Author: admin

சிவகங்கை: போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இதனிடையே இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் பிஎன்எஸ்எஸ் 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்புவனம்…

Read More

சென்னை: மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, வருகிற 3 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர் நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தவெக தலைவர் உத்தரவின் பேரில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம்…

Read More

சென்னை: தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு மீது ஜூலை 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரான பெரியார் அன்பன் என்ற இளங்கோவன் சென்னை பெருநகர முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான எங்களுக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கான யானை சின்னத்தை வேறு எந்தக் கட்சியும் பயன்படுத்த முடியாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நடிகர் விஜய்யின் தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும்,” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.சந்திரசேகரன் முன்பு இன்று (ஜூலை 1) விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்,…

Read More

சென்னை: “திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்பது குறித்து, தேர்தல் தேதி அறிவித்த பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். அதைச் சமாளித்துவிடுவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான முன்னெடுப்பை இன்று (ஜூலை 1) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: “தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதற்கான முயற்சிதான் ‘ஓரணியில் தமிழ்நாடு’. மத்திய பாஜக அரசால் நம்முடைய தமிழும், தமிழ்நாடும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்று நான் உங்களுக்கு அதிகம் விளக்கத் தேவையில்லை. அரசியல், பண்பாடு, மொழி, பொருளாதாரம் என்று அனைத்து வகையிலும் நமக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைச் சொல்ல வேண்டும் என்றால், அனைத்திலும் வளர்ந்த தமிழ்நாட்டை, மத்திய அரசு பல்வேறு வழிகளில்…

Read More

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள் என்று வேதனை தெரிவித்ததுடன், இந்த வழக்கை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த 9 பவுன் நகை காணாமல்போனது தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோயில் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளைப் பத்திரப்படுத்தவும், சிபிஐடி விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கவும் உத்தரவிடக் கோரி திருப்புவனம் அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திக்ராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மேலும், அதிமுக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் மாரீஸ்குமார் உட்பட 5…

Read More

சென்னை: ஒருங்​கிணைந்த பள்​ளிக் கல்​வித்​துறை​யில் பணிபுரி​யும் ஊழியர்​களுக்கு விருப்ப மாறு​தல் கலந்​தாய்வு ஜூலை 8, 9-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளது. இதுகுறித்து ஒருங்​கிணைந்த பள்​ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்​குநர் மா.ஆர்த்​தி,அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: இந்த துறை​யில் பணி​யாற்​றும் தொகுப்​பூ​திய ஊழியர்​களுக்கு மனமொத்த மாறு​தல் வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதன்​படி ஒருங்​கிணைந்த பள்​ளிக் கல்வி அலு​வல​கம், மாவட்ட திட்ட அலு​வல​கம் மற்​றும் வட்​டார வள மையங்​களில் பணிபுரி​யும் தொகுப்​பூ​திய பணி​யாளர்​களுக்கு காலி​யாக உள்ள இடங்​களுக்கு மாறு​தல் வழங்​கப்பட உள்​ளன. இதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை பின்​பற்றி விருப்ப மாறு​தல் வழங்க நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். அதன்​படி மாவட்​டத்​துக்​குள் மற்​றும் மாவட்​டம் விட்டு மாவட்​டம் மாறு​தல் கோரும் தொகுப்​பூ​தி​யப் பணி​யாளர்​கள் விண்​ணப்​பத்தை பூர்த்தி செய்து ஜூலை 4-ம் தேதிக்​குள் சமர்​ப்பிக்க வேண்​டும். பெறப்​பட்ட விண்​ணப்​பங்களை முதன்​மைக் கல்வி அலு​வலர் தலை​மை​யில் குழு அமைத்து பரிசீலிக்க வேண்​டும். அதன்​பின் மாவட்​டத்​துக்​குள்…

Read More

திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும்படி உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். விசாரணையின்போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது இறப்புக்கு காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல். இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 6 காவலர்கள் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று முன்தினம் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை…

Read More

சென்னை: விரைவில் ஷாருக் கான், ஆமிர் கான் போன்ற நடிகர்களை வைத்து பான் இந்தியா படம் ஒன்றை மாரி செல்வராஜ் இயக்குவார் என்று நான் நம்புகிறேன் என இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ராம் கூறியதாவது: “மாரி செல்வராஜின் வெற்றி என்பது எங்கள் குழுவின் வெற்றி, எங்கள் வீட்டின் வெற்றி. இந்த வெற்றி போதாது என்றுதான் நான் சொல்வேன். ஒரு பான் இந்தியா இயக்குநராக மாறுவதற்கான எல்லா தகுதியும் அவருக்கு உண்டு. எனக்கு தெரிந்து பாரதிராஜாவுக்கு பிறகு மிக வேகமாக படம் எடுக்கக் கூடிய இயக்குநர் மாரி செல்வராஜ். படத்துக்குப் படம் முன்னேறிக் கொண்டே இருக்கிறார். ’பரியேறும் பெருமாள்’ படத்தை விட ஒரு திரைப்படமாக ‘வாழை’ எனக்கு பிடித்தது. இப்போது ‘வாழை’யை விட ‘பைசன்’ ஒரு படமாகவும், உள்ளடக்கமாகவும், சிக்கலான உணர்வுகளை காட்டிய விதத்திலும் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. இன்னும் பெரிய இடங்களுக்கு அவர் செல்ல வேண்டும்…

Read More

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் பெண் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். சிவகாசியைச் சேர்ந்த கமல்குமார் என்பவர் சாத்தூர் அருகேயுள்ள சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலையை நடத்திவருகிறார். இங்கு 48 அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று காலை 20 தொழிலாளர்கள் ஆலையில் பேன்சிரக பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மணி மருந்து கலவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். திடீரென உராய்வு காரணமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 8 அறைகள் இடிந்துதரைமட்டமாகின. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மீனம்பட்டி மகாலிங்கம்(55), ஓ.கோவில் பட்டி ராமமூர்த்தி(45), சேர்வைக்காரன்பட்டி ராமஜெயம்(27), மத்தியசேனை கருப்பசாமி மனைவி லட்சுமி(22), சூலக்கரை வைரமணி(32), அனுப்பங்குளம் செல்லப்பாண்டி, நாகபாண்டி ஆகிய 7 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சேர்வைக்காரன்பட்டி அழகுராஜா(28), செவல்பட்டி…

Read More

சென்னை: இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளது நத்திங் போன் (3). இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ல் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei) தான் இந்த வரவேற்புக்கு காரணம். இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-ல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார். இந்நிலையில், தற்போது நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இது ப்ரீமியம் ரக போனாக சந்தைக்கு வந்துள்ளது. நத்திங் போன் (3) சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15…

Read More