Author: admin

சென்னை: ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு தற்போது முன்பதிவு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதனால், கடைசி நேரத்தில் பயணச்சீட்டு உறுதியாகாத நிலையில், பயணத்தை மாற்றியமைக்க பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, 8 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு அட்டவணையை வெளியிட வேண்டும் என்ற ரயில்வே வாரிய பரிந்துரையை செயல்படுத்துமாறு துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, முன்பதிவு அட்டவணை தயாரிப்பு குறித்த விவரத்தை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகாலை 5 முதல் பிற்பகல் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முதல் முன்பதிவு அட்டவணை, முந்தைய நாள் இரவு 9 மணிக்கு தயாரிக்கப்படும். பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக முதல் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்.

Read More

சென்னை: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், அவற்றின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொதுநுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டில் இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு கடந்த மே 13 முதல் ஜூன் 4-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது. இந்நிலையில், க்யூட் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண்கள் அல்லது cuet-ug@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். தேர்வு முடிவுகள் ஜூலை 4ம் தேதி (நாளை) வெளியாகும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

Read More

சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று ஆடவர் பிரிவில் நடைபெற்ற ஆட்டங்களில் எஸ்ஆர்எம் அகாடமி 25-20, 21-25, 25-17 என்ற செட் கணக்கில் அண்ணா திருமயம் அணியை தோற்கடித்தது. எஸ்ஆர்எம் ஐஎஸ்டி 23-25, 25-21, 26-24 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கி அணியையும், 25-19, 23-25, 25-12 என்ற செட் கணக்கில் தமிழ்நாடு காவல்துறை அணியையும் வீழ்த்தின. சென்னை ஐசிஎஃப் 26-24, 25-23 என்ற செட் கணக்கில் தளபதி நற்பணி மன்றம் அணியையும் வீழ்த்தின. மகளிர் பிரிவில் எம்ஓபி வைஷ்ணவா 25-23,25-20 என்ற செட் கணக்கில் ஒசூர் தங்கவேல் அணியை தோற்கடித்தது

Read More

கோவை: “எத்தனை நாடகங்கள் நடத்தினாலும் திருபுவனம் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட வழக்கில் ஏமாற்ற முடியாது. முழு உண்மை வெளிவர வேண்டும்,” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியதில், சிவகங்கை மாவட்டம், திருபுவனம் கோயில் காவலாளி அஜித்குமார் (27) உயிரிழந்துள்ளார். இது ஒரு கொலை என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த 2020 ஜூன் 22-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ‘லாக் அப் மர்ம மரணங்களுக்கு, உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும்’ மக்களாட்சியா? அல்லது திரைமறைவு போலீஸ் ஆட்சியா? என கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், தற்போது திருபுவனம் கோயில் காவலாளி…

Read More

சென்னை: குற்றங்களைக் கண்டுபிடிக்க ஒருவரது தொலைபேசி உரையாடல்கள், தகவல்களை ஒட்டுக் கேட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கிஷோர் என்பவரின் தொலைபேசி உரையாடல்கள், தகவல்களை ஒட்டுக்கேட்க சிபிஐ-க்கு அதிகாரம் வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம், 2011-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கிஷோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டப்படி நியாயப்படுத்தாத வரை, தனி நபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது அந்தரங்க உரிமைக்கு விரோதமானது. எனவே, குற்றச் செயல்களை கண்டுபிடிப்பதற்காக ரகசியமாக ஒட்டுக்கேட்பது அனுமதிக்கத்தக்கதல்ல எனக் கூறி, கிஷோரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க அதிகாரம் வழங்கி உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், பொது பாதுகாப்பு மற்றும்…

Read More

சிவகாசி: பட்டாசு தொழிலாளர்களுக்கு உற்பத்தி குறித்த நேரடி செயல்முறை பயிற்சியும், வேதிப் பொருட்களின் விளைவு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்த தொழிலக பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என டான்பாமா பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) அலுவலகத்தில் அதன் தலைவர் கணேசன், காளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் உரிமையாளர் ஏ.பி.செல்வராஜன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “பட்டாசு தொழிலில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் டான்பாமா சார்பில் பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மூலப் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் பேரியம் நைட்ரேட்டுக்கு மாற்றாக வழங்கும் வீரியம் அதிகமுள்ள இறக்குமதி செய்யப்பட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்துவது விபத்துக்கு காரணமாக உள்ளது. வேதிப்பொருள் கலவை மற்றும் பில்லிங் செய்யும்…

