சேலம்: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடம் குறித்த கருத்துகள் மற்றும் வீடியோவைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறினார். சேலத்தில் அமமுக செயல் வீரர்கள் கூட்டம், மாவட்டச் செயலாளர் எஸ்.கே.செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற டிடிவி.தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக சார்பில் அழைப்பு விடுத்தனர். ஆனால், வேலை காரணமாக மாநாட்டுக்கு செல்லவில்லை. இந்த மாநாட்டில் திராவிடம் குறித்த கருத்துகள் மற்றும் வீடியோவைத் தவிர்த்திருக்க வேண்டும். இது வருத்தமளிப்பதாக உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சபை நாகரிகம் கருதி அங்கு அமைதியாக இருந்துள்ளனர். திமுக நிர்வாகிகளைகூட மாநாட்டுக்கு அழைத்துள்ளனர். அப்படி அழைத்துவிட்டு, அந்த வீடியோவை ஒளிபரப்பியதை ஏற்கமுடியாது. சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் பெறுவது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுப்போம். திமுகவை…
Author: admin
சேலம்: கொள்கை ரீதியிலான திமுக கூட்டணி ஒருபோதும் உடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார். சேலத்தில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுக்கான இலச்சினையை வெளியிடும் நிகழ்ச்சி சேலத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மாநாடு இலச்சினையை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலத்தில் ஆகஸ்ட் 15 முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேசிய செயலாளர் டி.ராஜா, முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்று அமித்ஷா கூறுகிறார். இதற்கு கருத்து கூறாமல், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மவுனமாக இருக்கிறார். பாஜக கூட்டணி நிர்பந்தத்தால் உருவாக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். தேர்தலுக்குள் அனைத்து…
ஒவ்வொரு முறையும் ஒரு குழந்தை அழுகிறது, ஒரு பொருத்தத்தை வீசுகிறது, அல்லது “இல்லை” என்று கூறுகிறது. இது இரவு உணவைத் தவிர்ப்பது, படிப்பு நேரத்தை ரத்துசெய்கிறதா, அல்லது தூக்க அட்டவணைகளைத் தவிர்ப்பது – விதிகளை ஆணையிடத் தொடங்குகிறது.பச்சாத்தாபத்துடன் பெரிய உணர்ச்சிகளுக்கு பதிலளிப்பது அவசியம், ஆனால் தந்திரங்களை வழிநடத்த அனுமதிப்பது சமமான கட்டுப்பாட்டை மீறும் குழந்தைகளுக்கு கற்பிக்கிறது. குழந்தைகள் தங்கள் வழியைப் பெறுவதிலிருந்து அல்ல, பராமரிப்பாளர்கள் எவ்வாறு பதிலளிக்கிறார்கள் என்பதிலிருந்து உணர்ச்சி ஒழுங்குமுறையைக் கற்றுக்கொள்கிறார்கள்.அதிகாரத்தை மீண்டும் உருவாக்குவது எப்படி:சத்தத்திற்கு எதிர்வினையாற்றுவதற்கு பதிலாக, சீராகவும் அமைதியாகவும் இருப்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. “நீங்கள் வருத்தப்படுவதை நான் காண்கிறேன், நீங்கள் அமைதியாக இருந்தபின் நாங்கள் பேச முடியும்” குழந்தையைப் பார்க்க உதவுகிறது, ஆனால் முடிவுக்கு பொறுப்பல்ல. இந்த அணுகுமுறை உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் மரியாதை இரண்டையும் உருவாக்குகிறது.
