பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 85 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 2, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87, கருண் நாயர் 31, ரிஷப் பந்த் 25, நித்திஷ் குமார் ரெட்டி 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷுப்மன்கில் 114, ரவீந்திர ஜடோ 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ஷுப்மன் கில்லும், ஜடேஜாவும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து ரன்கள் சேர்த்தனர். தனது 23-வது அரை சதத்தை கடந்த ஜடேஜா 137 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 89 ரன்கள்…
Author: admin
சென்னை: “7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஏழை மாணவர்களுக்கு புதிய விடுதியை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும். அதுவரை பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கட்டடத்தை சீரமைத்து அங்கு அனைத்து மாணவர்கள் இலவசமாக தங்கவும், அவர்களுக்கு உணவு வசதியை ஏற்படுத்தித் தரவும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று (ஜூலை 3) என்னை நேரில் சந்தித்து, தாங்கள் தங்கும் சட்டக் கல்லூரியில் போதிய விடுதி வசதியின்மை, மோசமான கழிவறை பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதியின்மை குறித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அரசு உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போரட்டத்தை நிறுத்தியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். ஆனால், அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குறிப்பாக இந்தாண்டு சட்டத்துறை மானிய கோரிக்கையின்போது சுமார் 21.50…
நடைபயிற்சி போன்ற ஒரு எளிய செயல்பாடு உயிர் காக்கும் நன்மைகளைக் கொண்டுள்ளது. இது சரியாக செய்யப்பட்டால், உடல் எடையை குறைப்பதற்கும், இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைப்பதற்கும், உங்கள் நினைவகத்தை அதிகரிப்பதற்கும், இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் மற்றும் பலவற்றிற்கான உங்கள் அபாயத்தைக் குறைப்பதற்கும் இது முக்கியமாக இருக்கலாம். வயதான மக்கள் 2050 க்குள் 19.1% ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சுமை கணிசமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையாக, இருதய நோய்கள் (சி.வி.டி) மரணத்திற்கு முக்கிய காரணமாகின்றன. இந்த சூழலில், வழக்கமான நடைபயிற்சி போன்ற வாழ்க்கை முறை தலையீடுகள் டிமென்ஷியா மற்றும் இதய நோய் இரண்டின் அபாயங்களைக் குறைப்பதற்கான எளிய, செலவு குறைந்த உத்திகள், குறிப்பாக இந்தியாவில் வயதானவர்களிடையே வெளிப்படுகின்றன.இந்தியாவில் முதுமை மற்றும் இதய நோய்களைப் புரிந்துகொள்வது இந்தியாவில் தேசிய மருத்துவ அறிவியல் நூலகத்தில் (என்.எல்.எம்) வெளியிடப்பட்ட ஆய்வின்படி, டிமென்ஷியா 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்களில்…
மும்பை: “மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசுவது கட்டாயம். மராத்தி மொழியை அவமதித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அம்மாநில அமைச்சர் யோகேஷ் கதம் எச்சரித்துள்ளார். தானேவின் பயந்தர் பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் இந்தியில் பேச மறுத்து வாக்குவாதம் செய்ததால், அவரை சிலர் தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் சலசலப்பை உருவாக்கியது. மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவை சேர்ந்த நபர்கள், அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நவ நிர்மான் சேனா கட்சியினர் சமீபத்தில் மகாராஷ்டிராவில் மராத்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பல வகைகளில் முன்னெடுப்புகளை நடத்தி வருகின்றனர். இந்த சர்ச்சை குறித்து பேசிய மகாராஷ்டிர அமைச்சர் யோகேஷ் கதம், “மகாராஷ்டிராவில் உள்ளவர்கள் மராத்தி பேச வேண்டும். உங்களுக்கு மராத்தி தெரியாவிட்டால், என்னால் மராத்தி பேச முடியாது என்ற வகையில் உங்கள் அணுகுமுறை இருக்கக் கூடாது. மகாராஷ்டிராவில் யாராவது மராத்தியை…
புதுச்சேரி: புதுச்சேரியில் எஸ்பி மீது பெண் எஸ்ஐ தெரிவித்த பாலியல் புகார் தொடர்பாக பெண் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த அதிமுக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுவையில் சமீபகாலமாக தொடர் தவறினால் காவல் துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர். காவல் துறையில் உச்சகட்ட கோஷ்டி பூசலும், புகார்களும், விரும்பதகாத பல்வேறு நடவடிக்கைகளும் நடக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய பல்வேறு பிரச்சினைகளில் குற்றம் செய்தவர்கள் காப்பாற்றப்படுகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் மீது இடமாற்றம் போன்ற சிறிய அளவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், புதுவையில் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் மீது காவல் துறையின் உள் புகார் குழுவிடம், பெண் உதவி ஆய்வாளர் ஒரு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது. துறை ரீதியாக நடைபெறும் விசாரணை தடையின்றி நேர்மையாக…
