நாள்பட்ட சிறுநீரக நோய் (சி.கே.டி) என்பது மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு நிலை. இந்த நிலை நீண்ட கால சேதத்தால் குறிக்கப்பட்டுள்ளது, இது இறுதியில் சிறுநீரகங்களை பலவீனமாக மாற்றுகிறது, மேலும் அவர்களால் இரத்தத்தை வடிகட்ட முடியாது. இது உடலில் கழிவு மற்றும் கூடுதல் திரவத்தை உருவாக்க வழிவகுக்கிறது. சி.கே.டி -க்கு நேரடி சிகிச்சை இல்லை என்றாலும் (அது முற்போக்கானது), சிகிச்சைகள் அறிகுறிகளை நிர்வகிக்கவும் அதன் முன்னேற்றத்தை குறைக்கவும் உதவும், இதில் வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள், டயாலிசிஸ் அல்லது மேம்பட்ட நிகழ்வுகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும். இருப்பினும், வழக்கமான சிகிச்சைகள் தவிர, இப்போது சில நம்பிக்கை உள்ளது. தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் நெப்ராலஜியில் வெளியிடப்பட்ட ஒரு அண்மையில் ஏற்பட்ட மருத்துவ ஆய்வு நம்பிக்கைக்குரிய செய்திகளைக் கொண்டு வந்துள்ளது: சோடியம் பைகார்பனேட்டுடன் தினசரி கூடுதல், பேக்கிங் சோடா என்றும் அழைக்கப்படுகிறது, இது…
Author: admin
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி மாணவ, மாணவியரின் உடல்நலன், மனநலனை மேம்படுத்த ஜும்பா நடன பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜும்பா என்பது நடனத்தை உள்ளடக்கிய உடற்பயிற்சி ஆகும். கடந்த 2001-ம் ஆண்டில் கொலம்பிய நடன கலைஞர் பீட்டோ பெரெஸ், ஜும்பா நடனத்தை உருவாக்கினார். தற்போது உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நடனம் பிரபலமாக இருக்கிறது. கேரளாவில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிருக்கு ஜும்பா நடன பயிற்சி வழங்கும் திட்டம் நடப்பு கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாணவ, மாணவியரின் உடல் நலன், மன நலன் மேம்படும். போதை பொருள் பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாவது தடுக்கப்படும் என்று கேரள கல்வித் துறை விளக்கம் அளித்து உள்ளது. ஆனால் பல்வேறு மத அமைப்புகள் ஜும்பா நடன பயிற்சி திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முஸ்லிம் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் நவாஸ் கூறும்போது,…
திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி20 லீக் கிரிக்கெட் தொடரில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. சாய் கிஷோர் அதிரடியாக விளையாடி 55 ரன்கள் (34 பந்துகள். 8 பவுண்டரி. ஒரு சிக்ஸர்) குவித்தார். பின்னர் விளையாடிய நெல்லை அணி 19.4 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது. திருப்பூர் அணி சார்பில் டி.நடராஜன் 3, மோகன் பிரசாத் 2, சாய்கிஷோர், இசக்கிமுத்து, முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சென்னை: திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய அவசியமில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.ராஜேந்திரன், ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திமுக அரசு தொடரவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும் கூட்டணி என்ற மதிமுக எடுத்த முடிவை வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைப்பிடிப்போம். அரசியலமைப்பில் மதச்சார்பற்ற, சோசலிச எனும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. முருகன் மாநாட்டில் பெரியார், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை சிறுமைப்படுத்தி வெளியான காணொலிக்கு கடும் கண்டனம். திருச்சியில் நடைபெறவுள்ள முன்னாள்…
புதுடெல்லி: கடந்த 2022-ம் ஆண்டில், 186 நாடுகளை உள்ளடக்கிய உலக வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தொழில்முனைவில் பாலின இடைவெளி குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்திய பெண்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தொழில்முனைவோராக உள்ளனர் என்றும் இது உலக சராசரியைவிட குறைவு என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய ஆண்களில் (15-64 வயது) சுமார் 3% பேர் தொழில்முனைவோராக உள்ளனர். இது உலக சராசரியுடன் ஒத்துப் போகிறது என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
புதுடெல்லி: பண மோசடி வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஹரியானா முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தரம் சிங் சோக்கருக்கு சொந்தமான ரூ.557 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை கூறியுள்ளதாவது: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரியானா முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தரம் சிங் சோக்கர் என்பவருக்கு சொந்தமான ரூ.557 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த வழக்கில் முடக்கப்பட்டுள்ள ஒட்டு மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.638 கோடியாக அதிகரித்துள்ளது. மஹிரா இன்ப்ராடெக் (முன்பு சாய் அய்னா பார்ம்ஸ்) உள்ளிட்ட இந்த வழக்கில் தொடர்புடைய மற்றும் சோக்கர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு சொந்தமான சொத்துகளும் இதில் அடக்கம். குறிப்பாக, குர்கானில் உள்ள 35 ஏக்கர் நிலம், பல்வேறு செக்டார்களில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவை இந்த பணமோசடி வழக்கில் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்து உள்ளது. தரம் சிங்…
