மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வன்னி மரத்தடி விநாயகர் கோயில் அருகில் தரிசிக்க வரும் பக்தர்களை பூனை ஒன்று கடிப்பதால், வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் நிலைக்கு ஆளாகின்றனர். எனவே, கோயில் வளாகத்தில் கடிக்கும் பூனைகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் உள்ளூர் வெளியூர் பக்தர்கள், வெளி மாநிலங்கள், வெளிநாட்டு பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்ய வருகின்றனர். இக்கோயிலில் வன்னி மரத்தடி விநாயகர் கோயில் அருகே தரிசனம் செய்ய வரும் பக்தர்களை சில வாரங்களாக பூனை ஒன்று கடிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். இதில் விழிப்புணர்வுள்ள பக்தர்கள் வெறி நோய் தடுப்பூசி செலுத்துகின்றனர். மேலும், விழிப்புணர்வு இல்லாத பக்தர்கள் வளர்ப்பு பூனைதானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் பூனை கடித்து காயமடைந்த பக்தர் கூறுகையில், “தினமும் அதிகாலையில் மீனாட்சி…
Author: admin
உங்களுக்கு நல்ல கண்கள் மற்றும் சிறந்த கண்காணிப்பு திறன் இருப்பதாக நினைக்கிறீர்களா? சரி, இந்த வைரஸ் ஆப்டிகல் மாயை உங்கள் திறமைகளையும் உணர்வையும் சோதிக்கிறது! படம் மேற்பரப்பில் தெளிவாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் கவனித்தால், இந்த கலையில் பல விலங்குகள் மிகவும் புத்திசாலித்தனமாக மறைக்கப்படுகின்றன. மிகவும் கவனிக்கும் பார்வையாளர்கள் மட்டுமே அவர்கள் அனைத்தையும் அடையாளம் காண முடியும்.உங்கள் பார்வையை சோதிக்கவும், மற்றவர்களால் கவனிக்கப்படுவதைக் கண்டறியவும் நீங்கள் தயாரா?பெரும்பாலான மக்கள் மூன்று அல்லது நான்கு விலங்குகளை மட்டுமே சிறப்பாகக் காண்கிறார்கள் என்று கூறுகின்றனர், மற்றவர்கள் ஏழு அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் காண்கிறார்கள். ஆனால் தீர்வைப் பார்க்காமல் எத்தனை பார்க்க முடியும்?வேடிக்கை மற்றும் சவாலுக்காக, 30 வினாடிகள் ஒரு டைமரை அமைத்து, உங்களையும் உங்கள் நண்பர்களையும் சோதிக்கவும்.ஆப்டிகல் மாயைகள் வேடிக்கையாக மட்டுமல்ல, இது செறிவு, நினைவகம் மற்றும் அங்கீகார வடிவங்களையும் மேம்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.நீங்கள் என்ன செய்ய வேண்டும்?கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் மாயை…
திருவனந்தபுரம்: “நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. தற்போதைய சங்பரிவார் அரசு அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது.” என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பினராயி விஜயனின் பேஸ்புக் பதிவில், “இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயமான அவசரநிலை பிரகடனம், அரை நூற்றாண்டுக்கு முன்பு ஜூன் 25, 1975 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இது திடீரெனவும் எதிர்பாராததாகவும் ஏற்பட்ட பேரழிவு அல்ல. மாறாக, இந்தியாவில் பல ஆண்டுகளாக சர்வாதிகார போக்குகள் மற்றும் சிவில் உரிமைகள் அரிக்கப்பட்டதன் கொடூரமான உச்சக்கட்டமாகும். அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவு, தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலையின் பயங்கரத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. நாடு தற்போது அறிவிக்கப்படாத அவசரநிலையை எதிர்கொள்கிறது. அன்று இந்திரா காந்தி அரசியலமைப்பை தவறாகப் பயன்படுத்தினார், இன்று சங்பரிவார் அரசாங்கம் அரசியலமைப்பையே ஒழிக்க முயற்சிக்கிறது. அவசரநிலையை எதிர்கொண்ட எண்ணற்ற ஜனநாயக போராளிகளுக்கு, இது ஒரு வரலாற்றுப் பாடம் மட்டுமல்ல. இது அரசால் ஏற்படுத்தப்பட்ட பயங்கரத்தின் எரியும் நினைவு.…
சென்னை: தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜூலை 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு விவரம்; தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜூலை 10 முதல் 17-ம் தேதி வரை தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையவழியில் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், தேர்வுக்கட்டணம் ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195 பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். இதற்கிடையே மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் முறையில் ஜூலை 18, 19-ம் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு…
