பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் கடந்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 269 ரன்கள் குவித்திருந்தார். இந்திய அணி தற்போது 484 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா 587 ரன்கள், இங்கிலாந்து 407 ரன்கள் எடுத்தன. 180 ரன்கள் முன்னிலை உடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. நான்காம் ஆட்டத்தின் தொடக்கத்தின் போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் கருண் நாயர் – 26 ரன்கள் மற்றும் கே.எல்.ராகுல் – 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணைந்து 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.…
Author: admin
சென்னை: “திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் முறையான அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் அன்னதானம் செய்யலாம்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், கோயில் கும்பாபிஷேகத்தை அனைத்து பகுதிகளிலும் காணும் வகையில் எல்இடி திரைகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 6,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 25 மருத்துவக் குழுக்களும், 27 இடங்களில் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளன. கும்பாபிஷேக விழா பணிகளுக்காக மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.…
பழங்கள் உண்மையில் ஆரோக்கியமானவை, ஆனால் அவை எப்படி, எப்போது சாப்பிடப்படுகின்றன என்பது மிகவும் முக்கியமானது. சுமன் அகர்வால் சரியாக விளக்குவது போல, சிறிய பழக்கவழக்கங்கள் -வெறும் வயிற்றில் ஒரு வாழைப்பழத்தைப் பிடிப்பது போன்றவை -அறியாமல் காலப்போக்கில் பெரிய உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உடலைக் கேட்பதும், மனதுடன் சாப்பிடுவதும் ஆழமான மற்றும் நிலையான ஆரோக்கிய உணர்வை உருவாக்கும்.
திருப்புவனம்: “காவல் துறை சட்டத்தைத் தனது கையில் எடுத்துக்கொண்டு அத்துமீறிச் செயல்படுகிறது. இந்நிலை நீடித்தால் திமுக ஆட்சி வீழ்ச்சியை எட்டுவது உறுதி” என முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில், போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் அஜித்குமார் குடும்பத்தினரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தலைவர் ஒ.பன்னீர்செல்வம் சந்தித்து ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியவது: “காவல்துறை சட்டப்படி செயல்படாமல் கொடூரமான முறையில் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்துள்ளார். போலீஸாரால் தாக்கப்பட்டு அஜித்குமார் உயிரிழந்தது மருத்துவ அறிக்கை மூலம் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. பொதுவாக விசாரணை மனிதாபிமான அடிப்படையில் நடக்க வேண்டும். நீதிமன்றத்துக்குத்தான் சட்டப்படி நீதி வழங்கும் பொறுப்பும், கடமையும் இருக்கிறது. ஆனால், காவல் துறை சட்டத்தைத் தனது கையில் எடுத்துக்கொண்டு அத்துமீறிச் செயல்படுகின்றது. இதற்கு அஇஅதிமுக தொண்டர்கள்…
கோலபுரி சாப்பல்களின் வடிவமைப்பை தங்கள் புதிய செருப்பு வரிசையில் கையகப்படுத்தியதாக இந்தியாவில் பிராடா சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்கிறது. ஒரு பொது நலன் வழக்கு கோலாப்பூர் கைவினைஞர்களுக்கு மன்னிப்பு மற்றும் இழப்பீடு கோருகிறது, பிராடா கைவினைப் கலாச்சார முக்கியத்துவம் மற்றும் ஜி.ஐ. இந்த மனு எதிர்கால சுரண்டலிலிருந்து சுதேச கைவினைப்பொருட்களைப் பாதுகாப்பதற்கும் நியாயமான அங்கீகாரத்தை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் தலையீட்டை நாடுகிறது. மிலன் பேஷன் வீக்கில் பிராடாவின் பேஷன்-ஃபார்வர்ட் தருணம் அதை சூடான நீரில் தரையிறக்கியுள்ளது, இந்த நேரத்தில், இது ஓடுபாதை நாடகம் மட்டுமல்ல. ஆடம்பர பிராண்ட் இந்தியாவின் சின்னமான கோலபுரி சாப்பல்களுக்கு மிகவும் ஒத்ததாகக் காணப்பட்ட ஒரு ஜோடி கால்-வளைய தோல் செருப்பைக் காட்டியது, இப்போது பம்பாய் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கு (பிஐஎல்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பேராசிரியர் அட்வ் கணேஷின் ஹிங்மயர் (புவியியல் அறிகுறிகளில் நிபுணர் மற்றும் இந்திய கைவினைப்பொருட்களைப் பாதுகாப்பதில் புதியவர் அல்ல) தாக்கல் செய்த பிஐஎல், பல…
திருச்சி: “தவெக செயற்குழு கூட்டத்தில் அதிமுக பற்றி விஜய் எதுவும் சொல்லவில்லை. அதிமுகவை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா?” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியின் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுக முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்பதை தேசிய அளவிலான பார்வையுடன் கூடிய கருத்தாக பார்க்கிறேன். தமிழகத்தில் சங்பரிவார் அரசியல் எந்த வகையிலும் நுழையாமல் தடுக்க அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஓர் அணியில் திரள வேண்டும். பாமக விவகாரத்தில் தந்தையும், மகனும் ஒன்று சேருவார்கள் என நான் நம்புகிறேன். ஒரே பாமகவாகத்தான் தேர்தலை சந்திப்பார்கள். நடிகர் விஜய்க்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. தற்போது தாமதமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது. இருந்தாலும் இதை விசிக வரவேற்கிறது. அதிமுக கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக தான். ஆனாலும், தேர்தலுக்குப்…
