சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கான பாதுகாப்பு Z+ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் வரும் ஜூலை 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கான பாடல் மற்றும் லோகாவை இன்று இபிஎஸ் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் இந்த சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் இபிஎஸ். இந்தச் சூழலில் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில், இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Author: admin
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓலா, ஊபர் போன்ற வாடகை கார் சேவைக் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது துரதிருஷ்டவசமானது. சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதித்தது மக்கள் நலனுக்கு எதிரானது. மேலும், ‘பீக் அவர்ஸ்’ கட்டண உயர்வு 2 மடங்காக உயர்த்திக்கொள்ள அனுமதித்திருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதிப்புக்கு உள்ளாக்கும். இதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்துள்ள கட்டண உயர்வு அனுமதியை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய கோரும் வாழ்க்கை முறையில் இதயத்திற்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிப்பது முக்கியமானது. ஒரு சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் புகையிலை விட்டு வெளியேறுவது அவசியமான படிகள். போதுமான தூக்கம் பெறுதல், கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரையை நிர்வகித்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவை ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் இன்றியமையாதவை. உலகின் அனைத்து தொலைபேசிகளையும் விட உங்கள் மூளை அதிக செய்திகளைச் சுடுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதேபோல், உங்களை உயிருடன், கூர்மையான மற்றும் செழிப்பாக வைத்திருக்க, உங்கள் இதயம் ஒரு நாளைக்கு 100,000 முறை துடிக்கிறது. இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமானது என்றாலும், இன்றைய வாழ்க்கை முறையுடன் நாம் பெரும்பாலும் அழுத்தத்தை சேர்க்க முனைகிறோம். உட்கார்ந்த பழக்கவழக்கங்கள் முதல் மோசமான உணவுத் தேர்வுகள் வரை, நமது நவீன வாழ்க்கை முறை பெரும்பாலும் நாம் மிகவும் நம்பியிருக்கும் உறுப்புகளுக்கு…
புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. பல நேரங்களில் கிளவுட் பர்ஸ்ட் எனப்படும் மேகவெடிப்பு மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் சேதம் விளைந்துள்ளது. கனமழைக்கு இதுவரை அங்கு 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 40 பேர் காணாமல் போயுள்ளனர். அதிகளவாக மண்டி மாவட்டத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட மண்டியில் மட்டும் ரூ.400 கோடி அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழை, ஆற்றில் வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மழை, வெள்ளத்தில் சிக்கி 110 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் உறுதி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது;…
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மலையாளப்படம் ‘த்ரிஷ்யம்’. இந்தப் படம் மலையாளத்தில் வசூல் அள்ளியதை அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இதன் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன், கவுதமி நடித்தனர். இந்நிலையில் ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ரஜினிகாந்திடம்தான் முதலில் கேட்டதாக இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “த்ரிஷ்யம் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் பாராட்டினார். அதன் ரீமேக்கில் நடித்தால், படத்தில் ஹீரோவை போலீஸ் தாக்குவது போன்று வரும் காட்சியைத் தனது ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று தயங்கினார். சில நாட்களுக்குப் பிறகு அந்த கேரக்டரில் நடிக்க சம்மதித்தார். ஆனால் அதற்குள் கமல்ஹாசன் நடிப்பில் படத்தைத் தொடங்கிவிட்டதால், அவர் நடிக்க இயலாமல் போய்விட்டது” என்று கூறியுள்ளார்.
