Author: admin

பொறியியல் டிப்ளமோ படிப்புக்கான சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொறியியல் டிப்ளமோ இறுதி செமஸ்டர் தேர்வு மற்றும் துணைத்தேர்வு எழுதி அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கான சிறப்பு துணை தேர்வு ஜூன் 30 முதல் ஜூலை 16 வரையும், செய்முறைத் தேர்வு ஜூலை 17 முதல் 25 வரையும் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தொழில்நுட்பக்கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். சிறப்பு துணை தேர்வின் முடிவுகள் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

திமுக இனி தமிழகத்துக்கு வேண்டாம் என்பதே எங்கள் கூட்டணியின் நிலைப்பாடு என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். நெல்லை சுத்தமல்லி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு திமுக இனி வேண்டாம் என்பதை எங்கள் கூட்டணியின் நிலைப்பாடு. இதை மக்கள் பிரதிபலிப்பார்கள். நிச்சயம் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது. டாக்டர் ராமதாஸை, செல்வப்பெருந்தகை சந்தித்தது குறித்து கருத்து கூற முடியாது. அதேநேரத்தில், இந்த சந்திப்பு எதிர்கால அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம். பாஜகவின் தேசியத் தலைவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், தேசிய, மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் ஆதிராவிட நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 96 ஆயிரம் குழந்தைகள் படித்த நிலையில், தற்போது 67 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே படிக்கிறார்கள். ஆசிரியர் பற்றைக்குறையால் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுதான்…

Read More

சென்னை: பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க அனைத்து ஊர்களிலும் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் குலாம் தஸ்தகீர் மீது போதைக் கும்பல் பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தியிருக்கிறது. பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மது விற்பனையில் பணம் வந்தால் போதும் என்ற திமுக அரசின் கட்டுப்பாடற்ற மது விற்பனையின் விளைவு, அரசுப் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது. அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என திமுக ஆட்சியின் கையாலாகா தனத்தால் யாருக்குமே பாதுகாப்பில்லை. அரசுப் பள்ளியின் உள்ளே…

Read More

சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அதில் பாஜகவின் பங்கு இருக்கும் என அமித் ஷா தெரிவித்திருந்தார். ஆனால், அதிமுகவினர் கூட்டணி மட்டும்தான், கூட்டணி ஆட்சியெல்லாம் இல்லை என கூறி வருகின்றனர். எனவே, கூட்டணியில் பங்கா, ஆட்சியில் பங்கா என்ற தெளிவு இல்லாமல் அதிமுக – பாஜகவினரிடையே தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியும் உறுதியாகிவிட்டது. இதற்கிடையில் அதிமுக தலைமையின்கீழ் கூட்டணி ஆட்சி என பாஜகவினர் கூறி வருகிறார்கள். ஆனால், அதிமுகவினரோ தேர்தல் கூட்டணி மட்டும் தான். கூட்டணி ஆட்சியெல்லாம் கிடையாது என கூறுகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த நேர்காணலில், ‘2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பாஜகவின் பங்கு நிச்சயம் இருக்கும்,’ என கூறியிருந்தார். மேலும், கூட்டணியின் முதல்வர்…

Read More

பிராடா தனது வசந்த-கோடைகால 2026 தொகுப்பில் செருப்பை இடம்பெற்றதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டது, இது கோலாபுரி சாப்பல்களை அவற்றின் தோற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் நெருக்கமாக ஒத்திருந்தது. பின்னடைவைத் தொடர்ந்து, பிராடாவின் லோரென்சோ பெர்டெல்லி பாரம்பரிய இந்திய பாதணிகளிலிருந்து வடிவமைப்பின் உத்வேகத்தை ஒப்புக் கொண்டார் மற்றும் உள்ளூர் கைவினைஞர்களுடன் ஒத்துழைப்பதில் ஆர்வம் காட்டினார். இந்த சம்பவம் பேஷன் துறையில் பாரம்பரிய கைவினைகளுக்கு முறையான கடன் மற்றும் ஆதரவின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. எனவே, இங்கே என்ன நடந்தது: பிராடா சமீபத்தில் அதன் வசந்த-கோடைகால 2026 ஆண்கள் சேகரிப்பைக் காட்டியது, மேலும் ஒரு குறிப்பிட்ட துண்டில் இந்திய பேஷன் பார்வையாளர்கள் இரட்டை எடுத்துக்கொண்டு, செருப்புகளை மிகவும் பழக்கமானதாகக் கருதினர். ஆமாம், அவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து வரும் கையால் செய்யப்பட்ட தோல் பாதணிகளான கோலாபுரி சாப்பல்களை வலுவாக ஒத்திருந்தனர். ஆனால் உத்வேகத்தின் மூலத்தை சொந்தமாக வைத்திருப்பதற்கு பதிலாக, பிராடா சாதாரணமாக அவற்றை அவர்களின் நிகழ்ச்சி குறிப்புகளில் “தோல் செருப்புகள்” என்று…

