சென்னை: ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 24) கடிதம் எழுதினார். அதில், ‘மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 498 மீனவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 78 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 72 மீனவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் என மொத்தம் 651 இந்திய மீனவர்கள் ஈரானில் சிக்கித் தவித்து வருகின்றனர். அங்கு அதிகரித்து வரும் போர்ச் சூழல்…
Author: admin
கெட்ட மூச்சுடன் போராடுகிறீர்களா? அதன் காரணங்கள், உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை அறிந்து, இந்த பயனுள்ள உதவிக்குறிப்புகளுடன் அதை வேகமாக சரிசெய்யவும் மோசமான மூச்சு என்பது ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட எல்லோரும் அனுபவிக்கும் ஒன்று. சில நேரங்களில் அது “காலை சுவாசம்” அல்லது ஒரு பூண்டு உணவின் பக்க விளைவு. மற்ற நேரங்களில், அது நீடிக்கிறது, ஒரு கூட்டத்தில் உங்களை சங்கடப்படுத்துகிறது அல்லது நீங்கள் அவர்களுடன் பேசும்போது ஒருவரிடம் மிக நெருக்கமாக நிற்க ஆர்வமாக உள்ளது. அதைத் துலக்குவது அல்லது புதினாக்கள் மற்றும் மெல்லும் கம் மூலம் அதை மறைப்பது எளிது. ஆனால் மோசமான மூச்சு ஒரு நாள்பட்ட பிரச்சினையாக மாறியவுடன், அது உங்கள் நம்பிக்கையையும், உங்கள் உறவுகளையும், உங்கள் சுய உணர்வையும் அழிக்கத் தொடங்கலாம்.உண்மையில், கெட்ட மூச்சு – மருத்துவ ரீதியாக ஹாலிடோசிஸ் என்று குறிப்பிடப்படுகிறது – இது ஒரு சிறிய எரிச்சலை விட அதிகம். அமெரிக்க…
மதுரை: திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் உரிய முடிவெடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலை கண்ணன், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில், திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்க கோரியும், ராமலிங்கம் என்பவர் திருப்பரங்குன்றம் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கக் கோரியும், சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில், தர்காவை பராமரிக்க அனுமதி வழங்கவும், தர்காவுக்கு செல்லும் வழியில் மின்விளக்கு, குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்த கோரியும் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் வக்பு வாரியம், முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்டிபிஐ உட்பட பலர் சார்பில்…
வேலூர்: “எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சாதனைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பொறாமையில் அறிக்கை விட்டுள்ளார்,” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.198 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 25) திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி, மருத்துவமனை வளாகத்தில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் இன்று (ஜூன் 24) மாலை ஆய்வு செய்தனர். பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை நூற்றாண்டு சேவை கொண்டது. இங்கு ரூ.197.81 கோடியில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 263 சதுரடியில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் மிகப் பெரிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இங்கு, 560 படுக்கைகளும் 11 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைய உள்ளது. 7-வது…
இந்த கொழுப்பு நிறைந்த அன்றாட சிற்றுண்டியுடன் தூக்கமில்லாத இரவுகளுக்கு விடைபெறுங்கள் வெண்ணெய் பழங்கள் இனி சாலட் மேல்புறங்கள் அல்லது சிற்றுண்டி தோழர்கள் அல்ல. தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனில் டாக்டர் கிறிஸ்டினா பீட்டர்சன் மற்றும் பென் மாநிலத்தில் அவரது குழுவினரால் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், தினசரி ஒரு ஹாஸ் வெண்ணெய் சாப்பிடுவது தூக்க தரத்தை மேம்படுத்தக்கூடும் என்று கண்டறியப்பட்டது. வயிற்று உடல் பருமன் கொண்ட பெரியவர்களில் இதய ஆரோக்கியத்தில் முதலில் கவனம் செலுத்திய இந்த ஆராய்ச்சியில் 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 969 பங்கேற்பாளர்கள் பெண்களுக்கு 35 அங்குலங்களுக்கு மேல் இடுப்புக் கோடுகளும் ஆண்களுக்கு 40 அங்குலங்களும் ஈடுபட்டனர்.26 வாரங்களுக்கும் மேலாக உணவில் ஒரு பெரிய HASS வெண்ணெய் சேர்த்தவர்கள் குறிப்பிடத்தக்க இருதய ஆதாயங்களைக் காணவில்லை. அதற்கு பதிலாக நின்றது சிறந்த தூக்கம். அந்த எதிர்பாராத கண்டுபிடிப்பு வெண்ணெய் போன்ற அன்றாட உணவுகளில் உள்ள…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ எஃப்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது போக்கோ எஃப்7 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்தியாவில் இந்த போன் 7,550mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது கவனிக்கத்தக்கது. வணிக ரீதியாக கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் இந்த பேட்டரி மிகப் பெரியது. இதே மாடல் போன் சர்வதேச சந்தையில் 6,500mAh பேட்டரி உடன் கிடைக்கிறது. இந்த போன் போக்கோ எஃப்6 மாடலின் அடுத்த மாடலாக வெளிவந்துள்ளது. இதன் சிப்செட்டும்…