சென்னை: மதுரையில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக ஹெச்.ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்குமாறு அவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகு, மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, நிபந்தனைகளை மீறி, மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மனும் அனுப்பினர். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், போலீஸார் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.…
ஒவ்வாமை, இறுக்கமான ஆடை, வியர்வை, நகைகள், நோய்த்தொற்றுகள் அல்லது எரிச்சல் போன்ற மாறுபட்ட காரணங்களால் நாம் அனைவரும் இங்கேயும் அங்கேயும் ஒரு சொறி பெறுகிறோம். இருப்பினும், விலகிச் செல்லாத அல்லது மோசமடைந்து வரும் ஒரு சொறி நீங்கள் கவனித்தால் (அல்லது வளர்கிறது), இது மிகவும் கடுமையான பிரச்சினையின் அடையாளமாக இருக்கலாம்.எச்சரிக்கை அறிகுறிகள்: சிவப்பு, நமைச்சல் அல்லது வீக்கமடைந்த திட்டுகள் பரவுகின்றன அல்லது வேதனையாகின்றன. அவர்கள் தொடுவதற்கு கூட சூடாக உணரக்கூடும்.சாத்தியமான காரணங்கள்: அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி அல்லது தொடர்பு தோல் அழற்சி போன்ற நாட்பட்ட தோல் நிலைகள்; அல்லது ரிங்வோர்ம் அல்லது இம்பெடிகோ போன்ற நோய்த்தொற்றுகள்.எப்போது செயல்பட வேண்டும்: சொறி இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால், பரவுகிறது அல்லது காய்ச்சல் அல்லது கொப்புளங்கள் போன்ற பிற அறிகுறிகளுடன் வந்தால், விரைவில் ஒரு மருத்துவரை அணுகவும்.
சென்னை: பணப்பலன்கள் வழங்கக்கோரி ஏராளமான வழக்குகள் தொடரப்படுவதால், தமிழகத்தின் நிதிநிலை நெருக்கடியில் உள்ளதா? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டது. இந்த டெண்டரில் பங்கேற்று ஒப்பந்தம் பெற்ற கேடிவி ஹெல்த் ஃபுட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், சமையல் எண்ணெய்யை விநியோகம் செய்தது. இந்த வகையில் ரூ.141 கோடியே 22 லட்சத்தை தமிழக அரசு தங்களுக்கு வழங்க வேண்டியுள்ளது என்றும், டெண்டர் நிபந்தனைகளின்படி 30 நாட்களில் இந்த தொகையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதால் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நிறுவனம் தரப்பில், ‘நிலுவைத்தொகை பாக்கி இருந்தாலும் தொடர்ந்து சமையல் எண்ணெய்…
சென்னை: சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்.பி ஆ.ராசா நேற்று ஆஜரானார். முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி திமுக எம்.பி.யுமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக சிபிஐ கடந்த 2015-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகியோருக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட காலத்தில், ஆ.ராசா வருமானத்தைவிட ரூ.5 கோடியே 53 லட்சம் சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு…
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சார்ஜா செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், சார்ஜா, துபாய் செல்லும் விமானங்கள் இன்று (ஜூன் 24) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இன்று அதிகாலை 4 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.55 மணிக்கு துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு சார்ஜா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை…
Last Updated : 24 Jun, 2025 11:43 AM Published : 24 Jun 2025 11:43 AM Last Updated : 24 Jun 2025 11:43 AM கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கைலாசபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 20 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் கூடத்தில் பணியாளர் கனகவள்ளி என்பவர் இன்று காலையில் உணவு தயாரிக்கும் பணியில் வழக்கம்போல ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கனகவள்ளி அங்கிருந்து வெளியேறி விளாத்திகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கு இடையே ஒரு சிலிண்டரில் பிடித்த தீ அருகில் இருந்த மற்றொரு…
டெஹ்ரான்: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில் ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அணுகுண்டு தயாரிக்க ஈரான் முயற்சிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தின. இதில் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. கடந்த 22-ம் தேதி அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய முக்கிய அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்கின. இதில் 3 அணுசக்தி தளங்களும் முழுமையாக தகர்க்கப்பட்டன. இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் நள்ளிரவு கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள அமெரிக்க விமானபடைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் 19 ஏவுகணைகளை வீசியது. அவை நடுவானில் அழிக்கப்பட்டன. இந்த விமான படைத்தளத்தில் 11,000 அமெரிக்க வீரர்களும் 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்களும்…
