Author: admin

சென்னை: புண்ணியம் கிடைக்கும் என நான் திருநீறை பூசிக் கொள்ளவில்லை. அவமதிக்க வேண்டும் என்றும் நான் அழிக்கவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் பேசியதாவது: “கோயிலுக்குச் செல்லும்போது அங்கே என் தலையில் ஒரு தொப்பி வைக்கிறார்கள். அதை எடுக்காமல் தலையிலேயே வைத்திருக்க முடியுமா? அடுத்த ஒரு நிமிடத்தில் அதை எடுத்து விடலாம். அதை வைப்பவர்களுக்கும் கூட நாம் எடுத்து விடுவோம் என்று தெரியும். அது ஒரு அடையாளம். அதே போல பூசாரி என் நெற்றியில் திருநீறு பூசினார். அவருடைய உணர்வை நான் மதிக்கிறேன். அவருக்கு நான் நன்றி சொன்னேன். அதை கொஞ்ச நேரம்தானே வைத்திருக்க முடியும். புண்ணியம் கிடைக்கும் என நான் அதை பூசிக் கொள்ளவில்லை. அவமதிக்க வேண்டும் என்றும் நான் அதை அழிக்கவில்லை. என் மீது நம்பிக்கை, பாசம் வைத்திருப்பவர்கள் இன்றைக்கும் என்னை பல கோயில்களுக்கு அழைக்கிறார்கள். நான் போகிறேன். கலசத்தில்…

Read More

காசா: இஸ்​ரேல் மீது கடந்த 2023 அக்​டோபரில் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலை தொடர்ந்​து, காசா​வில் அந்த அமைப்​பினர் மீது இஸ்​ரேல் தாக்​குதல் தொடங்​கியது. தற்​போது ஈரானுடன் இஸ்​ரேல் போரிட்டு வரும் நிலை​யிலும் காசா​வில் தாக்​குதலை தொடர்​கிறது. இந்​நிலை​யில் மத்​திய காசா​வின் சலா அல்​-​தின் சாலை​யில் உணவுப் பொருளுக்​காக காத்​திருந்த நூற்​றுக்​கணக்​கான பாலஸ்​தீனர்​கள் மீது இஸ்​ரேலிப் படைகளும் டிரோன்​களும் நேற்று காலை​யில் தாக்​குதல் நடத்​தி​ய​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இதுகுறித்து நுசேரத் அகதி​கள் முகாமில் அமைந்​துள்ள அவ்தா மருத்​து​வ​மனை அதி​காரி​கள் கூறும்​போது, “உணவுப் பொருள் லாரி​களை பாலஸ்​தீனர்​கள் நெருங்​கிச் சென்​ற​போது இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இந்த தாக்​குதலில் 25 பேர் இறந்​தனர். 146 பேர் காயம் அடைந்​தனர். இவர்​களில் 62 பேர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் உள்​ளனர். இவர்​கள் காசா​வில் உள்ள பிற மருத்​து​வ​மனை​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்” என்றனர். ஆனால் சந்​தேகத்​துக்​கிட​மான வகை​யில் தங்​களை நோக்கி வந்​தவர்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக இஸ்​ரேலிய…

Read More

சென்னை: கடலூர் கூத்தப்பாக்கத்தில் தேவநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் செயல்படும் தனியார் பள்ளியை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 7 அதிகாரிகள் ஜூலை 10-ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமாக, கூத்தப்பாக்கத்தில் பல கோடி மதிப்பிலான 6.10 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு அமைந்துள்ள புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை அங்கிருந்து அகற்றி, நிலத்தை மீட்டு, கோயில் வசம் ஒப்படைக்கக் கோரி பாஜக ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளர் எஸ்.வினோத் ராகவேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளிக்கு வேறு இடம் ஒதுக்கி, நிலத்தை மீட்டு, கோயில் நிர்வாகத்திடம் 6 மாதங்களுக்குள் ஒப்படைக்குமாறு கடந்த…

