அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து கத்தார் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்திய நிலையில், ‘ஈரானின் செயலை எந்தச் சூழலிலும் ஏற்க முடியாது’ என்று சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியா அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சர்வதேச சட்டம் மற்றும் அண்டை நாடுகளின் கொள்கைகளை வெளிப்படையாக மீறும் வகையில், சகோதரத்துவ நாடான கத்தாருக்கு எதிராக ஈரான் தொடுத்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா தனது கடுமையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறது. இது எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாத, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #Statement | The Kingdom of Saudi Arabia expresses its condemnation and denunciation, in the strongest terms possible, the aggression launched by Iran against the brotherly State of Qatar, which constitutes a flagrant violation of international law…
Author: admin
மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் பல லட்சம் பக்தர்கள் திரண்ட முருக பக்தர்கள் மாநாடு முடிந்ததும், மாநாட்டுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே ஒன்று திரண்டு தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை தாங்களே எடுத்து அடுக்கி வைத்ததோடு மாநாட்டு திடலையும் சுத்தம் செய்து, இதுபோன்ற மாநாடு, விழாக்களை நடத்துவோருக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளனர். பொதுவாக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் நடத்தும் மாநாடுகள், கூட்டங்கள் முடிந்த பிறகு, மறுநாள் அந்த இடமே உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், குப்பைகள் நாலாபுறமும் சிதறி சுகாதாரச் சீர்கேடாகவும், குப்பைக் குவியலாகவும் காணப்படும். மாநாட்டில் போடப்பட்டிருந்த இருக்கைகள் தூக்கி வீசியெறியப்பட்டும், உடைந்தும் அலங்கோலமாக காட்சியளிக்கும். இதற்கு விதிவிலக்காக, மதுரையில் நேற்று முன்தினம் பல லட்சம் பக்தர்கள் ஒரே இடத்தில் திரண்டு கந்த சஷ்டி பாடிய முருக பக்தர்கள் மாநாடு நடந்த இடம், மறுநாளே மிகத் தூய்மையாக ‘பளிச்’சென்று காணப்படுகிறது. மாநாடு நேற்று முன்தினம், 8.30 மணிக்கு தீபாராதனையுடன் முடிந்தநிலையில் நிகழ்ச்சிக்கு…
ஜி7 நாடுகளின் பொருளாதாரத்தை இந்தியா முந்திவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள சொத்து மேலாண்மை நிறுவனமான ஈக்விரஸ் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஈக்விரஸ் கூறியிருப்பதாவது: இந்திய நாடு, உலகின் வேகமாக வளர்ச்சி பெறும் பொருளாதார நாடாக உள்ளது. இது பெரும்பாலான ஜி7 நாடுகளை விட கட்டமைப்பு ரீதியாக சிறந்த நிலையில் உள்ளது. விரைவில் ஜி7 நாட்டு பொருளாதாரங்களை விட இந்தியா முந்திச் சென்றுவிடும். தற்போதுள்ள நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் இந்தியாவின் கொள்கை சார்ந்த மூலதனச் செலவு, கிராமப்புற நுகர்வில் மீள் எழுச்சி, கட்டமைப்பு உற்பத்தி மாற்றங்கள் ஆகியவை இதை உறுதி செய்கின்றன என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈக்விரஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி மிதேஷ் ஷா கூறும்போது, “தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்க நாட்டின் வளர்ச்சியாக கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய நாடானது, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு (2025-2030) 15 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களிக்கும் என்று…
தவறு செய்த இஸ்ரேல் இப்போது தண்டிக்கப்படுகிறது என ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு கொமேனி கருத்து தெரிவிப்பது இதுவே முதல்முறை. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், “இஸ்ரேல் ஒரு பெரிய தவறை செய்துவிட்டது. இது, மிகப்பெரிய குற்றம். அதற்காக இஸ்ரேல் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அது இப்போது தண்டிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார். தனது பதிவுடன் வான்வழித்தாக்குதல் போல தோற்றமளிக்கும் ஒரு படத்தையும் கொமேனி பகிர்ந்துள்ளார். அந்த படத்தின் நடுவே ஒரு மண்டை ஓடு உள்ளது. அதன் நெற்றியில் யூத அடையாளத்தை குறிக்கும் அல்லது யூத மதத்தை குறிக்கும் இஸ்ரேல் கொடியில் உள்ள சின்னம் இடம்பெற்றுள்ளது. ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கி அழித்தது. இதற்கு பதிலடியாக ஈரான் மிகவும் சக்திவாய்ந்த கொராம்ஷர் -4 உட்பட 40 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது.…
