Author: admin

புரி: உல​கம் புகழ்​பெற்ற ஒடி​சா​வின் புரி ஜெகந்​நாதர் கோயில் ரத யாத்​திரை 2 நாட்​களுக்கு முன் தொடங்​கியது. புரி​யில் உள்ள குடிச்சா கோயில் அருகே நேற்று காலை 4 மணிக்கு ரத யாத்​திரை ஊர்​வலம் வந்​தது. அலங்​கரிக்​கப்​பட்ட ரதத்தை காண ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ஒரே இடத்​தில் குவிந்​திருந்​தனர். பக்​தர்​கள் கூட்​டம் அதி​கம் இருந்த பகு​தி​யில் ரதயாத்​திரை​யில் பங்​கேற்​கும் இரண்டு வாக​னங்​கள் உள்ளே நுழைந்​தன. அப்​போது ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பிரேமகந்த் மொகந்தி (80), வசந்தி சாகு (36), பிரபதி தாஸ் (42) ஆகியோர் உயி​ரிழந்​தனர். 50-க்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் காயம் அடைந்​தனர். கூட்ட நெரிசலை கட்​டுப்​படுத்த, காவல்​துறை அதி​காரி​கள் முறை​யான நடவடிக்கை மேற்​கொள்​ளவில்லை, விஐபிக்​களின் தரிசனத்​துக்கு காவல்​துறை ஏற்​பாடு செய்​ததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறப்​படு​கிறது. ரூ.25 லட்​சம் உதவித் தொகை: இச்​சம்​பவத்​துக்கு வருத்​தம் தெரி​வித்த ஒடிசா முதல்​வர் மோகன் சரண் மாஜி, உயி​ரிழந்த பக்தர்களின் குடும்​பத்​துக்கு ரூ.25…

Read More

சென்னை: சென்னையில் இன்று முதல்(ஜூன் 30) ஜூலை 6-ம் தேதி வரை 71-வது மாநில அளவிலான ஆடவர், மகளிர் சீனியர் வாலிபால் போட்டி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் ஆதரவுடன் இந்தப் போட்டியை சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் ஜவஹர்லால் நேரு மைதானத்திலும், எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்திலும் நடத்தவுள்ளது. ஆடவர் பிரி​வில் 24 அணி​களும், மகளிர் பிரி​வில் 38 அணி​களும் பங்​கேற்​க​வுள்​ளன. லீக் மற்​றும் நாக்​-அவுட் முறை​யில் போட்​டிகள் நடை​பெறும். போட்டி தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு எழும்​பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்​தில் நடை​பெறும். போட்​டிக்கு எஸ்​என்ஜே குரூப்​ஸ், ஜாஸ் பெர்ப்​யூம்​ஸ், டிவோ​சா, ரேடியன்ஸ் ரியால்​டி, காவேரி டிஎம்டி பார்ஸ் அன்ட் ஸ்டிரக்ச்​சுரல், பிவெல் ஹாஸ்​பிட்​டல்​ஸ், காஸ்கோ இந்​தியா ஆகிய நிறு​வனங்​கள் ஸ்பான்​சர் செய்​கின்​றன. சாம்​பியன் பட்​டம் பெறும் ஆடவர், மகளிர் அணி​களுக்கு எஸ்​என்ஜே கோப்பை வழங்​கப்​படும். ஆடவர் பிரி​வில் 2-ம் இடம்​பெறும் அணிக்கு டிவோசா கோப்​பை​யும்,…

