Author: admin

புற்றுநோயை விலக்கி வைப்பதற்கான 7 வழிகள் (30 ஆண்டுகளாக இந்த நிலையைப் படித்த ஒரு ஆராய்ச்சியாளரிடமிருந்து)

Read More

ஒரு செல்சியஸ் எரிசக்தி பானத்தை உட்கொண்ட பிறகு பீதி தாக்குதல் அறிகுறிகளை அனுபவிப்பது குறித்த டிக்டோக் பயனரின் கூற்று பரவலான கவலையைத் தூண்டியுள்ளது. எரிசக்தி பானங்களில் அதிக காஃபின் அளவு, சில நேரங்களில் 500 மில்லிகிராம் தாண்டி, கவலை மற்றும் இதய படபடப்பைத் தூண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர், குறிப்பாக இத்தகைய தூண்டுதல்களுக்கு பழக்கமில்லாத நபர்களில். ஆற்றல் பானங்கள் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். மக்கள் பெரும்பாலும் இந்த பானங்களை விழித்திருக்க, கவனத்தை மேம்படுத்த அல்லது ஆற்றலை அதிகரிக்க இந்த பானங்களை உட்கொள்கிறார்கள். ஆனால் இந்த ஆற்றல் பானங்கள் நமது நரம்பு மண்டலத்தைத் தூண்டுகின்றனவா? ஒரு பெண்ணின் வீடியோ (@Quensadillareturns) டிக்டோக்கில் வைரலாகி வருகிறது, ஒரு ஆற்றல் பானம் குடிப்பது பீதி தாக்குதல்களின் விளிம்பில் அவளை விட்டுவிட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து. “மெத்தாம்பேட்டமைன்களுக்காக செல்சியஸ் எனர்ஜி பானத்தை யாராவது சோதித்திருக்கிறார்களா? ஏனென்றால் நான் ஐந்து மணி நேரத்திற்கு முன்பு ஒரு…

Read More

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தொடர்ந்து ஆக. 4-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி. குறைந்தபட்ச வெப்பநிலை 82.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read More

சென்னை: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ இன்று மாலை (ஜூலை 30) விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) சேர்ந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை ரூ.12,000 கோடியில் வடிவமைத்துள்ளன. பல்வேறுகட்ட சோதனைகள் முடிந்த நிலையில் நிசார் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (ஜூலை 30) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட் ஏவுதலின் 27 மணி நேரம் 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 743 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது…

Read More

சென்னை: கலை பண்பாட்டுத்துறையின் கீழ் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு வண்ணக்கலை, சிற்பக்கலை, விஷுவல்கம் யூனிகேஷன் மற்றும் டிசைன் ஆகிய பாடப்பிரிவுகளில் 4 ஆண்டு கால பிஎஃப்ஏ படிப்புகளும், 2 ஆண்டு கால எம்எஃப்ஏ படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் ஒருங்கிணைந்த டிசைன், அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய இரு பாடப் பிரிவுகளில் 4 ஆண்டு கால பிஎஃப்ஏ படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சேருவதற்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்படிப்புகளில் சேர்ந்து பயில விரும்புவோர் கலை பண்பாட்டுத்துறையின் இணைய தளத்தை (www.artandculture. tn.gov.in) பயன்படுத்தி ஆக. 9-ம் தேதி மாலை 6 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

Read More

சென்னை: பள்​ளி, கல்​லூரி​களுக்கு அரசு பேருந்து சேவை வழங்​கு​வது தொடர்​பாக மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் ஆலோசனை செய்து வரு​கிறது. இது தொடர்​பாக அத்துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்​னை​யில் மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் 27 பணிமனை​களில் இருந்து நாள்​தோறும் 3,233 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. பள்​ளி, கல்​லூரி மற்​றும் அலு​வலக நேரங்களில் மாநகர பேருந்துகளில்கால் ஊன்ற இடம் இல்​லாத அளவுக்கு கடுமை​யான நெரிசல் காணப்​படும். இவற்றை கருத்​தில் கொண்டு பெண் பயணி​கள் அதி​க​மாக பயணிக்​கும் வழித்​தடங்​களில் மகளிர் மட்​டும் பயணிக்​கும் வகை​யில் 50 சிறப்பு பேருந்​துகளை இயக்​கலாம் என்று ஆலோசித்து வரு​கிறோம். இதேபோல், மாணவ-​மாணவி​கள் பேருந்​துகளில் இருக்​கை​யில் அமர்ந்​த​படி பயணிப்​பதை உறுதி செய்​வதற்​காக அவர்​களுக்கு என தனி​யாக 50 (நடைகள்) சிறப்பு பேருந்துகளை இயக்​க​வும் திட்​ட​மிட்​டுள்ளோம். அதாவது, பள்​ளி, கல்​லூரி நேரங்​களில் குறிப்​பாக காலை மற்​றும் மாலை​யில் கல்வி நிறுவன வளாகங்​களுக்​குள் நேரடி​யாக சென்று பேருந்து சேவை​கள் அளிக்​கும் வகை​யில் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அதி​லும்…