சென்னை: கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைந்த நிலையில், சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குள்ளான காலமே இருப்பதால்,. அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கோவை மாவட்டம், வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி (60) கடந்த ஜூன் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். வழக்கமாக ஒரு எம்எல்ஏ மறைந்தால், அது தொடர்பாக இறப்பு சான்று, சட்டப்பேரவை செயலருக்கு கிடைத்த பிறகு, உறுப்பினர் மறைவால் தொகுதி காலியாக இருப்பதாக, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிப்பார். அதனைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் அறிவிக்கப்படுவுது நடைமுறை. அதுபோல வால்பாறை தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரலாம். அப்படி வந்தால், அரசியல் கட்சிகளுக்கு, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும். அதனால் சுவாரஸ்யம் மிகுந்ததாக அந்த இடைத்தேர்தல் அமையும் என பொதுமக்கள் மத்தியில்…
மதுரை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. காரைக்குடியை சேர்ந்த சிவராஜ், உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனு: காரைக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மே 26-ல் மாநகராட்சி ஆணையர் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிட்டார். இதேபோல் பிற மாநகராட்சிகளிலும் கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக ஊரக உள்ளாட்சி விதிகளுக்கு எதிரானது. தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அரசுக்கு சொந்தமான இடம் அல்லது கட்டிடத்தை குத்தகைக்கு வழங்க முடியும். ஒரே நபருக்கு மீண்டும் குத்தகைக்கு வழங்கவோ, குத்தகைக் கால நீடிப்பு வழங்குவதோ கூடாது. பல்வேறு ஏழை வியாபாரிகள் தொழில் நடத்த வாடகைக் கடைகளை தேடும் சூழலில் மாநகராட்சி, நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை 9…
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம் நேற்று நடந்தது. ஜூலை 1-ம் தேதி தேர்த் திருவிழாவும், மறுநாள் ஆனித் திருமஞ்சன தரிசன நிகழ்வும் நடைபெறுகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம் கோயிலில் அமைந்திருக்கும் சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் நேற்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் சிவ கைலாஷ் தீட்சிதர் கொடியேற்றி வைக்க, அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. இன்று (ஜூன் 24) முதல் 30-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, தேர்த் திருவிழா ஜூலை 1-ம் தேதி நடைபெறுகிறது. அன்றிரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமன் நடராஜ மூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறும். 2-ம் தேதி சூரிய உதயத்துக்கு முன்பு, அதிகாலை 4 மணி…
சென்னை: திமுக ஐடி விங்குக்கு அதிமுக ஐடி விங் தக்க பதிலடி தராததால், அதன்மீது பழனிசாமி அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில் வரும் ஜூன் 27, 28-ம் தேதிகளில் ஐடி விங் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டத்தை பழனிசாமி கூட்டியுள்ளார். ‘கீழடி விவகாரத்தில் தமிழக நலன் முக்கியமில்லை, பிரதமர் மோடியின் ஆதரவு போதும்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கருதுவது போன்று பொருள்படும் வகையில், திமுக ஐடி விங் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். அதேநேரம், இந்த விவகாரத்தில் அதிமுக ஐடி விங் தக்க பதிலடி கொடுக்காதது பழனிசாமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அதிமுக ஐடி விங் திருப்திகரமாக செயல்படாதது, பழனிசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஐடி விங் நிர்வாகிகள் கூட்டத்தை…
சிவகாசி: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் முதல்வர் அண்ணாவை விமர்சித்ததை தவிர்த்து இருக்கலாம், அது வருத்தமளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் நடைபெற்றதுதான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு. ஆட்சியாளர்கள் அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். இந்து மத நம்பிக்கைகள் கொண்டோரை புண்படுத்துவதுதான் திமுகவின் வரலாறு. குனிந்தவன் நிமிர்ந்தால் எதிரி காணாமல் போய்விடுவான். அதுபோல இன்று தமிழகத்தில் முருக பக்தர்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால், திமுக கூட்டணி கட்சியினர் மாநாட்டை விமர்சிக்கின்றனர். திமுக, விசிக கூட்டணி மனதளவில் முறிந்துவிட்ட நிலையில் பெயரளவிலேயே தொடர்ந்து வருகிறது. விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், திமுக மீது அதிருப்தியில் உள்ளன. முருக பக்தர்கள் மாநாட்டில் 99 சதவிகிதம் நல்ல நிகழ்வுகள் இருக்கும் நிலையில் ஒரு கருத்தை மட்டும் பேசி நல்ல கருத்துகளை…
நம்முடைய உடல் ரீதியாக வரும்போது, நாங்கள் நிறைய செய்கிறோம் – நாங்கள் நிறைய ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறோம், உடற்பயிற்சி செய்கிறோம், சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்கிறோம், போதுமான தண்ணீரைக் குடிக்கிறோம். இருப்பினும், மூளைக்கு வரும்போது, மூளை உண்மையில் கண்ணுக்கு “காணக்கூடியது” அல்ல என்பதால், அதை எளிதாக எடுத்துக் கொள்ள முனைகிறோம், மேலும் இது ஆட்டோ பயன்முறையில் இயங்குகிறது என்று நாங்கள் உணர்கிறோம். இருப்பினும், நம் உடல்களைப் போலவே, நம் மூளைக்கும் நிறைய கவனிப்பும் உடற்பயிற்சியும் தேவை. மூளை ஆரோக்கியமான உணவை உட்கொள்வது முக்கியம், மற்றும் புதிர்கள் மற்றும் வாசிப்பு மூலம் உங்கள் மூளையை உடற்பயிற்சி செய்யுங்கள், இங்கே 5 சப்ளிமெண்ட்ஸ் உதவக்கூடும் …