Read More

எழுபதுகளில் முன்னணி நடிகர்களாக இருந்த பலர், ஒரு ஆக்‌ஷன், சமூகப் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது, காமெடி படங்களுக்கும் தங்கள் கால்ஷீட்களை ஒதுக்கி வந்தனர். அதில் முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் நடித்து பல காமெடி படங்கள் அப்போது வெளிவந்தன. அப்படி ‘தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்சங்கர் நடித்து வெளியான காமெடி படங்களில் ஒன்று, ‘அவசரக் கல்யாணம்’. நண்பர்களான சேகரும் ரகுவும் வேலை தேடி சென்னை வருகிறார்கள். வந்ததுமே பணத்தைப் பறி கொடுத்து விடுகிறார்கள். பின்னர், பிச்சைக்காரி வேடத்தில் அலையும் பணக்காரியான கமலாவை யார் என தெரிந்துகொண்டு, பொய்ச்சொல்லி ஏமாற்றி மணந்து கொள்கிறார் ரகு. அவன் சொன்னது பொய் என்று சேகர் போட்டுக் கொடுக்க, முதலிரவு அன்றே வெளியேற்றப்படுகிறான், ரகு. இதனால் சேகர் மீது ரகுவுக்கு கோபம். இதற்கிடையே வழக்கறிஞரான வசந்தியை காதலிக்கிறான், சேகர். அவரைப் பழிவாங்க நினைக்கும் ரகு, சேகருக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டதாக வசந்தியிடம் சொல்கிறான். வசந்தி,…

Read More

சென்னை: வட சென்னை வியாசர்​பாடி பகு​தி​யில் கணேசபுரம் ரயில்வே மேம்​பாலப் பணி 40 சதவீதம் மட்​டுமே நிறைவடைந் திருப்பதாக மாநக​ராட்சி நிர்​வாகம் பதில் அளித்​துள்​ளது. வியாசர்​பாடி கணேசபுரம் ரயில்வே மேம்​பாலப் பணி நீண்ட கால​மாக முடிக்​கப்​ப​டா​மல் உள்​ளது. இதனால் வாகன ஓட்​டிகள் சிரமத்​துக்​குள்​ளாகிறார்​கள். எனவே பணி​களை விரைந்து முடிக்க வேண்​டும் என்று வட சென்னை குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களின் கூட்​டமைப்பு தலை​வர் டி.கே.சண்​முகம், சென்னை மாநக​ராட்சி மேயரிடம் அண்​மை​யில் மனு அளித்​திருந்​தார். இதற்கு பதில் அளித்து சென்னை மாநக​ராட்சி நிர்​வாகம், டி.கே.சண்​முகத்​துக்கு கடிதம் அனுப்​பி​யுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: கணேசபுரம் மேம்​பாலத்​தின் தெற்கு பகு​தி​யில் தூண்​கள் அமைக்​கும் பணி முடிவுற்​று. தற்​போது வடக்கு பகு​தி​யில் ஆழ்​துளைக் கடைக்​கால்​கள் அமைக்​கும் பணி, சென்னை குடிநீர் வாரி​யத்​தின் குடிநீர் மற்​றும் கழி​வுநீர்க் குழாய்​களை மாற்​றியமைக்​கும் பணி மற்​றும் நிலம் கையகப்​படுத்​தும் பணி ஆகியவை நடை​பெற்று வரு​கின்​றன. தற்​போது வரை 40 சதவீதம் பணி​கள் முடிவடைந்​துள்​ளன. வடக்கு பகு​தி​யில்…

Read More

ஒவ்வொரு குடும்பமும் அன்பு, பொறுமை மற்றும் அன்றாட குழப்பம் ஆகியவற்றின் கலவையில் இயங்குகிறது. ஒரு குடும்ப அமைப்பில் பின்பற்ற முறையான விதிகள் எதுவும் இல்லை என்றாலும், நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதை அமைதியாக வழிநடத்தும் சில சொல்லப்படாத எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த பேசப்படாத சொற்கள் ஒழுக்கத்தைப் பற்றியது அல்ல, ஆனால் இணைப்பு பற்றியது. அவை எங்கள் வீடுகளில் பாதுகாப்பு, மரியாதை மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் நாங்கள் பின்பற்றாத ஒப்பந்தங்கள்.பேசப்படாத குடும்ப விதிகள் என்பது தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு நாம் கடந்து செல்லும் விஷயங்கள் கூட உணராமல். கருத்து வேறுபாடுகளை நாங்கள் எவ்வாறு தீர்க்கிறோம், இரவு உணவு மேஜையில் நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு நடந்துகொள்கிறோம், அல்லது யாராவது நமக்குத் தேவைப்படும்போது நம்மை எவ்வாறு கிடைக்கச் செய்கிறோம். இந்த பழக்கவழக்கங்கள் சிறியதாகத் தோன்றலாம், ஆனால் அவை நம் வளர்ச்சியை அமைதியாக பாதிக்கின்றன மற்றும் குடும்ப உறவுகளை வலுவாக வைத்திருக்கின்றன.இன்று, உலகம் அணு குடும்ப இயக்கவியலை…