Read More

வருங்கால வைப்பு நிதியில் (இபிஎப்ஓ) தானாக முன்வந்து பணம் எடுக்கும் வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: கல்வி, மருத்துவம், திருமணம் மற்றும் வீடு கட்டுவதற்காக வருங்கால வைப்பு நிதியில் இருந்து தானாக பணம் எடுக்கும் (ஆட்டோ-கிளைம்) உச்ச வரம்பு முன்பு ரூ.1 லட்சமாக இருந்தது. இனி அது தற்போது ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இபிஎப்ஓ வாடிக்கையாளர்கள் இனி எந்த தலையீடும் இன்றி எளிதாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். பழைய செயல்முறையைப் போலவே ஆட்டோ கிளைம் மூலம் இதற்கும் மூன்று நாட்களில் தீர்வு காணப்படும். வாடிக்கையாளர்களுக்கு வேகமான, மிகவும் செயல்திறன் வாய்ந்த சேவைகளை தானியங்கி முறையில் தரவேண்டும் என்பதில் இபிஎப்ஓவுக்கு உள்ள அக்கறையை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இவ்வாறு மாண்டவியா தெரிவித்தார். நடப்பு நிதியாண்டான 2025-26-ன் முதல்…

Read More

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஆபரேஷன் சிந்தூர் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளதாக பிரதமர் நேரந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆன்மீக குருவும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி இடையிலான உரையாடலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியர்களை ரத்தம் சிந்தவைக்கும் தீவிரவாதிகளுக்கு உலகின் எந்த மறைவிடமும் பாதுகாப்பானது அல்ல என்பதை நாம் நிரூபித்துக்காட்டியுள்ளோம். இந்தியர்களை தாக்கும் தீவிரவாதிகள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் தேடி சென்று அழிக்கப்படுவார்கள். எந்தவொரு பாகுபாடும் இல்லாத வலுவான இந்தியாவை விரும்பிய ஆன்மிக தலைவரின் கொள்கை வழியில் நமது அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 11 ஆண்டுகளாக எனது தலைமையிலான அரசு சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு துறையில் இந்தியாவை வலுவானதாக மாற்ற பாடுபட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு தேவைகளுக்கு வெளிநாடுகளை சாந்திருப்பது குறைந்துள்ளது. இந்திய இராணுவம் 22 நிமிடங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைக்…

Read More

ஈரான் வைத்திருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்ன ஆனது என்ற தகவல் தெரியவில்லை. இது குறித்த சோதனை அவசியம் என சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கூறியுள்ளது. மின்சாரம் தயாரிக்கவே அணுசக்தியை பயன்படுத்துகிறோம் என நீண்ட காலமாக கூறிவந்த ஈரான், தீடீரென அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், அணு ஆயுத பரவல் தடை சட்ட ஒப்பந்நத்தில் இருந்து விலகுவதாகவும் கூறியது. ‘‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என யாரும் கூற முடியாது’’ என ஈரான் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தக்த் ரவாஞ்சி கூறினார். இதனால் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க பி-2 குண்டு வீச்சு விமானம் மூலம் சக்திவாய்ந்த ஜிபியு குண்டுகளை வீசியது. இதில் ஈரானின் ஃபர்தோ, நடான்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு சக்தி தளங்கள் முற்றிலும் நாசமாயின என அமெரிக்கா கூறியது. அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்க முன்பு…

Read More

தமிழக மாம்பழ விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடப்பாண்டில் மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் நலனைக் காத்திட, போதிய சந்தை தேவையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சுமார் 1.46 லட்சம் ஹெக்டரில் மாம்பழ சாகுபடி செய்யப்பட்டு, ஏறத்தாழ 9.49 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நடப்பாண்டு மா மகசூல் அதிகரித்துள்ளதால், மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்முதல் விலையைக் குறைத்துள்ளன. இதனால், மாம்பழ விலை கிலோவுக்கு ரூ.5-க்கும் குறைவான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகள், மாம்பழங்களை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். சிலர் மரத்திலேயே பழுக்க விட்டுவிடுகின்றனர். மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள்…

