வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் ‘மாரீசன்’ படம் வரும் ஜூலை 25 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் படம் ‘மாரீசன்’. சுதீஷ் சங்கர் இயக்கும் இதில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமான இதன் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் வரும் ஜூலை 25 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கிராம பின்னணியில் ட்ராவலிங் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது.
Author: admin
சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். சம்பவத்தை அறிந்தவர் நேரில் சாட்சியளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (29) போலீஸார் தாக்கியதில் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, ஜூலை 2-ம் தேதியில் இருந்து திருப்புவனம் காவல்நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் தங்கி, மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். அவரிடம் ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் வழக்கு தொடர்பான ஆவணங்களை அளித்தனர். தொடர்ந்து அவர் அஜித்குமார் தாயார், சகோதரர், உறவினர்கள், போலீஸார், கோயில் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர், அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்ட பலரிடம் கடந்த 2…
சென்னை: கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படத்தை விளம்பரப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தில் லிஜோ மோல் ஜோஸ், சுதேஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சசிகுமார் பேசியதாவது: “‘ஃப்ரீடம்’ திரைப்படம் அதுவாகவே அமைந்த ஒன்று. இது திட்டமிட்டு நடக்கவில்லை. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ரிலீஸுக்கு முன்பே இதுதான் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். ’சுதந்திரம்’ என்று டைட்டில் வைக்க நினைத்தோம். அது ஏற்கெனவே வைத்துவிட்டார்கள். ‘விடுதலை’ என்று வைக்க முடியாது. இப்போது எல்லாமே ஓடிடி நிறுவனங்களின் கையில்தான். டைட்டில் கூட அவர்கள் கைக்கு சென்றுவிட்டது. அதனால் தான் ‘ஃப்ரீடம்’ என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தோம். கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படத்தை விளம்பரப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த படத்துக்கே கூட அப்படி…
சென்னை: கூட்டணி குறித்த தவெக தலைவர் விஜய் எடுத்துள்ள முடிவு குறித்து குறிப்பிடும்போது, “மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். இது விஜய்க்கான மறைமுக அழைப்பாகவே கருதப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். ஜெயலலிதாவும் அந்த வழியில் செயல்பட்டு தமிழகத்துக்கு சிறப்பான ஆட்சியைத் தந்தார். தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்தது முந்தைய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிதான். அதனால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. இப்போது நடக்கும் திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களையும், மக்கள் படும் துன்பங்களையும் எடுத்துக்காட்டும் விதமாகவே எனது தேர்தல் சுற்றுப் பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்குகிறேன். 234 தொகுதிகளுக்கும் நான் சுற்றுப்பயணம் செய்து மக்களை…
புதுச்சேரி:புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் கட்டியதில் ஆட்சியாளர்கள் இமாலய ஊழல் புரிந்துள்ளனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி ஊழல் செய்தவர்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. அடிப்படை வசதிகள் குறைபாட்டால் இந்த புதிய பேருந்து நிலையத்தை முழுவதுமாக இடித்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29.50 கோடி செலவில் கட்டப்பட்டது. இதனைக் கடந்த மே 2-ம் தேதி துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோர் திறந்து வைத்தனர். புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயங்கத் தொடங்கினாலும், இங்கு கடைகள் ஏதும் இதுவரையிலும் திறக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பேருந்து நிலையத்தில் தூண்களின் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது, அழகிய நிலையிலிருந்த நடைபாதை டைல்ஸ்கள் இரு மாதங்களுக்குள் பெயர்ந்து விழுந்தன. கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல்களும் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்கள், பயணிகளை அதிருப்தியடையச்…
பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலந்து அணிக்கு 608 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்ன என்பது குறித்து பார்ப்போம். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் எடுத்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் பெற்ற 180 ரன்கள் முன்னிலை உடன் சேர்த்தால் இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் 608 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்ய வேண்டும். இந்தச் சூழலில் சுமார் 140 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்ன என பார்ப்போம்… > கடந்த…
திருப்புவனம்: தமிழகத்தில் காவல் துறை காவு வாங்கும் துறையாக மாறி வருகிறது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாடினார். மேலும், அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை முதலில் விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியது: “மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை அடித்தே கொன்றுள்ளனர். காவல் துறையினர் மமதையில் இருக்கக்கூடாது. போலீஸ் எப்படி இருக்க வேண்டும் என அடையாளமாக இருந்தவர் விஜயகாந்த். காவல் துறை வெட்கப்படும் நிலைக்கு இந்தக் கொலை நடந்துள்ளது. தமிழக காவல் துறை என்பது காவு வாங்கும் துறையாக மாறியுள்ளது. மக்களை வஞ்சிக்கும் துறையாக, ஏமாற்றும் துறையாக, லஞ்சம் ஊழல் நிறைந்த துறையாக மாறியுள்ளது. கொலை வழக்கில் கண்துடைப்பாக 5 போலீஸாரை கைது செய்துள்ளனர். உண்மை நிலை…
தோல் கிரீம்கள் ஹைட்ரேட் செய்யலாம். ஆனால் தோல் நெகிழ்ச்சி, சருமத்தின் நீட்டி திரும்பும் திறன், உள்ளே இருந்து வருகிறது. ஒமேகா -3 தோல் உயிரணு சவ்வுகளுடன் ஒருங்கிணைக்கிறது, இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு அவற்றின் பின்னடைவை மேம்படுத்துகிறது என்று தோல்-இறுதி-இறுதி ஆய்வின் படி.30 களில், உடலின் கொலாஜன் உற்பத்தி குறையத் தொடங்குகிறது, மேலும் முந்தைய ஆண்டுகளில் இருந்து புற ஊதா சேதம் வெளிவருகிறது. ஒமேகா -3 உள்ளே இருந்து ஆதரவை வழங்குகிறது, சருமத்தை மிருதுவாக மாற்றுவது மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு அதை வலுப்படுத்துகிறது.[This article is for informational purposes only and does not substitute medical advice. Anyone considering Omega-3 supplements should consult a healthcare provider, especially those with bleeding disorders or taking blood thinners.]
சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் மேம்பாட்டுக்கான திறன் இயக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழி மற்றும் கணிதப் பாடத்தின் கற்றலை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ எனும் இயக்கம் 6 மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பயிற்சிக் கட்டங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகள் எஸ்சிஇஆர்டி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும், 9-ம் வகுப்புக்கான பயிற்சிக் கட்டங்கள் மற்றும் கையேடுகள் விரைவில் தயாரித்து வழங்கப்படும். இதுதவிர, திறன் இயக்கத்தை விரைந்து தொடங்கும் வகையில் 6 முதல் 8-ம் வகுப்புக்கான ஆசிரியர் கையேடுகளின்…
சென்னை: பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்தி, கல்வித் துறையை திமுக அரசு சீரழிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில், “கடந்த 2023-ம் ஆண்டில் 3,192 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 2024 பிப்ரவரியில் தேர்வு நடத்தி, மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் முடிந்தது. இது கடந்து ஓர் ஆண்டு ஆன பிறகும், பணி நியமன ஆணை வழங்க முடியாத அளவுக்கு திமுக அரசின் நிர்வாகம் செயலற்று இருக்கிறது. ஆசிரியர்கள் இல்லாமல் பல அரசுப் பள்ளிகள் அல்லல்படுகின்றன. அதேபோல, கலை கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் உயர்கல்வித் துறை முற்றிலும் முடங்கி உள்ளது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பது, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம்…
