எங்கள் மூளை மிகவும் சக்திவாய்ந்த உறுப்புகளில் ஒன்றாகும், மேலும் உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, கூர்மையாகவும், கவனம் செலுத்தவும், ஆரோக்கியமாகவும் இருக்க சரியான ஊட்டச்சத்துக்கள் தேவை. இருப்பினும், மன அழுத்தம், வயதான மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான சவால்களுடன், பலர் நினைவாற்றல் இழப்பு, மூளை மூடுபனி மற்றும் மன சோர்வு ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். ஆனால், மூளையைப் பாதுகாக்கும் மற்றும் மன சரிவை எதிர்த்துப் போராட உதவும் சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைக்கவும், மூளை உயிரணு செயல்பாட்டை ஆதரிக்கவும், கவனத்தை மேம்படுத்தவும், வயது தொடர்பான மன சரிவை மெதுவாகவும் உதவுகின்றன. எனவே, உங்கள் அன்றாட உணவில் இந்த ஊட்டச்சத்துக்கள் உட்பட காலப்போக்கில் உங்கள் நினைவகம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தலாம். இதுபோன்ற சில முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றில் நிறைந்த உணவுகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
Author: admin
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை தியாகராய நகர் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்வில், இத்திட்டத்தை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நோய் வராமல் தடுப்பது மற்றும் ஆரம்ப காலத்திலேயே நோயை கண்டறிவது குறித்த விழிப்புணர்வு இல்லாததால்தான் பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன. அதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் 16,566 பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 50.76 லட்சம் மாணவர்களுக்கு தேசிய சிறார் நல திட்டம் மூலம் மருத்துவ அலுவலர்கள் 3 மாதத்துக்கு ஒருமுறை நோய் தடுப்பு குறித்து பயிற்சி வழங்குவார்கள். இந்த மாணவர்கள்…
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 11 செ.மீ., சோலையாறில் 10 செ.மீ., சின்கோனாவில் 9 செ.மீ., வால்பாறையில் 8 செ.மீ., கோவை மாவட்டம் ‘உபாசி’, கடலூர் மாவட்டம் லால்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில்…
புதுடெல்லி: ‘பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து’ என்று காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். இவர், மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது பாராட்டு தெரிவித்து வருகிறார். இதனால், காங்கிரஸ் மேலிடத்துக்கும் சசி தரூருக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. இந்நிலையில், காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து ஆதாரப்பூர்வமாக உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு குழுக்களை அமைத்தது. அவற்றில் சசி தரூர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு சசி தரூர் தலைமையிலான குழு கடந்த மாதம் சென்றது. அந்நாட்டு தலைவர்கள், பிரதிநிதிகளை சந்தித்து பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து எடுத்துரைத்து வெற்றிகரமாக நாடு திரும்பினார் சசி தரூர். இந்நிலையில், ‘இந்து’ ஆங்கில நாளிதழ் நேற்று வெளியிட்ட கட்டுரையில் காங்கிரஸ் எம்.பி. சசி…
இஸ்ரேல் விமானப்படை நேற்று நடத்திய தாக்குதலில் ஈரானின் 6 விமானப்படை தளங்கள், ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஈரான் வீரர்கள் உயிரிழந்தனர். அந்த நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ரஷ்யாவிடம் ஈரான் ஆயுத உதவி கேட்டுள்ளது. அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முன்தினம் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 அணு சக்தி தளங்கள் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசின. இதில் 3 அணு சக்தி தளங்களும் முழுமையாக தகர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து இருக்கிறது. இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ரிசோன் லெசியொன், பீர்சேபா, சாபத், ஆஸ்கெலான், ஆஸ்டோட், பெய்சன் உட்பட பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வருகிறது. இஸ்ரேலின் பேட் யாம் பகுதியில் இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.…
இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதிகோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் பி.சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி, அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் ஆஜராகினர். அப்போது அசோக்குமாருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அமெரிக்கா செல்ல வேண்டியிருப்பதால் அதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் ஜூன் 30-க்கு தள்ளிவைத்துள்ளார்.
தமிழகத்தில் சைபர் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வரவேற்று உள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை பானுமதி (74). கடந்த ஆண்டு மே மாதம் இவரது செல்போனில் மர்ம நபர் ஒருவர் பேசினார். மும்பை காவல் துறையில் இருந்து பேசுவதாக கூறிய அந்த நபர், “உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி புதிய செல்போன் வாங்கப்பட்டிருக்கிறது. அந்த எண்ணை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக உங்களை கைது செய்ய உள்ளோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த பானுமதி, “நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று மன்றாடி உள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர், “குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பினால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம்” என்று கூறியுள்ளார். இதை நம்பிய பானுமதி, மர்ம…
10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட ) தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை (ஹால்டிக்கெட்) நாளை (25-ம் தேதி) அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அப்போது, விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும். 11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான தேதி, நாள் தொடர்பான விவரங்களை தனித் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு இல்லாமல் எந்தவொரு தேர்வரும்…
சென்னை: தமிழக அரசுத் துறை செயலர்கள், மாவட்டஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வி துறை செயலராக பொ.சங்கர், வணிக வரி, பதிவு துறை செயலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசுப் பணியில் 3 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணியாற்றுவோர், இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இது தவிர, சட்டப்பேரவை, மக்களவை தேர்தல் காலங்களிலும் அனைத்து நிலைகளிலும் இடமாற்றங்கள் நிகழும். இந்த நிலையில், தமிழக அரசுத் துறைகளின் செயலர்கள், துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் என 55 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசுப் பணியில் இருந்த ராஜேந்திர ரத்னு, மாநில பதவிக்கு திரும்பிய நிலையில், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலர் மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பிய நா.வெங்கடேஷ், நிதித்துறை சிறப்பு…
இஸ்ரேல்-ஈரான் போரையடுத்து இந்தியாவில் எரிபொருள் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஊகங்கள் வெளியான நிலையில் மத்திய அமைச்சர் அதனை மறுத்துள்ளார். இதுகுறித்து மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளதாவது: இஸ்ரேல்-ஈரான் போர் மற்றும் அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புவிசார் பதற்றம் அதிகரிப்பு ஆகியவற்றை இந்திய கடந்த இரண்டு வாரங்களாகவே உன்னிப்பாக கவனித்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் வாங்குவது பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அதிக அளவிலான கச்சா எண்ணெய் விநியோகம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறவில்லை. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் வேறுபல வழிகளில் நடைபெறுகிறது. எனவே, உள்நாட்டில் மக்களுக்கு எரிபொருள் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு புரி…
