இந்தூர்: ராஜா ரகுவன்சி கொலை வழக்கில் மேலும் 2 பேரை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரும் அவரது மனைவி சோனமும் தேனிலவுக்கு மேகாலயா மாநிலத்துக்குச் சென்றனர். அங்கு ரகுவன்சி கொல்லப்பட்டார். சோனம் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரகுவன்சியை கொன்றது தெரியவந்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சோனம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சோனமின் காதலர் ராஜ் குஷ்வாஹாவுக்குச் சொந்த லேப்டாப், நகைகள், ஆயுதங்களை ஒரு பெட்டியில் வைத்து மறைத்து வைக்குமாறு சோனம் ரகுவன்சி, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் சிலோம் ஜேம்ஸ் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தார். விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக்கு குழு (எஸ்ஐடி) போலீஸார், சிலோம் ஜேம்ஸை கைது செய்தனர். மேலும், மேகாலயா செல்வதற்கு…
Author: admin
லீட்ஸ்: இந்தியா உடனான லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் இதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணி வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்கள் குறித்து பார்ப்போம். லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் சதம் விளாசினர். இதன் மூலம் 364 ரன்களை இந்தியா எட்டியது. முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் என்ற முன்னிலையை இந்தியா பெற்றது. இதனால் இந்த ஆட்டத்தில் 371 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டி வருகிறது. 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ஓவர்களில் 21 ரன்களை இங்கிலாந்து எட்டியுள்ளது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 350 ரன்கள் மட்டுமே தேவை. அந்த அணியின் கைவசம் 10 விக்கெட் உள்ளது. இந்தியா வெற்றி பெற…
மகாபாரதம் தொடரை இயக்கிய இந்தி இயக்குநர் முகேஷ் குமார் சிங், இயக்கியுள்ள படம், ‘கண்ணப்பா’. தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு, கண்ணப்பராக நடித்துள்ளார். சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்ஷய்குமார் என பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில் வெளியாகியுள்ள இந்தப் படத்தைத் தமிழில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ஜூன் 27-ம் தேதி வெளியிடுகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சரத்குமார் கூறும்போது, ‘‘63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் இது. ஏற்கெனவே கன்னடத்தில் ராஜ்குமார், தெலுங்கில் கிருஷ்ணம் ராஜு இதே கதையில் நடித்திருக்கிறார்கள். இது விஷ்ணு மன்சுவின் பார்வையில் உருவாகி இருக்கிற கதை. சாதாரண வேடனாக இருந்த ஒருவன், எப்படி சிவபக்தன் ஆகிறான் என்று கதை செல்லும். தெய்வ நம்பிக்கை மற்றும் நம்பிக்கை இல்லாதவர்களின்…
சென்னை: மாணவர்களின் நலன் கருதி தமிழகத்துக்கான கல்வி பங்களிப்புத்தொகை ரூ.2,152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் 15 லட்சம் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு கூட்டம் அகில இந்திய தலைவர் கே.சி.ஹரி கிருஷ்ணன் தலைமையில் டெல்லியில் ஜூன் 25, 26-ம் தேதிகளில் (புதன், வியாழன்) நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளம் ஆந்திரம், தெலங்கானா, அரியானா ஒடிஷா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 26 அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் உரையாற்றுகின்றனர். தேசிய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை ரத்து செய்துவிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத்…
தடாசனா, அல்லது மலை போஸ், எளிமையான யோகா போஸ்களில் ஒன்றாகும், ஆனால் உங்கள் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது தோரணையை மேம்படுத்த உதவுகிறது, உங்கள் கீழ் முதுகில் பலப்படுத்துகிறது, மேலும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.தடாசனா செய்வது எப்படி:உங்கள் கால்களை ஒன்றாகவும், உங்கள் பக்கங்களில் கைகளையும் நேராக நிற்கவும்.உங்கள் உள்ளங்கைகளை ஒன்றாகக் கொண்டு வந்து உங்கள் விரல்களை ஒன்றிணைக்கவும்.ஆழமாக உள்ளிழுக்கவும், உள்ளங்கைகளை எதிர்கொள்ளும் உள்ளங்கைகளுடன் உங்கள் கைகளை மேல்நோக்கி நீட்டவும்.மெதுவாக உங்கள் தலையை பின்னால் சாய்த்து, மேல்நோக்கி பார்த்து, அதை மெதுவாக உங்கள் தோள்களில் விடுங்கள்.இந்த நிலையை 5 முதல் 10 வினாடிகள் வரை வைத்திருங்கள்.2 முதல் 3 முறை மீண்டும் செய்யவும்.இந்த போஸ் நிலையான சுவாசத்தை ஊக்குவிக்கிறது மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது உங்கள் இதயத்தில் பணிச்சுமையைக் குறைக்கிறது.உடல்நலம்+யோகாவுடன் பொருத்தமாக இருங்கள்
