புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியை காங்கிரஸ் முன்கூட்டியே உணர்ந்து இருப்பதாகவும், அதன் காரணமாகவே அக்கட்சி தேர்தல் ஆணையத்தின் மீது புகார் கூறுவதாகவும் பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் அனுராக் தாக்கூர், “ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. ஒரு நபரின் தலைமையின் கீழ் ஒரு கட்சி 90 முறை தோல்வி அடைந்தது என்றால் அது ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் சந்தித்த தோல்விகள்தான். இந்த தோல்வி ஒரு வரலாறாக மாறி உள்ளதால், ராகுல் காந்தியின் தலைமை குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. காங்கிரஸ் தோல்வி அடையும்போதெல்லாம், ராகுல் காந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை கூறி வந்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக மோசடி செய்ததாக பலமுறை காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்ய வேண்டும் என்றும் மீண்டும்…
Author: admin
சென்னை: சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,100 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், ‘வருகிற 15.08.2025 அன்று 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருணின் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். அதன்பேரில், சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் என்.கண்ணன் (தெற்கு), ஜி.கார்த்திகேயன் (போக்குவரத்து), பிரவேஷ் குமார் (வடக்கு), ஆகியோர் மேற்பார்வையில், காவல் இணை ஆணையாளர்கள்,…
உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டமைப்பு உலகில், ஒரு நாளைக்கு ஆறு சிறிய உணவுகளை சாப்பிடுவது கொழுப்பு இழப்புக்கு அவசியம் மற்றும் தசை ஆதாயத்திற்கு அவசியம் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. வளர்சிதை மாற்றத்தை பராமரிப்பதற்கும் தசையை உருவாக்குவதற்கும் இந்த அடிக்கடி உண்ணும் அட்டவணை மட்டுமே சிறந்த வழி என்று பல ஜிம்-செல்வோர் உறுதியாக நம்புகிறார்கள். இருப்பினும், இந்த யோசனை மிகைப்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், தவறாக வழிநடத்தும், குறிப்பாக ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளும்போது.மரியாதைக்குரிய இருதயநோய் நிபுணரும் செயல்பாட்டு மருத்துவ நிபுணருமான டாக்டர் அலோக் சோப்ரா, உணவு அதிர்வெண் மட்டுமே உடல்நலம் அல்லது கொழுப்பு சேமிப்பை தீர்மானிக்காது என்பதை வலியுறுத்துகிறார். பெரும்பாலும் சாப்பிடுவது உண்மையில் கொழுப்பு திரட்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரிக்கிறார், இது இறுதியில் இன்ஸ்டாகிராம் போட்காஸ்டில் வெளிப்படுத்தப்பட்டபடி இருதய நல்வாழ்வை பாதிக்கிறது.அன்றாட பழக்கவழக்கங்கள் வலுவான மற்றும் ஆரோக்கியமான இதயத்தின் திறவுகோலைக் கொண்டுள்ளனஅன்றாட பழக்கம் உங்கள் இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்இதய ஆரோக்கியத்தைப்…
Last Updated : 13 Aug, 2025 08:07 AM Published : 13 Aug 2025 08:07 AM Last Updated : 13 Aug 2025 08:07 AM ராய்ப்பூர்: கடந்த 2022-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது வீடுகள்தோறும் தேசியக் கொடி ஏற்றும் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். இந்த இயக்கம் ஒவ்வொரு சுதந்திர தின விழாவின்போதும் தேசப்பற்றுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. வரும் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியேற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சூழலில் சத்தீஸ்கர் மாநில வக்பு வாரிய தலைவர் சலீம் ராஜ், மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகளின் நிர்வாகங்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சுதந்திர தின விழாவின்போது சத்தீஸ்கரில் உள்ள அனைத்து மசூதிகள், தர்காக்களில் கண்டிப்பாக தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும். இதற்காக சிறப்பு இணைய…
கடந்த நூற்றாண்டுகளைப் போல இல்லாமல் இந்த நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. இதனால், சில ஆண்டு களிலேயே நாம் கேள்விப்படாத புதிய பணிகள் உருவாகிவிட்டன. சில பணிகள் மறைந்தும் பெரும்பாலான பணிகளின் தன்மைகள் மாறியும் வருகின்றன. புதிய வேலைவாய்ப்புகள்: அலுவலகப் பணிகளைப் பொறுத்தவரை ஒரே தலைமுறையில் டைப்ரைட்டிங் மெஷினில் ஆரம்பித்து டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன், ஏ.ஐ. கருவிகள் என மாறிவிட்டோம். இதிலென்ன ஆச்சரியம், காலந்தோறும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மாற்றங்கள் நிகழ்வது வழக்கம்தானே என நினைக்கலாம். ஆனால், உங்களின் தற்போதைய தொழில்நுட்ப அறிவின் பயன்பாட்டுக் காலம் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், அதற்குள் அதைவிட மேம்பட்ட ஒரு தொழில்நுட்பம் அறிமுகமாகிவிடும். உதாரணமாக, 1874இல் கண்டுபிடிக்கப்பட்டு 1880ஆம் ஆண்டில் அலுவலகப்பயன்பாட்டுக்கு வந்த டைப்ரைட்டிங் மெஷின்கள் சுமார் 120 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தின. 1940இல் ஆய்வகங்களில் பெரிய வடிவில் இருந்த கம்ப்யூட்டர்கள், வடிவத்தில்…
