பள்ளி குழந்தைகளின் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். கோவையில் மாநில அளவிலான அடைவு ஆய்வு, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார். ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் அனைத்து தேர்வுகளிலும் சிறப்பாகத் தேர்வு பெறுவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து அதிக தேர்ச்சி விகிதம் கொண்ட வட்டங்கள், தேர்ச்சி விகிதம் குறைந்த வட்டங்கள் எவை என்று கண்டறிந்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 10-ம் வகுப்பு, பிளஸ்…
Author: admin
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனர் ஐசரி கணேஷ், 2025 முதல் 2027 -ம் ஆண்டு வரை, 10 படங்களைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்தப் படங்களை இயக்க உள்ள இயக்குநர்கள் குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், சுந்தர். சி, கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், ஜூட் அந்தோணி, அருண் ராஜா காமராஜ், விக்னேஷ் ராஜா, செல்லா அய்யாவு, கணேஷ் பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகும் படமும் இதில் இடம்பெற்றுள்ளது. இதில் தனுஷ், ரவி மோகன், நயன்தாரா, விஷ்ணு விஷால் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
மாவட்டம் தோறும் மனமகிழ் மன்றங்களை ஏற்படுத்தி போதைக்கு பாதை அமைத்து கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அந்தமான் மாநில தலைவரை தேர்தெடுக்கும் பொறுப்பு தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம், தமிழகத்தில் மாநில நிர்வாகிகள் பொறுப்புகள் வழங்கப்படுவது தொடர்பான பல்வேறு ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, அந்தமானின் மாநில தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தமிழிசைக்கு தேசிய தலைவர்கள் வழங்கினர். இதையடுத்து வரும் 1-ம் தேதி அந்தமான் சென்று அங்குள்ள மாநில தலைவரை தமிழிசை தேர்வு செய்ய உள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வெற்றியும் பெறுவோம். மாணவ மாணவியர்கள்…
முகம் தோல் ஐசிங் அல்லது கிரையோதெரபி என்றும் அழைக்கப்படும் உங்கள் முகத்தை ஐசிங் செய்வது சமூக ஊடக தளங்களில் அதன் கூறப்படும் சிகிச்சை மற்றும் அழகியல் நன்மைகளுக்காக பிரபலமடைந்துள்ளது. முகப்பரு, வீங்கிய கண்கள் மற்றும் பிற தோல் பிரச்சினைகளுக்கு இது உதவுகிறது என்று சிலர் கூறுகின்றனர். இருப்பினும், காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் வலியைக் குறைப்பதற்கும் குளிர் சிகிச்சை பயன்படுத்தப்பட்டாலும், முக தோலுக்கான அதன் நன்மைகளை ஆதரிக்க எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை.உறுதியான ஆதாரம் இல்லாவிட்டாலும், முக ஐசிங் வேலைகளை பலர் நம்புகிறார்கள். இது ஒரு பிரபலமான அழகு போக்காக மாறியுள்ளது, ஆனால் சருமத்திற்கு அதன் உண்மையான நன்மைகளை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவை.உங்கள் முகத்தில் பனி பயன்படுத்துவது எப்படி திறம்பட மற்றும் பாதுகாப்பாகஹெல்த்லைன் படி, பனி முகங்களின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் முகத்தில் பனியைப் பயன்படுத்துவதற்கு இரண்டு பிரபலமான முறைகளை பரிந்துரைக்கிறார்கள்: மென்மையான துணியைப் பயன்படுத்துதல்: ஒரு சுத்தமான, மென்மையான பருத்தி துணியில் ஐஸ்…
அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் தாயகத்துக்கு பணம் அனுப்புவதற்கான கட்டணத்தை 1% ஆக குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு நாட்டின் வருவாயை அதிகரிக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்படி, ‘ஒன் பிக் பியூட்டிபுள் பில்’ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வெளிநாட்டினர் தாயகத்துக்கு பணம் அனுப்ப 5% கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டது. பின்னர் அது 3.5% ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதாவின் திருத்தப்பட்ட இறுதி வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதை வரும் ஜூலை 4-ம் தேதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவில், வெளிநாட்டினர் தாயகத்துக்கு பணம் அனுப்புவதற்கான கட்டணம் 3.5-லிருந்து 1% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களில் உள்ள கணக்குகளில் இருந்தோ, அமெரிக்காவின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமோ பணம் அனுப்புவதற்கு இந்த கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டண…
