சென்னை: தமிழகத்துக்கு நடப்பு (2025-26) கல்வியாண்டிலும் அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கான நிதி ரூ.1,800 கோடியை வழங்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறையில் முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து 2-வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையிலான இக்கூட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்தரமோகன், தமிழக பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் சங்கர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் துறைசார்இயக்குநர்கள் பங்கேற்றனர். அதன்பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஒவ்வொரு மாவட்டமாக தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. புகார் எண்ணுக்கு வந்த…
Author: admin
சென்னை: சம்ஸ்கிருத நிதி ஒதுக்கீடு குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மத்திய பாஜக அரசு சம்ஸ்கிருதம் மற்றும் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான ஊடக செய்தியை சுட்டிக்காட்டி, போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சம்ஸ்கிருதத்துக்கு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சி மீதான அதிருப்தியையும், கோபத்தையும் தமிழக மக்கள் வெளிப்படையாகக் காட்டும்போதெல்லாம், போலி தமிழ்ப்பற்று நாடகமாடி, பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் ஆதிகால வழக்கம். திமுகவின் தொடர்ச்சியான இந்துமத விரோதப் போக்கை எதிர்த்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய பல லட்சம் தமிழக மக்களின் உணர்வு, திமுகவை ஆட்டம் காண வைத்திருக்கிறது. உடனே சில வாடகை வாயர்களைத் தூண்டிவிட்டு, ஏற்கெனவே பலமுறை விளக்கமளித்த மொழிவாரியான நிதி ஒதுக்கீடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய்யான பிரச்சாரம்…
சென்னை: 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனி மனைகளை வரன்முறைப்படுத்த ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்’ என்று நகர் ஊரமைப்பு இயக்குநர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2025-2026-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, “20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்” என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, அவ்வாறு தனி மனையாக வாங்கிய பொதுமக்கள், ஜூலை 1 முதல் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்து, 15.05.2025 அன்று…
புதுடெல்லி: இஸ்ரேல் உடனான மோதலில் தங்கள் தேசத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய மக்கள் மற்றும் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது புதுடெல்லியில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகம். மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 12 நாட்கள் மோதல் நீடித்தது. இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நின்றதோடு ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் மீது தாக்குதலும் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் – ஈரான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து புதுடெல்லியில் அமைந்துள்ள ஈரான் தூதரகம் புதன்கிழமை அன்று எக்ஸ் தள பதிவு மூலம் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. அந்தப் பதிவில், “இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அத்துமீறிய தாக்குதலுக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்தது. இதில் ஈரான் வெற்றி பெற்றது. இத்தருணத்தில், புதுடெல்லியில் அமைந்துள்ள ஈரான் தூதரகம், உன்னத சுதந்திரத்தை விரும்பும் இந்திய தலைவர்கள், மக்கள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி4 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி4 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ல் டி1 மாடல் அறிமுகமானது. தொடர்ந்து டி2 மற்றும் டி3 மாடல்களின் வேரியன்ட்கள் அறிமுகமாகின. தற்போது டி4 மாடலில் ஒரு வேரியன்டான டி4 லைட் அறிமுகமாகி உள்ளது. அண்மையில் டி4 அல்ட்ரா மாடல் ஸ்மார்ட்போன் வெளியானது.…
சிட்னி: “இப்படித்தான் கிரிக்கெட் ஆட வேண்டுமென எம்சிசி கோச்சிங் மேனுவலில் கூட இல்லாத டெக்னிக்கை கொண்டிருப்பவர் ரிஷப் பந்த். அவரது பேட்டிங் பார்க்கவே ரொம்ப த்ரில்லாக இருக்கிறது” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கூறியுள்ளார். ‘ஆண்டர்சன் சச்சின் டிராபி’ டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவி இருந்தாலும் ரிஷப் பந்த் ஆட்டம் எல்லோரது பார்வையையும் பெற்றிருந்தது. இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் பந்த் சதம் விளாசி இருந்தார். இந்நிலையில், அவரது ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் புகழ்ந்துள்ளார். “என்னவொரு அற்புதமான வீரர். அவர் (ரிஷப் பந்த்) எனக்கு ஆடம் கில்கிறிஸ்டை நினைவுபடுத்துகிறார். அந்த இடத்தில் பேட் செய்து, விரைந்து ரன் எடுக்க கூடிய திறன் கொண்ட ஒரு விக்கெட் கீப்பரை ஒரு அணி கொண்டிருப்பது நிச்சயம் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதுதான் ரிஷப் பந்த் ஆட்டத்தின்…
சென்னை: ‘கண்ணப்பா’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அப்படத்தை அநாகரீகமாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங், இயக்கியுள்ள படம், ‘கண்ணப்பா’. தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு, கண்ணப்பராக நடித்துள்ளார். சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்ஷய்குமார் என பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில் வெளியாகியுள்ள இந்தப் படத்தைத் தமிழில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ஜூன் 27-ம் தேதி வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு படத்தை அநாகரீகமாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ‘கண்ணப்பா’ படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் ‘கண்ணப்பா’ திரைப்படம் ஜூன் 27, 2025 அன்று முழு சட்டப்பூர்வ அனுமதியுடன் உலகம்…
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து உரிய முடிவு எடுக்க தலைமை நீதிபதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலை கண்ணன், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில், திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக் கோரியும், ராமலிங்கம் என்பவர் திருப்பரங்குன்றம் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கக் கோரியும், சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில், தர்காவை பராமரிக்க அனுமதி வழங்கவும், தர்காவுக்கு செல்லும் வழியில் மின்விளக்கு வசதி செய்யக் கோரியும் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் வக்பு வாரியம், முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ கட்சியினர் உட்பட…
புதுடெல்லி: அவசரநிலை பிரகடனத்தின் 50-ம் ஆண்டு நிறைவை அனுசரிப்பது குறித்த தீர்மானம் இன்று (ஜூன் 25) மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்த மத்திய அரசின் செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகளைத் தகர்க்கும் முயற்சியையும் துணிச்சலுடன் எதிர்த்த எண்ணற்ற நபர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து கவுரவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 1974-ம் ஆண்டு நவநிர்மாண் இயக்கம், சம்பூர்ண கிராந்தி இயக்கம் ஆகியவற்றுக்கும் தடை விதிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, பின்னர் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் பல இன்னல்களை சந்தித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவசரநிலை பிகரடனத்தின் அத்துமீறல்களுக்கு எதிரான அவர்களது துணிச்சலுக்கும் எதிர்ப்புக்கும் மத்திய அமைச்சரவை அஞ்சலி…
சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு முன்பே நிர்வாகக் காரணம் கூறி முறைகேடாக மாறுதல் தருவதா?. தகுதியுள்ளவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது இட மாறுதல் கலந்தாய்வுக்கான தேதி கூட இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தென் மாவட்டங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களில் விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முறைகேடாக மேற்கொள்ளப்படும் இந்த இடமாறுதல்கள் சட்டவிரோதமானவை; கண்டிக்கத்தக்கவை ஆகும். பொதுமாறுதல் கோரும் ஆசிரியர்கள் அதற்காக கடந்த 19-ஆம் தேதி முதல் இன்று 25-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காலக்கெடுவே இன்னும் முடிவடையவில்லை. காலக்கெடு முடிவடைந்த பிறகு தான் காலியாக உள்ள இடங்கள் பட்டியலிடப்பட்டு, இட மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவற்றின்…
