பாஜக தேசியத் தலைவர் பதவியை கட்சியின் ஒரு பெண் ஆளுமைக்கு கொடுக்க ஆர்எஸ்எஸ் ஒப்புதல் தெரிவித்தவிட்ட நிலையில், வரலாற்றில் இடம்பிடிக்கக் கூடிய அந்தப் பதவிக்கான போட்டியில் மூன்று பெண் தலைவர்களின் பெயர் அடிபடுகிறது. மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் ஆந்திர பாஜகவின் முன்னாள் தலைவர் புரந்தரேஸ்வரி ஆகியோர் அந்தப் போட்டியில் உள்ளனர். பாஜக தேசியத் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் ஜனவரி 2023-ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால், மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அது 2024 வரை நீட்டிகப்பட்டது. பாஜக மூன்றாவது இன்னிங்ஸின் ஓராண்டே முடிந்துவிட்ட நிலையில் தான் கட்சிக்கு புதிய தேசியத் தலைவரை தேர்வு செய்வது தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதிலும், பாஜக தேசியத் தலைவராக ஒரு பெண் ஆளுமையை நியமித்து வரலாறு படைக்க ஆர்எஸ்எஸ் பச்சைக்கொடி காட்டியுள்ளதால், இந்தத் தேர்வு பரபரப்பை கூட்டியுள்ளது. இதற்கிடையில்தான் அண்மையில் மத்திய நிதியமைச்சர்…
Author: admin
வாஷிங்டன்: உக்ரைன் உடனான போரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிறுத்துவார் என்று தோன்றவில்லை என்றும் அவர் விஷயத்தில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, “நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவேன்.” என வாக்குறுதி அளித்தவர் டொனால்ட் ட்ரம்ப். இரண்டாவது முறையாக டொனால்ட் டரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் அமெரிக்க அதிபரானதில் இருந்து போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டரம்ப், விளாடிமிர் புதினுடன் 5 முறை தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தைக்கும்ப் பிறகும் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்த டொனால்ட் டரம்ப், கடைசியாக கடந்த வியாழக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதல்முறையாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தி உள்ளார். விளாடிமிர்…
சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மனிதர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் கடன் வாங்கி, வாழ்நாள் முழுக்க உழைத்து ஓடாய் தேய்கின்றனர். எல்லா தரப்பு மக்களுடனும் எளிதாய் ‘கனெக்ட்’ ஆகும் ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஸ்ரீகணேஷ் அதை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸுக்கு சொன்னாரா என்பதை பார்க்கலாம். மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவர் வாசுதேவன் (சரத்குமார்). ஃபேக்டரி ஒன்றில் அக்கவுன்டன்ட்டாக வேலை பார்ப்பவர் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சொந்த வீடு வாங்குவதற்காக சேமிக்கிறார். தொடர்ந்து வாடகை வீடுகளாக மாறிக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பமே சொந்த வீடு கனவில் இருக்கிறது. மனைவி சாந்தி (தேவயாணி) முறுக்கு சுட்டு கணவனுக்கு உதவுகிறார். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பார்த்து வரும் மகன் பிரபு (சித்தார்த்) கல்லூரி முடிந்து ஓர் ஆலையில் வேலைக்கு செல்கிறார். அண்ணனை பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைப்பதற்காக அரசு பள்ளியில்…
திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து மதுரையில் அண்மையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி அதிரவைத்தது இந்து முன்னணி. மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது இந்து முன்னணி தான் என்றாலும் மாநாட்டின் பலனை தங்களுக்கானதாக அறுவடை செய்து கொண்டது பாஜக. மாநாட்டை நடத்துவதற்கு காவல் துறை தரப்பில் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்ட நிலையில், அதையெல்லாம் நீதிமன்றம் வரைக்கும் சென்று தளர்த்தி மாநாட்டை நடத்தி முடித்தார்கள். இந்த நிலையில், முருகபக்தர்கள் மாநாடு கூட்டப்பட்ட அதே அம்மா திடலில் 6-ம் தேதி, மனிதநேய மக்கள் கட்சி (தமுமுக அரசியல் பிரிவு) மாநில மாநாட்டை நடத்துவதும் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்து முன்னணி மாநாட்டுக்குப் போட்டியாக இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் என ஒரு தரப்பினரும், முஸ்லிம்களின் பலத்தைக் காட்டி அதற்கேற்ப கூட்டணியில் சீட் பேரம் பேசுவதற்காகத்தான் இந்த மாநாடு என ஒரு தரப்பினரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாநாடு குறித்து நம்மிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் மாநில…
மிருதுவாக்கிகள் ஒரு சரியான காலை உணவு விருப்பமாகும், இது ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது, மேலும் அவை வசதியானவை. பிஸியான காலையில் அவை சரியானவை, நாள் வரை விரைவான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தொடக்கத்தை வழங்குகின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான பிற பொருட்களுடன் ஏற்றப்பட்ட மிருதுவாக்கிகள் உங்கள் சுவை மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படலாம். பொருட்களின் முடிவற்ற சேர்க்கைகள் மூலம், நீங்கள் சுவையான மற்றும் சத்தான ஒரு மிருதுவாக்கலை உருவாக்கலாம். உங்கள் ஆற்றலை அதிகரிக்க விரும்பினாலும், எடை நிர்வாகத்தை ஆதரிக்க வேண்டுமா, அல்லது ஆரோக்கியமான காலை உணவை அனுபவிக்க விரும்பினாலும், மிருதுவாக்கிகள் ஒரு சிறந்த தேர்வாகும். ஆனால் காலை உணவுக்கு மிருதுவாக்கிகள் இருப்பதில் சில குறைபாடுகள் உள்ளன. மிருதுவாக்கலில் என்ன இருக்கிறது? ஆரோக்கியமான மற்றும் சுவையான கலவைக்கான சிறந்த பொருட்கள்ஒரு மிருதுவானது என்பது ஒரு குளிர், கலப்பு பானமாகும், இது பொருட்கள், பொதுவாக பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் அல்லது நீர் போன்ற ஒரு…
