Author: admin

புதுடெல்லி: உல​கில் அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் என்று மார்​கன் ஸ்டான்​லி​யின் சர்​வ​தேச ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது. அமெரிக்​கா​வைச் சேர்ந்த மார்​கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடு​களின் பொருளா​தா​ரம் குறித்து வெளி​யிட்ட ஆய்​வறிக்கையில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​கள், சீனா உள்​ளிட்​டவை தங்​களின் பொருளா​தார வளர்ச்​சியை அதி​கரிக்க அதிக தொகையை செல​விட்டு வரு​கின்​றன. ஆனால் சர்​வ​தேச பொருளா​தார வளர்ச்சி மந்​த​மாகவே இருக்​கிறது. கரோனா பெருந்​தொற்று காலத்​துக்கு பிறகு சர்​வ​தேச பொருளா​தா​ரம் முழு​மை​யாக மீட்சி அடைய​வில்​லை. பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் பல்​வேறு நாடு​கள் மீது அமெரிக்க அரசு வர்த்தக வரி​களை விதித்​துள்​ளது. இதன்​காரண​மாக கடந்த ஏப்​ரலில் அமெரிக்​கா​வின் பொருளா​தா​ரம் பெரும் சரிவை சந்​தித்​தது. இது உலகம் முழு​வதும் பாதிப்​பு​களை ஏற்​படுத்​தி​யது. நடப்​பாண்​டில் அமெரிக்​கா​வின் பொருளா​தார வளர்ச்சி 1.5 சதவீத​மாக இருக்​கும். வரும் 2026-ம் ஆண்​டில் அந்த நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி ஒரு சதவீத​மாக இருக்​கும். நடப்​பாண்​டில் அமெரிக்​கா​வில்…

Read More

லண்டன்: ​விம்​பிள்​டன் டென்​னிஸ் தொடரில் முன்​னணி வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா, இத்​தாலி வீரர் லோரென்சோ முசெட்டி ஆகியோர் முதல் சுற்​றில் அதிர்ச்சி தோல்வி அடைந்​தனர். லண்​டனில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 3-வது முதலிடத்​தில் உள்ள அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா, தரவரிசை​யில் 116-வது இடத்​தில் உள்ள இத்​தாலி​யின் எலிசபெட்டா கோசி​யாரெட்​டோவுடன் மோதி​னார். இதில் எலிசபெட்டா கோசி​யாரெட்டோ 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்​தார். 5-ம் நிலை வீராங்​க​னை​யான சீனா​வின் குயின்​வென் ஹெங் 5-7, 6-4, 1-6 என்ற செட் கணக்​கில் 81-ம்நிலை வீராங்​க​னை​யான செக் குடியரசின் கேத்​ரினா சினியகோ​வா​விடம் வீழ்ந்​தார். ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் முதல் நிலை வீர​ரான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், சகநாட்​டைச் சேர்ந்த 95-ம் நிலை வீர​ரான லூக்கா நார்​டியை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் ஜன்​னிக்…

Read More

சென்னை: ​டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் காலி மது பாட்​டில்​களை திரும்​பப்​பெறும் பணிக்கு தனி​யாக பணி​யாளர்​களை நியமிப்​பது தொடர்​பாக அரசின் பிரத்​யேக குழுவை அணுகலாம் என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சுற்​றுச்​சூழல் மாசுவைக் கருத்​தில் கொண்டு டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் விற்​கப்​படும் மது பாட்​டில்​களை திரும்​பப்​பெற சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. அதன்​படி மது​பாட்​டில்​களை விற்​கும்​போது ரூ.10 கூடு​தலாக பெற்​றுக்​கொண்​டு, காலி பாட்​டில்​களை ஒப்​படைத்​தால், அந்த ரூ.10 திருப்​பிக் கொடுக்​கப்​படும். இத்​திட்​டம் தமிழகம் முழு​வதும் அமல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்​தப் பணி​களுக்கு டாஸ்​மாக் கடைகளில் தற்​போது பணி​யாற்​றும் ஊழியர்​களை நியமிக்​காமல், தனி​யாக பணி​யாளர்​களை நியமிக்​கக் கோரி​யும், காலி மது​பாட்​டில்​களை சேகரித்து வைக்க தனி இடம் மற்​றும் உட்​கட்​டமைப்பு வசதி​களை ஏற்​படுத்​தித் தரக் கோரி​யும், டாஸ்​மாக் ஊழியர் மாநில சம்​மேளனம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்​கு, நீதிபதி கிருஷ்ணன் ராம​சாமி முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தமிழக அரசு…