சென்னை: எங்கள் கூட்டணி யார் தலைமையில் என்பதை பலமுறை பல விளக்கங்களை அமித் ஷா சொல்லிவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வர இருக்கிறார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். பிரதமர் மோடியில் 123-வது மனதின் குரல் நிகழ்ச்சி நாடு முழுவதும் நேற்று ஒலிபரப்பானது. அதன் ஒருபகுதியாக தி.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். இதையடுத்து, ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு மத்திய அரசு வரி விதிக்க உள்ளது என்ற தவறான தகவலை வேகமாக பரப்பி வருகிறார்கள். மத்திய அரசு அதற்கான விளக்கத்தை ஏற்கெனவே கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கான நிலத்தடி நீரில் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதை ஜல்சக்தி துறை அமைச்சகம் தெளிவாக…
உங்கள் தினசரி நடைப்பயணத்தை எளிய மாற்றங்களுடன் சக்தி நிறைந்த வொர்க்அவுட்டாக மாற்றவும். இடைவெளி நடைபயிற்சி ஆகியவற்றை இணைத்து, உங்கள் வேகத்தை அதிகரிக்கவும், மேம்பட்ட கலோரி எரியும் மற்றும் வலிமைக்கும் எடையைச் சேர்க்கவும். அதிக தசைகளில் ஈடுபட மலைகள் அல்லது படிக்கட்டுகள் போன்ற சாய்வுகளைத் தேர்வுசெய்க. உங்கள் சக்தி நடைப்பயணத்தின் போது காயங்களைத் தடுப்பதற்கும் சுவாச செயல்திறனை மேம்படுத்துவதற்கும் நல்ல தோரணையை பராமரிப்பது மிக முக்கியம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழக்கமான உடற்பயிற்சி அவசியம். ஆனால் சுறுசுறுப்பாக இருப்பது எப்போதுமே தீவிரமான உடற்பயிற்சிகளையோ அல்லது சிக்கலான நடைமுறைகளையோ குறிக்க வேண்டியதில்லை. நடைபயிற்சி போன்ற எளிமையான ஒன்று கூட உங்களுக்கு சுகாதார நன்மைகளை வழங்க முடியும் மற்றும் நோய்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இதய நோய், பக்கவாதம் மற்றும் பல புற்றுநோய்கள் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களின் அபாயத்துடன் நடைபயிற்சி இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் சாதாரண நடைபயிற்சி இன்னும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கலாம் என்றாலும், சில எளிய மாற்றங்களைச்…
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடைபெற்ற போரில் இந்திய விமானப்படையில் எத்தனை போர் விமானங்கள் சேதம் அடைந்தன என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பினார். முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் ஏற்கெனவே அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் தவறான தகவல். தாக்குதல் உக்திகளில் ஏற்பட்ட தவறுகளை சரிசெய்து, அனைத்து வகை விமானங்களையும் பயன்படுத்தி பாகிஸ்தானின் தொலைதூர பகுதிகளில் துல்லிய தாக்குதல் நடத்தினோம்’’ என்றார். இந்நிலையில் இந்தோனேஷியாவில் சிறப்பு பணிக்கு அனுப்பப்பட்ட இந்திய கடற்படை கேப்டன் சிவ குமார் என்பவர் சமூக ஊடகத்தில் விடுத்த செய்தியில், ‘‘பாகிஸ்தான் மீதான தாக்குதலில், அரசியல் தலைமையின் கட்டுப்பாடு காரணமாகத்தான், இந்திய விமானப்படை போர் விமானங்களை இழந்தது’’ என கூறி இருந்தார். இதை மேற்கோள் காட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்…
மதுரையை சேர்ந்த ராம் என்கிற ராமச்சந்திரனுக்கு (விக்ரம் பிரபு), முப்பது வயதைத் தாண்டியும் திருமணம் நடக்கவில்லை. ஒரு காலத்தில் அவர் பல பெண்களை நிராகரித்த நிலையில் இப்போது அவரை பலர் நிராகரிக்கின்றனர். ‘அவன் ராசிக்கு பெண்ணே கிடைக்காது’ என்று சொல்லப்படும் நிலையில் அவருக்கு வேறு ஊரில், வேறு சாதியில் அம்பிகா (சுஷ்மிதா பட்) என்ற பெண்ணை, தரகர் மூலம் பார்க்கிறார்கள். இதற்காக கோபிசெட்டிப்பாளையம் செல்கின்றனர், ராமின் குடும்பத்தினர். இந்த நேரத்தில் கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்படுகிறது. பெண் வீட்டிலேயே அவர்கள் சில வாரங்கள் தங்கி இருக்க வேண்டிய சூழல். இந்தக் காலக்கட்டத்தில் ராமின் உறவினர்களால் ஏற்படும் குழப்பத்தில் அவர் திருமணத்துக்குச் சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கல் தீர்ந்ததா? ராமின் திருமணக் கனவு என்னவாகிறது என்பது கதை. திருமண வயதைத் தாண்டியும் பெண் கிடைக்காமல் இருக்கும் ஒரு மணமகன், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு ஒரு பீல் குட்’ படத்தை…
