Author: admin

​சென்னை: தியாகங்​கள் புரிந்த தீரர்​கள், அறிஞர்​கள், தலை​வர்​களை போற்றி 4 ஆண்​டு​களில் 63 சிலைகள், 11 மணி மண்டபங்களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அமைத்​துள்​ளார் என்று தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக நேற்று தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி ஆற்​றிய பணி​களில் சிறந்த பணி, பல்​லா​யிரக்​கணக்​கான தலை​முறை​களுக்​கும் தனித்​தோங்கி நிற்​கும் பணி, தென்​கோடி குமரி முனை​யில் திரு​வள்​ளுவருக்கு உலகமே கண்டு வியக்​கும் வண்​ணம் 133 அடி உயரத்​தில் 7,000 டன் எடை கொண்ட மாபெரும் கற்​சிலையை ரூ.9 கோடியே 65 லட்​சத்​தில் நிறுவி 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி திறந்து வைத்​தார். திரு​வள்​ளுவர் சிலை போல எண்​ணற்ற சிலைகள் மற்​றும் மணிமண்​டபங்​கள் நிறுவி தியாகி​களை போற்​றி​யுள்​ளார். தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், குமரி முனை​யில் திரு​வள்​ளுவர் சிலை நிறு​வப்​பட்டு 25 ஆண்​டு​கள் நிறைவு பெற்​றதை குறிக்​கும் வகை​யில் வெள்ளி விழாவை 2024-ம் ஆண்டு டிசம்​பர் 30,…

Read More

சென்னை: ரிசர்வ் வங்கி அறி​வித்த ரெப்போ விகித மாற்​றத்தை தொடர்ந்​து, சுந்​தரம் பைனான்ஸ் நிறு​வனம் வைப்​புத் தொகை வட்டி விகிதங்​களை மாற்றி அமைத்​துள்​ளது. இதன்​படி, மூத்த குடிமக்​களுக்​கான வைப்​பு தொகைக்​கு, 12 மாதங்​களுக்கு 7.2%, 24 மற்றும் 36 மாதங்​களுக்கு 7.5% வட்டி நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இது​போல பிற வாடிக்​கை​யாளர்​களுக்​கான வைப்​புத் தொகைக்​கு, 12 மாதங்​களுக்கு 6.7%, 24 மற்​றும் 36 மாதங்​களுக்கு 7% வட்டி நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இது வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. சுந்​தரம் பைனான்ஸ் நிறு​வனம், டிஜிட்​டல் வைப்​புத் தொகை வசதியை சமீபத்​தில் அறி​முகப்​படுத்​தி​யது. இது, சேமிப்பை இது​வரை இல்​லாத வகை​யில் எளி​தாக​வும், பாது​காப்​பாக​வும், எளிமை​யாக அணுகக்​கூடிய​தாக​வும் மாற்​றி​யுள்​ளது. வாடிக்​கை​யாளர்​கள், தங்​களது வைப்​புத் தொகைகளை ஒரே சீரான மற்​றும் பாது​காப்​பான செயல்​முறை வழி​யாக டிஜிட்​டல் முறையிலேயே முதலீடு செய்​ய​வும் அவற்றை நிர்​வகிக்​க​வும் முடி​யும். இதன் மூலம் வாடிக்​கை​யாளர்​களுக்கு கவர்ச்​சிகர​மான வட்டி வரு​வா​யுடன் முழு​மை​யான…

Read More

நீங்கள் மிகவும் கடினமாக முயற்சி செய்யாமல் உங்கள் ஆடை வேலை செய்வது போல, ஆடை அணிவது சிரமமின்றி உணரும்போது நாட்கள் உள்ளன. உங்கள் அலமாரி நிரம்பியிருந்தாலும், எதுவும் சரியாக உணரக்கூடிய நாட்கள் உள்ளன. வித்தியாசம்? பெரும்பாலும், இது சமநிலைக்கு வருகிறது. 60-30-10 விதி அமைதியாக ஒரு கடுமையான சூத்திரமாக அல்ல, ஆனால் ஒரு எளிய, காட்சி வழிகாட்டியாக உங்கள் அலங்காரத்தை கட்டாயப்படுத்தாமல் சிந்திக்க உதவுகிறது.”ஸ்டைலிங்கில் முதல் பாடம் சமநிலை ஆகும். 60-30-10 விதி என்பது உங்கள் மனநிலை, ஆறுதல் மற்றும் சந்தர்ப்பம்-ஒரு ஒத்திசைவான தோற்றத்தை ஒன்றிணைக்க உதவும் ஒரு கருவியாகும். ஃபேஷனில் எங்களுக்கு இது உள்ளுணர்வு. ஆனால் மற்றவர்களுக்கு, இந்த எளிய சூத்திரம் ஒரு உண்மையான விளையாட்டு மாற்றியாக இருக்கலாம் ”என்று பிரபல ஒப்பனையாளர் இஷா பன்சாலி காஸ்மோபாலிட்டனிடம் கூறினார்.அதன் இதயத்தில், 60-30-10 விதி விகிதாச்சாரத்தைப் பற்றியதுஒரு அலங்காரத்தில் வண்ணங்களை எவ்வாறு விநியோகிப்பது என்பதைக் கண்டுபிடிக்க இது உதவுகிறது, இதனால் அது…