Read More

நிலையான வளர்ச்சி இலக்கு தரவரிசை கொண்டு நாடுகள் பட்டியல்லி (எஸ்டிஜி) முதல்முறையாக 100 இடங்களுக்குள் இந்தியா வந்துள்ளது. ஐ.நா.வின் நிலையான மேம்பாட்டு தீர்வு நெட்வொர்க் அமைப்பு அண்மையில் 10-வது எஸ்டிஜி தரவரிசையை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் 2025-ம் ஆண்டில் இந்தியா 99-வது இடத்தைப் பெற்றுள்ளது. 193 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா முதன்முறையாக 100 இடங்களுக்குள் வந்துள்ளது. இந்த வரிசையில் அண்டை நாடுகளான சீனா 49-வது இடத்தையும், பூடான் 74-வது இடத்தையும், நேபாளம் 85-வது இடத்தையும், வங்கதேசம் 114-வது இடத்தையும், பாகிஸ்தான் 140-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் மாலத்தீவுகள் 53-வது இடத்தையும், இலங்கை 93-வது இடத்தையும் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் வழக்கம்போல் ஐரோப்பிய நாடுகளே முதலிடத்தில் உள்ளன. முதலிடத்தில் பின்லாந்தும், 2-வது இடத்தில் ஸ்வீடனும், 3-வது இடத்தில் டென்மார்க்கும் உள்ளன. முதல் 20 இடங்களில் 19 இடங்களை ஐரோப்பிய நாடுகள் மட்டுமே ஆக்கிரமித்துள்ளன. 2015-ம் ஆண்டு முதல் கணக்கிடும்போது இந்த…

Read More

நாட்டிலேயே முதல் முறையாக அடுத்த ஆண்டில் குடும்ப வருமானம் பற்றி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வரும் 2026-ல் குடும்ப வருமானம் குறித்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சகத்துக்கு வழிகாட்ட ஐஎம்எப் முன்னாள் செயல் இயக்குநர் சுர்ஜித் பல்லா தலைமையில் ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழு (டிஇஜி) அமைக்கப்படும். இக்குழு கணக்கெடுப்பு எப்படி நடத்த வேண்டும் என்றும் உலக நாடுகளில் இது தொடர்பாக கடைபிடிக்கப்படும் முறைகளை ஆய்வு செய்து சிறந்தது எது என்றும் பரிந்துரை செய்யும். இந்த கணக்கெடுப்பு, தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுத்துவதால் குடும்ப வருமானம் மீது ஏற்படும் தாக்கத்தையும் அறிந்து கொள்ள முயலும். இந்தியாவில் இதுபோன்ற கணக்கெடுப்பு நடப்பது இதுவே முதல் முறை ஆகும். வருவாய் பகிர்வு எப்படி உள்ளது மற்றும் நலத்திட்டங்கள் எப்படி வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து அதற்கேற்ப…

Read More

லீட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பென் டக்​கெட் விளாசிய சதத்​தின் உதவி​யுடன் இங்​கிலாந்து அணி வெற்றி பெற்றது. லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்​டிங்லி மைதானத்​தில் நடை​பெற்ற இந்த டெஸ்ட் போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 471 ரன்​களும், இங்​கிலாந்து 465 ரன்​களும் குவித்​தன. 6 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி 4-வது நாள் ஆட்​டத்​தில் 96 ஓவர்​களில் 364 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கே.எல்​.​ ராகுல் 137, ரிஷப் பந்த் 118 ரன்​கள் சேர்த்​தனர். 371 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இங்​கிலாந்து அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 6 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 21 ரன்​கள் சேர்த்​தது. பென் டக்​கெட் 9, ஸாக் கிராவ்லி 12 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். கைவசம் 10 விக்​கெட்​கள் முழு​மை​யாக இருந்த நிலை​யில் வெற்​றிக்கு மேற்​கொண்டு 350 ரன்​கள் தேவை என்ற…

Read More