Read More

பர்மிங்காம்: இந்​தியா – இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பர்​மிங்​காமில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு தொடங்​கு​கிறது. ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட ஆண்​டர்​சன்​-டெண்​டுல்​கர் டிராபிக்​கான தொடரில் ஹெட்​டிங்​லி​யில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இங்​கிலாந்து அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. அந்த அணி 371 ரன்​கள் இலக்கை வெற்​றிகர​மாக துரத்தி சாதனை படைத்​திருந்​தது. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி தரப்​பில் 5 சதங்​கள் அடிக்​கப்​பட்ட போதி​லும் வலு​வில்​லாத பந்​து​வீச்​சால் இந்​திய அணி தோல்​வியை சந்​தித்​தது. தொடரில் 0-1 என பின்​தங்​கி​யிருக்​கும் நிலை​யில் 2-வது டெஸ்ட் போட்​டி​யில் இன்று பர்​மிங்​காமில் இங்​கிலாந்​துடன் மீண்​டும் மோதுகிறது இந்​திய அணி. பர்​மிங்​காமிலும் வெப்​பம் அதி​க​மாக காணப்​படு​கிறது. ஆடு​களத்​தில் புற்​கள் அதிக அளவில் உள்​ளது. இதனால் ஹெட்​டிங்லி மைதானம் போன்றே…

Read More

சிவகங்கை: சாத்​தான்​குளம் சம்​பவம்​போல மடப்​புரத்​தில் மற்​றொரு சம்​பவம் நடை​பெற்​ற​தால் தமிழக மக்​கள் அதிர்ச்​சி​யில் உள்ளனர். தூத்​துக்​குடி மாவட்​டம் சாத் தான்​ குளத்​தைச் சேர்ந்​தவர் ஜெய​ராஜ். அவரது மகன் பென்​னிக்​ஸ். செல்​போன் கடை நடத்தி வந்த இரு​வரை​யும் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி சிறிய வாக்​கு​வாத பிரச்​சினைக்​காக போலீ​ஸார் காவல்​நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றனர். இரு​வரை​யும் காவல் நிலை​யத்​திலேயே போலீ​ஸார் கொடூர​மாகத் தாக்​கினர். சிறை​யில் அடைக்​கப்​பட்ட 2 பேரும் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவம் தமிழகத்தை அதிர்ச்​சி​யடையச் செய்​தது. தற்​போதைய முதல்​வரும், அப்​போதைய எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின், கனி​மொழி மற்​றும் சமூக செயல்​பாட்​டாளர்​கள், திரைப்பட பிரபலங்​கள், கிரிக்​கெட் வீரர்​கள் என பலதரப்​பிலும் கடும்கண்டன குரல்​கள் எழுந்​தன. இதனால் அதி​முக அரசுக்கு கடும் நெருக்​கடி ஏற்​பட்​டது. அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் ஆனந்த், கண்ணன், சங்கர மணிகண்டன். ராஜா, பிரபு. காவல் துறை​யினர் பலர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கு…

Read More

சென்னை: பள்​ளிக் கல்​வித் துறை​யின் 100 நாள் சவாலை ஏற்று மாணவர்​களின் வாசித்​தல், கணிதத்​திறனில் முன்​னேற்​றம் அடையச் செய்த 4,552 அரசுப் பள்​ளி​களின் தலைமை ஆசிரியர்​களுக்கு சிறப்பு விருதுகள் வழங்​கப்பட உள்​ளன. தமிழகத்​தில் அரசு, அரசு உதவி​பெறும் தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்​கும் மாணவர்​களின் தமிழ், ஆங்​கிலம் வாசிப்பு மற்​றும் கற்​றல் திறன் அடைவு​கள் குறித்து 100 நாள் சவாலை பள்​ளிக் கல்​வித் துறை அறி​வித்​தது. இதற்​காக முதல்​கட்​ட​மாக 4,552 பள்​ளி​கள் கடந்த நவம்​பர் மாதம் அழைப்பு விடுத்​தன. இந்த பள்​ளி​கள் 100 நாள் சவால் என்ற அடிப்​படை​யில் தமிழ், ஆங்​கிலம் வாசித்​தல் பயிற்சி மற்​றும் கணிதப் பாடத்​தில் கூட்​டல், கழித்​தல், பெருக்​கல், வகுத்​தல் ஆகிய அடிப்​படைத் திறன்​களை கற்​பித்​து, பொது​வெளி​யில் சவாலை நடை​முறைப்​படுத்​தின. அப்​போது தமிழ், ஆங்​கில எழுத்​துகளை அடை​யாளம் காணுதல், வார்த்​தைகளை பிழை​யின்றி வாசித்​தல், கணிதத்​தில் ஒற்​றை, இரட்டை எண்​களை கண்​டு​பிடித்​தல்,…

