Author: admin

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டது என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 28) மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் காரணத்தால் தேசிய தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன் ஆகிய 3 பேரும் தங்களின் நியமன எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்வதாக கடிதம் அளித்துள்ளனர். அந்தக் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் அனுப்பப்பட்டது. அவர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. அனைத்து அமைச்சர்களும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் சாய் ஜெ. சரவணன்குமார் கட்சி பணியாற்ற விரும்பினார். அதனால் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மீது எந்தவித குற்றச்சாட்டும் எழவில்லை. பட்டியலினத்தை சேர்ந்தவர் அமைச்சராக இல்லாமல் அமைச்சரவை பலமுறை இருந்துள்ளது. இப்போது பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இருப்பாரா, இல்லையா என்பதை முதல்வர் தான்…

Read More

சென்னை: வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் சாதி குறித்த விவரங்கள் இடம்பெறக் கூடாது என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் கொண்ட பள்ளிகளில் சாதிய வன்முறைகள் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவர்களிடம் சாதிய மற்றும் சமூக வேறுபாடுகள் உணர்வுகள் அடிப்படையில் வன்முறைகள் உருவாகுவதைத் தவிர்ப்பதும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதும் மிகவும் இன்றிமையாததது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளை மையமாக கொண்டு நன்னெறி வகுப்புகள் வாரந்தோறும் நடத்தப்பட வேண்டும். இதுதவிர இலக்கியம், வினாடி வினா, நூலகம், வானவில் மன்றம் உள்ளிட்ட மன்றங்களில் மாணவர்கள் பங்கேற்க வழிசெய்ய வேண்டும். நாடகம், இசை, நடனம் உட்பட கல்விச் சாரா செயல்பாடுகளிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். வகுப்பறையில் மாணவர்களை…

Read More

புதுடெல்லி: ஸ்ரீநகர் மருத்துவருக்கு கோவை தனியார் மருத்துவமனையில் மதச் சுதந்திர உரிமையை மீறும் வகையிலான நிபந்தனையுடன் பட்டமேற்படிப்பின் பட்டயக் கல்வி அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, காஷ்மீர் மாணவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு காஷ்மீர் மாணவர்கள் சங்கம் சார்பில் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் நசீர் குவேஹாமி எழுதியக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (என்பிஎம்எஸ்) நடத்திய நீட் எஸ்எஸ் இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கில், டாக்டர் சுபைர் அகமதுவுக்கு கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையில் (கேஎம்சிஎச்), நெப்ராலஜி துறையில் இடம் ஒதுக்கப்பட்டது. அப்போது அந்த மாணவர் வைத்திருந்த தாடியை மழிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாணவரின் சேர்க்கைக்கான அனைத்து முறைகளை முடித்து மருத்துவமனைக்கு வந்த டாக்டர் சுபைரிடம், தாடி மழிப்பதாக கடிதம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இது, அவர்…

Read More

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற தொடர் பிரச்சார சுற்றுப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் வரும் ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறார். இது தொடர்பாக கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாக கொண்டு வரும் ஜூலை 7-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சட்டப்பேரவை தொகுதி வாரியாக முதற்கட்ட தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப்பணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப் பயணத்தை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் தொடங்குகிறார். பின்னர், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு செல்கிறார். 8-ம் தேதி கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள், 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் தொகுதிகள், 11-ம் தேதி வானூர், மயிலம், செஞ்சி தொகுதிகளில் பிரச்சாரம்…

Read More

சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கான கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 28) காணொலி வாயிலாக நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை” குறித்து, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம், நாளை (ஜூன் 28) சனிக்கிழமை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read More

‘பறந்து போ’ படத்தை எப்படியாவது மக்களிடையே கொண்டு போய் சேர்த்துவிடுங்கள் என்று திரை விமர்சகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் பாலா. ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிடுகிறது. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாலா, வெற்றிமாறன், மிஷ்கின், விஜய், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் பாலா பேசும்போது, “ராமின் ‘பறந்து போ’ படத்தைப் பார்த்தவுடன், இந்தப் படத்தை எப்படியாவது மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்க வேண்டும் என மாரி செல்வராஜிடம் கூறினேன். அவரோ நானும் அதற்குதான் ஓடிக் கொண்டிருக்கிறேன் என்றார். இங்கு விமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்படியாவது இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய்…

