புஷ்கர் – காயத்ரி இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்துக்குப் பிறகு எந்தவொரு படத்தையும் புஷ்கர் – காயத்ரி இணை படம் இயக்கவில்லை. இதனால், இவர்களுடைய அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இடையே ‘சுழல்’ வெப் சீரிஸ் தயாரிப்பில் மும்முரமாக இருந்தார்கள். தற்போது தங்களது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது. அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பு இருக்கிறதா என்பது தெரியவரும். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘மதராஸி’, சுதா கொங்காரா இயக்கி வரும் ‘பராசக்தி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படங்களைத் தொடர்ந்து ‘குட் நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Author: admin
சென்னை: பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8 ஆம் தேதி சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தப்போவதாக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அறிவித்துள்ளனர். 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்ற முயல்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் 16,500-க்கும் கூடுதலான பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். பணியின் போது அவர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. பகுதி நேர சிறப்பாசிரியர்கள் வாரத்திற்கு 3 அரை நாட்கள்…
டெங்கு காய்ச்சல் என்பது ஒரு கொசுவால் பரவும் வைரஸ் தொற்று ஆகும், முதன்மையாக ஏடிஸ் ஏஜிப்டி கொசுவால் பரவுகிறது, இது பகலில் செயலில் உள்ளது. இது லேசான முதல் கடுமையானது வரை பலவிதமான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும், மேலும் சில சந்தர்ப்பங்களில், அபாயகரமானதாக இருக்கலாம், குறிப்பாக சமரச நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள். இந்தியா, குறிப்பாக, உலகின் 100–400 மில்லியன் நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தொற்று ஒரு உச்சத்தை அடைகிறது, ஆனால் இப்போது சில நம்பிக்கை உள்ளது. இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி இப்போது சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளது, கட்டம் 3 சோதனை சேர்க்கை கிட்டத்தட்ட முடிந்தது. மேலும் கண்டுபிடிப்போம் …டெங்கு ஏன் ஆபத்தானதுடெங்கு என்பது ஏடிஸ் கொசுக்களால் பரவியுள்ள வைரஸ் தொற்று ஆகும். இது அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, மூட்டு மற்றும் தசை வலி மற்றும் சில நேரங்களில் இரத்த பிளேட்லெட்டுகளில் ஆபத்தான வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது.…
கீவ்: உக்ரைன் மீது நேற்று ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வெளித் தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலில் கீவ் நகரில் மட்டும் 23 பேர் படுகாடமடைந்தனர். ஒருபக்கம் உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் புதினுடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மறுபக்கம் உக்ரைன் மீதான தாக்குதலை மேலும் தீவிரமாக்கியுள்ளது ரஷ்யா. உக்ரைன் மீது ரஷ்யா நேற்று இரவு முழுவதும் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 23 பேர் காயமடைந்தனர். இந்த மிகப்பெரிய வான்வெளி தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதில் பெரும்பாலானவை ஷாஹெட் ட்ரோன்கள் என்றும், இதில் சுமார் 11 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும்…
பாமகவில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அணியில் இருப்பவர் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள். இவர், பாமக தலைவர் அன்புமணிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கு எதிர் வினையாற்றிய எம்எல்ஏ அருள், தன்னை நீக்குவதற்கு நிறுவனரும், தலைவராக உள்ள ராமதாசுக்கு மட்டும் அதிகாரம் உள்ளது என தெரிவித்தார். எம்எல்ஏ அருளை நீக்குவதற்கு தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ராமதாசும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நிறுவனர் ராமதாசை அருள் எம்எல்ஏ நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ராமதாசும், அன்புமணியும் இணைந்தே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம். விரைவில் இணைவார்கள். தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி வருவார், வெற்றி கூட்டணியை உருவாக்கி தருவார். அன்புமணி எனது சகோதரர். அவரை நிச்சயம் சந்திப்பேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரும் எனக்கு கெடு விதிக்கவில்லை.…
நீங்கள் எப்போதும் உடல் ரீதியாக சோர்வாக உணர்கிறீர்களா மற்றும் மூளை மூடுபனி இருக்கும் – முழு இரவு தூக்கத்திற்குப் பிறகும்? உங்கள் மனம் மிகவும் சோர்வாக அல்லது அழுத்தமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். மன சோர்வு சில நேரங்களில் உடல் சோர்வைப் பிரதிபலிக்கும், இதனால் நீங்கள் சோர்வாகவும், மாற்றமடையாமலும் இருப்பீர்கள். இந்த நாள்பட்ட சோர்வு உங்கள் கணினி ஓய்வு மற்றும் முழுமையான டிஜிட்டல் டிடாக்ஸைக் கெஞ்சுகிறது, ஓய்வெடுக்கவில்லை. தூக்கம் உங்கள் உடலை மீட்டெடுக்க உதவக்கூடும், ஆனால் உங்கள் மனதுக்கு அமைதி, நினைவாற்றல் மற்றும் வேண்டுமென்றே வேலையில்லா நேரம் தேவை. எனவே, மறுபரிசீலனை செய்தல், அதிகப்படியான தூண்டுதல் மற்றும் நிலையான சத்தம் ஆகியவற்றிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக, உங்கள் மனதை ஓய்வெடுக்கவும், அழிக்கவும், இந்த நேரத்தில் வாழவும் உதவ தினசரி அடிப்படையில் தியானம் மற்றும் நினைவாற்றல் பயிற்சி.