கர்நாடகாவில் வீட்டு வசதி திட்டத்தில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அண்மையில் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியதாவது: கர்நாடக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து விதமான வீட்டு வசதி திட்டங்களில் முஸ்லிம், கிறிஸ்தவர், பவுத்தர் உள்ளிட்ட அனைத்து மத சிறுபான்மையினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சிறுபான்மையினருக்கு போதுமான வீடுகள் கிடைப்பதில்லை. எனவே இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்ட திருத்த மசோதாவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்தார். இதற்கு அனைத்து…
தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இதை ஈரான் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேல் தாக்கவில்லை என்றால் ஈரான் பதில் தாக்குதல் மேற்கொள்ளும் நோக்கம் இல்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் 12 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் போர்நிறுத்தம் அமலாகும் என ட்ரம்ப் கூறினார். இதை ஈரான் மறுத்தது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தங்கள் நாட்டு ராணுவத்துக்கு நன்றி தெரிவித்தார். இது போர் நிறுத்தத்தை மறைமுகமாக தெரிவிக்கும் வகையில் உள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் சொன்னது என்ன? – “இஸ்ரேலின் அத்துமீறலுக்கு பதிலடி தரும் வகையில் நமது…
நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ, மாநாடு, வணங்கான் உள்ளிட்ட படங்களைத் தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இப்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இவர் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுபற்றி சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவில், “எமது நிறுவனத் தயாரிப்பில் எந்த படத்துக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறவில்லை. வளரும் நடிகர்கள் தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டு செயல்படுங்கள். தவறான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆப்பிரிக்க இளைஞர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு பிரிவு போலீஸாரும் ஒருகிணைந்து செயல்படுகின்றனர். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவரை பிடித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 11 கிராம் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், இதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை (38) கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், அவருக்கு போதைப்பொருள் விநியோகத்ததாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான் (38) என்பவரை ஓசூரில் கடந்த…
படம்: அமேசானின் நிறுவனர் மற்றும் உலகின் பணக்கார மனிதர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், முன்னாள் செய்தி தொகுப்பாளராக மாறிய விமானத் தொழில்முனைவோர் லாரன் சான்செஸுடன் ஒரு திருமண கொண்டாட்டத்தில் ஒரு திருமண கொண்டாட்டத்துடன் முடிச்சு கட்டிக்கொண்டிருக்கிறார். ஜெஃப் மற்றும் லாரனின் காதல் கதை ஒருபோதும் குறைந்த முக்கியமாக இருந்ததில்லை. அவர்களின் பொது படகு சுற்றுப்பயணங்கள் முதல் பகிரப்பட்ட பரோபகார முயற்சிகள் வரை, இந்த ஜோடி ஒரு கலப்பினத்தின் பவர் பிராண்ட் மற்றும் தனிப்பட்ட காதல் போல செயல்படுகிறது. இந்த திருமணம் -சமமான பாகங்கள் நெருக்கமான மற்றும் செயல்திறன் கொண்ட – இயற்கையான அடுத்த அத்தியாயம் போன்றவை. வெனிஸ் அவர்களின் மேடையாக, அவர்கள் சபதங்களை பரிமாறிக்கொள்வது மட்டுமல்ல; உலகில் பில்லியனர் திருமணங்கள் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் மறுவரையறை செய்கிறார்கள்.திருமண தேதிவெனிஸின் காதல், பலவீனமான இதயத்தில் அமைக்கப்பட்டிருக்கும், பல நாள் விவகாரம் ஜூன் 24, 2025 அன்று, அசோசியேட்டட் பிரஸ்ஸால் அறிவிக்கப்பட்டு பல…
