Author: admin

வாஷிங்டன்: ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிப்பது தொடர்பாக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்காவிடம் ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க அரசு ரஷ்யா மீதான தடை தொடர்பாக புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. குடியரசுக்கு கட்சி செனட்​டர் லிண்ட்சே கிரஹாம் ஆதர​வுடன் வெளிவந்​துள்ள இந்த மசோதா ரஷ்​யா​வுடன் தொடர்ந்து வர்த்​தகம் செய்​யும் நாடு​கள் மீது 500 சதவீத வரி விதிக்க வழி​வகை செய்​கிறது. ரஷ்​யா​விட​மிருந்து இந்​தியா தொடர்ந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்து வரு​கிறது. இந்த நிலை​யில், இந்த புதிய தடை மசோ​தா​வால் இந்​தியா மற்​றும் சீனா ஆகிய நாடு​கள் பெரிதும் பாதிப்​படை​யும் சூழல் உரு​வாகி​யுள்​ளது. எனவே இதனை எவ்​வாறு எதிர்​கொள்​வது என்​பது இருதரப்​பிலும் ஆலோசிக்​கப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்தார்.

Read More

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தாக்கி கொலை செய்தது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு புகார் தொடர்பான விசாரணையின்போது தனிப்படை போலீஸார் தாக்கியதில் இவர் உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து, திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தங்கி, மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் கடந்த 2-ம் தேதி விசாரணையை தொடங்கினார். சிவகங்கை ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் வழக்கு தொடர்பான ஆவணங்களை அவரிடம் அளித்தனர். இதை தொடர்ந்து, கோயில் பணியாளர்கள் சக்தீஸ்வரன், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் சிசிடிவி…

Read More

புதுடெல்லி: எச்எஸ்பிசி இந்திய சேவைகள் பிஎம்ஐ வணிக செயல்பாட்டு குறியீடு கடந்த மே மாதத்தில் 58.8-ஆக இருந்த நிலையில் ஜூன் மாதத்தில் அது 60.4-ஆக அதிகரித்துள்ளது. புதிய வணிகங்களுக்கான ஆர்டர் கணிசமாக அதிகரித்ததால் இந்த குறியீடு ஏற்றம் கண்டுள்ளது. பர்சேசிங் மேனேஜர்ஸ் இன் டெக்ஸ் (பிஎம்ஐ) குறியீடு 50-க்கு மேல் இருந்தால் அது விரிவாக்கத்தையும். அதேநேரத்தில் 50-க்கு கீழ் இருந்தால் பின்னடைவையும் குறிப்பதாகும். இதுகுறித்து எச்​எஸ்​பிசி-​யின் தலைமை பொருளா​தார நிபுணர் பிரஞ்​சுல் பண்​டாரி கூறுகை​யில், “புதிய உள்​நாட்டு ஆர்​டர்​கள் வரத்து குறிப்​பிடத்​தக்க அளவு அதி​கரித்​துள்​ளது. ஒப்​பீட்டு அளவில் தற்​போது உள்​ளீட்டு செல​வினங்​கள் குறைந்து நிறு​வனங்​களின் லாபவரம்பு மேம்பட வழி​வகுத்​துள்​ளது. இதன் காரண​மாக கடந்த 10 மாதங்​களில் இல்​லாத அளவுக்கு ஜூன் மாதத்​தில் சேவை​கள் துறை சிறப்​பான வளர்ச்​சியை கண்​டுள்​ளது. அதேபோன்று வேலை​வாய்ப்​பும் தொடர்ந்து 37-வது மாத​மாக உயர்ந்​தது. இவை சேவை துறை​யில் நேர்​மறை​யான தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளன” என்​றார்​.