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுகுறித்து வேலைவாய்ப்பு துறை அமைச்சர் அனில் ராஜ்பர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில இளைஞர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு உதவும் வகையில், உ.பி. ரோஜ்கர் மிஷனை உருவாக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மூன்றாம் தரப்பு ஆட்சேர்ப்பு நிறுவனங்களை இளைஞர்கள் சார்ந்திருப்பது இனி தவிர்க்கப்படும். ஆண்டுக்கு 25,000 முதல் 30,000 வரையிலான இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவும், இந்திய தனியார் துறையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும் நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்திய மனித வளத்துக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இனி அரசே நேரடியாக ஏற்பாடு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை: சென்னையில் நேற்று பிற்பகல் வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. இதையடுத்து, சிறிது நேரத்திலேயே நுங்கம்பாக்கம், கோபாலபுரம், அடையாறு, கோட்டூர்புரம் உள்ளிட்ட இடங்களிலும், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியது. மழை நள்ளிரவு வரை விட்டுவிட்டு பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சென்னையின் பிரதான பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
யாரும் உங்களிடம் சொல்லாத அந்த பயண உதவிக்குறிப்புகளில் இதுவும் ஒன்றாகும் – ஆனால் நீங்கள் அதைக் கேட்டவுடன், நீங்கள் ஒருபோதும் ஒரு ஹோட்டலை மீண்டும் பார்க்க மாட்டீர்கள்.ஹோட்டல் விலைகளை ஒப்பிட்டு, காலை உணவு பஃபேக்களைக் கவனிப்பதில் அல்லது சரியான கடல் எதிர்கொள்ளும் அறையை அடித்துக்கொள்வதற்கு நாங்கள் அதிக நேரம் செலவிடுகிறோம். ஆனால் நம்மில் பெரும்பாலோர் மிக முக்கியமானதாக இருக்கக்கூடிய ஒரு கேள்வியை கவனிக்கவில்லை: ஒரு ஹோட்டலில் தங்குவதற்கு எந்த தளம் பாதுகாப்பானது?மாறிவிடும், அது முக்கியமானது. நிறைய.நீங்கள் அடிக்கடி வணிகப் பயணி, ஒரு தனி பெண் சுற்றுலாப் பயணி, அல்லது குடும்ப விடுமுறைக்குச் சென்றாலும், உங்கள் அறையின் இருப்பிடம் அவசரநிலைகளில் உங்கள் பாதுகாப்பையும், திருட்டு அபாயத்தையும், விரைவாக உதவி பெறுவதற்கான வாய்ப்புகளையும் பாதிக்கும்.எனவே அதை உடைப்போம்: ஏன் மாடி தேர்வு என்பது பார்வையைப் பற்றியது மட்டுமல்ல – அடுத்த முறை நீங்கள் சரிபார்க்கும்போது வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்.எனவே … பாதுகாப்பான தளம் எது?பாதுகாப்பு…
ராயசோட்டி: தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளாவில் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் கடந்த 1995 ம் ஆண்டு முதல் பல்வேறு நாச வேலையில் ஈடுபட்டனர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், ராயசோட்டியில் துணி வியாபாரம் செய்து, தலைமறைவாக வாழ்ந்தனர். இந்த இரு தீவிரவாதிகளை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவினர், கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர். மேலும், அபுபக்கரின் மனைவி ஷேக் சைராபானு, முகமது அலியின் மனைவி ஷேக் ஷமீம் ஆகியோரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில், ஆந்திர போலீஸார் இவர்களது வீட்டில் சோதனை நடத்தியபோது, பக்கெட் வெடிகுண்டுகள், பார்சல் வெடிகுண்டுகள், கன் பவுடர் மற்றும் 2 நகரங்களின் வரைபடங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில், சென்னையில் இருந்து திரும்பிய 2 தீவிரவாதிகளின் மனைவிகளை ராயசோட்டி போலீஸார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவர்கள் இருவரையும் 14 நாட்கள் வரை நீதிமன்ற…
சிவகங்கை: அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து போலீஸார் தாக்கியதை நான் நேரில் பார்த்தேன் என அவரது உறவினர் மகேஷ்குமார் தெரிவித்தார். அஜித்குமாரின் உறவினரான இவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கோயில் பின்புறமுள்ள மாட்டுதொழுவத்தில் வைத்து அஜித்குமாரை மூன்று போலீஸார் கொடூரமாக அடித்தபோது நான் அங்குதான் இருந்தேன். என்னிடம் அவர் அடிதாங்க முடியவில்லை என்று கதறினார். மேலும் அவர் பல முறை தண்ணீர் கேட்டார். நானும் தண்ணீர் கொடுக்க சொன்னேன். ஆனால் போலீஸார் மறுத்துவிட்டனர். பின்னர் தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து கொடுத்தனர். அதை அவரால் குடிக்க முடியவில்லை. வேறு தண்ணீர் கேட்டார். ஆனால் கொடுக்கவில்லை. கஞ்சா சாப்பிடாத அஜித்குமாருக்கு போலீஸார் கஞ்சா கொடுத்து தாக்கினர். என் முன்பு தான் ஒரு காவலரே கஞ்சா எடுத்து வரச் சென்னார். அடித்ததிலேயே அஜித்குமாருக்கு மலம் வந்துவிட்டது. நான் அவரை பரிசோதித்தபோது, உயிர் பிரிந்து விட்டது. அதை போலீஸாரிடம் நான் சொன்னதும், அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். காவலர்…
