சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் ஐஓபி 25-17, 25-23, 25-18 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கியை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. மகளிர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி 25-15, 25-15, 25-18 என்ற செட் கணக்கில் பனிமலர் கல்லூரியை தோற்கடித்தது. மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் சிவந்தி கிளப் 25-23, 25-15, 25-21 என்ற செட் கணக்கில் தமிழ்நாடு காவல் துறை அணியை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
Author: admin
டெல் அவிவ்: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய வான்வழி தாக்குதலில், உதவிபெற காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல் பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸ் தீவிரவாதிகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களை விடுதலை செய்துவிட்டு இருதரப்பும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். காசாவில் 60 நாள் சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கடந்த செவ்வாய்க்கிழமை கூறினார். ஆனால், ஹமாஸ் அமைப்பினர் இதை ஏற்றுக்கொள்ளாமல், உண்மையான சண்டை நிறுத்தத்துக்கு இது வழிவகுக்குமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடர்கிறது. நிவாரணத்துக்கு காத்திருந்தவர்கள்: காசாவின் முவாசி பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலை நடத்திய வான்வழி தாக்குதலில்…
சிவகங்கை: கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் தாக்கியதை வீடியோ எடுத்தவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமார் (29), நகை திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸாரால் விசாரிக்கப்பட்டபோது உயிரிழந்தார். கோயில் பின்புறமுள்ள மாட்டுத் தொழுவத்தில் அஜித்குமாரை, தனிப்படை போலீஸார் கடுமையாக தாக்குவதை கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், கழிவறையில் மறைந்திருந்து வீடியோ எடுத்தார். இதனால் அவர் இவ்வழக்கில் நேரடி சாட்சியாக உள்ளார். இந்நிலையில், தனக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு இ-மெயிலில் டிஜிபிக்கு சக்தீஸ்வரன் கடிதம் அனுப்பினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான்தான் அஜித்குமாரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்ததாக, கைதாகியுள்ள தலைமைக் காவலர் ராஜாவுடன் தொடர்பில் உள்ளவர்கள் தவறான தகவலைப் பரப்புகின்றனர். நான் துணிந்துதான் சாட்சி சொல்ல முடிவெடுத்தேன். எனக்கு அச்சுறுத்தல் இருப்பதால், மற்றவர்கள் சாட்சி சொல்ல பயப்படுகின்றனர். எனது உயிர் போனால்கூட பரவாயில்லை. மற்ற சாட்சிகளைப்…
வீனஸ் வில்லியம்ஸ் டென்னிஸ் கோர்ட்டில் சண்டையிடப் பழகிவிட்டார். ஆனால் சமீபத்திய வெளிப்பாட்டில், ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் மிகவும் வித்தியாசமான போராட்டத்தைப் பகிர்ந்து கொண்டார்-ஒன்று மோசடிகள் அல்லது போட்டியாளர்களை உள்ளடக்கியது அல்ல, ஆனால் மருத்துவர்கள் மற்றும் தவறாக கண்டறியப்பட்ட வலி. பல ஆண்டுகளாக, வில்லியம்ஸ் கூறுகிறார், ஃபைப்ராய்டு தொடர்பான அறிகுறிகளைப் பற்றிய அவரது புகார்கள் உதவிக்காக அவர் திரும்பிய மக்களால் துலக்கப்பட்டன.”இது மிகவும் மோசமாகிவிட்டது, என்னால் அதைக் கையாள முடியவில்லை,” என்று அவர் ஒரு பிரத்யேக இன்று நேர்காணலில் கூறினார்.அவரது கதை வெறும் சக்திவாய்ந்ததல்ல – இது பல பெண்களுக்கு, குறிப்பாக கறுப்பின பெண்களுக்கு, கருப்பை நார்த்திசுக்கட்டிகள் போன்ற நிலைமைகளை எதிர்த்துப் போராடும் போது சுகாதார முறைக்கு செல்லவும்.”இது சாதாரணமானது என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்”சமூக ஊடகங்கள் மற்றும் சுகாதார வட்டங்கள் முழுவதும் முக்கியமான உரையாடல்களைத் தூண்டிய ஒரு நேர்காணலில், வீனஸ் வீக்கம், வலி மற்றும் சோர்வு ஆகியவற்றுடன் பல ஆண்டுகளாக…
சிம்லா: இமாச்சலபிரதேசம், மண்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை 10 மேகவெடிப்புகள், 3 திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து கோஹர், துனாக், கர்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் மேலும் இருவரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழப்பு 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேரை தேடும் பணி நடைபெறுகிறது. இந்தப் பேரிடரில் 162 கால்நடைகள் இறந்தன. மேலும் 50-க்கும் மேற்பட்ட வீடுகள், 104 கால்நடை கொட்டகைகள், 31 வாகனங்கள், 14 பாலங்கள் மற்றும் பல சாலைகள் சேதம் அடைந்தன. அதேவேளையில் மண்டியில் 316 பேர் உட்பட 370 பேர் மீட்கப்பட்டனர், 5 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில அவசர நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காங்க்ரா,மண்டி உள்ளிட்ட 6 மாவட்டங்களின் சில பகுதிகளில் திடீர் வெள்ள அபாயம் இருப்பதாக நேற்று எச்சரிக்கப்பட்டது.