Read More

எலும்பு ஆரோக்கியம், நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் மனநிலை ஆகியவற்றிற்கு வைட்டமின் டி முக்கியமானது, ஆனால் குறைந்த சூரிய வெளிப்பாடு மற்றும் மோசமான உணவு காரணமாக குறைபாடு பரவலாக உள்ளது. வைட்டமின் டி அளவை அதிகரிக்க சூரிய ஒளி மிகவும் பயனுள்ள வழியாகும், குறிப்பாக மதிய வேளையில் யு.வி.பி கதிர்கள் வலுவாக இருக்கும்போது. ‘சன்ஷைன் வைட்டமின்’ என்றும் அழைக்கப்படும் வைட்டமின் டி, உடலுக்கு தேவைப்படும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். எலும்பு ஆரோக்கியம், நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் மனநிலை ஒழுங்குமுறை ஆகியவற்றைப் பராமரிப்பதில் இருந்து, இந்த ஊட்டச்சத்து உடலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. ஆயினும்கூட, வைட்டமின் டி குறைபாடு மிகவும் பொதுவானது. வைட்டமின் டி குறைபாடு சுமார் 1 பில்லியன் மக்களை பாதிக்கிறது, சில மக்கள்தொகையில், குறைபாடு விகிதம் கிட்டத்தட்ட 50%ஆகும். சூரிய வெளிப்பாடு இல்லாதது, சமநிலையற்ற உணவு அல்லது பிற நோய்கள் காரணமாக இருக்கலாம். வைட்டமின் டி அவசியம் என்பதில்…

Read More

புதுடெல்லி: அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் மல்லசந்திரா கிராமத்தைச் சேர்ந்த ரவிஷா கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி அதை ஓட்டிச் சென்ற ரவிஷா உயிரிழந்தார். இதையடுத்து ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரவிஷா மனைவி மற்றும் குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், ரவிஷா காரை அதிவேக​மாக​வும் கவனக்​குறை​வாக​வும் ஓட்​டிய​தாலேயே விபத்து நடந்​துள்​ளது. எனவே, இழப்​பீடு வழங்​கு​மாறு காப்​பீட்டு நிறு​வனத்​துக்கு உத்​தர​விட முடி​யாது எனக் கூறி மனுவை தள்​ளு​படி செய்​தது. இந்த உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் ரவிஷா குடும்​பத்​தினர் மேல்​முறை​யீடு செய்​தனர். இந்த மனுவை நீதிப​தி​கள் பி.எஸ்​.நரசிம்மா மற்​றும்…

Read More

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 587 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் ஷூப்மன் கில் 269 ரன்கள் விளாசி அசத்தினார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 85 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 2, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87, கருண் நாயர் 31, ரிஷப் பந்த் 25, நித்திஷ் குமார் ரெட்டி 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷுப்மன் கில் 114, ரவீந்திர ஜடோ 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது. ஷுப்​மன் கில்​லும், ஜடேஜா​வும் இங்​கிலாந்து…

Read More

புதுடெல்லி: மாலி நாட்டில் பணியாற்றிய 3 இந்தியர்கள் கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்க மாலி அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டில் ராணுவத்துக்கும் அல்காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. மாலி நாட்டின் மத்திய, மேற்கு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து அல்காய்தா ஆதரவு தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. இதில் 80 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் கடந்த 1-ம் தேதி மாலி​யின் கேய்ஸ் நகரில் உள்ள சிமென்ட் ஆலை மீது அல்காய்தா தீவிர​வா​தி​கள் திடீர் தாக்​குதல் நடத்​தினர். அங்கு பணி​யில் இருந்த தொழிலா​ளர்​களை தீவிர​வா​தி​கள் கடத்​திச் சென்று உள்​ளனர். இதில் 3 பேர் இந்​தி​யர்​கள். இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத்துறை நேற்று வெளி​யிட்ட…