Read More

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் 24 வயது சட்​டக் கல்​லூரி பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைது செய்யப்பட்​டுள்ள முக்​கிய குற்​ற​வாளி​யான மேங்​கோ என்ற மனோஜித் மிஸ்ரா நீண்ட கால​மாக மனநோ​யால் (சைக்​கோ) பாதிக்கப்பட்​ட​வர் என அவரது முன்​னாள் வகுப்பு தோழர்​களும், ஜூனியர்​களும் குற்​றம்​சாட்​டி​ உள்​ளனர். இதுகுறித்து அவர்​கள் கூறிய​தாவது: சட்​டக்​கல்​லூரி மாணவி பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள முக்​கிய குற்​ற​வாளி​யான மனோஜித் மிஸ்ரா நீண்ட கால​மாக மனநோ​யால் பாதிக்​கப்​பட்​டிருந்​ததுடன், பாலியல் வன்​முறை​யில் ஈடு​படும் அளவுக்கு மோச​மான நடத்தை உடைய​வர். அதனால்​தான், கடந்த 2021-ம் ஆண்டு கல்​லூரி​யின் திரிண​மூல் பிரி​வில் இருந்து மிஸ்ரா வெளி​யேற்​றப்​பட்​டார். பாலியல் வன்​கொடுமைக்கு ஆளான மாணவி உட்பட எந்த பெண்​களைப் பார்த்​தா​லும் என்னை திரு​மணம் செய்து கொள்​கிறா​யா? என்று பலமுறை தொல்லை கொடுத்​துள்​ளார். மேலும், பெண்​களின் புகைப்​படங்​களை மார்​பிங் செய்து நண்​பர்​களிடையே பரப்​பும் அளவுக்கு மனநோய் உடைய​வர் மிஸ்​ரா. மேலும், பெண்​களை உடல்​ரீ​தி​யாக​வும் அவமானப்​படுத்​து​வார். பாலியல்…

Read More

சென்னை: பிளஸ் 1 மறுகூட்​டல், மறும​திப்​பீடு முடிவு​கள் இன்று (ஜூன் 30) வெளி​யிடப்​படும் என்று தேர்​வுத் துறை அறி​வித்​துள்​ளது. இதுகுறித்து தேர்​வுத் துறை இயக்​குநரம் வெளி​யிட்ட செய்​திக்குறிப்பு விவரம்: தமிழகத்​தில் பிளஸ் 1 வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு கடந்த மார்ச் மாதம் நடை​பெற்​றது. இந்த தேர்வு எழு​தி​ய​வர்​களில் மறுகூட்​டல், மறும​திப்​பீடு கோரி விண்​ணப்​பித்​தவர்​களில் மதிப்​பெண் மாற்​ற​முள்ள மாணவர்​களின் பதிவெண் பட்​டியல் இன்​று (ஜூன் 30) மதி​யம் வெளி​யிடப்​படு​கிறது. அதன்​ விவரங்​களை மாணவர்​கள் தேர்​வுத்​ துறை​யின் www.dge.tn.gov.in எனும் இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம். இந்த பட்​டியலில் இடம்​பெறாதவர்​களின் விடைத்​தாள்​களில் எவ்​வித மாற்​ற​மும் இல்லை என்​பது தெரிவிக்​கப்​படு​கிறது. மதிப்​பெண் மாற்​ற​முள்ள மாணவர்​கள் மட்​டுமே மேற்​கண்ட தேர்​வுத்​துறை இணை​யதளத்​தில் இருந்து தங்​களுக்​கான திருத்​தப்​பட்ட மதிப்​பெண் பட்​டியலை பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். மேலும், அசல் மதிப்​பெண் சான்​றிதழ் வழங்​கப்​படும் தேதி விவரங்​கள் பின்​னர் வெளி​யிடப்​படும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

