Author: admin

சு.அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படமொன்றில் நடித்து தயாரிக்கவுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தக் லைஃப்’. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம் படுதோல்வியை தழுவியது. இதனால் தனது அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார். அடுத்ததாக சண்டை இயக்குநர் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கமல். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி இந்தாண்டிற்குள் முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தினை முடித்துவிட்டு சு.அருண்குமார் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் கமல். ’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு அடுத்த படம் என்ன என்பதை அருண்குமார் இன்னும் முடிவு செய்யவில்லை. இதனிடையே ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார் அருண்குமார். அதில் வேறொரு நாயகன் தான் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. தற்போது அதில்…

Read More

சென்னை: அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் மாம்பழக் கூழ் ஆலைகளால் கொள்முதல் செய்யப்படுவதையும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அவர்களிடமிருந்து 2.5 லட்சம் டன் மாம்பழங்களை கூட்டாக கொள்முதல் செய்யவும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4000 ஊக்கத் தொகை வழங்கவும் கர்நாடக அரசும், மத்திய அரசும் கூட்டாக முடிவு செய்திருக்கின்றன. கர்நாடக விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடிய இந்த ஏற்பாடு வரவேற்கத்தக்கதாகும். கர்நாடக முதல்வர் சித்தராமய்யா மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடிதம் எழுதியது உள்ளிட்ட பல வழிகளில் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சரும், கர்நாடக வேளாண் துறை சாலுவராயசாமியும் நடத்தியப் பேச்சுகளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக மாநில…

Read More

விசேஷமாக வளர்ந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட கிரீன் டீ இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு நேர்த்தியான தரையில் தூள், அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தனித்துவமான, சற்று மண், பணக்கார சுவை ஆகியவற்றிற்காக உலகளவில் அங்கீகாரத்தைப் பெறுகிறது. உங்கள் இதயம், எடை மற்றும் ஆரோக்கியத்தின் மற்ற அனைத்து பகுதிகளுக்கும் அதன் அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் இருப்பதால் இது நல்லது.மேட்சாவில் ஈ.ஜி.சி.ஜி போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை எல்.டி.எல் கொழுப்பைக் குறைப்பதன் மூலமும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. இது வளர்சிதை மாற்றத்தையும், எடை நிர்வாகத்தில் உதவுகிறது, மேலும் எல்-தியானைன் என்ற அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது, இது காபியின் நடுக்கங்கள் இல்லாமல் அமைதியான கவனத்தை ஊக்குவிக்கிறது. கூடுதலாக, மாட்சா மூளை செயல்பாடு, நச்சுத்தன்மை மற்றும் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேட்சா என்றால் என்ன?கேமல்லியா சினென்சிஸ் ஆலையில் இருந்து இறுதியாக தரையில் உள்ள பச்சை தூள் மேட்சா, அதன் தனித்துவமான ஊட்டச்சத்து சுயவிவரம்…

Read More

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தின் 3-ம் நாள் முடிவில் போட்டியில் எந்த ஒரு முடிவும் சாத்தியம் என்பது போல் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. பும்ரா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆனால், எதிர்முனையில் இவருக்கு சரியான ஆதரவு பவுலர் இல்லை. இது இந்தத் தொடரில் இந்திய அணிக்குப் பெரிய தலைவலியாக மாற வாய்ப்புள்ளது. அவர் காயமடைந்தார் என்றால் இங்கிலாந்து பேட்டர்கள் நிச்சயம் இந்திய பவுலிங்கை துவைத்து எடுத்து விடுவார்கள். இந்திய அணியின் பீல்டிங்கும் சிறப்பாக இல்லை. ஜடேஜாவே கேட்சை விடுகிறார், ரன்களைக் கொடுக்கிறார். என்ன செய்வது? பும்ராவின் உடற்தகுதி பற்றி பெரிய ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “மக்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதை நான் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் என்னைப் பற்றி என்ன எழுத வேண்டும் என்பதை நான் அவர்களுக்கு சொல்லிக்…

Read More

தெஹ்ரான்: ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி, இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் ஈரான் நாட்டின் மூன்று முக்கிய அணு சக்தி தளங்களை அமெரிக்கா குண்டு வீசி அழித்தது. இது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி, இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கமேனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “எங்களது ஸயோனிஸ்ட் எதிரிகள் மிகப்பெரிய தவறிழைத்து விட்டார்கள். பெரும் குற்றம் புரிந்துள்ளார்கள். இஸ்ரேல் தண்டிக்கப்பட வேண்டிய நாடு. தண்டனை தொடர்கிறது.” என்று பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த எச்சரிக்கைப் பதிவில் அமெரிக்காவை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இருப்பினும் ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அமீர் சையத் இராவானி கூறுகையில், “அமெரிக்கத்…

