திருவண்ணாமலை: படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ரூ.4 கோடி மதிப்பிலான சொத்து பத்திரத்தை முன்னாள் ராணுவ வீரர் காணிக்கையாக செலுத்தியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அடுத்த ஏ.கே.படவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன்(68). முன்னாள் ராணுவ வீரர், இவரது மனைவி கஸ்தூரி அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு சுப்புலட்சுமி, ராஜலட்சுமி என 2 மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். விஜயன், கஸ்தூரி தம்பதி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு, கஸ்தூரியின் உறவினர்கள் விஜயனை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மன வேதனையில் இருந்து வந்த விஜயன் கடந்த சில தினங்களுக்கு முன்பு படவேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயிலுக்கு சென்று, கோயில் உண்டியலில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான தனது 2 வீட்டின் பத்திரத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளார். அப்போது, கோயில் நிர்வாகத்தினர் விஜயனிடம் விசாரித்த போது, தனது சொத்து பத்திரத்தை உண்டியலில் ரேணுகாம்பாள்…
Author: admin
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) பவுனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.600 என குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை கடந்த 23-ம் தேதி முதல் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) கிராமுக்கு ரூ.85 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,070-க்கும், பவுனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.72,560-க்கும் விற்பனை ஆகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.73,240-க்கு விற்பனையானது. முன்னதாக, தங்கம் விலை நேற்று பவுன் ஒன்றுக்கு ரூ.600 என குறைந்தது.…
ஏனென்றால், உங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பையனுக்கு அடுத்த ஒரு சங்கிலி உணவகத்தில் சாப்பிட நீங்கள் உலகம் முழுவதும் பறக்கவில்லை.எனவே, நீங்கள் ஒரு புதிய நகரம், கையில் வழிகாட்டி புத்தகம், கேமரா தயார் மற்றும் உங்கள் தொலைபேசியில் புக்மார்க்கு செய்யப்பட்ட “கட்டாயம் பார்க்க வேண்டிய” இடங்களின் பட்டியல். ஆனால் காத்திருங்கள் – எல்லாவற்றையும் ஏன் கொஞ்சம் உணர்கிறது … அரங்கேற்றப்பட்டது? அந்த “உண்மையான” சந்தை ஏன் ஒரு ரியாலிட்டி ஷோவிலிருந்து ஒரு கருப்பொருள் தொகுப்பாக உணர்கிறது? வரவேற்கிறோம், நண்பரே. நீங்கள் ஒரு சுற்றுலா பொறிக்குள் நுழைந்தீர்கள்.கவலைப்பட வேண்டாம் – நாங்கள் அனைவரும் அங்கு இருந்தோம். இது பயண கற்றல் வளைவின் ஒரு பகுதியாகும். ஆனால் நீங்கள் உண்மையான தொடர்பு, உண்மையான உணவு மற்றும் உண்மையான அனுபவங்களை விரும்பும் நபராக இருந்தால், சுற்றுலா முட்டாள்தனத்தை எவ்வாறு ஏமாற்றுவது மற்றும் நீங்கள் இருக்கும் இடத்தை உண்மையில் அனுபவிப்பது எப்படி என்பது இங்கே.நீங்கள் அதை 3…
பயோ டெக்னாலஜி: இந்த நூற்றாண்டில் வளர்ந்துவரும் முக்கியத்துவம் வாய்ந்த, தவிர்க்க முடியாத தொழில் நுட்பப் படிப்பு பயோ டெக்னாலஜி என்று அழைக்கப்படும் உயிரித் தொழில் நுட்பப் படிப்பு. ஒருவர் கறுப்பா, சிவப்பா, உயரமா, குட்டையா என்பதில் தொடங்கி அவரைப் பற்றிய ஒட்டுமொத்த படைப்பு ரகசியமும் அவர் உடம்பில் உள்ள மரபணுக் களில் (Genes) செய்திகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்தது அறிவியலின் மகத்தான சாதனை. ஜீன்களில் உள்ள ‘டி ஆக்ஸி ரிபோ நியூக்கிளிக் ஆசிட்’ (சுருக்கமாக டி.என்.ஏ.) தான் மேற்படிச் செய்திகளைத் தாங்கி, வளைந்து வளைந்து செல்லும் ஒரு நூல் ஏணியைப் போல் சரம்சரமாகச் செல்கிறது. டி.என்.ஏ. மாலிக்கியூல் என்கிற இந்த நூல் ஏணியை அலசி ஆராய்ந்தால் ஒருவரின் மொத்த உடலைப் பற்றியும் சொல்லிவிடலாம் என்கிறது அறிவியல். ஒரு செல் உயிரினமான அமீபாவிலிருந்து புழுக்கள், மீன்கள், பறவைகள், விலங்குகள், குரங்கு, மனித இனம் என்கிற படிப்படியான உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்குக் காரண…
சென்னை: “குளிர்சாதன (AC) பெட்டிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.” என பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரயில் கட்டணங்கள் வரும் ஜூலை மாதம் முதல் உயர்த்தப்படவுள்ளதாக ஊடகச் செய்திகள் வெளியாகிவரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய ரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல ரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும், மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும் – குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. பிரதமர் மோடியையும், ரயில்வே அமைச்சர்…
