சிட்டாரே ஜமீன் பார் ஸ்கிரீனிங்கில், மணீஷ் மல்ஹோத்ராவால் ஒரு கருப்பு மற்றும் தங்க பனராசி சேலையில் திகைத்துப் போனார்.
Author: admin
சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (ஜூன் 27) வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் இதில் அடங்கும். இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்களாகும். இந்த இடங்களில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி, கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அனைவருக்கும் 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி கடந்த 10-ம் தேதி தொடங்கி…
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39) உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வுப் பணிக்காக டிராகன் விண்கலத்தில், ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐஎஸ்எஸ்) நேற்று புறப்பட்டு சென்றனர். அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியாம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மற்றும் ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு 4 விண்வெளி வீர்களை அனுப்பி ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் திட்டத்தை தயாரித்தது. இதற்கு இஸ்ரோ சார்பில் செல்ல ககன்யான் திட்டத்துக்கு ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்த விமானப்படை பைலட்களில் குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் உத்தர பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர். கடந்த 1985-ம் ஆண்டு பிறந்த இவர், 2006-ல் இந்திய விமானப்படையில் பைலட்டாக சேர்ந்தார். 2019-ம் ஆண்டு விண்வெளிக்கு வீரர்களை…
முன்அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால், அதற்காக தொழிலாளர் மீது குற்றம் சாட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நாகப்பட்டினம் கிளை மேலாளராக பணியாற்றியவர் இளங்கோவன். இவர் கடந்த 2006-08 காலகட்டத்தில் முன்அனுமதியின்றி 117 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார். தடையில்லா சான்று (என்ஓசி) பெறாமல் சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு 7 முறை பயணம் மேற்கொண்டுள்ளார். விடுப்பு எடுத்த நாட்களுக்கு ரூ.1 லட்சம் ஊதியமாக பெற்று நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார் என சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இளங்கோவனுக்கு ஓராண்டு சிறை தண்டனையுடன் ரூ.2 ஆயிரம் அபராதம் விதி்த்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் மேல்முறையீடு செய்தார். நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்: மனுதாரர் இளங்கோவன் தரப்பில்…
வயதுவந்த வயிறு நேரம் எனப்படும் ஒரு புதிய ஆரோக்கிய போக்கு தொழில்நுட்ப கழுத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எளிய, தரை அடிப்படையிலான முறையாக ஆன்லைனில் அலைகளை உருவாக்குகிறது – நீண்டகால திரை பயன்பாட்டால் ஏற்படும் விறைப்பு, வலி மற்றும் மோசமான தோரணை. குழந்தை மேம்பாட்டு பயிற்சிகளால் ஈர்க்கப்பட்டு, வயதுவந்தோர் வயிற்று நேரம் முகம் கீழே பொய் சொல்வது, உங்கள் முழங்கைகள் மீது முடுக்கிவிடப்படுகிறது, உடலின் முன்புறத்தை நீட்டவும், கழுத்து, தோள்கள் மற்றும் முதுகெலும்புகளை பலப்படுத்தவும் அடங்கும். உடல் சிகிச்சையாளர்கள் கூறுகையில், இந்த நிலை சறுக்குவதன் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை எதிர்க்கவும், பதற்றத்தைக் குறைக்கவும், சிறந்த முதுகெலும்பு சீரமைப்பை ஊக்குவிக்கவும் உதவும் என்று கூறுகிறது. சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளுடன், இந்த போக்கு நவீன வலிகள் மற்றும் வலிகளுக்கு குறைந்த முயற்சி, உபகரணங்கள் இல்லாத தீர்வாக, குறிப்பாக அலுவலக ஊழியர்கள் மற்றும் தொலைதூர ஊழியர்களிடையே இழுவைப் பெறுகிறது.தொழில்நுட்ப கழுத்து என்றால் என்ன?தொழில்நுட்ப கழுத்து…
பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 2 பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கு சிபிஎஸ்இ வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த வாரியம் மத்திய கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கு சிபிஎஸ்இ முடிவு செய்தது. இதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய வரைவு அறிக்கையை சிபிஎஸ்இ கடந்த பிப்ரவரியில் வெளியிட்டது. அதுதொடர்பாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளும் கேட்டுப் பெறப்பட்டன. அதன் அடிப்படையில சில திருத்தங்களை செய்து பொதுத்தேர்வு மாற்றங்களுக்கு தற்போது சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ அதிகாரிகள் சிலர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு…
தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜூன் 26) முதல் ஜூலை 1-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று, கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 27, 28-ம் தேதிகளில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில்…
நீங்கள் ஒரு பூனை காதலரா? அல்லது நீங்கள் கவனிக்க எளிதான மற்றும் உங்கள் கவனத்தின் பெரும்பான்மையான செல்லப்பிராணியை வைத்திருக்க விரும்புகிறீர்களா, பின்னர் பூனைகள் சரியான தேர்வாகும். ஆனால் பிரபலமான இனங்கள் தவிர, கவர்ச்சியான மற்றும் பிரத்தியேகமான சில உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? சில பூனை இனங்கள் அரிதான, தனித்துவமான தோற்றம் அல்லது கலப்பின மரபியல் போன்ற காரணங்களுக்காக பிரீமியம் விலைகளை கட்டளையிடுகின்றன. அவர்களின் வேலைநிறுத்த தோற்றத்திற்கு அப்பால், இந்த பூனைகளுக்கு பெரும்பாலும் சிறப்பு பராமரிப்பு மற்றும் திறமையான இனப்பெருக்கம் தேவைப்படுகிறது – அவை மற்றவர்களை விட அதிக விலைக்கு வருந்துகின்றன. உலகின் மிகவும் விலையுயர்ந்த பூனை இனங்களையும் அவற்றின் விலையையும் இங்கே பட்டியலிடுகிறோம்:
இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,346பேர் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தகுதி பெற்றவர்களில் மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் 2,346 பேர் கொண்ட தற்காலிக தேர்வுப் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இவர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் பின்னர் அறிவிக்கப்படும். அரசுப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடத்தில் மாணவர்களுக்கு கல்வி, நல்லொழுக்கம், கற்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள தேர்வு பெற்ற நபர்கள் பணியில் சேருவதற்கு முன்பு குற்றச்செயலில் ஈடுபட்டு வழக்குகளில் தண்டனை அல்லது வழக்கு ஏதும் நிலுவையில் உள்ளதா என்பதை…
தனுஷ் நடிப்பில் வெளியான ‘குபேரா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குபேரா’. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு தமிழில் கலவையான விமர்சனங்களும், தெலுங்கில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் இந்தியாவில் ரூ.14 கோடி வசூலித்த நிலையில் புதன்கிழமையான இன்று ரூ.4 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தை விட தெலுங்கு பேசும் மாநிலங்களில் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வையும் கூட படக்குழு ஹைதராபாத்தில் நடத்தியது. இதில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
