சென்னை: ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 1.17 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் உதவியுடன் தமிழகத்தில் சென்னை தவிர 37 மாவட்டங்களில் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு செல்போன் பழுது நீக்குதல், வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல், பிளம்பிங், தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. 8-ம் வகுப்பு முதல், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி 10 நாட்கள் முதல் அதிகபட்சம் 45 நாட்கள் வரை…
Author: admin
> செக்குடியரசின் ஆஸ்ட்ராவா நகரில் நடைபெற்ற கோல்டன் ஸ்பைக் தடகள போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா 85.29 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து பட்டம் வென்றார். > இலங்கை அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 71 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அதிகபசட்மாக ஷத்மான் இஸ்லாம் 46 ரன்கள் சேர்த்தார். > டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருப்பூர் தமிழன்ஸ் அணி. 138 ரன்கள் இலக்கை விரட்டிய திருப்பூர் அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து வெற்றி பெற்றது. > ஆஸ்திரேலியா – மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட்…
சென்னை: போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் துறை அதிகாரிகளுக்கு ‘தமிழக முதல்வரின் காவல் பதக்கம்’ கடந்த 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பதக்கங்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 15 ஆக உயர்த்தப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, கடந்த 6-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், டிஜிபி பரிந்துரையின்படி, தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி, சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், காவல் ஆய்வாளர்கள் மாரிமுத்து (மேலூர்), வசந்தகுமார்…
தீய கண் சின்னம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை குறைந்தபட்சம் பார்த்திருக்க வேண்டிய ஒன்றாகும். புகழ்பெற்ற நீலம், வெள்ளை மற்றும் அடர் நீல வட்டங்கள், ஒரு கண் போல தோற்றமளிக்கும் இலகுவான நிழலுடன், தீய கண் சின்னங்கள் பதக்கங்கள், லாக்கெட்டுகள், வளையல்கள் மற்றும் பல வடிவங்களில் வருகின்றன. பல கலாச்சாரங்களில், தீய கண் பதக்கமானது சிறிய குழந்தைகளுக்கு ஒரு வகையான பாதுகாப்பாக வழங்கப்படுகிறது, அதேசமயம் பலவற்றில் மக்கள் அதிலிருந்து முடிந்தவரை விலகி இருக்கும்படி கூறப்படுகிறார்கள்.
புதுடெல்லி: எமர்ஜென்சி காலத்தில் நான் ஒரு இளம் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி, இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. சுமார் 2 ஆண்டுகள் அவசரநிலை நாட்டில் அமலில் இருந்தது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு நேற்றுடன், 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில் புளுகிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் என்ற அமைப்பு, எமர்ஜென்சி குறித்த புத்தகத்தை தொகுத்துள்ளது. இந்தப் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று டெல்லியில் வெளியிட்டார். இதனிடையே அவசரநிலை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று கூறியுள்ளதாவது: அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டப்போது, நான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இளம் பிரச்சாரகராக இருந்தேன். அவசர நிலை எதிர்ப்பு எனக்குப் பாடமாக இருந்தது. நமது ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இது மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த காலக்கட்டத்தில், பல்வேறு…
பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்டுகள் சரிந்தன. ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து 180 ரன்களுக்குச் சுருண்டது. ஷமார் ஜோசப் 4 விக்கேட்டுகலையும் ஜேய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் தன் முதல் இன்னிங்சில் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்துள்ளது. 180 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது, ஆஸ்திரேலியாவின் 30 ஆண்டுகளில் எடுத்த ஆகக் குறைந்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் ஆனது. இத்தனைக்கும் மே.இ.தீவுகளின் கேட்சிங் மிகவும் மோசமாக இருந்தது. கவாஜாவுக்கு 2 கேட்ச்கள் உட்பட 4 கேட்ச்களை ட்ராப் செய்தனர். அப்படியும் ஆஸ்திரேலியா தேறவில்லை என்பதுதான் நகைமுரண். ஸ்மித், லபுஷேன் இல்லாத ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கமின்ஸ் வேகப்பந்து வீச்சு சாதக ஆடுகளத்தில் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார், பும்ரா ஸ்பெஷலிஸ்ட் என்று கொண்டு வரப்பட்ட சாம்…
