சென்னை: பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா.அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இரா.அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை. அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின்…
Author: admin
சாக்லேட் பல நூற்றாண்டுகளாக ஒரு பிரியமான விருந்தாக இருந்து வருகிறது, அதன் பணக்கார சுவைக்காக மட்டுமல்லாமல், சமையல் மற்றும் பேக்கிங்கில் அதன் பல்திறமுக்காகவும் மதிக்கப்படுகிறது. கிளாசிக் ஜோடிகள் முதல் தைரியமான மற்றும் புதுமையான படைப்புகள் வரை, சாக்லேட்டின் அசாதாரண சுவை உலகெங்கிலும் உள்ள மக்களை வசீகரிக்கிறது. இது கிரீமி பால் சாக்லேட், தீவிரமான இருண்ட சாக்லேட் அல்லது பழங்கள், கொட்டைகள் அல்லது மசாலாப் பொருட்களால் உட்செலுத்தப்பட்ட வகைகளாக இருந்தாலும், அதன் முறையீடு மறுக்க முடியாதது. சாக்லேட் ஆறுதல், மகிழ்ச்சி மற்றும் திருப்தியைக் கொண்டுவருகிறது, இது ஒரு காலமற்ற விருந்தாக அமைகிறது. அதன் மாறுபட்ட அமைப்புகளும் சுவைகளும் எல்லோரும் ரசிக்க ஏதாவது இருப்பதை உறுதி செய்கின்றன. ஒரு சமையல் பிரதான மற்றும் கொண்டாட்டத்தின் அடையாளமாக, சாக்லேட் ஒரு விருப்பமான மகிழ்ச்சியாக உள்ளது4 கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும் கவர்ச்சியான சாக்லேட் சுவைகள்உலகெங்கிலும் உள்ள சாக்லேட்டியர்ஸ் அவர்களின் பிராந்தியத்தின் சமையல் அடையாளத்தை வெளிப்படுத்தும் தனித்துவமான…
புதுடெல்லி: ஐந்து நாடுகளுக்கான தனது பயணத்தை இன்று தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை கானா அதிபரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்லும் வழியில் கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று முதல் 9-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை புறப்பட்டுச் சென்றார். இன்று மாலை அவர் கானா சென்றடைகிறார். கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா தலைவர்களுடன் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் சுகாதாரம் உட்பட பல துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 17-வது உச்சி மாநாடு…
வாஷிங்டன்: மானியத்தை ரத்து செய்தால் எலான் மஸ்க் தான் பிறந்த தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பிச் செல்ல நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக, டொனால்டு ட்ரம்ப் 2-வது முறையாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். இதையடுத்து, அரசின் செலவினங்களை குறைப்பதற்காக தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறையை (டிஓஜிஇ) உருவாக்கினார். அரசு ஊழியர்களை குறைப்பது, மானிய ரத்து உட்பட செலவு குறைப்பு தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை ட்ரம்ப் நிர்வாகத்துக்கு டிஓஜிஇ வழங்கி வந்தது. இதனிடையே, அரசின் ‘ஒன் பிக் பியூட்டிபுள் பில்’ மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நிறுவனங்களுக்கான மானியம் ரத்து உட்பட செலவு குறைப்பு தொடர்பாக டிஓஜிஇ பரிந்துரை செய்த அம்சங்கள் இடம்பெறவில்லை. குறிப்பாக, வரி குறைப்பு, சிறிய அளவில் செலவினங்களை குறைத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன. இதனால் அதிருப்தி அடைந்த மஸ்க், கடந்த மே மாத இறுதியில்…
சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்ற ‘மருத்துவர் தினம் 2025’ நிகழ்வில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவத் துறையில் மகத்தான பணியாற்றிய 50 மருத்துவர்களை பாராட்டி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எழிலன் நாகநாதன், சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் எம்.விஜயலட்சுமி, மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தலைவர் பி.உமா மகேஸ்வரி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநர் தேரணிராஜன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கப்பட்ட ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் இதுவரை 2 கோடியே 28 லட்சம் பேர்…
பல நூற்றாண்டுகளாக, பெண்கள் மாதவிடாய் பிடிப்புகளைத் தணிக்க மூலிகை டீஸுக்கு திரும்பியுள்ளனர். ரெட் ராஸ்பெர்ரி இலை, கெமோமில், மிளகுக்கீரை, இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சி தேநீர் ஆகியவை இயற்கை நிவாரணத்தை வழங்குகின்றன. இந்த டீஸில் தசைகளை தளர்த்தும், வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் சுழற்சியை மேம்படுத்தும் சேர்மங்கள் உள்ளன. இந்த பண்டைய வைத்தியங்கள் மாதவிடாயின் போது வலி மற்றும் அச om கரியத்தை கணிசமாக எளிதாக்கும், வழக்கமான சிகிச்சைகளுக்கு ஆறுதலான மாற்றீட்டை வழங்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாதவிடாய் பிடிப்புகள் நகைச்சுவையாக இல்லை. அவை வேதனையானவை, சோர்வாக இருக்கின்றன, அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும். சூடான நீர் பைகள் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் தற்காலிக நிவாரணத்தை வழங்கக்கூடும், அது எப்போதும் போதாது, குறிப்பாக நீண்ட காலத்திற்கு. பல நூற்றாண்டுகளாக, பெண்கள் மாதவிடாய் பிடிப்புகளை எளிதாக்க மூலிகை டீஸை நம்பியுள்ளனர். சரி, அவர்கள் உண்மையில் வேலை செய்கிறார்கள். மாதவிடாய் பிடிப்புகளிலிருந்து வலியைப் போக்க உதவும் ஐந்து…
