நீங்கள் ஒரு விடுமுறைக்காக ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறீர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க, அல்லது ஒரு பயணத்தில் சேரவும் இருந்தால், சுற்றுலா ஸ்ட்ரீம் உங்களுக்கானது. இந்த விசா 12 மாதங்கள் வரை இருக்க அனுமதிக்கிறது மற்றும் AUD 200 இலிருந்து செலவுகள். நீங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வெளியில் இருந்து விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் போதுமான நிதியின் ஆதாரத்தைக் காட்ட வேண்டும். முக்கியமாக, இந்த விசா வேலையை அனுமதிக்காது.இந்த விசாவை ஈர்க்கும் விஷயம் அதன் நெகிழ்வுத்தன்மை -இது ஓய்வு பயணம் முதல் நீட்டிக்கப்பட்ட குடும்ப வருகைகள் வரை அனைத்திற்கும் ஏற்றது. இருப்பினும், வணிகம் அல்லது மருத்துவ நோக்கங்கள் இல்லாமல் மட்டுமே நீங்கள் பார்வையிடுவீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (கேன்வா)
Author: admin
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாசி அருகே திருத்தங்கல் ஶ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். புராதான சிறப்பு மிக்க இக்கோயில் குடைவரை முறையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ தேரோட்ட திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவ திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, செங்கமலத்தாயார் சமேத ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதன்பின் கருட கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. ஆனி பிரமோற்சவ விழாவில் ஜூலை 8-ம் தேதி இரவு கருட சேவையும், 10-ம் தேதி இரவு சயன சேவையும் நடைபெறுகிறது. ஜூலை 12-ம் தேதி…
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘குட் நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதற்காக நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு தயாராகி வருகிறது. இப்படத்தினை ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கேள்விக்கு சாய் அபயங்கர், “அப்டேட் வரும்” என்று மட்டும் கூறியுள்ளார். இதன் மூலம் சாய் அபயங்கர் ஒப்பந்தமாகி இருப்பது உறுதியாகி இருக்கிறது. தொடர்ச்சியாக பல்வேறு பெரிய படங்களுக்கு இசையமைத்து வரும் சாய் அபயங்கர், தற்போது சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்க இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ‘மதராஸி’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, விநாயக் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஓர் அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்தார். இவர் அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அறிவியல் பாடம் எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த அரசுப் பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீஸார் சென்றனர். அப்போது உடலில் நல்ல தொடுதல், (good touch) கெட்ட தொடுதல் (bad touch) குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பு முடிந்ததும்…
கோவிட் 19 தொற்றுநோய் 2020 முதல் 2022 வரை உலகைப் பிடித்தது, இதன் விளைவாக மில்லியன் கணக்கான இறப்புகள் ஏற்பட்டன. இந்தியா குறிப்பாக மார்ச் 2021 முதல் ஜூன் 2021 வரை ஒரு கொடிய இரண்டாவது அலைகளைக் கண்டது, இதன் விளைவாக பல இறப்புகள், ஆக்ஸிஜன் தொட்டிகள் மற்றும் படுக்கைகள் இல்லாதது. எவ்வாறாயினும், கோவிட் தடுப்பூசியுடன் நம்பிக்கையின் ஒரு பார்வை தோன்றியது, இது வைரஸுக்கு எதிராக முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கவில்லை என்றாலும், இந்த நோயை மிகவும் கடுமையானதாக மாற்றியது.தாமதமாக, ஆரோக்கியத்தில் தடுப்பூசியின் நீண்டகால விளைவுகள், குறிப்பாக இருதய ஆரோக்கியம் பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன, ஏனெனில் அதிகமான இளம் இந்தியர்கள் “திடீர்” மாரடைப்பால் இறந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், சமீபத்தில், டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த கவலைகளை நிவர்த்தி செய்துள்ளனர். இந்தியாவில் கோவிட் தடுப்பூசிகளுக்கும் திடீர் இருதயக் கைது இறப்புகளுக்கும் இடையே…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரின்போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI ) ஏற்பாடு செய்த புதுயுக ராணுவ தொழில்நுட்பங்கள் நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் ஆர் சிங், “இந்தியா ஒரு எல்லையில் (பாகிஸ்தான் எல்லை) இரண்டு எதிரிகளை (பாகிஸ்தான், சீனா) கொண்டுள்ளது. உண்மையில் மூன்று எதிரிகள் (பாகிஸ்தான், சீனா, துருக்கி). போரில் பாகிஸ்தான் முன்னணியில் இருந்தது. சாத்தியமான அனைத்து உதவிகளையும் சீனா வழங்கியது. பாகிஸ்தான் கடற்படையில் 81% சீன வன்பொருட்களே(ஹார்டுவேர்) உள்ளன. முழு ராணுவ நடவடிக்கையின்போது வான் பாதுகாப்பு எவ்வாறு செயல்பட்டது என்பது முக்கியமானது. இந்த முறை, நமது நாட்டில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் முழுமையாகக் கவனிக்கப்படவில்லை. அடுத்த முறை, அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நமக்கு வலுவான வான்…