முன்பு நாம் எழுதி இருந்தபடியே சங்கரன்கோவில் திமுக நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரிக்கு எதிராக திமுக கவுனசிலர்களுடன் கூட்டணி போட்டு அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது கடந்த 2-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானம் வெற்றிபெற்று உமா மகேஸ்வரி தனது பதவியை இழந்திருக்கிறார். மொத்தம் 30 வார்டுகளைக் கொண்ட சங்கரன்கோவில் நகராட்சியில் திமுக வென்றது 9 வார்டுகளை மட்டும் தான். 12 வார்டுகளை அதிமுக வென்றிருந்தது. எஞ்சிய வார்டுகளை கூட்டணிக் கட்சிகளும் சுயேச்சைகளும் கைப்பற்றினர். இதனால் சேர்மன் தேர்தலில் திமுக-வும் அதிமுக-வும் தலா 15 வாக்குகளைப் பெற்றன. இதையடுத்து நடந்த அதிர்ஷ்ட குலுக்கலில் திமுக-வின் உமா மகேஸ்வரி சேர்மனானார். அதேசமயம், அதிமுக-வைச் சேர்ந்த கண்ணன் (எ) ராஜு 16 வாக்குகளைப் பெற்று திமுக-வை தோற்கடித்து வைஸ் சேர்மனானார். இந்த நிலையில், 2023-ல் திமுக-வுடன் கூட்டணி போட்டு உமா மகேஸ்வரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா…
ஹார்வர்ட் நரம்பியல் விஞ்ஞானி கருத்துப்படி
பாட்னா: பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிஹார் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 5 லட்சம் பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்படும். இந்தத் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. இந்த நாப்கின்களை கட்சி மகளிர் பிரிவினர் வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் சார்பில் வழங்கப்படவுள்ள இலவச நாப்கின்கள் அடங்கிய பாக்கெட்டில் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி படங்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் தளத்தில் கூறும்போது, “மகளிருக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் பாக்கெட்களில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இது பிஹார் மாநில பெண்களை அவமதித்தது போன்றதாகும். மகளிருக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் உள்ளது. வரும் தேர்தலின்போது பிஹார் மாநில பெண்கள், காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு பாடம் கற்பிப்பார்கள்’’…
காதல் திருமணம் செய்துகொண்ட கோகுல் (சிவா), குளோரி (கிரேஸ் ஆண்டனி) ஆகியோரின் பத்து வயது மகன் அன்பு (மிதுன் ரியான்). பொருளாதாரத் தேடல்களில் இருக்கும் இருவரும் அன்புவைத் தனியாக வீட்டில் விட்டுச் செல்கின்றனர். ஒரு கட்டத்தில் பிடிவாதம் கொண்ட அன்புவை அழைத்துக் கொண்டு, அன்றாடங்களில் இருந்து விடுபட்டு நீண்ட ‘பைக் ரைடு’க்குச் செல்கிறார் கோகுல். அந்தப் பயணம்அவர்களுக்கு எதைப் புரிய வைக்கிறது? அங்கு சந்திக்கும் மனிதர்கள், என்ன மாற்றத்தை அவர்களுக்குள் ஏற்படுத்துகிறார்கள் என்பது கதை. பொருளாதார தேடலுக்குப் பின்னால் பரபரத்து ஓடும் அவசர வாழ்க்கையில் குழந்தைகளின் உலகத்தையும் ஆசைகளையும் எளிதாக மறந்து விடுகிறார்கள், பெற்றோர்கள். அவர்களின் எதிர்காலத்துக்காக அதிக செலவு செய்து படிக்க வைத்தாலும் தேவைகளை காஸ்ட்லியாக செய்தாலும் குழந்தைகளின் மனது அதில் இல்லை. அவர்கள் தங்கள் இயல்பை, ‘குழந்தைமை’யைத் தேடுகிறார்கள் என் பதை, நகைச்சுவையோடும் அக்கறையோடும் உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறது படம். வழக்கமான தனது பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு…
சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அத்திப்பட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை 2 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இந்த பாதை வழியாக மின்சார, விரைவு, சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவு, சரக்கு ரயில்கள் செல்லும் போதெல்லாம், மின்சார ரயில்கள் ஆங்காங்கே ஓரமாக நிறுத்தப்படுகின்றன. இதனால் இத்தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள் தினமும் 45 நிமிடங்கள் வரையில் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. எனவே இத்தடத்தில் கூடுதலாக ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, அத்திப்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே 3,4வது பாதை அமைக்க தெற்கு ரயில்வே தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், ரூ.365.42 கோடி மதிப்பிலான 3, 4-வது பாதை பணிக்கான பரிந்துரைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை புறநகரில் மற்ற வழித்தடங்களில் கூடுதல் பாதைகள் இருப்பதுபோல, கும்மிடிப்பூண்டி தடத்தில் கூடுதல் பாதை இல்லை. சென்னை…