கொழும்பு: வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும், தொடரை 1-0 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியது. இலங்கை – வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வந்தது. இதில் முதலில் விளையாடிய வங்கதேசம் 79.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 458 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இலங்கை முதல் இன்னிங்ஸில் 211 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து நேற்று 4-ம் நாள் ஆட்டத்தை லிட்டன் தாஸ் 13 ரன்களுடனும், நயீம் ஹசன் ரன் எடுக்காமலும் தொடங்கினர். 4-ம் நாள்…
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம், ‘பறந்து போ’. கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். ஜுலை 4-ல் வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, விக்ரமன், பாலாஜி சக்திவேல், பாலா, வெற்றிமாறன், நடிகர் சித்தார்த், மருத்துவர் கு.சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் பாலா பேசும் போது, “ராம் பற்றி நிறைய பேர் பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுங்கள். உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன். ராம் மாதிரியான இயக்குநர் நமக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவை” என்றார். இயக்குநர் சசி பேசும்போது, “தனது முந்தைய படங்களை விட அடுத்த படத்தில் இன்னும் அதிக உழைப்பை கொடுப்பவர் ராம். குழந்தைகளுடைய உலகத்துக்குள் இந்தப் படம் மூலம் எளிதாகப் பயணிக்க முடியும்.…
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமையும், கூட்டணித் தலைவர்களும் முடிவு செய்வார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். மத்திய காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனத்தின் 50-ம் ஆண்டு நிறைவு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் திருச்சி திருவெறும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கிய காங்கிரஸ் கட்சியுடன்தான் திமுக தற்போது கூட்டணி வைத்துள்ளது. இந்தியாவில் அதிக அளவு போதைப் பொருள் பயன்படுத்தும் மாநிலமாக பஞ்சாப் உள்ளது. தற்போது அதில் தமிழகமும் சேர்ந்துள்ளது. வருங்கால சமுதாயத்தை போதைப் பொருளுக்கு அடிமையாக்கி அழிக்கப் பார்க்கும் திமுக அரசு தொடர்வது அடுத்த தலைமுறைக்கு ஆபத்து. திமுக கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிக சீட் கேட்டார் என்பதற்காக, அந்தக் கட்சியை…
சாலட்கள் சூப்பர் ஆரோக்கியமாக உணரக்கூடும், ஆனால் வெள்ளரிகள், தக்காளி மற்றும் மிளகுத்தூள் போன்ற நொறுங்கிய மூல காய்கறிகள் உங்கள் செரிமான அமைப்பு இன்னும் சூடாகாதபோது மிகவும் கடுமையானதாக இருக்கும். மூல காய்கறிகளில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது சிறந்தது, நீங்கள் எழுந்தவுடன் சரியாக இல்லை. முதல் விஷயத்தை சாப்பிட்டால் அவை வீக்கம் அல்லது வயிற்றுப் பிடிப்புக்கு வழிவகுக்கும். மறுபுறம், சமைத்த காய்கறிகளும் உங்கள் கணினியில் மிகவும் எளிதானவை, இன்னும் சூப்பர் சத்தானவை.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளி சாகிப் நாச்சன் மூளை ரத்தக் கசிவால் டெல்லி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். மும்பையில் கடந்த 2002 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பான வழக்குகளில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சாகிப் நாச்சன் கைது செய்யப்பட்டார். ஏகே 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நாச்சனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை முடிந்து கடந்த 2017-ல் விடுதலை ஆனார். இந்நிலையில், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த 2023-ம் ஆண்டு நாடு முழுவதும் சோதனை நடத்தினர். இதில் நாச்சன் மீண்டும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24-ம் தேதி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…
