Author: admin

ஆகஸ்ட் 2023 இல் ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸின் நிச்சயதார்த்த விருந்து உள்ளிட்ட பல்வேறு உயரடுக்கு கூட்டங்களில் பவுலா ஹர்ட் மற்றும் பில் கேட்ஸ் கலந்து கொண்டனர் பில் கேட்ஸின் காதலியாக கவனத்தை ஈர்த்ததிலிருந்து எல்லோரும் ஆர்வமாக இருந்த பெண். ஆனால் இங்கே விஷயம்: அவள் ஒரு கோடீஸ்வரரின் பிளஸ் ஒன் விட அதிகமாக இருக்கிறாள். கார்ப்பரேட் ஏணியில் ஏறுவதிலிருந்து, பரோபகாரத்தை வென்றெடுக்கவும், அமைதியாக டென்னிஸ் உலகத்தை வடிவமைக்கவும், பவுலா நோக்கம், அன்பு மற்றும் பின்னடைவு ஆகியவற்றால் நிரம்பிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.ஏப்ரல் 27, 1962 இல் பிறந்த பவுலா கலுபா (அது அவரது முதல் பெயர்) தொழில்நுட்ப தலைப்புச் செய்திகள் மற்றும் பாப்பராசி கேமராக்களிலிருந்து வெகு தொலைவில் வளர்ந்தது. அவர் 1984 ஆம் ஆண்டில் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். அவரது தொழில்முறை பயணம் தொழில்நுட்பம் மற்றும் நிதியத்தில் ஒரு…

Read More

அருப்புக்கோட்டை: தமிழகத்திலேயே முதல்முறையாக அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கோயிலுக்கு “கஜா” என்ற இயந்திர யானையை நடிகை திரிஷா வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இக்கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை நடிகை திரிஷா மற்றும் சென்னையைச் சேர்ந்த பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பினர் அன்பளிப்பாக வழங்கினர். இந்த இயந்திர யானைக்கு “கஜா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. நிஜ யானையைப் போலவே தோற்றமளிக்கும் இந்த இயந்திர யானை, தனது பெரிய காதுகளையும், தும்பிக்கை, வால் போன்றவற்றையும் ஆட்டுகிறது. தும்பிக்கையால் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதும், ஆசீர்வாதம் செய்வதும் கூடுதல் சிறப்பாகும். கோயிலுக்கு இயந்திர யானையை வழங்கும் விழா அருப்புக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. டிஎஸ்பி மதிவாணன் இயந்திர யானையை வழங்கி, அதன்…

Read More

புதுச்​சேரி: கட்​சிக்​குள் பதவிக்​காக போட்டி நில​வும் சூழலில், புதுச்​சேரி பாஜக அமைச்​சர் சாய் ஜெ.சர​வணன்​கு​மார் மற்​றும் பாஜக நியமன எம்​எல்​ஏக்​கள் 3 பேர் ராஜி​னாமா செய்​தனர். புதுச்​சேரி​யில் 2021-ல் நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வென்ற என்​.ஆர்​.​காங்​கிரஸ் – பாஜக கூட்​டணி ஆட்சி அமைந்​தது. தேஜக கூட்​ட​ணி​யின் புதுச்​சேரி தலை​வ​ரான ரங்​க​சாமி முதல்​வ​ரா​னார். இரு கட்​சிகளுக்​கும் தலா இரு அமைச்​சர் பதவி​கள் ஒதுக்​கப்​பட்​டன. பாஜகவைச் சேர்ந்த செல்​வம் பேர​வைத் தலை​வ​ராக​வும், அமைச்சர்களாக நமச்​சி​வா​யம், சாய் ஜெ.சர​வணன்​கு​மார் ஆகியோரும் பொறுப்​பேற்​றனர். மேலும், பாஜகவைச் சேர்ந்த ராமலிங்​கம், அசோக்​பாபு, வெங்​கடேசனுக்கு நியமன சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் பதவி வழங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், பாஜக எம்​எல்​ஏக்​கள் ஜான்​கு​மார், கல்​யாணசுந்​தரம், ரிச்​சர்ட் ஆகியோர் அமைச்​சர் அல்​லது வாரி​யத் தலை​வர் பதவி வழங்​கு​மாறு வலி​யுறுத்தி வந்​தனர். வேறு சிலர் நியமன எம்​எல்ஏ பதவி​களை கேட்டு வந்​தனர். பதவி வழங்​காத​தால் கட்​சிக்​குள் அதிருப்தி நில​வியது. இந்​நிலை​யில், டெல்​லி​யில் இருந்து வந்த பாஜக மேலிடப் பொறுப்​பாளர்…