குப்பம்: ஆண்டுக்கு 2 ஆயிரம் டிஎம்சி கோதாவரி நீர் கடலில் கலக்கிறது. இதில் 200 டிஎம்சி அளவு தண்ணீர் மக்களின் நலனுக்காக உபயோகப்படுத்தப்படும் என்று குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 2 நாட்களாக தனது சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நல திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாக்களில் கலந்து கொண்டார். நேற்று காலை குப்பத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டில் ராயலசீமா தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ரூ.3,950 கோடி ஹந்திரி-நீவா குடிநீர் கால்வாய் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்தோம். சிறிய நீர்பாசன திட்டங்களுக்கு 90 சதவீதம் மானியம் வழங்கி வருகிறோம். கோதாவரியில் ஆண்டுக்கு 2000 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதில் 200 டிஎம்சி நீர்…
கிரெனடாவில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மீண்டும் டாப் ஆர்டர் கொலாப்ஸினால் 280 ரன்களுக்குச் சுருண்டது. அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். டாப் ஆர்டர் சரிவு கண்டு ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் என்று தடுமாறியது. ஆனால், கடந்தப் போட்டியில் மே.இ.தீவுகள் கோட்டை விட்டது போல் இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை நசுக்காமல் பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி ஆகியோரைச் சதக் கூட்டணி அமைக்கவிட்டனர். பிறகு கீழ் வரிசை பேட்டர்கள் கொஞ்சம் பங்களிக்க ஆஸ்திரேலியா 286 ரன்கள் எடுத்தது. பார்படோஸ் டெஸ்ட் போல் அல்லாமல் சாம் கோன்ஸ்டாஸ் இந்த முறை கொஞ்சம் அவசர அவசரமாக ஆடினார். புல் ஷாட்டில் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், டெக்னிக் என்பதே சுத்தமாக இல்லாததால் ஜெய்டன் சீல்ஸ் பந்தில் தொடர்ச்சியாக…
பெய்ஜிங்: திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (ஜூலை 4) இந்தியாவுக்கான முக்கிய செய்தியை வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், “உள்நாட்டு விவகாரங்களில் தலையிட திபெத் பிரச்சினையைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்தும் என்று சீனா நம்புகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதை இந்தியா தவிர்க்கும் என்றும் நம்புகிறது.” என்று தெரிவித்துள்ளது. திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்து, இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். அவர் தனது 90-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிவிப்பில், “எனது மறைவுக்கு பிறகும் தலாய் லாமா மரபு தொடரும். அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது” என்று கூறியிருந்தார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ…
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார ஆனி சுவாதி உற்சவத்தில் வெள்ளிக்கிழமை காலை செப்புத்தேரோட்டம் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி உற்சவம் ஜூன் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் திருவிழாவில் பெரியாழ்வார் ஆண்டாள், வெண்ணெய் தாழி கிருஷ்ணர் உள்ளிட்ட அழங்கரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வெள்ளிக்கிழமை காலை முக்கிய விழாவான செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. பெரியாழ்வார் சர்வ அலங்காரத்தில் செப்புத் தேரில் எழுந்தருளிய பின், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து ரத வீதிகள் வழியாக தேர் இழுத்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல்…
