Author: admin

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழை, மேக வெடிப்பு மற்றும் வெள்ளத்தால் 69 பேர் உயிரிழந்ததாகவும், ரூ.700 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார். மேலும், மாநிலம் ‘போர் போன்ற இயற்கைப் பேரிடரை’ எதிர்த்து போராடுவதாகவும் அவர் கூறினார். மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து சட்டமன்ற துணை சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுடனான உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுக்விந்தர் சிங், “தற்போதைய இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு இமாச்சலப் பிரதேச அரசு மாதத்துக்கு ரூ.5,000 வழங்கும் என்று முடிவு செய்துள்ளோம். மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உணவு மற்றும் ரேஷன் விநியோகத்தையும் அரசு உறுதி செய்யும். இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர், 37 பேர் காணாமல் போயுள்ளனர். 110 பேர் காயமடைந்துள்ளனர். மொத்த சேதம் சுமார் 700 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில்…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 14 சீரிஸ் வரிசையில் ஒப்போ ரெனோ 14 மற்றும் ரெனோ 14 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் ஒப்போ ரெனோ சீரிஸ் வரிசையில் இரண்டு போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ ரெனோ 14 மற்றும் ரெனோ 14 புரோ மாடல் போன்கள் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. ரெனோ 14 – பச்சை மற்றும் வெள்ளை நிறத்திலும், ரெனோ 14 புரோ – சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்திலும்…

Read More

சென்னை: முதுகலை பட்டதாரிகள் மாதம்தோறும் ரூ.8,000 உதவித் தொகையுடன் தொல்லியல், கல்வெட்டியல் பாடங்களில் முதுகலை டிப்ளமா படிப்பு படிக்கலாம் என தமிழக அரசு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னையில் உள்ள தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் 2 ஆண்டு கால தொல்லியல், கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் முதுகலை டிப்ளமா படிப்புகளும், ஓராண்டு கால சுவடியியல் முதுகலை டிப்ளமா படிப்பும் வழங்கப்படுகின்றன. தொல்லியல் படிப்பில் ஏதேனும் ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களும், கல்வெட்டியல் படிப்பில் தமிழ், இந்திய வரலாறு, பண்டைய வரலாறு, தொல்லியல் வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றோரும், மரபு மேலாண்மை படிப்பில் பொறியியல் பட்டதாரிகளும், மானுடவியல், சமூகவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல், நிலத்தியல் (ஜியாலஜி)-இவற்றில் ஏதேனும் ஒரு…

Read More

சென்னை: பரந்தூர் மக்கள், உட்பட விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைக்காக தவெக என்றும் துணை நிற்கும்; தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு கண்டனம் உட்பட தவெக செயற்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னையை அடுத்த பனையூரில் தவெக செயற்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய்தான் இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டணி குறித்த முடிவெடுக்கும் அதிகாரத்தை விஜய்க்கு வழங்குவது என்றும் முடிவு எட்டப்பட்டது. மேலும், தவெகவின் மாநில மாநாட்டை ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவது, பேரவைத் தேர்தலையொட்டி விஜய் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்: பரந்தூர் மக்கள் உட்பட விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைக்காகத் தவெக என்றும் துணை நிற்கும் கொள்கை…

Read More

உலகின் மிக விலையுயர்ந்த வாசனை திரவியத்தைப் பற்றி இங்கே உள்ளது, இது 1.3 மில்லியன் டாலர் விலையில் உள்ளது. அஸ்கர் ஆடம் அலி உருவாக்கியது, இந்த மந்திர நகரத்தின் இந்த சாரத்தை முழுமையாக்க மூன்று ஆண்டுகள் மற்றும் 494 சோதனைகள் எடுத்தன. ஆயிரக்கணக்கான வைரங்கள், தங்கம், வெள்ளி, முத்துக்கள் மற்றும் புஷ்பராகம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட ஒரு முரானோ கண்ணாடி பாட்டில் இந்த வாசனை திரவியமானது. துபாய் மீண்டும் அதைத் திரும்பப் பெற்றுள்ளது, இது வேறு யாரையும் போல ஆடம்பரத்தை எவ்வாறு செய்கிறது என்பதை உலகுக்குக் காட்டுகிறது. உலகின் மிக விலையுயர்ந்த வாசனை திரவியமான ஷுமுக் என்று அழைக்கப்படுவதை நகரம் கைவிட்டது, அதன் தாடை-குறைக்கும் 3 1.3 மில்லியன் (ஆம், அது சுமார் 8 10.8 கோடி!). நபீல் வாசனை திரவியங்களின் நிறுவனர் அஸ்கர் ஆடம் அலி, வாசனை திரவியத்தால் வடிவமைக்கப்பட்ட ஷுமுக், மூன்று ஆண்டுகள் மற்றும் 494 சோதனைகளை முழுமையாக்கினார், இவை…

Read More

புதுடெல்லி: மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடும் குகி ஆயுத குழுக்களுடன் 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு மத்திய அரசுக்கு, மணிப்பூரைச் சேர்ந்த 4 அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, மணிப்பூர் பழங்குடி மக்கள் மன்றம், மெய்த்தி கூட்டணி, மலைவாழ் நாகா ஒருங்கிணைப்புக் குழு, தடோ இன்பி மணிப்பூர் (TIM) ஆகியவை கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. அந்தக் கடிதத்தில், ‘குகி ஆயுதக் குழுக்களுக்கு எதிரான பாதுகாப்புப் படை நடவடிக்கையை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், குகி தேசிய அமைப்பு (KNO) மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி (UPF) ஆகியவை கையெழுத்திட்டுள்ளன. அ ந்த ஒப்பந்தத்தின் முன்னுரிமையில், “கேஎன்ஓ மற்றும் யுபிஎஃப் ஆகியவை வன்முறைப் பாதையை முற்றிலுமாக கைவிடும். கொலை, காயப்படுத்துதல், கடத்தல், பதுங்கியிருந்து தாக்குதல், மிரட்டல், அச்சுறுத்தும் விதமாக ஆயுதங்களை எடுத்துச் செல்வது, ‘வரி’ அல்லது…