வெலிங்டன்: பில்லியனர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆதரவுடன் ஒரு செயற்கைக்கோள் ஒரு முக்கியமான காலநிலை மாற்றப் பணியை மேற்கொண்டபோது விண்வெளியில் இழந்துவிட்டதாக நியூசிலாந்து அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வை “முன்னோடியில்லாத தீர்மானம்” மூலம் அளவிட வடிவமைக்கப்பட்டுள்ளது, மெத்தனசாட் விண்வெளி ஆய்வுக்கு வெலிங்டன் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் நிதியளித்தது. தொழில்நுட்ப சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் சமீபத்தில் அதன் பூமிக்கு கட்டுப்பட்ட கட்டுப்படுத்திகளுக்கு பதிலளிப்பதை நிறுத்தியது. “தெளிவாக, இது ஒரு ஏமாற்றமளிக்கும் வளர்ச்சி” என்று நியூசிலாந்து விண்வெளி ஏஜென்சியின் மூத்த அதிகாரி ஆண்ட்ரூ ஜான்சன் கூறினார். “விண்வெளித் துறையில் பணிபுரிபவர்கள் அறிந்திருப்பதைப் போல, இடம் இயல்பாகவே சவாலானது, மேலும் ஒவ்வொரு முயற்சியும், வெற்றிகரமாக அல்லது இல்லாவிட்டாலும், நமக்குத் தெரிந்தவற்றின் எல்லைகளைத் தள்ளுகிறது, நாம் எதைச் செய்ய முடியும்.” இந்த திட்டத்தை வழிநடத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி, இது “கடினமான செய்தி” என்று கூறியது, ஆனால் அதன்…
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு நேற்று முதல் எரிபொருள் வழங்கப்படவில்லை. தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதில் வாகனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பழமையான வாகனங்கள் டெல்லியில் இயக்கப்படுவதை தடுத்து நிறுத்த காற்றுத் தர மேலாண்மை ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்கள் ஆயுள் முடிந்தவையாக கருதப்பட்டு அவைகள் தேசிய தலைநகர் மண்டலத்தில் (என்சிஆர்) இயக்கப்படுவதை தடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து இந்த உத்தரவு டெல்லியில் நேற்று முதல் அமலுக்கு வந்தது. டெல்லியில் உள்ள 498 எரிபொருள் நிலையங்களில் தானியங்கி நம்பர்பிளேட் அடையாள கேமிராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமிராக்களில் வாகனங்களின் தரவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. இது வாகனத்தின் பதிவு எண்ணை சரிபார்த்து எரிபொருள் நிலையங்களுக்கு…
வாஷிங்டன்: ‘காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார் இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “எனது பிரதிநிதிகள் இன்று காசா தொடர்பாக இஸ்ரேலியர்களுடன் பயனுள்ள சந்திப்பை நடத்தினர். காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது, அதே நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். போர்நிறுத்தம் ஏற்பட கடுமையாக உழைத்த கத்தார் மற்றும் எகிப்தியர்கள், இதற்கான இறுதி திட்டத்தை வழங்குவார்கள். மத்திய கிழக்கின் நன்மைக்காக, ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இல்லையெனில் நிலைமை சிறப்பாக மாறாது, மோசமாகிவிடும்.” என்று கூறி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஹமாஸை எச்சரித்தார். காசா போர் நிறுத்தம்,…
சென்னை: தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 பேருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தெரு நாய்கள், வளர்ப்புப் பிராணிகள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்கு ரேபிஸ் தடுப்பூசி உள்ளது. ஆனால் தெரு நாய்களுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் தடுப்பூசி முறையாக செலுத்தப்படாததால், மனிதர்களை நாய்கள் கடிக்கும்போது ரேபிஸ் தொற்று ஏற்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் நாய்க்கடியால் 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 40 பேர் ரேபிஸ் தொற்றால் இறந்துள்ளனர். இந்த ஆண்டில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் வரை நாய்க்கடி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நாய்க்கடிக்கு உள்ளானவர்களில் சிலர் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல், காலதாமதமாக சிகிச்சை பெற்றதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய்க்கடியால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டாலும், அனைவருக்கும் ரேபிஸ்…
