Author: admin

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீரிக்கப்படாமல் இருக்கும் 345 அரசியல் கட்சிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2,800-க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் உள்ளன. இவற்றில் பல கட்சிகள் இந்த நிலையை தொடர்வதற்கு தேவையான நிபந்தனைகளை இதுவரை பூர்த்தி செய்யவில்லை. இது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்திருந்தது. இதையடுத்து, இத்தகைய அரசியல் கட்சிகளை அடையாளம் காண நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் இதுவரை 345 அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இந்த கட்சிகள் 2019-ம் ஆண்டிலிருந்து கடந்த 6 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. அத்துடன் இந்த கட்சிகளுக்கு எங்கே யும் அலுவலகங்களும் இல்லை. இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையின்…

Read More

கோலாலம்பூர்: மலேசியா தலை நகரான கோலாலம்பூரில் ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார், அபய் சிங் ஜோடி 2-1 (9-11, 11-5, 11-5) என்ற செட் கணக்கில் பாகிஸ்தானின் நூர் ஜமான், நசீர் இக்பால் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆட்டம் 88 நிமிடங்கள் நடைபெற்றது. மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனஹத் சிங் ஜோடி இறுதிப் போட்டியில் 2-1 (8-11, 11-9, 11-10) என்ற செட் கணக்கில் மலேசியாவின் அய்னா அமனி, ஸின் யிங் யி ஜோடியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் 35 நிமிடங்களில் முடிவடைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங்,…

Read More

சென்னை: பொது மாறுதல் கலந்தாய்வில் குறிப்பிட்ட 40 ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நடப்பு கல்வியாண்டு அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (எமிஸ்) பதிவு செய்வது சார்ந்து ஏற்கெனவே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன. இதுதவிர 2021-22-ம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வின்போது அரசுப் பள்ளிகளில் அதிகளவு காலிப் பணியிடங்களை கொண்ட 40 ஒன்றியங்கள் முன்னுரிமை பகுதிகளாகத் தேர்வு செய்யப்பட்டன. அந்த 40 ஒன்றியங்களுக்கு மாறுதல் ஆணை பெற்று தொடர்ந்து 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு, நடப்பாண்டு கலந்தாய்வில் மாறுதல் கோரினால் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு முன்னுரிமை கோரும் ஆசிரியர்கள் அந்த ஒன்றியத்திலேயே தொடர்ந்து 3…

Read More

கொழும்பு: இலங்கை – வங்கதேசம் அணிகள் அணி இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாளில் வங்கதேச அணி 71 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 46 ரன்கள் சேர்த்தார். தைஜூல் இஸ்லாம் 9, எபாதத் ஹொசைன் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 79.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எபாதத் ஹொசன் 8, தைஜூல் இஸ்லாம் 33 ரன்களில் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னாண்டோ, சோனல் தினுஷா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், விஷ்வா பெர்னான்டோ 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த இலங்கை அணிக்கு தொடக்க வீரரான பதும் நிஷங்கா அற்புதமான தொடக்கம் கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய லகிரு உதரா 65…

Read More

சென்னை: தொழிற்சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்த, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என தொழில்துறை செயலர் அருண்ராய் தெரிவித்தார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில், ரசாயன தொழிற்சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொழில்துறை செயலர் வி.அருண்ராய் பேசியதாவது: தமிழகத்தைப் பொருத்தவரை குறிப்பிட்ட ஒரு நகரத்தில் மட்டும் கவனம் செலுத்தி தொழில் நிறுவனங்களை பெருக்குவதில்லை. மாநிலம் தழுவிய அளவில் தொழில் மயமாக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தற்போது, 2,500-க்கும் அதிகமான ரசாயன உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்திய அளவில் 6 சதவீத அளவிலான ரசாயனத்தை தமிழகம் உற்பத்தி செய்கிறது. ரசாயன தொழிற்சாலை பாதுகாப்புக்கான வழிமுறைகளை வழங்குவதிலும், தொழிற்சாலைகள் தரப்பிலும் சில குழப்பங்கள் இருக்கின்றன. இதற்கு தீர்வு காண வேண்டுமானால், உலகளவில் பின்பற்றும் வழிகாட்டுதல்களை வழங்காமல், தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிகளில் பின்பற்றும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வழங்க வேண்டும். தொழிற்சாலைகளைப் பொருத்தவரை அனைத்து…

Read More

சாத்தூர்: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் ஆதரவுடன் விருதுநகர் மாவட்ட கால்பந்து சங்கம் நடத்தும் டி.பி.ராமசாமி பிள்ளை கோப்பைக்கான மாநில ஜூனியர் ஆடவர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சாத்தூரில் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை 8-1 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணியை வீழ்த்தியது. மதுரை அணி தரப்பில் பரத் 3 கோல்களையும் வில்லியம்ஸ், சுஜில் தேவா ஆகியோர் தலா 2 கோல்களையும் சஞ்ஜய் ஒரு கோலையும் அடித்தனர். தூத்துக்குடி அணி சார்பில் கோகுல் ஒரு கோல் அடித்தார். திருநெல்வேலி 2-0 என்ற கோல் கணக்கில் நாமக்கல் அணியை வீழ்த்தியது. திருநெல்வேலி அணி சார்பில் ஆல்வின் ஃபெலிக்ஸ், சந்திரமோகன் கோல் அடித்தனர், காஞ்சிபுரம் 8-0 என்ற கோல் கணக்கில் திருவாரூர் அணியை தோற்கடித்தது. காஞ்சியும் அணி சார்பில் ஜோயல் ஸ்டீபன் 4 கோல்களையும் வெற்றிவேல், நித்ரன் ஆகியோர் தலா 2 கோல்களையும் அடித்தனர். தஞ்சாவூர் 13-0 என்ற…

Read More

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் ஒடிசா–மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை கடந்து நகரக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வரும் 29 முதல் ஜூலை 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி…

Read More

திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மதுரை அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சரத் குமார் 37, அதீக் உர் ரஹ்மான் 30, சரவணன் 17, குர்ஜப்னீத் சிங் 17 ரன்கள் சேர்த்தனர். திருச்சி அணி சார்பில் ஈஸ்வரன், அதிசயராஜ் டேவிட்சன், சரவணகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 132 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருச்சி அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் சுரேஷ் குமார் 44, ராஜ் குமார் 37 ரன்கள் சேர்த்தனர். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருச்சி அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி…

Read More

சென்னை: திமுக அரசின் அவலங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நேற்றும் தொடர்ந்தது. இதன்படி காலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளும் பிற்பகலில் திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பூத் கிளை நிர்வாகிகள் நியமனத்தில் உள்ள முன்னேற்றம் குறித்து மாவட்டவாரியாக பழனிசாமி கேட்டறிந்தார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது: திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து மாவட்ட செயலாளர்கள் அதிக அளவில் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களை நடத்த வேண்டும். ஏராளமான திண்ணை பிரச்சாரங்களை நடத்தி, திமுக அரசின் அவலங்களை மக்களிடம்…

Read More

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோர், நவம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடர் அக்டோபர் 19-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. டி20 தொடரின் கடைசி ஆட்டம் நவம்பர் 8-ம் தேதி பிரிஸ்பனில் முடிவடைகிறது. போட்டிகள் தொடங்க இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் இந்த 8 ஆட்டங்களுக்கும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் சிட்னியில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டி மற்றும் கான்பெராவில் நடைபெறும் முதல் டி20 ஆட்டத்துக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையான மொத்த டிக்கெட்டுகளில் 16 சதவிகிதத்தை இந்திய ரசிகர் மன்றங்கள் வாங்கியுள்ளளன.

Read More