ஒரு உணவு அல்ல என்றாலும், நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் படுக்கைக்கு முன் சாப்பிட வேண்டிய அருமையான பானம் கெமோமில் தேநீர். கெமோமில் பதட்டத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் தளர்வை ஊக்குவிக்கிறது, இது சிறந்த தூக்க தரத்திற்கு வழிவகுக்கிறது. எடை இழப்புக்கு நல்ல தூக்கம் அவசியம், ஏனெனில் இது லெப்டின் மற்றும் கிரெலின் போன்ற ஹார்மோன்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது, இது பசி மற்றும் முழுமையை கட்டுப்படுத்துகிறது.படுக்கைக்கு முன் ஒரு சூடான கப் கெமோமில் தேநீர் குடிப்பது உங்கள் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும், இதனால் தூங்குவதை எளிதாக்குகிறது மற்றும் தூங்குவது. இந்த இயற்கையான தளர்வு மன அழுத்தம் அல்லது சலிப்பால் ஏற்படும் இரவு நேர சிற்றுண்டியைத் தடுக்கலாம், இது உங்கள் எடை இழப்பு இலக்குகளை ஆதரிக்கிறது.
Author: admin
பெங்களூரு: ‘‘இந்திய விமானப்படைக்கு அடுத்தாண்டில் 6 தேஜஸ் போர் விமானங்களை விநியோகம் செய்வோம்’’ என எச்ஏஎல் நிறுவன தலைவர் டி.கே.சுனில் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையில் உள்ள மிக்-21 போர் விமானங்களுக்கு மாற்றாக எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் -1 ஏ போர் விமானங்களை ரூ.48,000 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த 2021-ல் ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்திட்டத்தில் மிகவும் தாமதம் ஏற்படுவதாக இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் சமீபத்தில் அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து எச்ஏஎல் நிறுவனத்தின் தலைவர் டி.கே.சுனில் அளித்த பேட்டியில் கூறியதாவது: தேஜஸ் போர் விமானம் விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதற்கு அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் சரியான நேரத்தில் எப்404 ரக இன்ஜின்களை விநியோகிக்காததுதான் காரணம். 2023-ம் ஆண்டிலேயே அவர்கள் இன்ஜினை விநியோகித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒரே ஒரு இன்ஜினை மட்டுமே வழங்கியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக விமான இன்ஜின் உற்பத்தியில்…
சென்னை: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பிளஸ் 2 கல்வித்தகுதி உடைய பதவிகளில் 3,131 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய (எஸ்எஸ்சி) தென்மண்டல தலைவர் கே.ராகுல், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்குத் தேவையான குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி ஊழியர்கள் எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். எஸ்எஸ்சி தேர்வுக்கு நேர்காணல் கிடையாது. கணினிவழியில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றால் அரசு பணி வாய்ப்பு உறுதி. பட்டப்படிப்பை கல்வித்தகுதியாகக் கொண்ட உதவி பிரிவு அலுவலர், வருமான வரி ஆய்வாளர், மத்திய கலால் ஆய்வாளர், ஆடிட்டர், அஞ்சல் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில் 14,582 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு நிலை தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடந்து வருகிறது. இதற்கான எஸ்எஸ்சி இணையதளத்தை (www.ssc.gov.in) பயன்படுத்தி ஜூலை 4-ம் தேதி வரை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிகளுக்கு…
சென்னை: இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கும் குறிக்கோளுடன், இந்தியாவில் பல்வேறு மண்டலங்களில் அகாடமிகளை அமைக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பும் ஃபிபாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அகாடமிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் வரும் ஜூன் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் 2012-ம் ஆண்டு பிறந்தவர்களாகவும் வீராங்கனைகள் 2010 மற்றும் 2011-ல் பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும். வீரர்கள் தேர்வு 29-ம் தேதி காலை 7 மணிக்கும், வீராங்கனைகள் தேர்வு 30-ம் தேதி காலை 7 மணிக்கும் நடைபெறுகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற ஜப்பானிய வீடியோ கேம் ஆன ‘டெத் ஸ்ட்ராண்டிங் 2’-வில் இயக்குநர் ராஜமவுலி கேமியோ இடம்பெற்றுள்ளது இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ’பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ படங்களின் மூலம் உலக அளவில் பிரபலமாகி விட்டார் ராஜமவுலி. குறிப்பாக ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் பெற்ற பிறகு ராஜமவுலியின் படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெறத் தொடங்கி விட்டன. ஹாலிவுட் ஜாம்பவன்கள் பலரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை பார்த்துவிட்டு ராஜமவுலியை சமூக வலைதளங்களில் புகழ்ந்தனர். இந்தச் சூழலில், உலக அளவில் புகழ்பெற்ற ‘டெத் ஸ்ட்ராண்டிங்’ வீடியோ கேமின் இரண்டாம் பாகம் நாளை (ஜூன் 26) உலகமெங்கும் வெளியாகிறது. இந்த கேமுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், முன்பதிவு அடிப்படையில் சிலருக்கு மட்டும் இந்த கேம் வழங்கப்பட்டது. இதனை விளையாடிய ரசிகர்கள் இதில் ராஜமவுலி மற்றும் அவரது மகன் கார்த்திகேயாவின் கேமியோ இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தனர். இந்த கேமை உருவாக்கிய ஜப்பானைச் சேர்ந்த…