Read More

வாஷிங்டன்: “​காசா விவ​காரத்​தில் இஸ்​ரேல் – ஹமாஸ் தீவிர​வா​தி​கள் இடை​யில் போர் நிறுத்​தம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. பிணைக் கைதி​களை ஹமாஸ் விடுவிக்க வேண்​டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​து உள்​ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி இஸ்​ரேலில் நடை​பெற்​றுக் கொண்​டிருந்த இசை நிகழ்ச்​சி​யில் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் திடீர் தாக்​குதல் நடத்​தினர். இதில் 1,200 பேர் கொல்​லப்​பட்​ட​தாக இஸ்​ரேல் தெரி​வித்​தது. மேலும், இளம்​பெண்​கள் உட்பட 251 இஸ்​ரேலியர்​களை ஹமாஸ் தீவிர​வா​தி​கள் பிணைக் கைதி​களாக பிடித்து சென்​றனர். இதையடுத்து காசா மீது இஸ்​ரேல் ராணுவம் கடுமை​யாக தாக்​குதல் நடத்​தி​யது. இது​வரை இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் காசா​வில் 56,000-க்​கும் மேற்​பட்ட பாலஸ்​தீனர்கள் கொல்​லப்​பட்​ட​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. இதற்​கிடை​யில், அணுஆ​யுத சர்ச்சை தொடர்​பாக ஈரான் மீதும் இஸ்​ரேல் தாக்​குதல் நடத்​தி​யது. தற்​போது ஈரான் – இஸ்​ரேல் போர் நிறுத்​தம் அறி​வித்​துள்ள நிலை​யில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்​று​முன்​தினம் நள்​ளிரவு வெளி​யிட்ட…

Read More

சென்னை: டிஜிட்​டல் பரிவர்த்​தனை குறை​வாக இருக்​கும் டாஸ்​மாக் கடை ஊழியர்​களுக்கு டாஸ்​மாக் மேலா​ளர்​கள் விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பி உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. தமிழகத்​தில் 4,829 டாஸ்​மாக் மது​பானக் கடைகள் உள்​ளன. இந்த கடைகளில் பாட்​டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடு​தல் பணம் வசூல் செய்​யப்​பட்டு வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதனை தடுப்​ப​தற்​காக டாஸ்​மாக் நிர்​வாகம் பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. அந்​தவகை​யில் உற்​பத்தி முதல் விற்​பனை வரை என்ற திட்​டத்தை அறி​முகம் செய்​தது. அதன்​படி விற்​பனையை கண்​காணிக்க டாஸ்​மாக் நிர்​வாகம் டிஜிட்​டல்​மய​மாகி உள்​ளது. டாஸ்​மாக் கடைகளில் விற்​கப்​படும் ஒவ்​வொரு பாட்​டிலும், செல்​போன் வடிவலான கையடக்க கருவி மூலம் ஸ்கேன் செய்து அதன் பிறகே விற்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், டிஜிட்​டல் பரிவர்த்​தனை ஊக்​குவிக்​கும் வித​மாக டாஸ்​மாக் கடைகளி​லும், நேரடி​யாக கைகளில் பணம் பெறு​வதை தவிர்த்து செல்​போன் செயலி வழி​யான பணப்​பரிவர்த்​தனை போன்ற டிஜிட்​டல் முறை​யில் பணம் வசூலிக்க வேண்​டும் என…

