ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஆறு ஏவுகணைகளை வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏவுகணைகள் வீசப்பட்ட சிறிது நேரத்திலேயே கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக நேரில் கண்டவர்களை தெரிவிக்கின்றனர். பாதிப்பு அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக கத்தாரில் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அமெரிக்க தூதரகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இங்கிலாந்து அரசும் கத்தாரில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான் பரப்பை முழுவதுமாக மூடியுள்ளன. மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க ராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளம் கத்தாரில் உள்ளது. வெளியுறவுத் துறையின் கூற்றுப்படி, சுமார் 8,000 அமெரிக்க…
Author: admin
சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட சாலைப் பணிகள் மூலம் நெடுஞ்சாலைத் துறையிலும் தமிழகமே சிறந்த மாநிலமாக புதிய வரலாறு படைத்து வருவதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், சாலை வசதிகளைப் பெருக்கிய முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி நெடுஞ்சாலைத் துறையில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை புகழ்பெறச் செய்தார். இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.3,858 கோடி மதிப்பீட்டில் 448 கி.மீ. நீளமுள்ள நான்கு வழித்தட சாலைகள், ரூ.2,207 கோடி மதிப்பில் 1,681 கி.மீ. நீளமுள்ள இரு வழித்தட சாலைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ.2,807 கோடி மதிப்பீட்டில் 383 கி.மீ. நீளமுள்ள நான்கு வழித்தட சாலைப் பணிகளும், ரூ.709 கோடி மதிப்பீட்டில் 357 கி.மீ. நீளமுள்ள இரு வழித்தட சாலைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ரூ.17,154 கோடி மதிப்பீட்டில் 9,620…
லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி நிதானமாக விளையாடி 364 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் சதம் விளாசினர். லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களும், இங்கிலாந்து அணி 465 ரன்களும் குவித்தன. 6 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 23.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4, சாய் சுதர்சன் 30 ரன்களில் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 47, ஷுப்மன் கில் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ஷுப்மன் கில் 8 ரன்கள் எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் போல்டானார். பிரைடன் கார்ஸ் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே…
டெஹ்ரான்: ஈரான் எந்த சூழ்நிலையிலும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அமைதியான அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் அப்பட்டமான ராணுவ தாக்குதல் மற்றும் சர்வதேச சட்டத்தின் மீறலைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் திட்டமிடலின்படி ஆபரேஷன் பெஷாரத் ஃபத்தாவின் மூலம் கத்தாரில் உள்ள அல்-உதெய்த் ராணுவ தளத்தை பேரழிவுகரமான மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலுடன் குறிவைத்துள்ளோம். இந்த தளம் அமெரிக்க விமானப்படையின் தலைமையகமாகவும், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க பயங்கரவாத ராணுவத்தின் மிகப்பெரிய சொத்தாகவும் உள்ளது. ஆயுதப் படைகளில் உள்ள எங்கள் தேசத்தின் மகன்களின் தீர்க்கமான இந்த நடவடிக்கை பற்றிய செய்தி வெள்ளை மாளிகைக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் இஸ்லாமிய குடியரசு, எந்த சூழ்நிலையிலும் அதன்…
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மறுபாடு காரணமாக இன்று (ஜூன் 23) முதல் 28-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்றும், நாளையும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2…
சென்னை: அந்நிய முதலீட்டில் தமிழகம் ஆமை வேகத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் முதலீடுகள் குறைகிறது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் 2024-25 நிதியாண்டு தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவின் 51 சதவீத அந்நிய முதலீடுகளை மகாராஷ்டிராவும், கர்நாடகாவும் இணைந்து கைப்பற்றியுள்ளன. தமிழகம் வெறும் 3.68 பில்லியன் டாலருடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது, மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது. மகாராஷ்டிரா (19.6 பில்லியன் டாலர்), கர்நாடகா (6.62 பில்லியன் டாலர்), டெல்லி (6 பில்லியன் டாலர்), குஜராத் (5.71 பில்லியன் டாலர்) என்று முதலீட்டு அரங்கில் முன்னிலை பெற்று, தமிழகத்தை பின்னுக்குத் தள்ளி உள்ளன. மகாராஷ்டிராவும், கர்நாடகாவும் உள்கட்டமைப்பு மேம்பாடு, முதலீட்டு நட்புக் கொள்கைகள் மற்றும் வணிகச் சூழலை மேம்படுத்தியதன் விளைவாக அந்நிய முதலீடுகளை கவர்ந்ததாகக் நிதி மேலாண்மை…
