Author: admin

சென்னை: ​பார் கவுன்​சில், மெடிக்​கல் கவுன்​சில் போன்ற இந்​தி​யா​வில் உள்ள முக்​கிய அமைப்​பு​களில் மாற்​றுத்​திற​னாளி​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கும் வகை​யில் மத்​திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சென்னை உயர் நீதி மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் பி.ரமேஷ்​பாபு தாக்​கல் செய்​திருந்த மனு: வழக்​கறிஞர்​களின் முக்​கிய அமைப்​பாக கருதப்​படும் பார் கவுன்​சில் மற்​றும் மருத்​து​வர்​களுக்​கான மெடிக்​கல் கவுன்​சில், டெண்​டல் கவுன்​சில், பார்​மசி கவுன்​சில் போன்ற இந்​தி​யா​வில் உள்ள பிர​தான அமைப்​பு​களின் நிர்​வாகத்​தில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கப்​பட​வில்​லை. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாற்​றுத் திற​னாளி​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்க சம்​பந்​தப்​பட்ட அமைப்​பு​களுக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கோரி​யிருந்​தார். இந்த மனு மீதான விசா​ரணை ஏற்​கெனவே நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் ஏ.மனோஜ்கு​மார் ஆஜராகி மாற்​றுத் திற​னாளி​கள் சட்​டத்​தின்​படி அவர்​களுக்கு இந்​தி​யா​வில்…

Read More

சென்னை: அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​கான திருமண முன்​பணம் ரூ.5 லட்​ச​மாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள், அவர்​களின் பிள்​ளை​களுக்​கான திருமண முன்​பணம் அரசால் வழங்​கப்​படு​கிறது. முன்​ன​தாக கடந்த 1989-ம் ஆண்​டு, அரசு ஊழியர் அல்​லது அவரது மகன் திரு​மணத்​துக்கு ரூ.3 ஆயிரம், பெண் ஊழியர் அல்​லது மகள் திரு​மணத்​துக்கு ரூ.5 ஆயிரம் முன்​பண​மாக வழங்​கப்​பட்​டது. அதன்​பின், 1995-ல் இத்​தொகை ரூ.6 ஆயிரம் மற்​றும் 10 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், சட்​டப்​பேர​வை​யில் கடந்த பட்​ஜெட் கூட்​டத்​ தொடரில் 110 விதி​யின்​கீழ் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ‘‘அரசுப் பணியாளர்கள் மற்​றும் ஆசிரியர்​கள் தமது பணிக்​காலத்​தில் தேவை​யின் அடிப்​படை​யில் திருமண முன்​பண​மாக இது​வரை பெண் ஊழியர்​களுக்கு ரூ.10 ஆயிரம் மற்​றும் ஆண்​களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்​கப்​படு​கிறது. இதனை பல மடங்கு உயர்த்தி அரசு அலு​கள், ஆசிரியர்​கள் அனை​வருக்​ககும் பொது​வாக ரூ.5 லட்​ச​மாக உயர்த்தி வழங்​கப்​படும்’’ என அறி​வித்​தார். இதன்​படி, திருமண முன்​பணத்தை ரூ.5 லட்​ச​மாக உயர்த்தி…