Read More

மதுரை: பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்காக 2024-25-ம் கல்வியாண்டில் 23,49,616 பள்ளி மாணவர்களுக்கும், சுமார் 2 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பொதுப் பேருந்துகளில் புத்தகப்பை, உணவுப் பைகளுடன் செல்லும்போது, கூட்ட நெருக்கடியில் சிக்கி சிரமப்படுகின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்யும்போது சில நேரங்களில் விபத்துகளில் சிக்கி மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே,…

Read More

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் மா.பொ.சிவஞானத்தின் 120-வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரரும், சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுபவருமான மா.பொ.சிவஞானத்தின் 120-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை ஒட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, அதன் அருகே அவரது திருவுருவப் படமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் வே.ராஜாராமன் உள்ளிட்டோர் மா.பொ.சி. படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத் தலைவர் கரு.நாகராஜன், மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், மாவட்டச் செயலாளர் அப்பு, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோரும் தி.நகரில் மா.பொ.சி.…

Read More

உங்கள் மூளை புதிய விஷயங்களை விரும்புகிறது. புதுமை மூளைக்கு சவால் விடுகிறது. ஒரு மொழி அல்லது இசைக்கருவி போன்ற புதிய ஒன்றைக் கற்றுக்கொள்வது, புதிய தகவல்களை செயலாக்கவும் சேமிக்கவும் மூளையை கட்டாயப்படுத்துகிறது. இந்த நடைமுறை புதிய நரம்பியல் பாதைகளை உருவாக்கும். 2014 ஆம் ஆண்டு ஸ்டுடின் வயதான பெரியவர்கள், புதிய மற்றும் அறிவாற்றல் கோரும் திறமையைக் கற்றுக்கொள்வது, அதாவது கில்டிங் அல்லது புகைப்படம் எடுத்தல் போன்றவை அவர்களின் நினைவகத்தை உயர்த்தியதாகக் கண்டறிந்தனர்.இதேபோல், இருமொழிவாதம், இரண்டு மொழிகளைப் பேசும் திறன், மூளையில் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையிலான இணைப்பை கணிசமாக அதிகரிக்கிறது மற்றும் பலப்படுத்துகிறது. இது அல்சைமர் மற்றும் பல வகையான டிமென்ஷியாவின் அபாயத்தை தாமதப்படுத்தலாம் மற்றும் குறைக்கும். நீங்கள் மொழி பயிற்சி பயன்பாடுகளின் உதவியைப் பெறலாம் அல்லது ஒரு பாடத்திட்டத்தில் சேரலாம் அல்லது ஒரு கருவியை எடுக்கலாம். தினசரி 15-30 நிமிடங்கள் கூட மற்றும் நிலையான பயிற்சி குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தரும்.

Read More

சென்னை: திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும், அதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் மற்றும் பயண நேரத்தைக் குறைப்பதற்காக இருவழிச் சாலை, 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இந்நிலையில், அதற்கு தேவையான சவ்வூடு மணல், திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. 5 அடி ஆழம் வரை மட்டுமே மணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் சாலை ஒப்பந்த நிறுவனத்தாரால் 12 அடி ஆழத்துக்கும் அதிகமாக சவ்வூடு மணல் நாள்தோறும் வெட்டி எடுக்கப்படுகிறது. அதிகளவில் மணல் கொள்ளையடிக்கப்படுவது குறித்து திருத்தணி பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, அப்பகுதியில் மணல் அள்ள தடை விதித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார். ஆனால் அதன் பிறகும் பட்டாபிராமபுரம் ஏரிப்பகுதியில் தொடர்ச்சியாக மணற்கொள்ளை நடைபெற்று வருகிறது. தமிழக அரசால்…