சென்னை: தமிழக அரசு சார்பில் கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது படத்துக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்தநாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலை தமிழக அரசு சார்பில் நேற்று மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு அடியில் அவரது உருவ படத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஜெ.கருணாநிதி எம்எல்ஏ, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் இரா.வைத்தியநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், கண்ணதாசனின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “மூப்பிலாத் தேன்தமிழில் இறவாக் கவிதைகள் படைத்திட்ட கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!…
சிக்கலான மற்றும் பெரும்பாலும் கடினமான ஜிம் நடைமுறைகளைத் தவிர, நடைபயிற்சி எளிதான, பாதுகாப்பான மற்றும் மிகவும் வசதியான உடற்பயிற்சிகளில் ஒன்றாகும். நடைபயிற்சி உங்கள் தசைகள் மட்டுமல்ல, இது உங்கள் இருதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தது, உங்கள் பிபியை வீழ்த்தலாம், சர்க்கரை அளவைக் குறைக்கலாம், மேலும் உங்கள் மனநிலையை மேம்படுத்தலாம்! இருப்பினும், நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் (குறிப்பாக பிடிவாதமான தொப்பை கொழுப்பு), அங்குதான் பிரமிட் நடைபயிற்சி பயிற்சி வருகிறது. இந்த கட்டமைக்கப்பட்ட மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய பயிற்சி முறை கலோரி தீக்காயத்தை அதிகரிக்கவும், தொப்பை கொழுப்பைக் கொட்டவும், உங்களை உந்துதலாக வைத்திருக்கவும் உதவும். மேலும் கண்டுபிடிப்போம் …பிரமிட் நடைபயிற்சிபிரமிட் நடைபயிற்சி என்பது குறைந்த நடுத்தர தீவிரமான பயிற்சி பாணியாகும், அங்கு நீங்கள் படிப்படியாக உங்கள் நடைபயிற்சி தீவிரத்தை அதிகரிக்கிறீர்கள், பின்னர் அதைக் குறைத்து, உங்கள் வொர்க்அவுட்டில் “பிரமிட்” அட்டவணையை உருவாக்குகிறார். முழுவதும் ஒரு நிலையான வேகத்தில் நடப்பதற்குப் பதிலாக, நீங்கள் மெதுவாகத்…
பெங்களூரு: கர்நாடக அரசின் வீட்டு வசதித்துறை சார்பில் வீடற்ற ஏழை மக்களுக்கு வீடு, வீட்டு மனை, வீடு கட்டுவதற்கு மானியம் ஆகியவை வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஆலந்த் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பி.ஆர்.பாட்டீல் பேசிய ஆடியோவில், ‘‘ராஜீவ் காந்தி வீட்டு வசதி ஆணையத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதிகாரிகள் அத்தனை பேரும் பணம் வாங்கி கொண்டே வேலை பார்க்கிறார்கள். ஏழை மக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டே வீட்டு மனையை ஒதுக்குகிறார்கள். எனது தொகுதியில் 900 பேருக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது”என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எனது துறையில் ஊழல் நடப்பதாக கூறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். யார் யாரிடம் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள் என கூற வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் வாங்கினாரா? யாரேனும் அதிகாரிகள் வாங்கினார்களா? அமைச்சர் வாங்கினாரா?…
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப்போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவைதவிர தனியார் கல்லூரிகளில் உள்ள 3,450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் இடங்கள் ஆகும். மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத…
லீட்ஸ்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் 3-வது நளில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில் 61-வது ஓவரின் போது பந்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பந்தை மாற்றுமாறு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் துணை கேப்டனுமான ரிஷப் பந்த் களநடுவரிடம் கூறினார். பந்தை சோதித்து பார்த்த நடுவர், அதன் வடிவத்தில் எந்தவித வேறுபாடும் இல்லை. இதனால் பந்தை மாற்ற முடியாது என தெரிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த ரிஷப் பந்த், நடுவரின் முன்பாகவே பந்தை மைதானத்தில் வீசினார். இதுதொடர்பாக கள நடுவர்களான கிறிஸ் கஃபானி மற்றும் பால் ரீஃபல், மூன்றாவது நடுவர் ஷர்புதுலா இப்னே ஷாஹித் மற்றும் நான்காவது நடுவர் மைக் பர்ன்ஸ் ஆகியோர் ஐசிசி ரெஃப்ரீயிடம் புகார் கூறினர். இந்நிலையில் நடுவரின் முடிவுக்கு…