சென்னை: கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை உள்பட 4 மருத்துவமனைகளில் புற்றுநோய் பரவலை கண்டறியும் பெட் ஸ்கேன் கட்டமைப்பை ஏற்படுத்த ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில்குமார் வெளியிட்ட அரசாணை: கோவை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டை அண்ணா புற்றுநோய் மையத்திலும் ‘பெட் ஸ்கேன்’ வசதி அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் முடியாது: இந்நிலையில், சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, திருச்சி, விழுப்புரம், திருவள்ளூர் மருத்துவமனைகளில் புதிதாக பெட் ஸ்கேன் வசதி தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப் பேரவையில் அறிவித்தார். இதையடுத்து, ஆய்வு மேற்கொண்டதில், திருவள்ளூர் மருத்துவமனையில் அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்த முடியாது என்பது தெரியவந்தது. தனியார் பங்களிப்பு: திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லினாக் எனப்படும் அதிநவீன புற்றுநோய் கதிர் வீச்சு சாதனமும், சிகிச்சை கட்டமைப்பும் வர உள்ளதால் அங்கு…
வாரியர் போஸ்கள் (விராபத்ராசனா I, II, மற்றும் III) உங்கள் கால்கள், கோர் மற்றும் ஆயுதங்களை வலுப்படுத்தும் சக்திவாய்ந்த நிற்கும் தோரணைகள். இந்த போஸ்களுக்கு சமநிலை மற்றும் சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது, இதனால் உங்கள் தசைகள் நிலையை பராமரிக்க கடினமாக உழைக்கின்றன.மெலிந்த தசை வெகுஜனத்தை உருவாக்குவதன் மூலம், வாரியர் போஸ்கள் உங்கள் ஓய்வெடுக்கும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கின்றன, அதாவது நீங்கள் கூடுதலாக உடற்பயிற்சி செய்வதை நிறுத்திய பிறகும் கலோரிகளை எரிக்கிறீர்கள், இந்த போஸ்கள் உங்கள் தசைகளுக்கு இரத்த ஓட்டத்தையும் ஆக்ஸிஜன் விநியோகத்தையும் மேம்படுத்துகின்றன, சிறந்த வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கின்றன.
புதுடெல்லி: இந்திய போர் விமானி அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் வீரர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் எப்-16 போர் விமானம் இந்திய வான்பரப்புக்குள் நுழைய முயன்றது. அப்போது, நமது விமானப்படையின் குழு கேப்டன் அபிநந்தன் வர்தமாணன் மிக்-21 ரக விமானத்தில் இருந்தபடி பாகிஸ்தான் விமானத்தை இடைமறித்து விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார். எனினும், அபிநந்தன் பறந்த விமானத்தை பாகிஸ்தான் சுட்டதில் பாராசூட் மூலம் தப்பிய அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியில் விழுந்தார். அவரை அந்நாட்டு ராணுவ வீரர் மேஜர் சையது முய்ஸ் சிறைபிடித்ததாக தகவல் வெளியானது. பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 60 மணி நேரத்துக்குள் அபிந்தன் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் வீரர்…
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘டிஎன்ஏ’. ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 20-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகை நிமிஷா சஜயன் பேசும்போது, “ஒரு திரைப்படம் வெளியாகும் போது, ஹிட் ஆகுமா, ஆகாதா? என்ற பதற்றம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்துக்குக் கிடைத்த விமர்சனத்தால் படம் வெளியான தருணத்தில் பதற்றம் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன். இயக்குநர் நெல்சன் ஃபோன் செய்து படம் வெற்றி என சொன்னபோது மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று பாராட்டினால், அது இயக்குநரைத் தான் சாரும். அவர் சொல்லிக் கொடுத்ததைத் தான் செய்திருக்கிறேன். நான் எப்போதும் போல் இயக்குநரின் கலைஞராகத்தான் இருக்க விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து திவ்யா கதாபாத்திரத்தை அளித்ததற்காக நன்றி. ஒவ்வொரு படத்திலிருந்தும்…
