பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சியில், அவரது மனைவி பொற்கொடி, புதிய கட்சியைத் தொடங்கினார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் மறைவுக்குப் பின்னர், அவர் வகித்த தலைவர் பதவியில் ஆனந்தனும், மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் நியமிக்கப்பட்டனர். பின்னர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும், தன்னுடைய குடும்பத்தைக் கவனித்து கொள்வதிலும் பொற்கொடி முழுமையாக கவனம் செலுத்துவார் என்று கூறி மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து பொற்கொடியை கட்சி தலைமை விடுவித்தது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்தில் அவரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், வள்ளலார் நினைவிடத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் நோக்கி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என…
Author: admin
சென்னை: ‘இந்து தமிழ் திசை நாளிதழ் நடத் தும் ‘சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ- 2025 இரண்டு நாள் வீட்டு வசதி கண்காட்சி, சென்னை நந் தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.காலை 10 முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், ஐ ஆட்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ் நிறு வனமும் இணைந்து, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அபி எஸ்டேட் நிறு வனத்தின் ஆதரவுடன் சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ -2025 என்ற இரண்டு நாள் வீட்டுவசதி கண்காட்சியை சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நடத் துகின்றன. இந்த கண்காட்சியை பாரத ஸ்டேட் வங்கியின் துணை பொதுமேலாளர் ரோஹித் சஹா நேற்று தொடங்கிவைத்தார். வங்கியின் உதவி பொதுமேலாளர் கள் சேஷாசலம்.ராதாகிருஷ்ணன். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளர் அன்புமணி. அபி எஸ்டேட் நிறு வனத்தின் மக்கள் தொடர்பு அதி காரி…
தொடர்ச்சியான நுரை சிறுநீர் சுகாதார பிரச்சினைகளின் அடையாளமாக இருக்கலாம், ஆனால் அவ்வப்போது குமிழ்கள் பொதுவாக பாதிப்பில்லாதவை மற்றும் நீரேற்றத்துடன் தீர்க்கப்படுகின்றன. நீர் உட்கொள்ளல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் இருந்தபோதிலும் குமிழ்கள் தொடர்ந்தால், சிறுநீரில் புரதத்தை சோதிப்பது முக்கியம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் அல்லது சிறுநீரக நோயைக் குறிக்கும் என்று டாக்டர் ஷெர்லி கோஹ் அறிவுறுத்துகிறார். உங்கள் சிறுநீர் கழிப்பதில் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் வளர்சிதை மாற்றத்தின் இந்த துணை தயாரிப்பு உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய சொல்ல முடியும். சிறுநீர் வழக்கத்திற்கு மாறாக குமிழியாகத் தெரிந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டுமா? நுரை சிறுநீர், நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது குமிழ்கள் இருப்பதுதான் மிகவும் பொதுவானது; இருப்பினும், இது இன்னும் எதையாவது சமிக்ஞை செய்யலாம். எனவே, இது ஒரு பாதிப்பில்லாத விஷயம் அல்லது தீவிரமான ஒன்றின் அறிகுறியா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? மலேசியாவின் கோலாலம்பூரை தளமாகக் கொண்ட…
கஞ்சம்: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமின் (ஜேஎன்ஐஎம்) என்ற அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது அல்-காய்தா அமைப்புடன் தொடர்புடைய அமைப்பு. இந்த அமைப்பின் தீவிரவாதிகள் மாலியில் ஐ.நா. அமைதிப் படை வீரர்கள், மாலி ராணுவத்தினர் மற்றும் வெளிநாட்டினரை குறிவைத்து செயல்படுகின்றனர். இந்நிலையில் மேற்கு மாலியில் உள்ள காயெஸ் என்ற இடத்தில் உள்ள சிமென்ட் தொழிற்சாலை வளாகத்துக்கு சென்ற தீவிரவாதிகள் அங்கிருந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் சிலரை கடத்திச் சென்றனர். இதில் 3 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவர் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன்(28) என தெரியவந்துள்ளது. ப்ளூ ஸ்டார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், 6 மாத சிறப்பு பணிக்காக மாலியில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த கடத்தல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாலி அதிகாரிகளை கேட்டுக்…
திருமலை: திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தின் கடைசி நாளன்று ஆனிவார ஆஸ்தானம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய நாளில் மூலவருக்கு புதிய பட்டாடை உடுத்தி, உற்சவர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகள் ஒப்படைக்கப்படும். இந்த நாள் மிகவும் விசேஷ நாளாக ஆண்டாண்டு காலமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆனிவார ஆஸ்தானம் ஜூலை 16-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு முந்தைய நாளான 15-ம் தேதி, கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் 15-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிறகே பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு இந்த இரு நாட்களும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சென்னையில் வசிக்கும் வாசுதேவனின் (சரத்குமார்) குடும்பம் அடிக்கடி வீடு மாறுகிறது. சொந்த