Read More

நாகர்கோவில்: “இந்து சமய அறநிலையத் துறையை நீக்கம் செய்து உயர் சாதி இந்துக்களுக்கு மட்டும் வழிபாட்டு உரிமையை கொண்டு செல்ல நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் அது ஒருபோதும் நடக்காது” என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார். கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க நாகர்கோவில் வந்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “பாஜக ஆளும் ஒடிசாவில் இந்து அறநிலையத் துறை உள்ளது. பாஜகவின் தோழமைக் கட்சி ஆட்சி நடத்தும் பிஹாரில் அறநிலையத் துறை உள்ளது. சுதந்திரம் கிடைத்த பிறகு கூட இந்து ஆலயங்கள் உள்ள தெருக்களில் 10 சதவீத உயர்சாதி மக்களை மட்டுமே அனுமதித்தனர். மீதி 90 சதவீத மக்கள் ஆலயத்துக்குள் செல்ல முடியவில்லை . இந்த 90 சதவீத மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்டது தான் இந்து சமய அறநிலையத் துறை. இந்து சமய அறநிலையத் துறை நீக்கப்பட்டு விட்டால் ஏற்கெனவே இருந்தது போல் உயர் சாதி இந்துக்களுக்கு மட்டும்…

Read More

உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது, இது தமனி சுவர்களுக்கு எதிரான இரத்தத்தின் சக்தி தொடர்ந்து அதிகமாக இருக்கும் ஒரு நிலை. உலகளவில், இந்த வாசிப்பு 120/80 க்கும் அதிகமானதாக அமைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் இது வயது, பாலினம் மற்றும் புவியியல் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும். உயர் பிபி சில சமயங்களில் அமைதியான கொலையாளி என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது, மேலும் பல ஆண்டுகளாக தேர்வு செய்யப்படாமல் போகலாம், இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் வடிவில் சிக்கலை ஏற்படுத்துவதற்கு முன்பு. உயர் இரத்த அழுத்தம் மரபணு அல்லது வாழ்க்கை முறை தொடர்பானதாக இருக்கலாம், எனவே உங்கள் பிபி மீது ஒரு காசோலையை வைத்திருப்பது முக்கியம், குறிப்பாக நீங்கள் 30, பருமனான அல்லது நீரிழிவு நோயாளிக்கு மேல் இருந்தால். நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் பிபி சற்று உயர்த்தப்பட்டால், அதை சரிசெய்ய நீங்கள் சில நடவடிக்கைகளை…

Read More

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளார், அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததன் மூலம் ரூ .3.6 கோடி பெண்ணை ஏமாற்றியதற்காக.குற்றம் சாட்டப்பட்டவர், ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் அபிஷேக் சுக்லா புதன்கிழமை மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.அதிகாரிகளின் கூற்றுப்படி, சுக்லா ஒரு போலி திருமண வலைத்தளத்தை உருவாக்கி டாக்டர் ரோனிட் ஓபராய் என முன்வைத்தார். கான்மனின் இதேபோன்ற மோசடிக்கு இரையாகி, முன்வரவும் புகார் அளிக்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இந்த வழக்கை விசாரிக்கும் புனே சைபர் காவல்துறையின் மூத்த இன்ஸ்பெக்டர் ஸ்வாப்னி ஷிண்டே, வேறு எந்த பாதிக்கப்பட்டவர்களையும் மின்னஞ்சல் மூலம் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் [crimecyber.pune@nic.in] .”முதலில் டெல்லியைச் சேர்ந்த பெண், தற்போது புனேவில் வசித்து வருகிறார், ஒரு வாழ்க்கை கூட்டாளரைத் தேடும் ஒரு திருமண போர்ட்டலில் ஒரு சுயவிவரத்தை உருவாக்கியிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர் 2023 ஆம் ஆண்டில் அவளைத் தொடர்பு கொண்டு, அவருடன்…

Read More

Last Updated : 27 Jun, 2025 07:11 PM Published : 27 Jun 2025 07:11 PM Last Updated : 27 Jun 2025 07:11 PM ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் ‘மைசா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்துக்கு ‘மைசா’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் முழுக்க நாயகியை மையப்படுத்தியே படமாக்க உள்ளார்கள். முன்னணி இயக்குநர் ஹனு ராகவபுடியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரவீந்திர புள்ளே இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. ராஷ்மிகா மந்தனாவின் மிரட்டலான லுக்குக்கு பல்வேறு பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது எனவும், படப்பிடிப்புக்கு ஆர்வமாக இருப்பதாகவும் ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். இப்படம்…

Read More