மும்பை: “தாக்கரேக்கள் இருவரையும் ஒன்றிணைத்தது நான்தான் என ராஜ் தாக்கரே கூறி இருக்கிறார். அவர்களை ஒன்றிணைத்ததற்கான பெருமையை எனக்கு அளித்ததற்கு நன்றி” என்று மகாராஷ்டிர முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக – சிவ சேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, சமீபத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதற்கு, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) கட்சியும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவ நிர்மான் சேனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. “அரசு எங்கள் மீது இந்தியை திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என அவர்கள் கூறினர். இதற்கு பெரும் ஆதரவு திரண்டதை அடுத்து, மாநில அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெற்றது. மாநில அரசின் இந்த முடிவை அடுத்து, அதற்கான வெற்றி விழா மும்பையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,…
சென்னை: வெற்றிகரமான ஒரு தமிழ்நாட்டை மீண்டும் உருவாக்குவதே `மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்` எனற இந்தச் சுற்றுப் பயணத்தின் லட்சியம். இது ஒட்டுமொத்த தமிழ்நாடும் மாற்றத்தை நோக்கி நடக்கும் வெற்றிப் பயணம். ‘ஸ்டாலின் அரசை வீழ்த்தும் பயணம்’ இந்தப் பயணத்தில் முன்னணிக் களவீரனாக நான் இருப்பேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் சுற்றுப்பயணத்துக்கான அறிவிப்பை இன்று காலை வெளியிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது சுற்றுப் பயணத்துக்கான லோகோ மற்றும் பாடலையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தமிழக மக்களுக்கு அதிமுக தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து விவரித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: என்னுள் கலந்திருக்கும் எனதருமைத் தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் ஓர் இனிய செய்தியை சொல்லவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இதை எழுதும்போதே எனது உள்ளம் மகிழ்ச்சியாலும் உவகையாலும் நிறைகிறது. என்னைப் பற்றி எல்லாமும் உங்களுக்குத் தெரியும்.…
ஆப்டிகல் மாயைகள் சமீபத்தில் இணையத்தை ஒரு சுறுசுறுப்புக்கு அனுப்பியுள்ளன, ஏனெனில் அவை நம் மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் இது நமது அவதானிப்பு திறன்களின் சரியான சோதனையாகவும், தீவிரமான கண்ணாகவும் இருக்கலாம். ஒரு ஆப்டிகல் மாயை, சாராம்சத்தில், ஒரு காட்சி நிகழ்வு, அங்கு மூளை அந்த நேரத்தில் கண்கள் உணர்கிறது என்பதை தவறாகப் புரிந்துகொள்கிறது. கண்களால் அனுப்பப்பட்ட தகவல்கள் மூளை எவ்வாறு செயலாக்குகிறது மற்றும் அது பார்ப்பதை புரிந்துகொள்கிறது என்பதோடு பொருந்தாத போது இது நிகழ்கிறது. இந்த மாயைகள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களைப் பார்ப்பதற்கு அல்லது யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக பொருட்களை உணருவதில் நம்மை ஏமாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நிலையான படம் நகரும் என்று தோன்றலாம், அல்லது இரண்டு வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை சமமற்றதாகத் தோன்றலாம்.முதலில் நீங்கள் என்ன கண்டுபிடிக்க முடியும்?இந்த படத்தை கவனமாக பாருங்கள். நீங்கள் முதலில் பார்ப்பதைப் பொறுத்து, உங்கள் ஆளுமையின் உள்ளார்ந்த பகுதியை நாங்கள் வெளிப்படுத்துவோம்.…
இஸ்லாமாபாத்: லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு எவ்வித ஆட்சேபனையும் இருக்காது என்று பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான பிலாவல் பூட்டோ, அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் விவாதிக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய அமைப்புகள் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளித்த குற்றச்சாட்டில் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயத் 33 ஆண்டுகளுக்கான சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவர் மசூத் அசார், ஆப்கனிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் நம்புகிறது. அவர் பாகிஸ்தானில் இருக்கிறார் என்பது இந்தியாவின் வாதமானால், அது குறித்த தகவல்களைக் கொடுத்தால் நாங்கள் அவரை கைது செய்வோம். 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு ஹபீஸ் சயீத் மூளையாக செயல்பட்டதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது.…