பர்மிங்ஹாம்: விக்கெட்களை வீழ்த்துவதற்கே நான் முன்னுரிமை அளித்து வருகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் ஜூலை 2-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரசித் கிருஷ்ணா. பயிற்​சி​யின் இடையே செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தென் ஆப்​பிரிக்கா​வுட​னான டெஸ்ட் தொடரில்​தான் நான் அறி​முக​மானேன். இது​வரை 4 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி 13 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​யுள்​ளேன். இங்​கிலாந்து தொடர் சவாலான​தாக இருக்​கும் என்​பது எங்​களுக்குத் தெரி​யும். முதல் டெஸ்ட் போட்​டி​யில் வெற்றி பெறு​வதற்கு போதிய முயற்​சிகளை மேற்​கொண்​டோம். ஆனால், முடிவு வேறு வித​மாகி​விட்​டது. முதல் டெஸ்ட் போட்​டியில் சிறப்​பாகவே பந்​து​வீசினோம். ஆனால் 2-வது இன்​னிங்​ஸில் இங்​கிலாந்து வீரர்​கள் சிறப்​பாக விளை​யாடினர். முதல் இன்னிங்​ஸில் சரி​யான லென்த்​தில் என்​னால் பந்து வீச இயல​வில்​லை. ஆனால் 2-வது இன்​னிங்​ஸின்​போது சுதா​ரித்து பந்​து​வீசினேன். மேலும் ஆடுகளமும்…

Read More

கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள படம், ‘ஓஹோ எந்தன் பேபி’. இதில் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா, கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார். ரொமான்டிக் படமான இதை, ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ஜூலை 11-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா, செல்லா அய்யாவு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் கார்த்தி என பலர் கலந்துகொண்டனர். விஷ்ணு விஷால் பேசும்போது, “ருத்ரா, என்னுடைய சொந்த தம்பி இல்லை. பெரியப்பா மகன். அப்பா – பெரியப்பா இருவரும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருந்தாலும் அவர்களுக்கு சினிமா மீது தீராத காதல் உண்டு. இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள். பிறகு பெரியப்பாவுக்கு படிப்பு வரவில்லை. அதனால் அவர்…

Read More

சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான விதி​களில் 3 தளர்​வு​களை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்​ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, பெண்​களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக அறி​வித்​தது. பின்​னர், 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளின் உரிமை தொகை திட்​டம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்​கப்​பட்​டது. இதை பெறு​வதற்​கும் சில நிபந்​தனை​கள் விதிக்​கப்​பட்​டன. அதில், நான்கு சக்கர வாக​னம் (கார், ஜீப் போன்​றவை) வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​கள் திட்​டத்​துக்கு தகு​தி​யற்​றவர்​களாக கருதப்​பட்​டனர். அதே​நேரம், அரசின் நிபந்​தனை​களுக்​குட்​பட்டு தகு​தி​யுள்ள பெண்​களின் விண்​ணப்​பங்​கள் நிராகரிக்​கப்​பட்​ட​தாக​வும் புகார்​கள் எழுந்​தன. இதைத் தொடர்ந்து ஜூலை 15-ம் தேதி முதல் நடை​பெறும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ சிறப்பு முகாம்​களில் கடந்த முறை விண்​ணப்​பித்து நிராகரிக்​கப்​பட்​ட​வர்​கள் மற்​றும் புதி​தாக ரேஷன் அட்டை பெற்​றவர்​கள் அனை​வரும் விண்​ணப்​பிக்​கலாம் என கூறப்​பட்​டது. இதற்​கிடையே, திருப்​பத்​தூரில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பேசிய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், “ஜூலை 15 முதல்…

Read More