வீடு வாங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்பதற்காக சிறுகச் சிறுக பணம் சேர்க்கிறார் வாசுதேவன். மனைவி சாந்தி (தேவயானி) தன் பங்குக்கு கை கொடுக்கிறார். மகன் பிரபு (சித்தார்த்) பெரியவனாகி குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்கிற கனவில், பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைக்கிறார்கள். அண்ணனுக்காக அரசுப் பள்ளியில் படிக்கிறார் தங்கை ஆர்த்தி (மீதா ரகுநாத்). ஒருவருக்கொருவர் அனுசரணையாக வாழும் அந்தக் குடும்பத்தின் ஒரே கனவு சொந்த வீடு வாங்குவது. அது நிறைவேறியதா, இல்லையா என்பது கதை. நடுத்தரக் குடும்பங்களுக்குச் சொந்த வீடு, பெரும் கனவு என்பதால், அனைவருடனும் எளிதாக ’கனெக்ட்’ ஆகிற கதைக் களம் இது. அதை முடிந்தவரை சுவாரஸியமாகத் திரைக்கதையாக்கி இருக்கிறார், இயக்குநர் கணேஷ். வெறுமனே வீடு வாங்கும் கனவை மட்டும் சொல்லாமல், அதற்காக ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் எவ்வளவு போராடுகிறார்கள் என்பதைப் பல இடங்களில் உணர்வுப்பூர்வமாகச்…
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில், முதல்வர் பதவிக்கான முறையான பதவி உயர்வு பட்டியல் தயாரித்து 4 வாரங்களில் தகுதியானவர்களை முதல்வர்களாக நியமிக்க தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சுகாதாரத் துறையில் அரசு உதவி மருத்துவராக பணியில் சேரும் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக இணை பேராசிரியராகவும், அதன்பிறகு 3 ஆண்டுகள் பணி அனுபவத்துடன் 4 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருந்தால் பேராசிரியராகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பேராசிரியராக 5 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் அடுத்தக்கட்டமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வராக (டீன்) சிவில் மருத்துவ பட்டியலின் பதவி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2024-25 ம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் 26 பேராசிரியர்களுக்கு முதல்வராக பதவி உயர்வு வழங்க கடந்தாண்டு அக்.1-ம் தேதியன்று அறிவிப்பாணை வெளியிட்ட தமிழக அரசு, இதுதொடர்பாக, ஆட்சேபங்களை தெரிவிக்க 2 மாதம் அவகாசம் இருந்தும், அக்.3-ம் தேதியன்று,…
பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 30-ம் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியதை தொடர்ந்து மைசூரு, மண்டியா மாவட்ட விவசாய பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 123.70 அடியாக உள்ளது. மைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டையில் 19.52 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் தற்போதைய கொள்ளளவு17.05 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து 10,000 கன அடி நீர்திறந்துவிடப்பட்டுள்ளது.கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு மொத்தமாக விநாடிக்கு 47 ஆயிரத்து 590 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கரிகாலனை (சம்பத்) கொலை செய்த குற்றத்துக்காக, சிறுவர் கூர்நோக்கு பள்ளியில் அடைக்கப்படுகிறார், 17 வயது சூர்யா (சூர்யா சேதுபதி). அவரை, அந்த பள்ளியிலேயே தீர்த்துக்கட்ட ஆட்களை அனுப்புகிறார், கொல்லப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரின் மனைவி மாயா (வரலட்சுமி சரத்குமார்). ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சூர்யா, சட்டப்பேரவை உறுப்பினரைக் கொன்றது ஏன்? அவருடைய ஆட்களிடம் இருந்து அவரால் தப்பிக்க முடிந்ததா? என்பது கதை. இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் அனல் அரசு ஸ்டன்ட் இயக்குநர் என்பதால் ஒரு பழிவாங்கும் கதையை, ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க நினைத்திருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி கதையை ஊறுகாய் போல வைத்துக் கொண்டு ஆக்ஷன் காட்சிகளை அதிரடியாகத் தந்திருக்கிறார். மிரட்டுகிற அக்காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் தொடர்ந்து வருகிற, அதே போன்ற காட்சிகளும் தெறிக்கும் ரத்தமும் ஒரு கட்டத்தில் சோர்வடைய வைக்கின்றன. ‘ஹீரோ எப்படி இத்தனை பேரை தாக்க முடியும்?’ என்று எழும் கேள்விக்கு பிளாஷ்பேக்கில் வரும்…
வலுவான கூட்டணியை அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டே இருந்தாலும் பாஜக – அதிமுக கூட்டணியை பொருந்தாத கூட்டணியாகவே பலரும் விமர்சிக்கிறார்கள். இதுகுறித்து அதிமுக-வுக்குள்ளும் இருவேறு கருத்துகள் இருக்கவே செய்கின்றன. கூடவே, பாஜக-வின் ‘கூட்டணி ஆட்சி’ கோஷமும் அதிமுக-வினரை சீண்டிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். பாஜக-வுடன் எந்தக் காலத்திலும் இனி கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் அதனுடன் இணைந்துள்ளீர்களே..? கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படுகின்ற ஒரு தற்காலிக ஏற்பாடு. பெரும்பாலும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டுதான் கூட்டணிகள் உருவாகும். கொள்கையின் அடிப்படையில் இல்லை. இந்தியாவில் பெரும்பாலான கட்சிகள் பாஜக-வுடன் கூட்டணி வைத்திருக்கின்றன. அதுபோல பாஜக உடன் நாங்கள் கூட்டணி அமைத்ததும் இயல்பான ஒன்றுதான். இது அதிமுக-வுக்கு சாதகமான கூட்டணி என நம்புகிறீர்களா? ஆம். கடந்த மக்களவைத் தேர்தல் முடிவின் கணக்குகளை வைத்து…