திருவாரூர்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில், குடியரசு தலைவர் திரவுபதி மூர்மு பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் \நாட்டில் உள்ள மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டில், திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் இது இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இதில் பயின்று வருகின்றனர் . இந்த நிலையில், கடந்த ஆண்டு 9-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி மூர்மு பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில் கடைசி நேரத்தில் குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நிகழாண்டு வரும் செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ள…
இருதய நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 18-20 மில்லியன் உயிர்களைக் கூறுகின்றன, இது உலகின் மரணத்திற்கான முக்கிய காரணியாக மாறும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. தடுக்கப்பட்ட தமனிகள், அரித்மியா அல்லது ஆரம்பகால இதய செயலிழப்பு போன்ற பல இதய நிலைமைகள் பல ஆண்டுகளாக அமைதியாக முன்னேறக்கூடும், இது மிகவும் தாமதமாகிவிடும் வரை எந்த அறிகுறிகளையும் காட்டாது. இருதயநோய் நிபுணர் டாக்டர் டிமிட்ரி யாரனோவ் வழக்கமான சோதனைகளுக்கு அப்பாற்பட்ட சிறப்பு இதய சோதனைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார். சமீபத்திய வீடியோவில், மறைக்கப்பட்ட அபாயங்களைக் கண்டறியவும், சரியான நேரத்தில் சிகிச்சையை வழிநடத்தவும், உயிர்களைக் காப்பாற்றவும்க்கூடிய ஐந்து திரையிடல்களை அவர் பகிர்ந்து கொண்டார். உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நிலையான ஈ.கே.ஜி மற்றும் எக்கோ கார்டியோகிராம் ஆகியவற்றைத் தாண்டி வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.ஆரம்பத்தில் சிக்கல்களைக் கண்டறிய 5 அத்தியாவசிய இதய சோதனைகள்உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும்போது, இருதயநோய் நிபுணர் டாக்டர் டிமிட்ரி யாரனோவ் அறிவு சக்தி…
புதுடெல்லி: செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர உயர்மட்ட விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது பொதுச் சபைக் கூட்டத் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் செப். 23 முதல் 29 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் பாரம்பரிய பேச்சாளராக பிரேசில் உள்ளது. பிரேசில் அரசு தலைவரின் உரையை அடுத்து, அமெரிக்க அதிபரின் உரை இருக்கும். ஐநா பொதுச் சபை மேடையில் உலக தலைவர்கள் மத்தியில் செப். 23-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உரை நிகழ்த்த உள்ளார். இந்த உயர்மட்ட விவாதத்துக்கான தற்காலிக பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அரசாங்கத் தலைவர் செப். 26-ம் தேதி ஐநா பொதுச் சபை மேடையில் உரையாற்றுவார். அதே தினத்தன்று, சீனா,…
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) என்பது மனிதர்களைப் போலவே அறிவுத் திறன் கொண்ட சிந்திக்கக் கூடிய, முடிவெடுக்கக்கூடிய கணினி அல்லது கணினி நிரலாக்கத்தை உருவாக்கும் கணினி அறிவியல் துறையின் புதிய வருகை. எடுத்துக்காட்டாக, பயனர் கேட்கும் தகவல்களைத் தேடித்தரும், கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் அமேசானின் ‘அலெக்சா’, கூகுள் ‘அசிஸ்டென்ட்’, மைக்ரோசாஃப்ட் டின் ‘கார்டனா’ போன்ற பிரபலமான டிஜிட்டல் மென்பொருள்கள் ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலம் உருவானவை. முக்கியமாகப் பயனரின் பழக்கவழக்கங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்பட்டு, எதிர்காலத்தில் அவரது ரசனை சார்ந்த பரிந்துரைகளை வழங்கும் திறனைப் பெற்றுள்ளன. நவீன திறன்பேசிச் செயலிகளில், ஒளிப்பட வண்ணங்களைப் பின்னணியில் இருக்கும் மென்பொருள் தானாகத் திருத்தி மேம்படுத்துவது, கூகுள் போன்ற தேடுபொறிகளில் தேடும் போது டைப் செய்யத் தொடங்கியதுமே அந்தப் பதம் என்னவாக இருக்கும் எனப் பரிந்துரைப்பது போன்றவை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உபயம். Elsa (English language Speech Assistant), Google Allo, Robin போன்ற செயலிகள்…
சென்னை: ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் எண்டர்டெயினராக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்தி மகிழ்வதாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். நாளை வெளியாகும் அவருடைய ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் எண்டர்டெயினராக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. ‘கூலி’ மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.