திருச்சி: அறிவு, திறன், அணுகுமுறை, கடின உழைப்பு, திட்டமிடல் இருந்தால் யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம் என திருச்சியில் நேற்று நடைபெற்ற ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட எஸ்.பி., பயிற்சி ஆட்சியர் உள்ளிட்டோர் போட்டித் தேர்வர்கள், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். நாட்டின் அதிகாரமிக்க உயரிய பதவிகளில் அமர்வதற்கான வாய்ப்பை வழங்கும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதற்கான ஆலோசனைகளை மாணவர்களுக்கு அளிக்கும் வகையில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் `இந்து தமிழ் திசை- ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. செ.செல்வநாகரத்தினம், தீபிசனு, சரண்யா, சத்யஸ்ரீ பூமிநாதன், மு.முருகேசன் இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி மாவட்ட எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம் பேசியது: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி என…
Author: admin
சென்னை: பாமக தலைவர் அன்புமணி திடீர் பயணமாக நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் தாங்கள்தான் உண்மையான பாமக என்று கூறிக் கொள்வதோடு, ஒருவரின் ஆதரவாளரை, மற்றொருவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவதும் நியமிப்பதுமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. மேலும் இரு தரப்புக்கும் இடையே கடுமையான சொற்போரும் நடந்து வருகிறது. இந்நிலையில் அன்புமணி திடீர் பயணமாக, நேற்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
எலும்புகள் தாதுக்களால் மட்டுமே செய்யப்படுகின்றன. எலும்புகள் உயிருடன் உள்ளன, பகுதி கனிம, பகுதி வாழ்க்கை திசு. கொலாஜன் என்பது அந்த திசுக்களின் உள் சாரக்கட்டு ஆகும். கொலாஜன் இல்லாமல், எலும்புகள் சுண்ணாம்பு போல கடினமாக ஆனால் உடையக்கூடியதாகின்றன.கொலாஜன் எலும்புகளுக்கு அவற்றின் நெகிழ்வுத்தன்மையையும் எலும்பு முறிவுகளுக்கு எதிர்ப்பையும் தருகிறது. வயது அதிகரிக்கும்போது அல்லது மன அழுத்தத்தின் கீழ், உடல் குறைவான கொலாஜனை உற்பத்தி செய்கிறது, இது எலும்புகளை பலவீனப்படுத்தும். உடலுக்கு கொலாஜன் உற்பத்தி செய்வதில் வைட்டமின் சி ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. அம்லா (இந்திய நெல்லிக்காய்), சிட்ரஸ் பழங்கள் மற்றும் எலும்பு குழம்பு போன்ற உணவுகள் இந்த உள் வலிமையை வளர்க்கும்.மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் வயதான பெரியவர்களில் எலும்பு அடர்த்தியை மேம்படுத்துவதற்கான சமீபத்திய ஆய்வுகளில் கொலாஜன் (குறிப்பாக கடல் அல்லது வகை I கொலாஜன்) கூடுதலாக காட்டப்பட்டுள்ளது.
சென்னை: ராமதாஸூடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சி.கே.பெருமாளின் 80-வது பிறந்த நாளையொட்டி, ‘உள்ளிக்கோட்டை டூ செங்கோட்டை’, ‘அரசியலில் 60 ஆண்டுகள்’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, பேரவைத் தலைவர் அப்பாவு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் மற்றும் சி.கே.பெருமாள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸூடனான சந்திப்பை அன்புமணி விமர்சித்துள்ளார். சமூக நீதிக்காக யாரெல்லாம் போராடுகிறார்களோ அவர்கள் மீது பாசமும் மதிப்பும் எனக்கு உண்டு. மரியாதை நிமித்தமாக சந்திப்பை அவர் அரசியலாக்குவது வேதனை. ராமதாஸ் மீது உண்மையான அன்பு எங்களுக்கு இருக்கிறது. அவர் காங்கிரஸ் கூட்டணியில்…
சென்னை: தனது வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். சாகித்ய அகாடமி, டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்தார். ‘முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இலக்கிய ஆளுமை’ எனும் சிறப்பு மலரையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கவிதை, புனைகதை, செவ்வியல், நாடகம், திரை வசனம், உரைநடை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. கருணாநிதி பன்முகத் திறன் பெற்றவர் என்பதை இது காட்டுகிறது. அவர் தனது வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவர். வாழ்வையே தமிழ் சமூகத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்ததால்தான் 5 முறை தமிழக முதல்வராக அவரால் இருக்க முடிந்தது. இலக்கியத்தை இளைப்பாறும் நிழலாக கருதினார். ‘எனது செங்கோலை பறித்துவிடலாம்.…
மடப்புரத்தில் உள்ள கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய முதல்வர் கண்டும் காணாமல் இருப்பதால் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். மடப்புரம் சம்பவத்துக்கு முதல்வர் என்ன சொல்லப் போகிறார்? அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: ஒருவர் தவறு செய்ததாக காவல் துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும். சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடாது. தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையைக்கூட நிர்வகிக்கத் தெரியாத முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தி, உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: திமுக ஆட்சியில் காவல் நிலையத்துக்கு வருவோரின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை…
சென்னை: இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு ஜூலை 14 முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி துறை இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தொடக்க கல்வி துறையில் மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு (21 ஒன்றியங்களுக்கு மட்டும்) ஜூலை 2-ல் நடைபெறும். இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியம் கல்வி மாவட்டத்துக்குள் ஜூலை 3-ம் தேதியும், வருவாய் மாவட்டத்துக்குள் ஜூலை 4-ம் தேதியும் நடத்தப்படும். இடைநிலை ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 5-ல் தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறும். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 19, 21-ம் தேதிகளிலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22, 23-ம் தேதிகளிலும் நடத்தப்படும். மேலும், பட்டதாரி ஆசிரியருக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும்.…
சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வரும் 3-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், 4, 5-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று (ஜூன் 30) முதல் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 7 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்க 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.முதல்கட்டமாக சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வும், தொடர்ந்து பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வும் நிறைவடைந்தது. இதையடுத்து, அரசுக் கல்லூரிகளில் முதல்கட்ட கலந்தாய்வின்போது நிரம்பாத இடங்களை நிரப்புவதற்கான 2-ம்கட்ட சேர்க்கைப் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கலை, அறிவியல் படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூன் 30-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக்கல்வி இயக்குநரகம் அறிவித்திருந்தது. அதன்படி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று(ஜூன் 30) தொடங்கப்பட உள்ளன. இதையடுத்து மாணவர்களை வரவேற்க அரசுக் கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மேலும், ராகிங்…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை முன்னிட்டு, படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இதில் பிரதீப் ரங்கநாதன், “இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு முறை என்னிடம், ‘இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?’ என கேட்டார். அதற்கு நான் ‘நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்’ என்று பதிலளித்தேன். அப்போது நான் ‘கோமாளி’ படத்தையும் இயக்கவில்லை. ‘லவ் டுடே’ படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார். அதன்…