கோவை: தமிழகத்தில் வீட்டில் தயாரித்த (ஹோம் மேட்) மற்றும் இயற்கையாக (நேச்சுரல்) தயாரிக்கப்பட்டது என்ற பெயரில் முககிரீம், சோப்பு, உதட்டு சாயம், கண் மை, பவுடர், தலைமுடிக்கான பிரத்யேக எண்ணெய் என பலரும் வீட்டிலேயே தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இயற்கையான அழகு சாதன பொருட்கள் என விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெறாமல் இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (பிஐஎஸ்) மற்றும் அழகுசாதன பொருள் உற்பத்தி நடைமுறை (ஜிஎம்பி) எதுவும் பின்பற்றாமல் பலரும் வீடுகளில் இருந்தே அழகு சாதன பொருட்களை தயாரித்து சமூக வலைதளங்களில் விற்பனை செய்வதைக் கண்காணிப்பது இப்போது மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. இதுகுறித்து, கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் மாரிமுத்து கூறியதாவது: தமிழகத்தில் 340 அழகு சாதன…
உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு நாள்பட்ட நிலை, இதில் உங்கள் தமனி சுவர்களுக்கு எதிரான உங்கள் இரத்தத்தின் சக்தி தொடர்ந்து அதிகமாக உள்ளது. நாள்பட்ட உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் வழக்கமாக ஆயுட்கால மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் இருந்தாலும், மன அழுத்தம், கோபம், வாதம் அல்லது அதிக உடற்பயிற்சி போன்ற பிரச்சினைகள் காரணமாக, திடீரென பிபி திடீரென உயரும். பிபி திடீர் உயர்வு மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும், எனவே உங்கள் பிபி உடனடியாக வீழ்த்தக்கூடிய 7 வழிகள் இங்கே.ஆழமான சுவாசம்இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான விரைவான வழிகளில் ஒன்று ஆழ்ந்த சுவாச பயிற்சிகள் மூலம். நீங்கள் ஆழமாகவும் மெதுவாகவும் சுவாசிக்கும்போது, அது உங்கள் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது -உங்கள் உடலின் இயற்கையான “ஓய்வு மற்றும் டைஜஸ்ட்” பயன்முறையை செயல்படுத்துகிறது. இது உங்கள் இதயத் துடிப்பைக் குறைத்து, உங்கள்…
புதுடெல்லி: பலகட்ட தாமதங்களுக்குப் பிறகு, இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லும் ஆக்சியம்-4ன் ஏவுதல் இன்று (ஜூன் 25) திட்டமிடப்பட்டுள்ளது. புளோரிடாவில் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதள வளாகம் 39ஏ- லிருந்து இன்று இந்திய நேரப்படி நண்பகல் 12.00 மணியளவில் ஆக்சியம்-4 ஏவுதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லவிருக்கும் நான்கு விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 ராக்கெட்டில் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆக்சியம்-4ன் இன்றைய ஏவுதலுக்கு அனைத்து அமைப்புகளும் நன்றாக உள்ளன. ஏவுதலுக்கான வானிலையும் 90 சதவீதம் சாதகமாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஜூன் 11-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஆக்சியம் 4-ன் ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஜூன் 8 மற்றும் ஜூன் 10-ம் தேதிகளின் மோசமான வானிலை காரணமாக இந்த ஏவுதல்…
பாட்னா: நாட்டிலேயே முதல் முறையாக மின்னணு முறையில் ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது பிஹார் மாநில தேர்தல் ஆணையம். இந்த முன்முயற்சி அந்த மாநிலத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அறிமுகமாகிறது. இது தொடர்பாக இந்திய வானொலி செய்தி பிரிவுக்கு பிஹார் மாநில தேர்தல் ஆணையர் தீபக் பிரசாத் விவரித்துள்ளார். அதில் அவர், “மின்னணு முறையில் மொபைல் மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கும் செயல்முறை மொத்தம் இரண்டு ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகள் மூலம் செயல்படுத்தப்படும். இதற்காக C-DAC மையம் ‘e-Voting SECBHR’ என்ற செயலியை வடிவமைத்துள்ளது. பிஹார் மாநில தேர்தல் ஆணையம் தரப்பிலும் ஒரு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் பத்தாயிரம் வாக்காளர்கள் மின்னணு முறையில் மொபைல் போனை பயன்படுத்தி வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். இந்த முறையின் கீழ் சுமார் ஐம்பதாயிரம் வாக்காளர்கள் வரையில் வாக்குச்சாவடிக்கு செல்லாமல் மொபைல் போன் மூலம் வாக்களிக்க…
ஹெட்டிங்லி டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்ததையடுத்து எதிர்கொண்ட விமர்சனங்களை தனது அபார கேப்டன்சி அணுகுமுறை மூலம் வெற்றியாக மாற்றி வழக்கமான 4-வது இன்னிங்ஸ் சேஸிங் என்ற மேஜிக் அணுகுமுறையினால் இந்திய அணியை நிலைகுலையச் செய்தார். ஆனால், இந்திய அணியின் பக்கம் நிறைய தவறுகள் இருந்தன. முதல் இன்னிங்ஸில் 570 பக்கம் ஸ்கோர் செய்திருந்தாலோ, 2-வது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் சொல்வது போல் 435-440 ரன்களை லீடாகப் பெற்றிருந்தாலோ இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும் வெற்றியாகவே கூட மாறியிருக்கும். இந்திய அணியின் ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் அற்புதமாக ஆடியும் ஒரு போட்டியைத் தோற்க முடியும் என்றால் தவறு எங்கிருந்து வந்தது என்பதை கம்பீர் குழுவினர் ஆராய வேண்டும். இந்திய அணி சொதப்பிய இடங்களும் செய்ய வேண்டியதும்! – இந்திய அணியின் டெயில் எண்டர்கள் அதாவது கடைசி 4 வீரர்கள்…