Read More

மதுரை: “திமுகவை வேண்டாம் என்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் கொலையை முதலில் வெளிப்படுத்தியது நான்தான். அதன் பிறகே மற்ற கட்சிகள் வந்தன. இப்போது அஜித்குமார் வீட்டுக்கு எல்லோரும் செல்கின்றனர். இந்தச் சம்பவத்துக்கு தமிழக முதல்வர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழக முதல்வர், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிறார். இதனால் யாருக்கு என்ன லாபம், யாருக்கு நஷ்டம் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தவெக தலைவர் விஜய் உட்பட திமுக ஆட்சிக்கு வர வேண்டாம் என யாரெல்லாம் நினைக்கிறார்களோ அவர்கள் ஓரணியில் திரள வேண்டும். திமுக கூட்டணியில் நான் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், செல்வப்பெருந்தகை யாராக இருந்தாலும் எல்லா இடத்திலும் நட்புணர்வுடன் தான் பழகி வருகிறேன். சலசலப்பை ஏற்படுத்துவது என் வேலையல்ல. முதல்வர்…

Read More

மக்கள் பணத்தை இழக்கும்போது, ​​துன்பம் பெரும்பாலும் நிதி வெற்றிக்கு அப்பாற்பட்டது; இது அடையாளம், கட்டுப்பாடு அல்லது சுய மதிப்பு இழப்பு போல் உணர்கிறது. ஆன்மீகத் தலைவர் சத்குருவின் கூற்றுப்படி, உண்மையான வலி பணத்திலேயே இல்லை, ஆனால் உணர்ச்சிபூர்வமான இணைப்பில் நாம் அதைச் சுற்றி உருவாகிறோம். நாங்கள் நாணயத்தை மட்டும் இழக்கவில்லை; நாங்கள் அதனுடன் இணைந்த பெருமை, பாதுகாப்பு அல்லது எதிர்கால கனவுகளை இழக்கிறோம். தனது போதனைகளில், சத்குரு முன்னோக்கின் மாற்றத்தை ஊக்குவிக்கிறார், பணத்தை ஒரு கருவியாகக் காணும்படி தனிநபர்களை வலியுறுத்துகிறார், சுயத்தின் வரையறை அல்ல. நடைமுறை ஆன்மீக ஞானத்தின் மூலம், உண்மையான செல்வம் வசிக்கும் இடத்தில் தெளிவு, பின்னடைவு மற்றும் உள் சமநிலையுடன் நிதி பின்னடைவுகளை செல்ல மக்களுக்கு உதவுகிறார்பணம், வருத்தம் மற்றும் சுய மதிப்பு குறித்த சத்குருவின் போதனைகள்: வங்கி நிலுவைத் தொகுதிக்கு அப்பாற்பட்ட பாடங்கள்ஆதாரம்: சென்டர்பணம் நீங்கள் யார் என்பதல்லசத்குருவின் தத்துவத்தின் மையத்தில் ஒரு சக்திவாய்ந்த உண்மை: “பணம்…

Read More

புதுடெல்லி: தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உரியது என்றும், அவரது பக்தராக தான் இதை தெரிவிப்பதாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மேலும், “சீனாவின் அறிக்கைக்கு எதிர்வினையாற்ற நான் விரும்பவில்லை” என்றார். இது தொடர்பாக இன்று (ஜூலை 4) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நான் தலாய் லாமாவின் பக்தர். தலாய் லாமாவைப் பின்பற்றுபவர்கள் உலகில் எங்கு இருந்தாலும், அவர்களின் விருப்பம் ஒன்றுதான். தனது வாரிசை தலாய் லாமாவே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அது. தலாய் லாமா விவகாரத்தில் எவ்வித குழப்பத்துக்கும் இடமில்லை. பவுத்த மதத்தைப் பின்பற்றுபவர்களும், தலாய் லாமாவை பின்பற்றுபவர்களும் தலாய் லாமா தனது வாரிசை, தானே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது குறித்து இந்திய அரசு பேச வேண்டிய அவசியமில்லை. சீனாவின் அறிக்கைக்கு எதிர்வினையாற்ற நான் விரும்பவில்லை. சீன அரசின் சார்பாகவோ அல்லது இந்திய அரசின் சார்பாகவோ நான்…

Read More

சென்னை: “சாதி, மதம் கடந்து தங்களுடைய குடியிருப்புகளை, விவசாய பூமியை, வாழ்வாதாரத்தை, நீர்நிலைகளை, காப்பாற்ற ஒன்றாக நின்று போராடிக் கொண்டிருக்கிற பரந்தூர் மக்களை தயவுசெய்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேச வேண்டும். அமைச்சர்களோ, அதிகாரிகளோ சந்தித்துப் பேசக்கூடாது. முதல்வரே நேரில் சந்தித்துப் பேச வேண்டும். அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை அவர்களுக்கு முதல்வர் கொடுக்க வேண்டும்,” என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தினார். சென்னையை அடுத்த பனையூரில் தவெக மாநில செயற்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இக்கூட்டத்தில், விஜய் பேசியது: “கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக, மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி, மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர் காய நினைக்கிறது பாஜக. அவர்களின் இந்த விஷமத்தனமான வேலைகள், வேறெங்கு வேண்டுமானாலும்…

Read More