Read More

திருச்சி மாவட்ட திமுக என்றால் அது நேரு தான் என்ற பிம்பமே இன்றளவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. தலைமைக் கழகத்தில் முதன்மைச் செயலாளராக பதவி உயர்வுபெற்றுவிட்டாலும் சொந்த மாவட்டமான திருச்சி அரசியலை இன்னமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் நேரு. ஆனால், அவரின்றி திருச்சி திமுக-வில் எதுவும் அத்தனை எளிதில் அசைந்துவிடாது என்று தெரிந்தும் மாவட்ட திமுக எம்எல்ஏ-க்கள் இருவர் நேருவுக்கு எதிராக தங்களது மனக்குமுறலை பொதுவெளியில் பகிரங்கமாக போட்டுடைத்து வருகிறார்கள். நேரு​வின் சொந்த ஊரை உள்​ளடக்​கிய லால்​குடி தொகு​திக்கு எம்​எல் ஏ-வாக இருக்​கும் சவுந்​தர​பாண்​டியன், “எனது தொகு​திக்​குள் நடக்​கும் நிகழ்ச்​சிகளுக்கு கூட அதி​காரி​கள் என்னை அழைக்​கப் பயப்​படு​கி​றார்​கள். அதற்​குக் காரணம் அமைச்​சர் நேரு” என முகநூலில் முன்பு ஆதங்​கப்​பட்​டார். இந்​தப் பஞ்​சா​யத்து அறி​வால​யம் வரைக்​கும் போய் சமா​தானம் செய்​து​வைக்​கப்​பட்ட பிறகும் சவுந்​தர​பாண்​டியன் – நேரு சச்​சர​வு​கள் முடிவுக்கு வந்​த​பாடில்​லை. அண்​மை​யில், தனது மகன் திரு​மணத்தை நடத்தி வைக்க முதல்​வர் ஸ்டா​லினிடம் தேதி வாங்​கித்…

Read More

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பின் புதன்கிழமை காலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பூக்குழி திருவிழா 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோயில் கடந்த 1997-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு கோயில் திருப்பணிகள் தொடங்கியது. முழுவதும் உபயதாரர்கள் நிதியில் புதிய கொடிமரம், தேர் சீரமைப்பு மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றது. ஜூன் 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. கடந்த 3 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று…

Read More

சென்னை: தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே வெடித்து தீயை அணைக்கும் வகையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பந்து வடிவிலான நவீன தீயணைப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் டிஜிபி அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த கருவி பொருத்தப்பட உள்ளது. சென்னை காவல் ஆணையரகத்தின் தலைமை அலுவலகம் வேப்பேரியில் 8 தளங்களுடன் உள்ளது. தரை தளத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை தினங்கள் தவிர தினமும் காவல் ஆணையர் தரப்பில் பெற்றுக் கொள்ளப்படுகிறது. மற்ற தளங்களில் சைபர் க்ரைம், மத்திய குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல், போலீஸ் அதிகாரிகளுக்கான நூற்றுக்கணக்கான அறைகள் உள்ளன. 8-வது தளத்​தில் காவல் ஆணை​யர் மற்​றும் கூடு​தல் ஆணை​யர்​களுக்​கென தனித்​தனி அலு​வல​கம் உள்​ளது. காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீ​ஸார் பணிபுரி​கின்​றனர். இது​போக அமைச்​சுப் பணி​யாளர்​களும் பணி​யாற்​றுகின்​றனர். பல்​வேறு வழக்கு தொடர்​பான முக்​கிய​மான ஆவணங்​களும்…

Read More

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா நிதானமாக ஆடி 310 ரன்கள் எடுத்துள்ளது கேப்டன் ஷுப்மன் கில் சதம் பதிவு செய்தார். பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் களமிறங்கினார். அதேவேளையில் சாய் சுதர்சன், ஷர்துல் தாக்குர் ஆகியோர் நீக்கப்பட்டு நித்திஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. ரன்கள் சேர்க்க தடுமாறிய கே.எல்.ராகுல் 26 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் போல்டானார். ஆஃப் ஸ்டெம்புக்கு…