Read More

ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன் பிடித்​த​தாகக் கூறி ராமேசுவரம் மீனவர்​கள் 7 பேரை இலங்கை கடற்​படை​யினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து 200 விசைப்​படகு​களில் 1,500-க்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் நேற்று முன்தினம் கடலுக்​குச் சென்​றனர். இதில் ஆரோக்​கியடேனியல் என்​பவருக்​குச் சொந்​த​மான விசைப்​படகில் பெரிக், சீனு, சசிக்​ கு​மார், முக்​கூ​ரான், முத்து சரவணன், காளி​தாஸ், செந்​தில் ஆகிய 7 மீனவர்​கள் பாக் நீரிணை கடல் பகு​தி​யில் தலைமன்​னார் அருகே மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர். நேற்று அதி​காலை அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை​யினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்​த​தாகக் கூறி 7 மீனவர்​களையும் கைது செய்​தனர். பின்​னர், சிறைபிடிக்​கப்​பட்ட 7 மீனவர்​களும் தலைமன்​னார் கடற்​படை முகா​முக்கு கொண்டு செல்​லப்​பட்​டு, அந்​நாட்டு மீன்​வளத் துறை​யினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டனர். தொடர்ந்து அவர்​கள் மன்​னார் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டு, வவுனியா சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். கடந்த 3 நாட்​களில் மட்​டும் ராமேசுவரத்​தைச் சேர்ந்த 2 விசைப்​படகு​களை கைப்​பற்​றிய இலங்கை கடற்படை​யினர்,…

Read More

கோவை: காவல் நிலைய மரணங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெறும் மதிமுக மண்டலக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி இன்று (ஜூலை 1) காலை விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், தொடர்புடைய காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய இயக்கம் குறைந்தபட்ச அங்கீகாரம் பெற வேண்டும். அந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு குறிப்பிட்ட சீட்டை பெற வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. ஆனால், இறுதி முடிவு எடுப்பது இயக்கத்தின் தலைமை தான். ரயில்வே துறையில் கட்டண உயர்வை ரத்து செய்ய…

Read More

உடற்தகுதி என்பது தசைகள் அல்லது நீண்ட டிரெட்மில் அமர்வுகள் பற்றியது. உண்மையான வலிமை அடிப்படை ஒருமைப்பாட்டில் உள்ளது, ஐந்து கூறுகள் (பூமி, நீர், நெருப்பு, காற்று, இடம்) எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன.நவீன உடற்பயிற்சி பெரும்பாலும் தசை வலிமை அல்லது இருதய சகிப்புத்தன்மையில் கவனம் செலுத்துகிறது. ஆனால் உண்மையான நல்வாழ்வு உடலுக்குள் உள்ள உறுப்புகளை சீரமைப்பதன் மூலம் வருகிறது என்பதை சத்குரு வலியுறுத்துகிறார். இது வலுவாக இருப்பதைப் பற்றியது அல்ல, இது உள்நாட்டில் சீரான மற்றும் நெகிழ்ச்சியுடன் இருப்பது பற்றியது.தொடங்குவதற்கான எளிய வழிகள்:ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் மண் அல்லது புல் மீது வெறுங்காலுடன் நடந்து செல்லுங்கள்.இயற்கையான கூறுகள், சூரிய ஒளி, காற்று, மழை, அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உடலை அம்பலப்படுத்துங்கள்.அங்கம்தானா அல்லது யுபிஏ-யோகாவைப் பயிற்சி செய்யுங்கள், இதற்கு எந்த உபகரணங்களும் தேவையில்லை மற்றும் உடல் நெகிழ்வுத்தன்மை, உறுப்பு ஆரோக்கியம் மற்றும் மன விழிப்புணர்வை மேம்படுத்துகிறது.இந்த அடிப்படை இணைப்பு நோய்…

Read More

சென்னை: தமிழகத்​தில் தொழில், வணிக நிறு​வனங்​களுக்​கான மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்​தது. தமிழக மின்சார ஒழுங்​கு​முறை ஆணைய உத்​தர​வுப்​படி, தமிழகத்​தில் வீட்டு மின்​நுகர்​வோரைத் தவிர தொழிற்​சாலை, வணிக நிறுவனங்கள் உள்​ளிட்ட அனைத்து பிரிவு​களுக்​கும் மின் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. அதன்​படி, அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களில் உள்ள லிஃப்ட், உடற்​ப​யிற்​சிக் கூடம் போன்​றவற்றை உள்​ளடக்​கிய பொது சேவை பிரிவுக்கு யூனிட் ரூ.8.55-இல் இருந்து ரூ.8.80-ஆக உயர்த்​தப்​பட்டு உள்​ளது. குடிசை தொழில், குறுந்​தொழில்​களுக்​கு, 500 யூனிட் வரை யூனிட் ரூ.4.80-ல் இருந்து ரூ.4.95-ஆக​வும்; 500 யூனிட்​டுக்கு மேல் ரூ.6.95-ல் ரூ.7.15-ஆக​வும் அதி​கரித்​துள்​ளது. விசைத்​தறிக்கு 500 யூனிட் வரை ரூ.6.95-ல் இருந்து ரூ.7.15-ஆக​ அதி​கரித்​துள்​ளது. தொழிற்​சாலைகள், தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​களுக்கு யூனிட்​டுக்கு ரூ.8-ல் இருந்து ரூ.8.25-ஆக உயர்த்​தப்​பட்டு உள்​ளது. தற்​காலிக மின் இணைப்பு கட்​ட​ணம் யூனிட்​டுக்கு ரூ.12.85-ல் இருந்து ரூ.13.25-ஆக உயர்ந்​துள்​ளது. மின்​கட்டண உயர்வு குறித்து அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் வீடு​கள்…

Read More