புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து வேறு யாருக்கும் இல்லை” என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அடுத்த தலாய் லாமா யார் என்பதை முடிவு செய்யும் விவகாரத்தைப் பொறுத்தவரை, அதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பு மற்றும் தலாய் லாமாவின் விருப்பம் ஆகியவற்றின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றே தலாய் லாமாவைப் பின்பற்றும் அனைவரும் நினைக்கிறார்கள். தலாய் லாமாவையும், நடைமுறையில் உள்ள மரபுகளையும் தவிர வேறு யாருக்கும் அதைத் தீர்மானிக்கும் உரிமை இல்லை” என்று தெரிவித்துள்ளார். தலாய் லாமா அறிவிப்பும், சீனா தலையீடும்: இந்தியாவில் தஞ்சமடைந்து தரம்சாலாவில் வாழ்ந்து வரும் 14-வது தலாய் லாமா தனது 90-வது பிறந்தநாளையொட்டி வெளியிட்ட அறிவிப்பில், 600 ஆண்டுகள் பழமையான…
Author: admin
நேற்றைய இங்கிலாந்து பந்து வீச்சில் ஒருவரையும் குறை கூற முடியாது என்றாலும் சிறந்த முறையில் வீசியவர் யார் என்று தேர்வு செய்யச் சொன்னால் கிறிஸ் வோக்ஸ் என்று சொல்லலாம். 2 விக்கெட்டுகளை அவர் 59 ரன்களுக்கு வீழ்த்தினார். ஆனால் அவருக்கு ஓர் ஆதங்கம். ஜெய்ஸ்வாலுக்கும் கருண் நாயருக்கும் எல்.பி.டபிள்யூக்கள் ‘அம்பயர்ஸ் கால்’ ஆகவில்லை எனில் இந்திய அணியின் பாடு திண்டாட்டமாயிருக்கும் எங்கள் பாடு கொண்டாட்டமாயிருக்கும் என்ற தொனியில் சூசகமாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸில் கூறும்போது, “அந்த இரண்டு விக்கெட்டுகளும் எங்களுக்குச் சாதகமாக அமைந்திருந்தால் அதாவது களநடுவர் எல்.பி. கொடுத்திருந்தால் அம்பயர்ஸ் காலில் ஜெய்ஸ்வால், கருண் நாயர் தப்பியிருக்க முடியாது. 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்றால் எங்களுக்குச் சாதகமாக டெஸ்ட் இன்னும் வலுப்பட்டிருக்கும். முதல் நாளே வேறு மாதிரி அமைந்திருக்கும். நாங்கள் எங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்தோம், உணவு இடைவேளைக்குப் பிறகு பிட்ச் ஃபிளாட்டாக மாறி விட்டது.…
செல்வராகவன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் புதிய படம் ஒன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தினை விஜயா சதீஷ் வழங்க, ‘Vyom என்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதில் குஷி ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், மைம் கோபி, கெளசல்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக ரவி வர்மா, எடிட்டராக தீப், இசையமைப்பாளராக ஏ.கே.பிரியன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சேலத்தில் துவங்குகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: “சேலத்தில் நடந்த செம்மண் கடத்தலை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளரை கடுமையாக தாக்கி, கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய மணல் கொள்ளை ரவுடிகளை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கு வேண்டும்.” என்று தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகம் முழுக்க நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும். மணல் கொள்ளையர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்து, அவர்களின் சொத்துக்களை சட்டரீதியாக கையகப்படுத்தி மணல் கொள்ளைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சேலம்,வெள்ளியம் பட்டி பகுதியில் நடந்த செம்மண் கடத்தலை படம் பிடிக்க சென்ற செய்தியாளரை கடுமையாக தாக்கி, கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி கேமராவை பிடுங்கி வயரை அறுத்து அட்டூழியம் செய்துள்ள மணல் கொள்ளை ரவுடிகளை உடனடியாக தமிழக அரசு கைது செய்து அவர்கள்…
கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா ஒரு சோகமான கார் விபத்தில் இறந்துவிட்டார். அவருக்கு வயது 28.சில வாரங்களுக்கு முன்பு, அவர் அனைவரும் புன்னகைத்திருந்தார்-இடைகழிக்கு ஆளானார், அவரது வாழ்க்கையின் அன்போடு கைகோர்த்துக் கொண்டார். நண்பர்கள் ஆரவாரம் செய்தனர், ஷாம்பெயின் பாப் செய்தார்கள், திருமண மணிகள் ஒலித்தன, டியோகோ ஜோட்டா, போர்த்துகீசியர்கள், களத்தில் அந்த தெளிவற்ற தீப்பொறியுடன் முன்னோக்கி, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர். ஆனால் இப்போது, கால்பந்து உலகம் துக்கத்தில் தள்ளப்பட்டுள்ளது. டியோகோ ஜோட்டா இறந்துவிட்டார் – அது முற்றிலும் உண்மையற்றதாக உணர்கிறது.காட்டுத்தீ போல செய்தி பரவியதால் சமூக ஊடகங்கள் இதய துடிப்பு கடலாக மாறியது. “இது உண்மையல்ல என்று சொல்லுங்கள்” என்று ஒரு ரசிகர் ஜோட்டா கராபாவோ கோப்பையை தூக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டார். மற்றொருவர் எழுதினார், “அவர் இப்போது திருமணம் செய்துகொண்டார், வாழ்க்கை எப்படி நியாயமற்றது?”அது நியாயமற்றது. ஜோட்டா காயங்கள், கடுமையான போட்டி மற்றும் உயரடுக்கு கால்பந்து விளையாடுவதில் வரும் உயர்வுகள்…
அனுஷ்கா நடித்துள்ள ‘காத்தி’ படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ படத்துக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காத்தி’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாவதாக இருந்த படம் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூன் 11-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. தற்போது எந்தவொரு விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்படாத காரணத்தினால், மீண்டும் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது உறுதியாகிறது. இதற்கு படத்தன் கிராபிக்ஸ் பணிகள் முடியாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது. அடுத்த வெளியீடு தேதி எப்போது உள்ளிட்ட விவரங்களை விரைவில் படக்குழு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு நாகவல்லி வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ, அனுஷ்காவின் ஆக்ஷன் சம்பவமாக இந்தப் படம்…
விழுப்புரம்: பாமகவில் இருந்து சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “நகை திருட்டு புகாரில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா மீது மோசடி புகார் உள்ளதாக தெரியவந்துள்ளது. அஜித் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரை கைது செய்துள்ளனர். ஆனால் இதனை ஏவியவர்களை கைது செய்தார்களா?. நிகிதாவின் ஒரு போன் காலுக்கு இவ்வளவு செல்வாக்கு வந்தது எப்படி?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமகவில் இருந்து சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமகவில் நிர்வாகிகளை…
பெற்றோருக்குரியது வாழ்க்கையில் மிகவும் சவாலான, ஆனால் பலனளிக்கும் பாத்திரங்களில் ஒன்றாகும். இருப்பினும், இது ஒரு நேரியல் பாத்திரம் அல்ல, ஒரு அளவு எல்லாவற்றிற்கும் பொருந்தாது. ஒரு பெற்றோருக்கு என்ன வேலை செய்கிறது என்பது வேறு யாருக்கும் வேலை செய்யாது. பொருட்படுத்தாமல், ஒவ்வொரு பெற்றோரும் தனது குழந்தைக்கு சிறந்ததை விரும்புகிறார்கள், இருப்பினும் அவர்களின் நுட்பங்கள் மாறுபடலாம். பல ஆண்டுகளாக, பல “ஆரோக்கியமான” பெற்றோருக்குரிய யோசனைகள் உள்ளன, இருப்பினும் அவை அனைத்தும் இனி குழந்தைகளுடன் வேலை செய்யாது. ஒரு காலத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆனால் வேலை செய்யாத சில பெற்றோருக்குரிய நுட்பங்கள் இங்கே உள்ளன – அதற்கு பதிலாக நவீன பெற்றோர் என்ன செய்ய முடியும்.மொத்த கீழ்ப்படிதல்எங்கள் வளர்ந்து வரும் ஆண்டுகளில், பெற்றோர்கள் பெரும்பாலும் “நான் சொன்னதால்” என்ற சொற்றொடரை வாதங்களை முடிவுக்குக் கொண்டுவந்தனர், குழந்தைகளுடன் கலந்துரையாட இடமில்லை. இந்த அணுகுமுறை அதிகாரத்தை நம்பியிருந்தது (அது மட்டுமே), மேலும் குழந்தைகள் கேள்வியில்லாமல் விதிகளைப் பின்பற்றுவார்கள்…
சென்னை: நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையில் அன்றைய தினம் பெய்த கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்பதால் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நாடு…
சென்னை: அஜித்குமாரை சித்ரவதை செய்யும்படி, காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும், என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விட்டாலும் தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