Read More

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிடுகிறது. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் இயக்குநர் ராம் உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் இயக்குநர்கள் ராம் மற்றும் வெற்றிமாறன் இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில் பேசிய ராம், நா.முத்துக்குமாரின் கவிதையை நீங்கள் படமாக எடுக்க வேண்டும் என்று வெற்றிமாறனிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், “நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை படமாக்கும் முயற்சியில் இருக்கிறேன். அதில் சூரியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார். சூர்யா நடிப்பில் வெற்றிமாறன்…

Read More

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் பள்ளி மற்றும் சூளைமேடு, அஞ்சுகம் தொடக்கப் பள்ளியில் ரூ.13.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத் துறையின், கோயில்கள் சார்பில் நடத்தப்படும் 25 பள்ளிகள் மற்றும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி உட்பட 10 கல்லூரிகளில் 22,455 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் இப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.138.13 கோடியில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.11.15 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் 3 தளங்களில் முதல்வரின் கல்விச்சோலை வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகளுடன் கூடிய 32 வகுப்பறைகள், ஆசிரியர் ஓய்வறைகள், கணினி அறை, ஆய்வுக் கூடங்கள், நூலகம்,…

Read More

இன்றைய டேட்டிங் உலகில், லேபிள்கள் விருப்பமாக இருக்கலாம், ஆனால் தெளிவு இன்னும் முக்கியமானது. நீங்கள் ஒருவருடன் தரமான நேரத்தை செலவிடலாம், சிரிப்புகள், ஆழ்ந்த பேச்சுக்கள் மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பகிர்ந்து கொள்ளலாம் – ஆனால் ஆழமாக, அது எங்கே போகிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய உரையாடல்களைத் தட்டிக் கொள்கிறார்கள். விஷயங்கள் உண்மையானதாக உணரத் தொடங்கும் போது அவை பின்வாங்கலாம். ஒருவேளை, நீங்கள் உணர்ச்சிவசப்பட்ட கனமான தூக்குதலைச் செய்கிறீர்கள்.உண்மை என்னவென்றால், ஆர்வமுள்ள அனைவரும் செய்யத் தயாராக இல்லை. சில நேரங்களில், அறிகுறிகள் பெரிய வியத்தகு வழிகளில் வராது – ஆனால் அமைதியாகக் காட்டுங்கள், அவை எவ்வாறு நடந்துகொள்கின்றன, அவர்கள் என்ன சொல்லக்கூடாது என்று தேர்வு செய்கிறார்கள்.நீங்கள் உடன் இருக்கும் நபர் விஷயங்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் தீவிரமாக இருக்கிறாரா என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், இங்கே ஏழு அறிகுறிகள் உள்ளன, அதாவது அவை இன்னும் இல்லை என்று அர்த்தம்.

Read More

சென்னை: விபத்தில்லா நிலையை உருவாக்க தமிழகத்தில் வாகனத்தின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாகன விபத்தால் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். இச்சூழலில் மாநிலத்தில் உள்ள இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களின் தரத்தையும் தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும். வாகனத்தை இயக்குபவர் சாலை விதிகளுக்கு உட்பட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கிறாரா என்பதை தொடர் சோதனை மூலம் கண்காணிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தி, உயிரிழப்பு நிகழ்ந்தால் தவறு செய்தவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும், அந்த வாகனத்தை இயக்கக்கூடாது எனவும் விதிகள் கொண்டுவரப்பட வேண்டும். கிராமப் பகுதி முதல் மாநகராட்சிப் பகுதி வரை அனைத்து இடங்களிலும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக வாகனத்தை இயக்குவதற்கும், போக்குவரத்துக்கும் சரியான சாலை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும்…

Read More

விஷ்ணு மன்சு நடித்துள்ள ‘கண்ணப்பா’ திரைப்படம் இந்திய அளவில் 2 நாட்களில் ரூ.16 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு நடித்துள்ள புராண படம், ‘கண்ணப்பா’. இந்திப் பட இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில், சரத்குமார், பிரீத்திமுகுந்தன், மோகன்பாபு, மது,கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்ஷய்குமார் எனபலர் நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில் உருவான இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.9.35 கோடி வசூல் செய்திருந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று ரூ.7 கோடி வசூலித்துள்ளது. இதன்படி இரண்டு நாட்களில் இந்திய அளவில் இப்படம் ரூ.16.35 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இப்படம் முதல் நாளில் தமிழில் ரூ.15 லட்சம், தெலுங்கில் ரூ.8.25 கோடி, இந்தியில் ரூ.65 லட்சம், மலையாளத்தில் ரூ.20 லட்சம் வசூலித்தது.…

Read More