Read More

சமீபத்திய பேட்டியொன்றில் இந்தி திரையுலகினை கடுமையாக சாடியிருக்கிறார் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண். ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. வரும் ஜூலை 24-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ட்ரெய்லர் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தினை விளம்பரப்படுத்தும் விதமாக பவன் கல்யாண் பேட்டியொன்று அளித்திருக்கிறார். அப்பேட்டியில் இந்திய திரையுலகம் குறித்து பேசியிருக்கிறார் பவன் கல்யாண். அதில் இந்தி திரையுலகை கடுமையாக சாடியிருக்கிறார். அதில், “ஒவ்வொரு திரைப்படத் துறைக்கும் அதன் சொந்த தனித்துவமான பலம் இருப்பதாக நினைக்கிறேன். இந்திய சினிமா என்ற வார்த்தையை விரும்பவில்லை. அதன் ஒரு பகுதி எனக்கு அந்நியமாக இருக்கிறது. எனக்கு, அது பாரதிய சித்ரா பரிஷ்ரமம். இந்தியத் திரைப்படத் துறை தொடங்கியபோது, அது நமது கலாச்சாரத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில், வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களால்…

Read More

சென்னை: சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் வரத்து நேற்று அதிகமாக இருந்தது. அதனால் பெரிய மீன்களின் விலை குறைந்தது. கடலில் மீன் வளத்தை பெருக்கும் விதமாக, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தில் வங்கக் கடலில், தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த ஏப். 15-ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. அன்றுமுதல் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக பெரிய மீன்கள் வரத்து இல்லாமல் வஞ்சிரம், கொடுவா, மயில் கோலா உள்ளிட்ட மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. அரபிக் கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் கொண்டுவரப்பட்டன. விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களின் வலையில் சிக்கிய பல்வேறு வகையான மீன்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அதனால் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.750…

Read More

புதுடெல்லி: ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று (ஜூன் 23) உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.92 டாலர் அல்லது 2.49% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 78.93 டாலராக இருந்தது. அதேபோல அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.89 டாலர் அல்லது 2.56% உயர்ந்து 75.73 டாலராக இருந்தது. இது கடந்த ஜனவரி மாதத்துக்கு பிந்தைய உச்சபட்சமான விலை உயர்வு ஆகும். ஜூன் 13 அன்று இஸ்ரேல் ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 13% உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இடைநிலை கச்சா எண்ணெய் விலை தோராயமாக 10% அதிகரிப்பைக் கண்டுள்ளது. ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் விளைவாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஈரான் ஒபெக்-ன் (OPEC) மூன்றாவது…

Read More

கோல்ட்ஃபிஷ் மிகவும் பிரபலமான செல்லப்பிராணி மீன்களில் ஒன்றாகும். ஆனால் பல்வேறு வகையான தங்கமீன்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்:

Read More

டெஹ்ரான்: மத்​திய கிழக்​கில் அதி​கரித்து வரும் பதட்​டங்​களுக்கு மத்​தி​யில், ஞாயிற்​றுக்​கிழமை அதி​காலை ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலை​யங்​களை அமெரிக்க விமானப் படை தாக்​கியது. ஈரானின் ஃபோர்​டோ, நடான்ஸ் மற்​றும் இஸ்​பஹான் அணுசக்தி நிலை​யங்​கள் மீதான அமெரிக்க வான்​வழித் தாக்​குதலை தொடர்ந்து மேற்கு ஆசி​யா​வில் உள்ள ஒவ்​வொரு அமெரிக்க குடிமக​னும் அல்​லது ராணுவ வீரர்​களும் இப்​போது ஈரானின் இலக்​காக மாறி​யுள்​ளது என ஈரான் அரசு தொலைக்​காட்சி தெரி​வித்​துள்​ளது. இது குறித்து ஈரான் மதகுரு கொமேனி​யின் நெருங்​கிய உதவி​யாளர் ஹொசைன் ஷரி​யத்​மதர் கூறுகை​யில், “ஈரானின் அணுசக்தி தளங்​கள் மீது அமெரிக்கா அத்​து​மீறி தாக்​ககுதல் நடத்​தி​யுள்​ளது. இதையடுத்​து, சிறிதும் தாம​திக்​காமல் உடனடி​யாக எதிர்த்​தாக்​குதல் நடத்த வியூ​கம் வகுக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி மத்​திய கிழக்​கில் உள்ள முக்​கிய அமெரிக்க ராணுவத் தளங்​களை ஈரான் குறி​வைத்​துள்​ளது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்​படையை தாக்​க​வும், பிரிட்​டிஷ், ஜெர்​மனி, பிரெஞ்சு மற்​றும் அமெரிக்க கப்​பல்​களுக்கு ஹோர்​முஸ் ஜலசந்​தியை மூட​வும் ஈரானிய படைகளுக்கு…

Read More