Read More

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘சிவ சிவ’ முழக்கத்துடன் நடராஜ பெருமானை தரிசித்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ நிகழ்வு கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 30-ம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு ரதஙகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இரவு தேரில் இருந்து மேள​தாளம் முழங்க கோயிலுக்கு வந்த ஸ்ரீ சிவ​காமசுந்​தரி அம்​பாள் சமேத நடராஜ மூர்த்​திக்கு ஏககால லட்​சார்ச்​சனை நடை​பெற்​றது. இதைத்​தொடர்ந்து முக்​கிய திரு​விழா​வான ஆனித் திரு​மஞ்சன தரிசன விழா நேற்று நடை​பெற்​றது. அதி​காலை 4 மணி தொடங்கி 6 மணி வரை ஆயிரங்​கால் மண்டப முகப்பு பகு​தி​யில் சுவாமிக்​கும் அம்​பாளுக்​கும் மகா அபிஷேகம் நடை​பெற்​றது. காலை 10 மணிக்கு சித்​சபை​யில் ரகசிய பூஜை​யும்,…

Read More

தீபாவளி, பொங்கல் என்றால் ஒருசில திமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு அன்பளிப்பு கொடுத்து அசத்துவார்கள். அதுவும் ஆளும் கட்சியாக இருந்துவிட்டால் இந்தக் ‘கவனிப்பு’ கொஞ்சம் தாராளமாகவே இருக்கும். ஆனால், இப்போது தீபாவளியும் இல்லை… பொங்கலும் இல்லை. ஆனலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள கிளைக் கழக நிர்வாகிகள் தொடங்கி அத்தனை பேருக்கும் ரூபாய் ஐயாயிரத்தில் தொடங்கி அன்பளிப்புகளை தந்து அசத்திக் கொண்டிருக்கிறார் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அண்ணாச்சி. 2021 தேர்​தலில் விருதுநகர் மாவட்​டத்​தில் ஸ்ரீவில்​லிபுத்​தூர் தொகு​தி​யைத் தவிர்த்து மற்ற 6 தொகு​தி​களை​யும் திமுக கூட்​டணி கைப்​பற்​றியது. ஸ்ரீவில்​லிபுத்​தூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட காங்​கிரஸ் வேட்​பாளர் வாக்​குப் பதிவுக்கு சில தினங்​களுக்கு முன்​ன​தாக திடீரென கால​மான நிலை​யில், அந்​தத் தொகு​தியை அதி​முக கைப்​பற்​றியது. இந்​தத் தொகு​தி​யில் அதி​முக வென்​றது அண்​ணாச்​சி​யின் அரசி​யல் சாணக்​கி​யத்​துக்கே சவாலாக அமைந்​தது. இந்த நிலை​யில், கடந்த நவம்​பரில் விருதுநகருக்கு அரசு நிகழ்ச்​சிக்​காக வருகை…

Read More

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 3-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 48-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் மேரி பவுஸ்கோவாவை எதிர்த்து விளையாடினார். இதில் அரினா சபலெங்கா 7-6(7-4), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில்37-ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் ஓல்கா டானி லோவிக்கை தோற்கடித்தார். 22-ம் நிலை வீராங்​க​னை​யான குரோஷி​யா​வின் டோனா வெகிக் 1-6, 3-6 என்ற செட் கணக்​கில் ஸ்பெ​யினின் 102-ம் நிலை வீராங்​க​னை​யான கிறிஸ்​டினா புக்​சா​விடம் தோல்வி அடைந்​தார். இதே போன்று 29-ம் நிலை வீராங்​க​னை​யான கனடா​வின்…

Read More

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைபேட்டை அருகே அதிமுக சார்பில் இன்று (ஜூலை 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில், “யார் தனிப்படை விசாரணைக்கு உத்தரவிட்டது?” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார். அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், காவலாளி அஜித்குமாரின் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழக அரசு காவல் துறையைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியது: “திமுக பிரமுகர் காரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஏற்றிச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது? இதை கண்டித்து அன்றைய தினம் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அஜித்குமாரின் தாய் நீதி கேட்கிறார். நீதி கேட்பது தேசக் குற்றமா? மாவட்டக் கண்காணிப்பாளர் ஏன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்? உண்மை நிலவரம் முதல்வருக்கு தெரிந்துவிட்டது. அதனால் மாவட்டக்…

Read More