தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (ஜூலை 7) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் சுப்பிரமணியர், வள்ளி மற்றும் தெய்வானை அம்மனுக்கு, அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடியில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, கடந்த 1-ம் தேதி கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தந்திரி சுப்பிரமணியரு தலைமையில் கேரள முறைப்படி யாகங்கள் நடைபெறுகின்றன. அதேபோல, மூலவர் சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ராஜகோபுரத்தின் கீழ் பிரம்மாண்ட யாகசாலையில் 71 ஹோம குண்டங்கள் அமைத்து, 700 கும்பங்களுடன் பூஜைகளும், 5 ஹோம குண்டங்களில் வேள்விகளும் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 10-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர கலசங்கள், மூலவர், வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கு தந்திரி மற்றும் போத்திகளும், சுவாமி சண்முகர்…
Author: admin
திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கச்சத்தீவை மீட்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும், இந்திய அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது. தமிழகத்தில் சங்பரிவார் அரசியல் எந்த வகையிலும் நுழையாமல் தடுக்க, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும். நடிகர் விஜய்க்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. தாமதமாக தற்போது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மத்தியஅரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். அந்தக் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுகதான். ஆனாலும், தேர்தலுக்குப் பின்புதான் முதல்வரை தேர்ந்தெடுப்போம் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது. இது தொடர்பாக பழனிசாமிதான்விளக்கம் அளிக்க வேண்டும். திமுக, பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய தவெக தலைவர் விஜய், அதிமுக பற்றி எதுவும் கூறவில்லை. எனில், அவர் அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பார்க்கிறாரா? இந்தக் கேள்விக்கு விஜய்…
சென்னை: மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் காலமானார். அவருக்கு வயது 91. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காவல் துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்(91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ம் ஆண்டு பிறந்த சேதுராமன், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். விருகம்பாக்கம் சின்மயா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு மகன்கள் திருவள்ளுவர், கவியரசன், ஆண்டவர், தமிழ் மணிகண்டன், மகள் பூங்கொடி உள்ளனர். நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், தாய்மண், சேது காப்பியம் உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்துள்ளார். பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் நிறுவனராக இருந்த இவருக்கு, பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கவிமணி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் விருது, கலைமாமணி விருது, சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட…
தர்மசாலா: புத்த மதத்துக்கும், திபெத் மக்களுக்கும் சேவை செய்வதற்காக 130 வயது வரை நான் உயிர் வாழ வேண்டுமென விரும்புகிறேன் என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார். திபெத்தின் புத்த மத தலைவரான தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாள் நாளை( ஜூலை 6) கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தர்மசாலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தலாய் லாமா, “ அவலோகிதேஸ்வராவின் ஆசிகளை நான் பெற்றதாகவே உணர்கிறேன். இதுவரை நான் எனது பணிகளை சிறப்பாக செய்துள்ளேன். நாம் மேலும் 30 முதல் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. குழந்தைப் பருவம் முதலே எனக்கு அவலோகிதேஸ்வராவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. பவுத்தத்துக்கும், திபெத் மக்களுக்கும் சேவை செய்வதற்காக 130 வயது வரை நான் உயிர் வாழ வேண்டுமென விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். தலாய் லாமாவின் அடுத்த வாரிசு குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில், அவரின்…
பர்மிங்காம்: 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 536 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. கேப்டன் ஷுப்மன் கில் 2-வது இன்னிங்ஸில் 162 பந்துகளில் 161 ரன்கள் விளாசி அசத்தினார். பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார். இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தில் 89.3 ஓவர்களில் 407 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 184, ஹாரி புரூக் 158 ரன்கள் விளாசினர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்களை வீழ்த்தினர். 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64…
பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது அர்ஜென்டினாவில் லித்தியம் சுரங்கங்களை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸுக்கு சென்றார். விமான நிலையத்தில் ஏராளமான இந்தியர்கள், அவரை உற்சாகமாக வரவேற்றனர். இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பியூனஸ் அயர்ஸில் இந்திய சமூகத்தினரின் அன்பான வரவேற்பால் நெகிழ்ச்சி அடைந்தேன். இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் வாழ்ந்தாலும் இந்திய உணர்வு பிரகாசமாக இருக்கிறது. கலாச்சார தொடர்புக்கு தொலைவு ஒரு தடையல்ல. அர்ஜென்டினா உடனான உறவுகள் மேம்படுத்தப்படும். அதிபர் சேவியர் மிலேய் உடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டில் அர்ஜென்டினாவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது அந்த நாட்டு அதிபர் மிலேயை பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக சந்தித்துப் பேசினார். அதன்பிறகு இரு…
சென்னை: அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விடுபட்டவர்கள் இதில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் திட்டம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற, ஊரக பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவதுதான் இதன் நோக்கம். இத்திட்டத்தின்கீழ் நகர்ப்புறங்களில் 3,768 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்கள் என 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதில் முதல் முகாமை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில்…
வாஷிங்டன்: வர்த்தக வரி விதிப்பு தொடர்பாக 12 நாடுகளுக்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். எந்தெந்த நாடுகள் என்ற விவரம் நாளை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா உடனான ஒப்பந்தம் கையெழுத்தாகாத நிலையில், கூடுதல் வரி விதிக்கப்பட்டால் பதில் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அதிபராக, 2-வது முறையாக கடந்த ஜனவரி 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றார். அமெரிக்காவுக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வர்த்தக வரி விதிப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலடியாக பரஸ்பர வரி விதிக்கப்படும் என அறிவித்த அவர், கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அதற்கான பட்டியலையும் வெளியிட்டார். இதில் இந்திய பொருட்களுக்கு 26% வரி விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. 90 நாட்கள் அவகாசம்: எனினும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தன. இதையடுத்து, இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக பரஸ்பர வரி…
புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் திகம்கர் மாவட்டம், சிப்ரி கிராமத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். ஒன்பது வயதில் வீட்டில் இருந்து வெளியேறிய அவர், மத்திய பிரதேசத்தின் பிண்டு மாவட்டம், ராவத்புராவில் உள்ள அனுமன் கோயிலில் தங்கி ஆன்மிக பிரச்சாரம் செய்தார். பின்னர் ராவத்புரா கிராமத்தில் 62 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட சிவன் கோயிலை கட்டினார். தற்போது அவர் ராவத்புரா சிவன் கோயிலின் மடாதிபதியாக உள்ளார். மேலும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் மருத்துவம், பொறியியல், நர்சிங், பார்மசி, ஐடிஐ கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் ரவி சங்கரின் அறக்கட்டளை சார்பில் மருத்துவக் கல்லூரி நடத்தப்படுகிறது. இந்த கல்லூரியில் அண்மையில் மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கு சாதகமாக அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர். இதற்காக என்எம்சி அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த…
சென்னை: என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட கரிவெட்டி கிராம மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்எல்சி விவகாரத்தில் இழப்பீடு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வீதம் 2022 லோக் ஆயுக்தா (மக்கள் நீதிமன்றம்) வாயிலாக சென்று மக்களுக்காக பெற்றுத் தரப்பட்டதை அனைவரும் அறிவர். ஆனால் அதன் பின்னணியும் இன்னும் தீராத வேதனையும் ஏராளம். ஏராளம். இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்தவர்களின் ஐம்பதுக்கும் மேற்பட்ட பல ஏக்கர் நிலங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் வீதம் கருணைத் தொகையாகவும் உயர்த்தி தரப்பட்டுள்ளதில் இருந்து இதை பார்க்கலாம். திமுக கவுன்சிலர் மற்றும், ஆளுங்கட்சியான திமுக நிர்வாகிகளின் குடும்பங்களை சார்ந்த நிலத்துக்குரியோர் மட்டுமே பலன் பெற்றவர்களாவர் என்பதே இங்கு உண்மைநிலை. அனைவருக்குமான பொது இழப்பீடை லோக் அதாலத் மூலமாக பெற்றிடாத வகையில் முதலில் தடுத்து நிறுத்தியவர்களும்…