சென்னை: அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால், அதற்கு தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நாகப்பட்டினம் கிளை மேலாளராக பணியாற்றியவர் இளங்கோவன். இவர் கடந்த 2006 முதல் 2008 வரை 117 நாட்கள் விடுப்பு எடுத்து சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏழு முறை பயணம் செய்துள்ளார். முன்அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்ததுடன் ஒரு லட்சத்து 2,916 ரூபாய் ஊதியமாக பெற்று நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இளங்கோவனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இளங்கோவன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் இளங்கோவன்…
புரதங்கள் முக்கியமான ஊட்டச்சத்துக்கள், அவை நம் உடலில் உள்ள திசுக்களைக் கட்டியெழுப்ப, பழுதுபார்ப்பது மற்றும் பராமரிக்க தேவைப்படுகின்றன. எனவே, நம் உடலில் உள்ள ஒவ்வொரு கலமும்- தசைகள் முதல் தோல் மற்றும் முடி வரை கூட- புரதம் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் ஆதரிக்கிறது, ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது, மேலும் இரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. எனவே, நம் உடலின் சரியான செயல்பாட்டிற்கு நமது உணவில் போதுமான புரதம் இருப்பது முக்கியம்.எடை இழப்பு அல்லது குறைந்த கார்ப் உணவுகளைத் தேடுவோர் தங்கள் உணவில் அதிக புரதத்தை வைத்திருப்பதை விரும்புகிறார்கள், ஏனெனில் இது உங்களை நீண்ட காலத்திற்கு முழுமையாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது. நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், சரியாக செயல்பட உங்கள் உடலுக்கு தினமும் புரதம் தேவைப்படுகிறது.முட்டைகள் புரதங்களின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும் என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது, குறிப்பாக எகிடேரியர்களுக்கு. ஒரு முட்டையில் சுமார்…
விஞ்ஞானிகள் ஒரு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர் இனப்பெருக்க தொழில்நுட்பம் இரண்டு விந்தணுக்களிலிருந்து டி.என்.ஏவைப் பயன்படுத்தி சாதாரண, ஆரோக்கியமான மற்றும் வளமான தாய் இல்லாத எலிகளை வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்வதன் மூலம்: முட்டை இல்லை, பெண் டி.என்.ஏ இல்லை. இந்த வேலை ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் ஒரே பாலின பெற்றோர் மற்றும் புலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பாய்ச்சலைக் குறிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், தாய் இல்லாத எலிகள் இளமைப் பருவத்தில் தப்பிப்பிழைத்தன, ஆனால் இனப்பெருக்கம் செய்தன, அவற்றின் கருவுறுதலை நிரூபித்தன.இந்த கண்டுபிடிப்பு நமது புரிதலை மேம்படுத்தக்கூடும் மரபணு பரம்பரை மற்றும் இறுதியில் பயன்பாட்டை இயக்கலாம் எபிஜெனெடிக் நிரலாக்க. எபிஜெனெடிக் நுட்பங்கள் மூலம் உதவி இனப்பெருக்கம் செய்வதற்கான எதிர்கால சாத்தியக்கூறுகளுக்கு கட்டாய ஆதாரங்களை இந்த கட்டுரை முன்வைக்கிறது. இந்த பகுதியில் நடந்துகொண்டிருக்கும் ஆராய்ச்சி, ஒரே பாலின இனப்பெருக்க வடிவங்களை ஆராய்வதற்கான புதிய வழிகளைத் திறக்கிறது, பயோமெடிசின் மற்றும் அதற்கு அப்பால் சாத்தியமான பயன்பாடுகளுடன். இந்த…
சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது, என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் மீது கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்க வேண்டும். வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களை திரும்பத் தரும் பட்சத்தில் 10 ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்த பணிகளுக்கு தற்போது டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவோரை அமர்த்தாமல், தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். காலி பாட்டில்களை வைக்க தனி இடம், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். டாஸ்மாக்கில்…
ஆலிவ் எண்ணெய் மயிர்க்கால்களை வளர்த்து பலப்படுத்துகிறது, மேலும் உச்சந்தலையில் சுழற்சியை அதிகரிக்கும் மற்றும் வேகமான, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
சிரஞ்சீவி நடித்து வரும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார் வெங்கடேஷ். அனில் ரவிப்புடி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவுற்றது. தற்போது 3-ம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது. இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் வெங்கடேஷ். ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளும் வெங்கடேஷ் வருவது போன்று வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் அனில் ரவிப்புடி. சிரஞ்சீவி – வெங்கடேஷ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது. ‘சங்கராந்திக்கி வஸ்துணாம்’ படத்துக்குப் பிறகு அனில் ரவிப்புடி இயக்கும் படம் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஹைதராபாத்திலேயே நடத்தி முடிக்க படக்குழு திடமிட்டு இருக்கிறது. ‘எஃப் 2’ மற்றும்…