Read More

2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சாட்சியாக வைத்துக் கொண்டு சொன்ன உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் நாளிதழ் பேட்டி ஒன்றில், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பாஜக-வும் இடம்பெறும். அதிமுக-வைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார்” என்று இபிஎஸ் தரப்புக்கு இன்னொரு ஷாக் கொடுத்திருக்கிறார். 2024 மக்​கள​வைத் தேர்​தலின் போது அதி​முக கூட்​ட​ணிக்கு பாஜக பகீரத பிர​யத்​தனம் செய்​தது. ஆனால் அண்​ணா​மலை​யின் அதிரடிகளால் அதிருப்தி கொண்ட இபிஎஸ், “பாஜக-வுடன் இனி எந்​தக் காலத்​தி​லும் கூட்​டணி இல்​லை” என திட்​ட​வட்​ட​மாக அறி​வித்​தார். அதி​முக-​வின் இந்த முடி​வால் உதிரிக் கட்​சிகளை கூட்டு சேர்த்​துக் கொண்டு தேர்​தலைச் சந்​தித்த பாஜக-வுக்கு ஓர் இடம் கூட கிடைக்​க​வில்​லை. இதனால் இபிஎஸ் மீதும் அதி​முக மீதும் கடும் கோபத்​தில் இருந்​தார் அமித் ஷா. மக்​கள​வைத் தேர்​தலைப் போலவே சட்​டமன்​றத் தேர்​தலிலும் கோட்​டை​விட்டு விடக்​கூ​டாது…

Read More

வெங்காய சாறு என்பது முடி உதிர்தல் மற்றும் முடி ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கான பிரபலமான வீட்டு வைத்தியம். இது பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அதன் செயல்திறன் இன்னும் ஆராய்ச்சி செய்யப்படுகிறது. முடி பராமரிப்புக்காக வெங்காய சாற்றை முயற்சிப்பதற்கு முன், அதன் நன்மைகளையும் சாத்தியமான குறைபாடுகளையும் புரிந்துகொள்வது அவசியம். வெங்காயத்தில் சமையலுக்கு அப்பால் பயன்பாடுகள் உள்ளன, அவற்றின் சாறு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பண்புகளைக் கொண்டிருக்கலாம்.இருப்பினும், அதன் செயல்திறனை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை. முடி பராமரிப்புக்காக வெங்காய சாற்றைப் பயன்படுத்துவதை நீங்கள் கருத்தில் கொண்டால், அதன் சாத்தியமான நன்மைகள் மற்றும் உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் அது எவ்வாறு பொருந்தக்கூடும் என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்வது முக்கியம். முடி பராமரிப்புக்கு வெங்காய சாற்றை எவ்வாறு பயன்படுத்தலாம்?முடி பராமரிப்புக்காக வெங்காய சாற்றை முயற்சிக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், ஹெல்த்லைன் படி, இங்கே நீங்கள் வீட்டில் முயற்சி செய்யலாம் ஒரு எளிய செய்முறை:…

Read More

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் விரை​வில் ஸ்வரண மாதத்தை முன்​னிட்டு காவடி யாத்​திரை தொடங்க உள்​ளது. யாத்​திரை செல்​லும் சாலைகளில் உள்ள உணவகங்​களில் கடை உரிமை​யாளர் பெயர் உட்பட முழு விவரங்​களை அறி​விப்பு பலகை​களில் எழுதி வைக்க மாநில அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இந்த உத்​தரவு பின்​பற்​றப்படுகிறதா என்று பிரபல துறவி யஷ்வீர் மஹராஜின் சீடர்​கள் 5,000 பேர் ஆங்​காங்கே சோதனை நடத்தி வரு​கின்​றனர். அவர்​களில் ஒரு குழு​வினர் முசாபர்​நகரின் ‘பண்​டிட்ஜி வைஷ்னோவ் தாபா’வை முஸ்​லிம்​கள் நடத்​து​வ​தாக கண்​டு​பிடித்​தனர். அப்​போது, அங்கு வேலை செய்​தவர்​களின் கீழாடைகளை அகற்றி சோதித்​தனர். இது பெரும் சர்ச்​சை​யானது. ஆனால், அங்கு வேலை செய்​யும் ஒரு​வர் நேற்று உண்​மையை வெளி​யிட்​டுள்​ளார். இதுகுறித்து செய்​தி​யாளரிடம் ஆதார் அட்​டையை காட்டி அந்த ஊழியர் கூறும்​போது, “எனது உண்​மை​யான பெயர் தஜும்​முல். என்னை கோபால் என்ற பெயரில் வேலை செய்ய உரிமை​யாளர் கேட்​டுக் கொண்​டார். எனக்கு வேலை வேண்​டும் என்​ப​தால் பொய் கூறி…

Read More