Read More

சென்னை: மசோதா மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பை எதிர்த்து குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் மீதான வழக்கு ஆக.19-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா. ஆர். மகாதேவன் அமர்வு, “மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க ஆளுநர், குடியரசு தலைவருக்கு மூன்று மாத காலம் என்ற ஒரு வரம்பை நிர்ணயித்து தீர்ப்பளித்தது. மேலும், தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதால் ஆளுநர் வசம் இருந்த மசோதாக்களை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சட்டமாக்கியது. 14 கேள்விகள்: இந்நிலையில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கால நிர்ணயம் செய்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் அரசியல் சாசன பிரிவு 143-ஐ…

Read More

சென்னை: சென்​னையி​லிருந்து துர்​காபூர் புறப்பட இருந்த விமானத்​தின் அவசர கால கதவைத் திறக்க முயற்சி நடந்​த​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. சென்​னையி​லிருந்து மேற்கு வங்க மாநிலம் துர்​காப்​பூர் செல்​லும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் புறப்​படத் தயா​ரானது. விமானத்​தில் 158 பயணி​கள், 6 விமான ஊழியர்​கள் இருந்​தனர். விமானத்​தின் கதவு​கள் மூடப்​பட்​டு, விமானம் ஓடு​பாதை​யில் ஓட இருந்​த​போது, விமானத்​தின் அவசர கால கதவு திறக்கப்படுவதற்கான எச்​சரிக்கை மணி, விமான கேப்​டன் கேபினில் ஒலித்​தது. இதையடுத்து விமான பணிப்​பெண்​கள் விரைந்து சென்று அவசர கால கதவைத் திறக்க முயன்​றது யார் என்​பதை பார்த்​தனர். அப்​போது அவசர கால கதவு அருகே‌ உள்ள இருக்கையில் அமர்ந்​திருந்த தெலங்​கானா மாநிலம் ஐதரா​பாத்தை சேர்ந்த சர்க்​கார் (27) என்ற பயணி​தான் கதவைத் திறக்க முயன்றார் என்​பது தெரிய​வந்​தது. விமான பாது​காப்பு அதி​காரி​கள் விமானத்​துக்​குள் ஏறி, அந்த பயணி​யிடம் விசா​ரணை நடத்​தி​ய​போது, சென்னை ஐஐடி​யில் ஆராய்ச்சி படிப்பு படிப்​ப​தாக​வும், சொந்த வேலை​யாக…

Read More

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 30) தொடங்குகிறது. சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நேரடியாகவும், பொதுப் பிரிவுக்கு ஆன்லைன் வாயிலாகவும் நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 495 எம்பிபிஎஸ் இடங்கள், 119 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மேலும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,736 எம்பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 6-ல் தொடங்கி 25-ம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 72,743 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களின் தரவரிசை பட்டியல் கடந்த 25-ம் தேதி வெளியிடப்பட்டது. அரசு…

Read More

ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 5 பேர், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேர் என மொத்தம் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் கடலுக்குச் சென்ற படகு உரிமையாளர் ஜஸ்டின் மற்றும் மீனவர்கள் சைமன், சேகர், மோபின், டென்சன் ஆகியோர் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 5 மீனவர்களையும் சிறைபிடித்து, அவர்களது படகைப் பறிமுதல் செய்தனர். கைதான 5 மீனவர்களும் நேற்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை ஆக. 7-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதேபோல, ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டேவிட் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகை, புத்தளம் கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை காலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகிலிருந்த டிகோசன், முருகேசன், களஞ்சியராஜ், ஆனந்…

Read More