமது முன்னோர் பாதுகாத்துக் கொடுத்துள்ளதை நாம் பாதுகாக்க வேண்டும். மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை மக்கள் அமைதியாக தரிசித்துச் செல்கின்றனர். அறுபடை வீடுகளில் காசு கொடுக்காமல் தரிசிக்க முடியாது. எங்காவது ஓரிடத்தில் அறநிலையத் துறையின் செயல்பாடு நேர்மையாக இருக்கிறதா? ஆன்மிகத்தை மையமாகக் கொண்டு வாழ்வியலை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இது அரசியலுக்கான மாநாடு அல்ல. யாருக்​கும் நாம் எதிரி​கள்…

Read More

ஆண்களும் பெண்களும் பொதுவாக அணியும் வண்ணங்கள் ஒன்றே. ஒரு நேர்த்தியான மற்றும் ஸ்டைலான பொருத்தத்திற்காக, சரியான துணி மற்றும் வண்ண கலவையை ஒருவர் எடுக்க வேண்டும், ஏனெனில் நாம் தேர்ந்தெடுக்கும் சாயல்கள் நம் இயற்கையான அழகை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் எங்களை எப்படிப் பார்க்கப் போகிறார்கள் என்பதையும் மக்களின் மனநிலையையும் வடிவமைக்க வேண்டும். மஞ்சள் அல்லது சிவப்பு போன்ற சத்தமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும் வண்ணங்கள் நம்மை நம்பிக்கையையும் ஆற்றலையும் நிரப்பலாம். இருப்பினும், மந்தமான பழுப்பு அல்லது சாம்பல் ஒரு இயற்றப்பட்ட உணர்வின் பிரகாசத்தை வெளிப்படுத்துகிறது. இதேபோல், சில பிரபலமான சாயல்கள் மெலிதான அல்லது முழுமையான தோற்றத்தை உருவாக்கலாம். 5 சாயல்களைப் பார்ப்போம், அது நிச்சயமாக நீங்கள் இல்லாவிட்டாலும் கூட, நீங்கள் ரஸமாக இருக்கும்.

Read More

A டென்னசியில் உள்ள பெடரல் நீதிபதி, மேரிலாந்து குடியிருப்பாளரான கில்மர் அப்ரெகோ கார்சியாவை விடுவிக்க உத்தரவிட உள்ளார், அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எல் சால்வடாருக்கு தவறாக நாடு கடத்தப்பட்டு இப்போது அமெரிக்காவில் மனித கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க மாமகிஸ்ட்ரேட் நீதிபதி பார்பரா ஹோம்ஸ், விசாரணைக்கு காத்திருக்கும்போது ஆப்ரெகோ கார்சியா தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் தீர்மானத்தை மறுத்தபோது இந்த முடிவு வந்தது. அவர் விடுவிக்கப்பட்ட நிபந்தனைகளை இறுதி செய்ய புதன்கிழமை ஒரு விசாரணை திட்டமிடப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், அமெரிக்க அரசாங்கம் ஏற்கனவே தீர்ப்பை எதிர்த்து ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது, மேலும் வெளியீட்டு உத்தரவில் தங்குமாறு கோரியுள்ளது. சுங்க அமலாக்கங்கள் அவரைக் காவலில் எடுத்து அவரை நாடுகடத்த முயற்சிக்கக்கூடும் என்பதால், அமெரிக்க நிர்வாகம் கார்சியாவை விடுவிக்காது என்று ஏஜென்சிகள் பரிந்துரைக்கின்றன.ஆப்ரெகோ கார்சியா யார்? அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன?முதலில் எல் சால்வடாரில் இருந்து, ஆப்ரெகோ கார்சியா 2011 ஆம் ஆண்டில்…

Read More

புதுடெல்லி: ஈ​ரானிலிருந்து 1,428 இந்​தி​யர்​கள் தாயகம் திரும்​பினர். மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். இஸ்​ரேல், ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்​துக்​கும் மேலாக போர் நடை​பெற்று வரு​கிறது. இதையடுத்​து, ஆபரேஷன் சிந்து திட்​டத்​தின் மூலம் ஈரானில் உள்ள இந்​தி​யர்​கள் அழைத்து வரப்​படு​கின்​றனர். இதற்​கான ஏற்​பாடு​களை ஈரானில் உள்ள இந்​திய தூதரக​மும் மத்​திய வெளி​யுறவு அமைச்​சக​மும் செய்து வரு​கிறது. இது​வரை 4 தனி விமானங்​களில் மாணவர்​கள் உட்பட 1,100 பேர் தாயகம் திரும்பி உள்​ளனர். இந்​நிலை​யில், 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களு​டன் 5-வது விமானம் நேற்று மாலை டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்​தது. இதன்​மூலம் இது​வரை ஈரானிலிருந்து அழைத்து வரப்​பட்​ட​வர்​கள் எண்​ணிக்கை 1,428-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். அவர்​கள் இன்​றும் நாளை​யும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இதுத​விர, நேபாளம் மற்​றும் இலங்​கை​யைச் சேர்ந்​தவர்​களை​யும்…

Read More

திருநெல்வேலி: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வென்றது. திருநெல்வேலி இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த போட்டியில் சேலம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. சேலம் அணியின் நிதிஷ் ராஜகோபால் 74 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. அஸ்வின் 36, ஷிவம் சிங் 34, ஜெயந்த் 25, ஹுன்னு சைனி 35, விமல் குமார் 24, வருண் சக்ரவர்த்தி 13 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

Read More

டெஹ்ரான்: அமெரிக்க தாக்குதலால் கோபம் அடைந்துள்ள ஈரான் உலகளவில் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோமுஸ் ஜலசந்தியை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் ஈரான் நாட்டின் மூன்று முக்கிய அணு சக்தி தளங்களை அமெரிக்கா குண்டு வீசி அழித்தது. இது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழித்தடத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஹோமுஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் எல்லாம் ஈரான் மற்றும் ஓமன் இடையே உள்ள குறுகலான ஹோமுஸ் ஜலந்தியைத்தான் பயன்படுத்துகின்றன. உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகத்தான் நடைபெறுகிறது. நாள்…

Read More

தனுஷ் நடித்த ‘குபேரா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் தனுஷ் பேசியது: “இப்போதெல்லாம் திரைப்படங்கள் தியேட்டரில் ஓடுவதே மெல்ல கேள்விக் குறியாகி வருகிறது. ரத்தம், கத்தி, ஹெலிகாப்டர்கள் இடம்பெறும் ஆக்‌ஷன் படங்கள் மட்டுமே மக்களை தியேட்டர்களுக்கு அழைத்து வரும் என்ற மாயை நிலவுகிறது. ஆனால் மனித உணர்வுகளும் மக்களை தியேட்டருக்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கையை ‘குபேரா’ விதைத்துள்ளது. மனித உணர்வுகளை விட பெரியது எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. எதிர்கால இயக்குநர்களுக்கும் இதுபோன்ற படங்கள் நம்பிக்கையை விதைக்க வேண்டும். பெரிய பட்ஜெட், கிராபிக்ஸ், சூப்பர் ஹீரோ படங்கள்தான் இனி கைகொடுக்கும் என்ற எண்ணம் அடுத்த தலைமுறை இயக்குநர்களுக்கு வரக் கூடாது. தமிழில் கூட இதேபோல ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது. சாதாரண மனிதர்களை பற்றி பேசிய அந்தப் படமும் மக்களை திரையரங்குகளுக்கு…

Read More