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே 8-ம் வகுப்பு மாணவரை காரில் கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி மற்றும் இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்துவிட்டதால், சிறுவனை கடத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேவுள்ள மாவநட்டியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் மகன் ரோகித் (13), இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் ரோகித் உடல்நிலை சரியில்லை என பள்ளிக்குச் செல்லாமல், வீட்டில் இருந்துள்ளார். சிறிது நேரத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளார். ஆனால், மாலை வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால், சிறுவனின் பெற்றோர் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் ரோஹித் கிடைக்கவில்லை. இதையடுத்து அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என…
மழைநீர் குடிப்பது பாதுகாப்பானதா? விஞ்ஞானிகள் பதிலை வெளிப்படுத்துகிறார்கள் மழைக்காலம் இந்தியாவில் வரும்போது, நாடு முழுவதும் உள்ள மக்கள் மழையையும் மழைநீரின் புத்துணர்ச்சியூட்டும் உணர்வையும் சேமிக்கவோ, பயன்படுத்தவோ அல்லது வெறுமனே அனுபவிக்கவோ தொடங்குகிறார்கள். உங்கள் குழந்தைப் பருவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மழையில் கைகளை அகலமாக திறந்து நிற்கிறது, முகத்தை வானத்தில் சாய்த்து, மேகங்களிலிருந்து நேராக அந்த குளிர் சொட்டுகளைப் பிடிக்க வாய் திறந்திருக்கும்? இது தூய்மையானதாகவும் மந்திரமாகவும் உணர்ந்தது. ஆனால் மழைநீர் இன்று குடிக்க உண்மையில் பாதுகாப்பானதா? சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறுகையில், பதில் தோன்றுவதை விட சிக்கலானது. மழைநீர் சுத்தமாகத் தோன்றினாலும், அதில் தூசி, சாம்பல், கூரைகளிலிருந்து கனரக உலோகங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மாசுபடுத்திகள் இருக்கலாம், அல்லது கண்ணுக்குத் தெரியாத “என்றென்றும் ரசாயனங்கள்”, அவை ஒருபோதும் உடைந்து இப்போது உலகெங்கிலும் உள்ள மிக தொலைதூர மழைநீர் மாதிரிகளில் கூட தோன்றும்.PFA கள் என்றால் என்ன, அவை ஏன் ஒரு கவலை?ஸ்டாக்ஹோம்…
‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ள நிலையில், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு மாணவிகளை வெளியூர் அழைத்துச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் 20 பக்க செயல்முறைகள் முழுவதும் ஆங்கிலத்திலேயே உள்ளதால் தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வருத்தமடைந்துள்ளனர். மதுரை உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றின் தீர்ப்பின் அடிப்படையில் மணவர்கள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு நடவடிக்கைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு மாணவிகளை வெளியூர் அழைத்துச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் நேற்று முன்தினம்…
திருவனந்தபுரம்: கடந்த ஜூன் 14-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் கடற்படை போர் விமானமான எஃப்- 35பி பழுதுபார்க்க முடியாத நிலையில் இருப்பதால், அந்த விமானத்தின் பாகங்களை தனித்தனியாக பிரித்து இங்கிலாந்துக்கு எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 14ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் எஃப்- 35பி ஸ்டெல்த் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. எனவே அந்த போர் விமானத்தை தனித்தனியாக பிரித்து, ராணுவ சரக்கு விமானம் மூலமாக இங்கிலாந்துக்கு மீண்டும் கொண்டு சென்று பழுது நீக்க திட்டமிடப்பட்டது. இந்த போர் விமானத்தை பழுது நீக்குவதற்காக ஜூலை 2-ம் தேதி இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு கேரளா வர திட்டமிடப்பட்டது, ஆனால் அவர்களின் வருகை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து நாளை (ஜூலை 5) 40 உறுப்பினர்களைக் கொண்ட இங்கிலாந்து…