லீட்ஸ்: இங்கிலாந்து அணி உடனான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார் இந்திய வீரர் ரிஷப் பந்த். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை படைத்துள்ள இரண்டாவது விக்கெட் கீப்பர் ஆகியுள்ளார் பந்த். முன்னதாக, கடந்த 2001-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய ஆன்டி பிளவர், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 142 மற்றும் 199 ரன்களை எடுத்திருந்தார். அவருக்கு பிறகு தற்போது பந்த், 134 மற்றும் 118 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்களை பதிவு செய்துள்ள 7-வது இந்திய வீரர் ஆகியுள்ளார் பந்த். முன்னதாக, விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் (3), ராகுல் திராவிட்…
சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை தவறாமல் செயல்படுத்தி, அவமதிப்பு வழக்கு தொடரப்படும் நிலையை உருவாக்கக் கூடாது என மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 20-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்ற வழக்கில், “தொகையை திருப்பி செலுத்துதல் உள்ளிட்டவற்றில் வாரியம் மீண்டும் மீண்டும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கிறது. அவமதிப்பு என்ற நிலை வந்த பிறகே உத்தரவுகளை செயல்படுத்துவதையும், அதன் பிறகும் உத்தரவை நிறைவேற்ற அவகாசம் கேட்பதையும் ஏற்க முடியாது. இதுபோன்றவற்றை விரைந்து சரி செய்வதோடு, வருங்காலங்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும் மின்வாரியத் தலைவரை எதிர்பார்க்க வேண்டிய சூழலை ஏற்படுத்தக் கூடாது” என தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ள சில அறிவுறுத்தல்கள் விவரம்: அனைத்து அலுவலர்களுக்கும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள், அவமதிப்பு வழக்கு போன்றவற்றை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். மேல்முறையீடு செய்யாத…
சென்னை: தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் பலரும் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தியை பற்றி சொல்ல வேண்டியது அவசியம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடித்துள்ள படம் ‘கண்ணப்பா’. இதில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், மோகன் பாபு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரிட்டீ முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சரத்குமார் பேசியதாவது: “‘கண்ணப்பா’ மக்கள் தெரிந்துக் கொண்டு புரிந்துக் கொள்ள வேண்டிய படமாக இருக்கும். தற்போதைய தலைமுறைகளுக்கு நாம் பல கதைகளை சொல்ல மறந்துவிடுகிறோம். பொன்னியின் செல்வன் கதை மூத்தவர்களுக்கு தெரியும். ஆனால் இளைய தலைமுறைகளுக்கும் அது தெரிய…
சென்னை: மத்திய அரசின் பிற்போக்கான பொருளாதார கொள்கைக்கு எதிராக தொடர் பிரச்சாரம் நடத்தப்படும் என தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கத்தின் 24-வது மாநில மாநாடு, சென்னையில் நேற்று நடைபெற்றது. இதை அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கத் தலைவர் ராஜன் நாகர் தொடங்கி வைத்தார். மாநாட்டில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஏழை, எளிய மக்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் மத்திய அரசின் பிற்போக்கான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக விரிவான அளவில் தொடர் பிரச்சாரத்தை முன்னெடுக்க முடிவு செய்யப்படுகிறது. கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக கொண்டு வரப்படும் தொழிலாளர் விரோத சட்டங்களை வன்மையாக கண்டிப்பதோடு, அவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். பொதுத்துறை வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அவற்றை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதோடு, முறைகேடாக வழங்கப்பட்ட வங்கிக் கடன்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை கடினமாக்க வேண்டும். அந்த வகையில் வங்கிகளை பாதுகாப்பதற்கான அனைத்திந்திய வங்கி…