Read More

ரெட்மாண்ட்: உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த அறிவிப்பை ஊழியர்களுக்கு தற்போது தெரிவித்து வருகிறது அந்நிறுவனம். மென்பொருள் கட்டமைப்பு, கம்ப்யூட்டர் ஹார்டுவேர், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ், சோஷியல் நெட்வொர்க்கிங் சேவை, கிளவுட் கம்யூட்டிங், வீடியோ கேம்ஸ், இன்டர்நெட் என பல்வேறு சேவைகளை உலகம் முழுவதும் வழங்கி வருகிறது மைக்ரோசாப்ட். இந்நிறுவனத்தின் விண்டோஸ், மைக்ரோசாப்ட் 365 பிராண்டுகள் உலக முழுவதும் மிக பிரபலம். கணினியை இயக்குவதற்கான இயங்குதளமாக விண்டோஸ் உள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை இப்போது கையில் எடுத்துள்ளது மைக்ரோசாப்ட். உலக அளவில் பணியில் உள்ள மொத்த ஊழியர்களில் சுமார் 4 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. அண்மைய தகவலின்படி சுமார் 2.20+ லட்சம் ஊழியர்கள் முழுநேரமாக அந்நிறுவனத்தில் பணியில் உள்ளனர். அவர்களில் 4 சதவீதம்…

Read More

ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவைப் பராமரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு மிக முக்கியமானது, ஏனெனில் உயர்ந்த அளவுகள் நீரிழிவு அல்லது முன்கூட்டியவை குறிக்கும். காலப்போக்கில், சரிபார்க்கப்படாத உயர் இரத்த சர்க்கரை இதய நோய், சிறுநீரக பாதிப்பு மற்றும் நரம்பு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். சோர்வு, தாகம், மங்கலான பார்வை, மெதுவான குணப்படுத்துதல் மற்றும் விவரிக்கப்படாத எடை இழப்பு போன்ற ஆரம்ப அறிகுறிகளை அங்கீகரிப்பது சரியான நேரத்தில் தலையீடு மற்றும் நிர்வாகத்திற்கு முக்கியமானது. இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பது ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது. உயர் இரத்த சர்க்கரை, அல்லது ஹைப்பர் கிளைசீமியா, நீரிழிவு மற்றும் ப்ரீடியாபயாட்டிகளின் முக்கிய குறிகாட்டியாகும், இது உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உயர் இரத்த சர்க்கரை இதய நோய், சிறுநீரக பாதிப்பு மற்றும் நரம்பு பிரச்சினைகள் உள்ளிட்ட கடுமையான சுகாதார சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அதனால்தான் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரிப்பது மிக முக்கியம். உயர் இரத்த சர்க்கரையின்…

Read More

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக திமுக பெண் நிர்வாகி மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை காரியநாயனார் தெரு எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்தவர் முருகன் மனைவி சாவித்திரி ( 67). வீட்டு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது 2-வது மகன் சதீஷ்குமார் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். சதீஷ்குமாருக்கு திருநெல்வேலி மாநகராட்சியில் எலக்ட்ரீஷியன் வேலை வாங்கி தருவதாக கூறி சாவித்திரியிடம் பாளையங்கோட்டையில் வசித்து வரும் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பெண் நிர்வாகி ஒருவர் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சாவித்திரி புகார் மனு அளித்தார். அதில் அவர், “எனது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக திமுக பெண் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். மேலும், எங்கள் வீட்டுக்கு வந்து மாநகராட்சியில் வேலை கிடைத்தால்…

Read More

அக்ரா: ஐந்து நாடுகளுக்கான தனது பயணத்தை புதன்கிழமை (ஜூலை 2) தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, கானா நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அதிபர் ஜான் டிராமணி மஹாமா, கானா மக்கள் மற்றும் அங்கு வசித்து வரும் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜூலை 2 முதல் 9-ம் தேதி வரையில் கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டி​னா, பிரேசில் மற்​றும் நமீபியா என ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. இதன்படி அவர் புதன்கிழமை மாலை ஆப்பிரிக்க தேசமான கானாவை அடைந்தார். இந்த பயணத்தில் கானா மற்றும் இந்தியாவுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மேலும், பிரதமர் மோடி வியாழக்கிழமை (ஜூலை 3) அன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அதன் பின்னர் அங்கிருந்து டிரினி​டாட் & டொபாகோ செல்கிறார். பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: பிரதமர் மோடி விமானம் மூலம் கானா சென்றடைந்தார். அங்கு அந்நாட்டின்…

Read More