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக மதுரை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை என்று பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து போராட்டக் குழுவின் தலைவர் ஜி.சுப்பிரமணியன், செயலர் எஸ்.டி.கதிரேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து 1,100 நாட்களை நோக்கி போராடி வருகின்றோம். இந்தப் போராட்டம் என்பது இந்த திட்டத்தால் பாதிக்கப்படுகின்ற விவசாயிகளால் நடத்தப்பட்டு வருகிறது. பரந்தூர் புதிய விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு அனைத்து அரசியல் கட்சிகள், சமூக நல இயக்கங்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் என அனைவரது ஆதரவைப் பெற்று போராடி வருகிறது. சட்டப் போராட்டம் நடத்துவதற்கான உகந்த சூழல், சட்ட வல்லுநர்களின் ஆலோசனை கருதி நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் தொடராமல் தற்போது வரை காத்திருக்கிறோம். இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சமூக ஆர்வலர் ஒருவர் இந்த விமான…
சப்ஜா விதைகள் அல்லது துக்மரியா என்றும் அழைக்கப்படும் துளசி விதைகள், இயற்கையான தீர்வுகள் மற்றும் பாரம்பரிய குணப்படுத்துதல் உலகில் பல நூற்றாண்டுகளாக எப்போதும் தங்கள் இடத்தை வைத்திருக்கின்றன. இந்த ஜெட்-கருப்பு விதைகள் பொதுவாக இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய பானங்களில் குளிரூட்டல், நச்சுத்தன்மை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர்ஃபுட் எனப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விதைகள் அவற்றின் அடாப்டோஜெனிக் தன்மையில் தனித்து நிற்கின்றன, இது வெப்பம் மற்றும் செரிமான திரிபு உள்ளிட்ட மன அழுத்தத்திற்கு ஏற்ப உடலுக்கு உதவுகிறது. இனிப்பு துளசி தாவர விதைகள் ஆயுர்வேத மற்றும் சீன மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன, கோடைகாலங்களில் நீரிழப்பு, அஜீரணம் மற்றும் தோல் அழற்சி போன்ற பொதுவான சுகாதார பிரச்சினைகளுக்கு இயற்கையான தீர்வை வழங்குகின்றன.சப்ஜா விதைகள் (துளசி விதைகள்) பற்றி மேலும் ஆராயுங்கள்; அதில் என்ன இருக்கிறது, உங்கள் உணவுக்கு அதன் மதிப்பு கூடுதலாக மற்றும் அதன் நன்மைகள். துளசி விதைகளை ஊட்டச்சத்து தனித்துவமாக்குகிறதுஅவற்றின்…
மதுரை: “நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரையில் ஜூலை 10-ம் தேதி ஆடு, மாடுகளுக்கு மாநாடு நடக்கும்,” என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 24) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தியதன் மூலம், திடீரென முருகன் மீது அக்கறை வந்துள்ளது. தேர்தல் வருவதால் மாநாடு நடத்தியிருக்கின்றனர். ஆண்டுதோறும் இதுபோன்ற மாநாடுகள் நடத்துவார்களா? தேர்தலில் வாக்குகள் வரவில்லை என்றால், மீண்டும் இதுபோன்ற மாநாடுகளை நடத்த மாட்டார்கள். விவசாயிகள் பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை. விவசாயிகள் இதைக் கண்டு தெளிவுற வேண்டும். ஜிஎஸ்டி வரியை குறைக்க தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமரே அழைத்து பேசுவாரே அவர் போயிருக்காலமே? கடிதம் எழுதுவது காலம் கடத்துவது. திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்துவதையும் நாம் போராடித்தான் பெற வேண்டும். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள்…
கோவை: ஈரான் – இஸ்ரேல் இடையே நடக்கும் போர் காரணமாக இன்று (ஜூன் 24) அபுதாபியில் இருந்து கோவை வரும் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. கோவையில் இருந்து ஷார்ஜா மற்றும் அபுதாபிக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. ஷார்ஜாவிற்கு வாரத்தில் ஐந்து நாட்களும், அபுதாபிக்கு வாரத்தில் நான்கு நாட்களும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஈரான் – இஸ்ரேல் இடையே நடைபெறும் போர் காரணமாக இன்று அபுதாபியில் இருந்து கோவை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து கோவை விமான நிறுவனங்களின் அதிகாரிகள் கூறியது: கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விமான சேவை வழங்கப்படுகிறது. போர் பதற்றம் காரணமாக இன்று அபுதாபியில் இருந்து கோவைக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால், கோவையில் இருந்து அபுதாபிக்கு இன்று மதியம் 2.50 மணிக்கு வழக்கம் போல விமானம் இயக்கப்பட்டது. மிக குறைந்த எண்ணிக்கையில் பயணிகள்…