Read More

டாக்டர் வெண்டி லெப்ரெட் எடை தாங்கும் பயிற்சிகளை கொழுப்பு கல்லீரல் நோயைத் தடுப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முக்கியமானது, இது மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கும் நிலை. கார்டியோவுக்கு மேல் தசைக் கட்டமைப்பிற்கு முன்னுரிமை அளிப்பது நோயின் வளர்ச்சியின் முக்கிய காரணியான இன்சுலின் எதிர்ப்பை எதிர்த்துப் போராட உதவுகிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் குறைந்த சீரான உணவுடன் இணைந்து நடைபயிற்சி, குந்துகைகள் மற்றும் மதிய உணவுகள் போன்ற பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. கொழுப்பு கல்லீரல் நோய் என்பது வளர்ந்து வரும் சுகாதார அக்கறை, இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது. மிகவும் பொதுவான வகைகளில் ஒன்று வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் (MASLD) ஆகும், இது முன்னர் மதுபானமற்ற கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) என்று அழைக்கப்பட்டது. மோசமான உணவு, உடல் பருமன் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறையுடன் இணைக்கப்பட்ட இந்த நிலை, சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கல்லீரல் அழற்சி, வடு மற்றும் சிரோசிஸுக்கு வழிவகுக்கும்.…

Read More

விருதுநகர்: இங்​கிலாந்து பல்​கலைக்​கழகம் ஆய்வு முடிவு அறிக்கை வெளி​யிட்​டு​விட்​டது. இனி​யா​வது மத்​திய அரசு கீழடி அகழாய்வு அறிக்​கையை வெளி​யிடுமா என்று அமைச்​சர் தங்​கம் தென்​னரசு கேள்வி எழுப்​பி​யுள்​ளார். இது தொடர்​பாக தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில் குறிப்​பிட்​டிருப்​ப​தாவது: கீழடி​யில் கிடைத்த மனித மண்டை ஓடு​களை அறி​வியல் வழி​யில் ஆய்வு செய்​து, 2,500 ஆண்​டு​களுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவ​மைத்​துள்​ளது இங்​கிலாந்​தின் லிவர்​பூல் ஜான் மூர்ஸ் பல்​கலைக்​கழகம். கீழடி​யில் தமிழ் மக்​கள் நாகரி​கத்​தில் சிறந்​தவர்​களாக வாழ்ந்​தார்​கள் என்​ப​தற்​கான அறி​வியல் சான்​றுகள் ஒன்​றின் பின் ஒன்​றாக உலக அரங்​கில் நிரூபிக்​கப்​படு​வது மட்​டற்ற மகிழ்ச்​சி​யைத் தரு​கிறது. இதற்​குப் பின்​ன​ராவது மத்​திய அரசு கீழடி அறிக்​கையை வெளி​யிடுமா? இவ்​வாறு தங்​கம் தென்​னரசு பதி​விட்​டுள்​ளார்​.

Read More

புதுடெல்லி: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பிறகு பாகிஸ்​தானில் இருந்து வரும் அல்​லது ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்களை இந்​திய துறை​முகங்​கள் வழி​யாக (கப்​பல் மூலம்) நேரடி​யாக​வும் மறை​முக​மாக​வும் கொண்டு செல்ல மத்​திய அரசு தடை விதித்​தது. இதனால் கடல்​சார் தளவாட போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது மட்​டுமல்​லாமல், விதி​மீறல்​களை கண்​டறிவதற்​கான சோதனை​களும் தீவிரப்​படுத்​தப்​பட்​டன. இந்த நடவடிக்​கை​யின்​படி இது​வரை ரூ.9 கோடி மதிப்​புள்ள 1,100 டன் பொருட்​களை ஏற்​றிச் சென்ற 39 கன்​டெய்​னர்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக மத்​திய நிதி​யமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. பாகிஸ்​தானைச் சேர்ந்த பொருட்​கள் ஐக்​கிய அரபு அமீரக பொருட்​கள் என தவறாக குறிப்​பிடப்​பட்​டிருந்​தது சோதனை​யில் தெரிய​வந்​தது. இதுகுறித்து கராச்சி சேம்​பர் ஆப் காமர்ஸ் அன்ட் இண்​டஸ்ட்ரி தலை​வர் ஜாவேத் பில்​வானி கூறும்​போது, “இந்​தி​யா​வின் தடை​யால் பெரிய கப்​பல்​கள் பாகிஸ்​தானுக்கு வரு​வ​தில்​லை. இதனால் இறக்​கும​தி​யாளர்​கள் சிறிய கப்​பல்​களை நம்பி இருப்​ப​தால் சரக்கு போக்​கு​வரத்து செலவு அதி​கரித்​துள்​ளது. அத்​துடன் இறக்​குமதி 30 முதல் 50 நாட்​கள் வரை தாமத​மாகிறது.…