மக்கள் அதை ஏன் விரும்புகிறார்கள்:வேரில் முடியை பலப்படுத்துகிறதுவீக்கம் மற்றும் எரிச்சலை அமைதிப்படுத்துகிறதுபொடுகு மற்றும் உலர்ந்த உச்சந்தலையை குறைக்க உதவுகிறதுசாம்பல் மற்றும் முடி மெலிந்ததை கூட மெதுவாக்கலாம்பெரும்பாலான ஸ்கால்ப்களுக்கு பாதுகாப்பானது மற்றும் அடிக்கடி பயன்படுத்த போதுமான மென்மையானதுஎதிர்மறையாக மட்டுமே?இது மெதுவாக எரியும். இரண்டு வாரங்களில் நீங்கள் பைத்தியம் முடிவுகளைக் காண மாட்டீர்கள், ஆனால் அதற்கு இரண்டு மாதங்கள் கொடுங்கள், அது உண்மையில் அதன் மந்திரத்தை வேலை செய்யத் தொடங்குகிறது.இரண்டையும் எவ்வாறு பயன்படுத்துவது (உங்கள் உச்சந்தலையில் அழிக்காமல்)இங்கே ஒப்பந்தம் – நீங்கள் எதற்காகச் சென்றாலும், அத்தியாவசிய எண்ணெய்களை ஒருபோதும் நேரடியாகப் பயன்படுத்த வேண்டாம். ஒரு தேக்கரண்டி கேரியர் எண்ணெயுடன் எப்போதும் சில சொட்டுகளை (2–3 போன்றவை) கலக்கவும்.கலவையை உங்கள் உச்சந்தலையில் 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள் (கொஞ்சம் சுய பாதுகாப்புக்கு பெரும் தவிர்க்கவும்), பின்னர் அதை குறைந்தது ஒரு மணி நேரம் விடுங்கள். உங்கள் உச்சந்தலையில் குளிர்ச்சியாக இருந்தால் நீங்கள் ஒரே இரவில் கூட…
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதாகவும், 40 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேகவெடிப்பு காரணமாக இமாச்சப் பிரதேசத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரின் ஊடக ஆலோசகர் நரேஷ் சவுகான், “மேக வெடிப்புகள் மற்றும் கனமழை பேரிடர்களால் 63 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் காணாமல் போயுள்ளனர்” எனத் தெரிவித்தார். இமாச்சலப் பிரதேசத்தில் இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் அதிகம் நிகழ்வதால், அதை எதிர்கொள்ள மாநில மக்கள் தொகையில் 1 சதவீதம் பேர் சிவில் பாதுகாப்புப் பயிற்சி பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனிடையே, ஜூலை 8-ம் தேதி வரை இமாச்சலில்…
அக்ரா (கானா): “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு வேகமாக மாறி வருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் ஓர் அமைப்பு அல்ல; அது நமது அடிப்படை மதிப்புகளின் ஒரு பகுதி” என்று அவர் குறிப்பிட்டார். இரண்டு நாள் பயணமாக நேற்று கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். நாடாளுமன்ற சபாநாயகர் அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின், இந்த சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார். இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி தனது உரையில், “இந்த மதிப்புமிக்க சபையில் உரையாற்றுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். ஜனநாயகம், கண்ணியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் கானாவில் இருப்பது ஒரு பாக்கியம். உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, 140 கோடி இந்தியர்களின் நல்லெண்ணத்தையும் வாழ்த்துகளையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தைரியத்துடன்…
சென்னை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொலை செய்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜி-க்கு, மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் உத்தரவிட்டுள்ளார். நடந்தது என்ன? – சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூலை 27-ம் தேதி அக்கோயிலுக்கு சாமி கும்பிட மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயாருடன் காரில் வந்தார். திரும்பி…
பெருங்குடல் புற்றுநோய் – பெருங்குடல் அல்லது மலக்குடலில் தொடங்கும் புற்றுநோய், பெயர் குறிப்பிடுவது போல – உலகெங்கிலும் உள்ள மிகவும் பொதுவான வகை புற்றுநோய்களில் ஒன்றாகும். இருப்பினும், ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால், அது மிகவும் சிகிச்சையளிக்கக்கூடியது. ஆனால், பிரச்சனை என்னவென்றால், பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மூல நோய் அல்லது அஜீரணம் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு தவறவிடப்படுகின்றன அல்லது தவறாக கருதப்படுகின்றன. காலப்போக்கில், இந்த அறிகுறிகள் பெரும்பாலும் நிர்வகிக்க முடியாதவை- அவை பெருங்குடல் புற்றுநோயின் அடையாளமாக கண்டறியப்படும்போதுதான், அது சற்று தாமதமாகிவிடும். இது பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வை மிகவும் முக்கியமானது. மேலும், நுட்பமான அறிகுறிகளுக்காக உங்கள் உடலைக் கேட்பதும் மிக முக்கியமானது, ஏனெனில் அவை பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகலாம். எனவே, எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பெருங்குடல் புற்றுநோயின் சில ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