Read More

சென்னை: ​விரைவு ரயில் கட்​ட​ணத்தை உயர்த்​தும் திட்​டம் பரிசீலனை​யில் உள்​ளது. பிரதமரும், ரயில்வே அமைச்​சரும் இதுகுறித்து முடிவு செய்து ஜூலை 1-ம் தேதி அறி​விப்​பார்​கள். கட்டண உயர்வை எதிர்க்​கும் முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்​டோர் கள உண்​மையை உணர வேண்​டும் என்று ரயில்வே இணை அமைச்​சர் சோமண்ணா தெரி​வித்​துள்​ளார். சென்னை ஐசிஎப் ஆலை​யில் வந்தே பாரத் ரயில் (ஸ்​லீப்​பர் வகை), அம்​ரித் பாரத் ரயில், ஹைட்​ரஜன் ரயில் உள்​ளிட்ட ரயில்​களின் தயாரிப்பு பணி​கள் நடந்து வரு​கின்​றன. இந்த பணி​களை மத்​திய ரயில்வே இணை அமைச்​சர் சோமண்ணா நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நடப்பு நிதி ஆண்​டில் 88 வந்தே பாரத் ரயில்​கள் தயாரிக்​கப்​பட்​டுள்​ளன. தற்​போது, 9 வந்தே பாரத் ரயில்​கள் தயாரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. பிரதமர் மோடி ஆட்​சி​யில் ரயில்வே துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்​துள்​ளது. விரைவு ரயில்​களில் கி.மீ.க்கு ஒரு பைசா மட்​டுமே உயர்த்​தும் திட்​டம்…

Read More

கல்லீரல் நோய்கள் உலகளவில் அதிகரித்து வருகின்றன, இது NAFLD, ஹெபடைடிஸ் மற்றும் சிரோசிஸ் போன்ற நிலைமைகளால் குறிக்கப்பட்டுள்ளது, இது கல்லீரல் தொடர்பான இறப்புகளில் அதிகரிக்க வழிவகுக்கிறது. இந்த நோய்களின் அமைதியான முன்னேற்றம் காரணமாக ஆரம்பகால கண்டறிதல் முக்கியமானது. முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளில் வாந்தி ரத்தம், சுவாசிப்பதில் சிரமம், இருண்ட மலம், குழப்பம், மயக்கம் மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் கடுமையான சிக்கல்களைத் தடுக்க உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்றன. கல்லீரல் நோய்கள் உலகளவில் அதிகரித்து வருகின்றன, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (என்ஏஎஃப்எல்டி), ஹெபடைடிஸ் மற்றும் சிரோசிஸ் போன்ற நிலைமைகளில் கூர்மையான அதிகரிப்பைக் காட்டும் ஆய்வுகள் உள்ளன. கடந்த தசாப்தத்தில் கல்லீரல் தொடர்பான இறப்புகள் அதிகரித்துள்ளன, 2023 அறிக்கையின்படி, மற்றும் பெரும்பாலும் வாழ்க்கை முறை தொடர்பான காரணிகள் மற்றும் பிற்பகுதியில் நிலை நோயறிதலால் இயக்கப்படுகிறது. கல்லீரல் நோயை இன்னும் ஆபத்தானதாக மாற்றுவது என்னவென்றால், அது அமைதியாக…

Read More

சென்னை: “படைப்பாளிகளை, அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும். எழுத்தாளரைப் போற்றும் சமூகம்தான் உயர்ந்த சமூகமாக இருக்க முடியும்,” என்று சாகித்ய அகாடமி மற்றும் JNU பல்கலை. தமிழ்த்துறை இணைந்து நடத்திய கருணாநிதி நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 27) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், சாகித்ய அகாடமி மற்றும் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் கருணாநிதி நூற்றாண்டுக் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இலக்கியத்தின் வழி இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் மகத்தான பணியினை சாகித்ய அகாடமி செய்து வருகிறது. ஒருவரின் இலக்கியத் தகுதி என்பதற்கு சாகித்ய அகாடமிதான் அளவுகோல் எனும் அளவுக்கு புகழோடு செயல்பட்டு வருகிறது. எழுத்தாளர்களையும், மொழிபெயர்ப்பாளர்களையும் ஊக்குவிக்கும் சாகித்ய அகாடமியின் பணி மகத்தானது. போற்றுதலுக்குரியது. அவர்கள் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை JNU-வுடன் இணைந்து இங்கு கொண்டாடுவது சிறப்புக்குரிய ஒன்றாக…

Read More