Read More

இஸ்லாமபாத்: ​பாகிஸ்​தானின் வடக்கு வசிரிஸ்​தான் மாவட்​டத்​தில் உள்ள கைபர் பக்​துன்​குவா பகு​தி​யில் நேற்று முன்​தினம் ராணுவத்​தினரின் வாக​னங்​கள் சென்று கொண்​டிருந்​தன. அவற்​றின் மீது வெடிகுண்​டு​கள் ஏற்​றிவந்த வாக​னம் மோதி​ய​தில் பாக். ராணுவ வீரர்​கள் 16 பேர் உயி​ரிழந்​தனர். இத்​தாக்​குதலுக்கு தெக்​ரிக் – இ-தலி​பான் என்ற பாகிஸ்​தான் தலி​பான் அமைப்​பின் தற்​கொலைப்​படை பிரி​வான ஹபிஸ் குல் பகதூர் பொறுப்​பேற்​றது. ஆனால், பாகிஸ்​தானின் ராணுவம் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘இந்​தி​யா​வின் ஆதரவு பெற்ற தீவிர​வா​தி​கள், வெடிகுண்டு வாக​னத்தை ராணுவத்​தினர் வாக​னங்​கள் மீது மோதி தாக்​குதல் நடத்​தினர்’’ என தெரி​வித்​துள்​ளது. இந்​தியா மறுப்பு: இதற்கு மறுப்பு தெரி​வித்​து உள்ள வெளி​யுறவுத்​துறை செய்தி தொடர்​பாளர் ரந்​திர் ஜெய்​ஸ்​வால், ‘‘வசிரிஸ்​தானில் கடந்த 28-ம் தேதி நடை​பெற்ற தற்​கொலைப்​படை தாக்​குதலுக்கு இந்​தியா மீது பாகிஸ்​தான் ராணுவம் குற்​றம் சுமத்​தி​யுள்​ளது. இதை நாங்​கள் வன்​மை​யாக மறுக்​கிறோம்​’’ என கூறி​யுள்​ளார்​.

Read More

சேலம்: அன்​புமணி​யின் பின்​னால் கட்சி நிர்​வாகி​கள் மட்​டும்​தான் உள்​ளனர். ராம​தாஸின் பின்​னால் வன்​னியர்​கள், வாக்​காளர்​கள் உள்​ளனர் என்று பாமக எம்​எல்ஏ அருள் கூறினார். சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: ராம​தாஸைப் பற்றி எவருமே சொல்​லாத, சொல்​லத் தயங்​கிய வார்த்​தைகளை அன்​புமணி பேசி​யது வேதனை அளிக்​கிறது. கொலை, கொள்ளை வழக்​கில் உள்​ளவர்​கள், சாலை​யோரம் இலந்​தைப் பழம் விற்​பவர்​களுக்கு ராம​தாஸ் பொறுப்​பு​களை வழங்​கி​யிருப்​ப​தாக அன்​புமணி கூறி​யுள்​ளார். பாட்​டாளி வர்க்​கத்​தினரை அன்​புமணி இழி​வுபடுத்தி விட்​டார். ராம​தாஸைச் சுற்றி 3 தீய சக்​தி​கள் இருப்​ப​தாக அன்​புமணி கூறுகிறார். ஆனால், அன்​புமணி​யைச் சுற்​றித்​தான் தீய சக்​தி​கள் உள்​ளன. கடந்த 5 ஆண்​டு​களாக ராம​தாஸ் குழந்​தை​போல இருப்​ப​தாக அன்​புமணி விமர்​சித்​துள்​ளார். எனில், 3 ஆண்​டு​களுக்கு முன்பு பாமக தலை​வ​ராக அன்​புமணியை ராம​தாஸ் அறி​வித்​தது எப்​படி செல்​லும்? ராம​தாஸ் பின்​னால் வன்​னியர்​கள், சிறு​பான்​மை​யினர், வாக்​காளர்​கள் இருக்​கின்​றனர். ஆனால், அன்புமணி​யின் பின்​னால் கட்சி நிர்​வாகி​கள் மட்​டுமே உள்​ளனர். எங்கள் உயிருக்கு ஆபத்து..…

Read More