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவச் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 6-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் 154-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் டேனியல் இவான்ஸை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 4-6, 6-2, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் 115-ம் நிலை வீரரான பிரான்ஸின் ஆர்தர் கசாக்ஸை தோற்கடித்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 10-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவரோவா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் 46-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாவை வீழ்த்தினார்.
புதுடெல்லி: அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஹெக்செத் மற்றும் ராஜ்நாத் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து 10 ஆண்டுக்கான அமெரிக்க – இந்திய பாதுகாப்பு கட்டமைப்பில் இருவரும் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர். இவ்வாண்டு நடைபெறவுள்ள சந்திப்பின்போது இந்த பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க பாதுகாப்பு தளவாட விற்பனை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான பாதுகாப்பு மற்றும் தொழில் துறை ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்தனர். அமெரிக்காவை பொருத்தவரையில் தெற்காசியாவில் முக்கிய நெருங்கிய கூட்டாளியாக இந்தியா உள்ளது என்பதை ஹெக்செத் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு பென்டகன் அறிக்கை தெரிவித்துள்ளது.
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திருமங்கலம் உதவி எஸ்.பி.யிடம் நேற்று பலரும் புகார் அளித்தனர். கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகிதா, மதுரை திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்தவர். திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிகிறார். நிகிதாவின் தந்தை ஜெயபெருமாள், தாயார் சிவகாமி அம்மாள், சகோதரர் கவியரசு என்ற வைபவ் சரண், இவரின் மனைவி சுகதேவி, உறவினர் பகத்சிங் ஆகியோர் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்திருப்பதாக ஏற்கெனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2010-ல் நிகிதாவின் தந்தை ஜெயபெருமாள் துணை ஆட்சியராகப் பணியாற்றியபோது, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக, நிகிதா குடும்பத்தினர் மீது வழக்கு உள்ளது. மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த செல்வத்திடம் ரூ.25 லட்சம்,…
இது ஒரு திகில் திரைப்படத்தின் ஏதோவொன்றைப் போல் தெரிகிறது: ஒரு சிறிய உயிரினம் வெதுவெதுப்பான நீரில் நீந்துகிறது, உங்கள் உடலுக்குள் நுழைய சரியான தருணத்திற்காக காத்திருக்கிறது -உங்கள் மூக்கின் வழியாகவும், உங்கள் மூளையை சாப்பிடவும். துரதிர்ஷ்டவசமாக, இது புனைகதை அல்ல. இந்த மிகவும் உண்மையான மற்றும் அரிதான கொலையாளி நெய்க்லெரியா ஃபோலரேரி என்று அழைக்கப்படுகிறார், இது பொதுவாக மூளை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படுகிறது.கோடை வெப்பநிலை ஏறி, குடும்பங்கள் ஏரிகள், ஆறுகள் மற்றும் நீர் பூங்காக்களுக்கு திரண்டு வருவதால், இந்த நுண்ணிய அச்சுறுத்தல் அமைதியாக சூடான, சிகிச்சை அளிக்கப்படாத நன்னீரில் பதுங்குகிறது. நோய்த்தொற்றுகள் மிகவும் அரிதானவை என்றாலும், அவை நிகழும்போது, அவை எப்போதும் கொடியவை.எனவே, இந்த விஷயம் சரியாக என்ன? வெப்பமான வானிலை ஏன் அதை ஊக்கப்படுத்துகிறது? கொலையாளி அமீபாவை சந்திக்கவும்நெய்க்லெரியா ஃபோலரெரி என்பது ஒரு இலவச-வாழ்க்கை அமீபா ஆகும், இது சூடான நன்னீர் சூழல்களில் செழித்து வளர்கிறது-ஏரிகள், சூடான நீரூற்றுகள்,…
ருத்ரபிரயாக்: கனமழை காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் சோன்பிரயாக் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால், கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் சோன்பிரயாக் அருகேயுள்ள முங்காட்டியா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேதார்நாத் யாத்திரையை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கவுரிகுந்த் பகுதியிலிருந்து திரும்பிய சில பக்தர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கினர். அவர்களை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டு சோன்பிரயாக் அழைத்து வந்தனர்.
